Friday, 23 August 2013

நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்]



ஹரிஓம்

நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்]

  Publication of English language learning guides authored by Nandai

ஆத்மபலம் வகுப்பெடுக்கும் சமயம் நந்தா மாதா அவர்கள்
மே மாதம் 6,2010 நாம் ஸ்ரத்தாவான்கள் அனைவரும் நமது அன்பார்ந்த பரம பூஜ்ய அநிருத்த பாப்பு அவர்கள் "ராமராஜ்யம் 2025" என்ற தனது மன உரு எண்ணத்தின் [தத்துவத்தின்] அடிப்படையில் பேசியதைக்க்கேட்டோம். இந்த ப்ரசங்கத்தில் பாப்பு பல முக்கியமான  விஷயங்களை ப்பற்றி பல  அரிக்கைகள் தந்தார். அதில் ஒரு முக்கியமான விஷயம் " தடையில்லாது { கஷ்டப்படாது} ஆங்கில மொழி பேச கற்றுக்கொள்ளுதல். பாப்பு சொன்னது இவ்வாரு ," இன்றைக்கு எல்லாவித வணிகம் ,வர்த்தகம் அனைத்தும் ஆங்கில மொழியிலேயெ நடைபெருகின்றன என்பதறிவோம். தாய்மொழியோ சொல்லாமலேயெ அனைவருக்கும் பெருமைக்குறிய விழயம்தான். ஆனால் ஒருவனின்  முன்னேற்றத்திற்கு ஒருவன் அவனது ஆங்கில மொழியை வளர்த்துக்கொள்வது இன்றைய அவசியம் ஆகிவிட்டது. நாம் இந்த  போட்டா போட்டியுள்ள உலகில் பிழைத்திருக்க , நாம் ஆங்கில மொழியை நன்கு கற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். ஆகையினால் " அநிருத்தாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் லாங்குவேஜ் அண்ட் லிங்க்விஸ்டிக்" என்ற நிலயம் [அதாவது "அநிருத்தரின் மொழி, மொழிநடை, மொழி ஆராய்சி நிலயம்] துவக்க்ப்படுகின்றது.
அவர் மீண்டும் சொன்னார். " பலர் தமது தாய்மொழியில் முதலில் சிந்தித்துவிட்டு பிறகு ஆங்கிலத்தில் பேச முயல்கிறார்கள்.  அது சரியல்ல. அது நமது எண்ணத்திற்கும் , சொல்வதர்கும் இடையே இடைவெளி அமைக்கும். இந்த இடைவெளி பேசும் ப்ரவாஹத்தையும், மொழியின்  அழகையும் அமைப்பையும் பாதிக்கும். மொழி பாய்ச்சல் எந்தவித இடையூரு இல்லாது இருக்கவேண்டும்.

த்துடன் பாப்பு ஸௌ ஸ்வப்னகந்தவீரா அநிருத்த ஜோஷி [ அநிருத்த பாப்புவின் தர்ம பத்னியான ] நம் நந்தா மாதா அவர்கள் இந்த நிலயத்தின் முக்கிய அதிகாரியாக பொறுப்பேர்ப்பார் என்று அறிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக நந்தா மாதா மகளிர்க்காக ஆத்ம்பல வகுப்பு எடுத்து வருகிறார் என்றும் அதில் " ஆங்கில மொழி கற்பது" அதில் ஒரு முக்கிய  அங்கமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில  ஆத்மபல  வகுப்பை புதிதாக ச்சேரும் மகளிர்களுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் அறியாதவர்கள். இவர்கள் ஆறுமாத காலத்திற்க்குள் ஒரு அளவுக்கு தினசரி வாழ்க்கைக்கு தேவையான  ஆங்கில மொழி பேசவும் எழுதவும் முடிகிறது. இவர்கள் சுயநம்பிக்கையுடன் ஆங்கில மொழி சிறு நாடகங்களில் பங்கேர்கின்றனர். இந்த ஆங்கில மொழி  சிறு நாடகங்களும்     ,ஆங்கில மொழி கற்கும் , முடிவில் ஒரு பாகமாகும்.
இதையே அடிப்படையில் கொண்டு ,ஆங்கில மொழி கற்க உதவும் நந்தாமாதா அவர்களாலேயே எழுதப்பட்ட வெகுவிறவில் சில வழிகாட்டு புத்தகங்கள்  தொகுப்புகளாக ப்ரசுரமாகவிருக்கின்றன. இந்த புத்தகங்கள் ஆங்கிலம் கற்கவிரும்பும் அனைத்து ஸ்ரத்தாவான்களுக்கும் ,  ஆங்கிலம் கற்க  எளிதான  உபயோகமான வழி காட்டும் . இப்புத்தகங்கள் படிப்பதற்கும், உபயோகிப்பதற்கும்  அதை பாற்ப்பதைப்போல்  ஒரு தனிப்பட்ட  ஆனந்த அனுபவங்களைத்  தரும். இது நமது ராமராஜயம் 2025 ,த்தின் பயணத்தில் ஒரு பாகமாகும் , ஆம் அதே  ராமராஜ்யம் எது நமது" அநிருத்த பாப்புவின் மன உருகோரிக்கையோ அதுவே"



 ஹரி ஓம்   "  அடியேன்  அம்பக்ஞ  ஆதிமாதே"


மூள லேக -

மராடீ - நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்] मराठी Blog

ஹிம்தீ  நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல் हिंदी Blog

இம்க்லிஶ  - நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்] English Blog