Friday 27 February 2015

 அநிருத்த பாப்புவின் தினசரி சிற்றுண்டி- அம்பில் அல்லது இட்லி.

அவசர வாழ்க்கையில் மக்களுக்கு சரியான சிற்றுண்டி கூட சாப்பிட நேரமில்லை ,இன்நிலையில் பன் அல்லது ப்ரெட் சாப்பிட்டு ஓடுவது வழக்கமாகியிருக்கிறது..ப்ரெட் இல்லையேல் வாழ்க்கையில்லை போலும். சிலர் வித விதமான சிற்றுண்டி பட்டியல் இட்டு மகிழ்கின்றனர்.

ஆனால் அநிருத்த பாப்பு விற்கு இரண்டே ஐடம் தான். ஒன்று இட்லி, மற்றொன்று அம்ப்லி[அம்பில்]. இட்லி அதுவும் உளுந்து அரிசி கலவையில் செய்ததுதான் சாப்பிடுவார். சிலர்  அர்சிமட்டும் உபயோகித்து செய்யும் இட்லி சாப்பிட்மாட்டார்.

அம்பில் \அம்ப்லி என்பது என்ன? [ அக்காலத்தில் [இன்றும் சில க்ராமத்தில்] பழைய சாதத்தில் நீர் விட்டு வைத்து அந்த ஊறிய நீரில் சற்று மோர் ,உப்பு ,விட்டு அருந்துவது போல்] ஆகும்
இரண்டு கோப்பை அம்பில் சாப்பிட்டால். வயிர் நிரம்பிய சமாதானம் எற்ப்படும். மற்ற பொருள்கள் தின்பது குறையும்.பசிபோகும், வயிரு குளிரும்

பாப்புவின், தர்ம பத்னி நந்தா மாதா அவர்கள் அம்பில் செய்முறை யை  தந்திருக்கிறார். அதன் தயார் செய்யும் முறை பின் வருமாரு.  

தேவை பொருள்கள்
அரிசி-ஒரு கோப்பை,  சக்கரை -ஒரு ஸ்பூன்
புளிக்காத தயிரிலிருந்து கிடைந்த மோர்-ஐந்து கோப்பை
குடிநீர்- ஏழு கோப்பை, உப்பு- ருசிக்கு போதுமான அளவு.



செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசியை மூன்றுமுறை களைந்து எடுத்துக்கொண்டு அதில் ஏழு கோப்பை நீரை விட்டு ப்ரெஷர் குக்கரில் மூன்று விசில் வரும் வறை வேகவிட்டு வெளியில் நிருத்தி வைத்துக்கொள்ளவும், அதை அந்த நீருடன் செர்ந்து மிக்ஸியில் ஐந்து வினாடி அடித்துக்கொள்ளவும். பிறகு மிக்ஸியில் இருந்து எடுத்து பாத்திரத்தில் மாற்றி ,ஒரு ஸ்பூன் சக்கரையிட்டு நன்கு கலக்கியபின் , ஐந்து கோப்பை மோரைவிட்டு, கலக்கி வைத்துக் கொள்ளவும். ருசி பார்த்து , போதுமான அளவு உப்பு செர்த்துக்கலாம். .அதை மூடிவைத்து சுமார் 12-14மணி நேரம் பிறகு அம்பில் சாப்பிட சுவையாக இருக்கும். அதாவது சுமார் இரவு எட்டு மணிக்கு அம்பிலை மூடி வைத்தால் , மறுநாள் காலை பத்துமணிக்கு அம்பில் தயார்.
ஹரி ஓம்|| ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ

No comments:

Post a Comment