Wednesday, 16 July 2014

டாக்டர் நிகோலா டெஸ்லா அறிமுகம்- "விஞானத்தின் கடவுள்"

மார்ச் 27,2014 அன்று  ஸத்குரு அநிருத்த பாப்பு எங்கள் அனைவருக்கும்  டாக்டர் நிகோலா டெஸ்லாவை அறிமுகப் ப்டுத்தினார்கள். டாக்டர்  டெஸ்லா இவ்வுலகத்தின் மாபெரும் விஞானியாக விளங்கினார். அவரை உலகம் மரந்திருந்தாலும் ,அவரது கண்டுபிடிப்பு சாதனைகள் மனித அன்றாட வாழ்க்கைக்கு இந்த க்ரகத்தில் இன்றியமையாதவை. ஆகையால் இன்றுமுதல் நான்  டாக்டர் நிகோலா டெஸ்லாவை ப்பற்றிய தொடரை ஆரம்பிக்கிறேன், அதுவே அவரது அருட்தொண்டரான தனித்தன்மையும் அவரது, காலத்தை முந்திய கண்டுபிடிப்பை பற்றியும் தெளிவு படுத்தும்.

டாக்டர் நிகோலா டெஸ்லா ஸெர்பியாவில்  பிறந்த அமெரிக்கர் ஆவர் ,"மிகச்சிறந்த பல்லாயிராண்டு ப்ரபல விஞானி" என்று அழைக்கப்பட்டார்,, உண்மையிலேயே உயர்ந்த கண்டுப்டிப்பு சாதனையாளர், முன்நோக்கி , இயர்பியல்துறை கர்ப்பனை வல்லுணர். அவரது பல " வழி வகுக்கும் ஆடலான மின்னோட்டம்"[ஆல்டர்னேட்டிங்க் கரண்ட்], சுதந்திர மின் சக்தி ,கம்பியில்லா மின் சக்தி அனுப்புதல்[ வயர்லெஸ் பவர்/ எனர்ஜி ட்ரான்ஸ்மிஷன்] இவை அவரது ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில் சில ஆகும். டாக்டர் நிகோலஸ் டெஸ்லா 10 ஜூலை 1856 மத்திய இரவில் பலத்த கோடை மின்னல் புயலிற்கிடையே ஒரு கேதோலிக் மதம் சார்ந்த ஆஸ்த்ரிய சாம்ராஜ்யத்தில் [தற்போது க்ரோஷியா என்றழைக்கப்படும்]உள்ள குடும்பத்தினருக்கு பிறந்தார்.குறிப்பாக எந்த மருத்துவச்சி டாக்டர் நிகோலாவின் அன்னைக்கு அவர் பிறக்கும்போது உதவி செய்தாளோ அவள்’ இக்குழந்தையே ஒரு புயலாக திகழ்வான் என்று சொன்னது பலித்ததுபோலும்.

மின், யந்திரப் பொறியாளரே உறுவான டாக்டர் நிகோலா டெஸ்லா,   க்ராஜ் என்ற இடத்தில் ஆஸ்த்ரிய பொறிஇயல் பள்ளியில் எல்லை ராணுவ தகுதிப்படிப்பு உதவித்தொகையின் உஅதவியில் [ஆதாரத்தில்] சேர்ந்தார். அங்கிருந்து ப்ரேக்கில் உள்ள சர்வகலாசாலையில் தத்துவ சாஸ்த்ரம் கல்வி தொடர சேர்ந்தார். டாக்டர் டெஸ்லாவிற்கு யேல் பல்கலைக்கழகமும் கொலம்பியா பல்கலைக்கழகமும் கௌரவத்திர்குறிய மேதை என்ற சான்றிதழை அளித்தன. டாக்டர் டெஸ்லாவிற்கு 18 மொழிகள் தெரிந்திருந்தது , 12 மொழிகளில் வெகு தேற்சி பெற்றவர் அதில் அவரது தாய் மொழி ஸெர்போ-க்ரோட் , லாடின் , இடாலியன் , ஃப்ரெஞ்ச் , ஜெர்மன் , ஆங்கிலம் முதலியன ஆகும்.

டாக்டர் நிகோலா டெஸ்லா 700 க்கும் மேல் ஆன தனியுரிமை பட்டயங்கள் [பேடெண்ட்] உரிமையாளர் சான்றிதழ்கள் பெற்றவர் ஆவார், அதுவே யாரும் செய்ய இயலா உளகளவு சாதனை ஆகும். டாக்டர் டெஸ்லாவின் கண்டுபிடிப்பில் ஆடலான மின்னோட்டத்துடன், அமைதி கிரணம்[பீஸ் ரே], மனித யந்திரம் ,தொலைகாட்சி , தூரத்து கட்டுப்பாடு [ரிமோட் கண்ட்ரோல்] , எக்ஸ் ரேஸ் , கம்பியில்லா சக்தி அனுப்புதல் , அண்டக்கதிர் சக்தி [காஸ்மிக் ரே எனர்ஜி],தூண்டிமின் மோடார் [இன்டக்ஷன் மோடார்] , ரேடியோ[வானொலி] ,சுழலும் காந்த சக்தி கொள்கை ,தொலை பேசி மீள் செயல் [டெலிஃபோன் ரிபீடர்] , டெஸ்லா காயில் ட்ரான்ஸ்ஃபார்மர்[டெஸ்லா மின் ஆற்றல் மாற்றி],கம்பியில்லா  தொடர்பு.டெலி போர்டேஷன் , ஆகாய சமய வளைவு [ஸ்பேஸ்டைம் பெண்டிங்க்] , பயண நேரம் அளவு , முதலியன ,பட்டியலில் அடங்கா சாதனைகள். 


டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது அதிசயிக்கும் கண்டுபிடிப்பினால் பல விருதுகளினாலும், பட்டங்களினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.அவ்விருதுகளில் சர்பியா நாட்டு அரசர் மிலான்-I னால்  "தி ஆர்டர் ஆஃப் ஸெயிண்ட் ஸாவா" என்று 1883 ல் அளிக்கப்ப்ட்ட தேசிய விருதும் ஒன்றாகும். இதைத்தவிர "தி இலியட் க்ரெஸெண்ட் மெடல்[பதக்கம்] தி  ஃப்ராங்க்லின் இன்ஸ்டிட்யூட்டினால் அளிக்கப்ப்டும் உயர்ந்த விருது ஆகும். "தி ஜான் ஸ்காட் அவார்ட்"  மனித இனத்திற்கு  தேவையான சுகம், நலம், சௌக்கியம் சார்ந்த கண்டுபிடிப்புகளிற்கு கௌரவிக்கும் வகையில் அமைந்தன.  மோண்ட்னெக்ரோ நிகோலா ராஜாவின் "தி ஆர்டர் ஆஃப் ப்ரின்ஸ் டேனிலோ",எடிசன் பதக்கம்- அமெரிக்காவில் மின் பொறியியலாளற்கென்று வழங்கப்படும் மகத்தான விருது 1917ல் வழங்கப்பட்டது. காந்தத்தின் ஃப்ளக்ஸ் அடர்த்தி
"டெஸ்லா" என்ற அளவு கோலில் அளக்கப்படுகிறது.  அது இந்த டாக்டர் நிகோலா டெஸ்லா வின் பேரில்தான். 1975ல் டாக்டர் நிகோலா டெஸ்லா கண்டுபிடிப்பு சாதனையாளர்கள் பட்டியலில் சேர்க்கப்ப்ட்டார். அமெரிக்காவின் தபால் சேவை 1983ல்  டாக்டர் நிகோலா டெஸ்லாவின் ஒட்டுவில்லையை வெளியிட்டு அவர் மறைந்தபின் கௌரவித்தது. இன்ஸ்டிட்யூட் ஆஃப் இலெக்ட்ரிகல் இன்ஜினியரிங்க் வருடந்தோரும் ,மிகவும் கௌரவமான "டாக்டர் நிகோலா டெஸ்லா அவார்ட்" என்ற விருதினை மிகச்சிறந்த மின் பொறியியல் மாணவருக்கு 1976 லிருந்து வழங்கி வருகிறது.

டாக்டர் டெஸ்லாவின் சாதனைகளை நினைவில் நிருத்த வருடா வருடம் ஜுலை 10 ஆம் தேதி அமெரிக்காவில் " டாக்டர் நிகோலா தினம்" கொண்டாடப்படுகிறது.  டாக்டர் நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்பு சாதனைகள் முன்னேற்றத்திற்கு உகந்ததாகவும் அது காலத்திற்கு முன்னதாகவே இருந்தவகையில் அது தொழில்களின் இரண்டாவது புரட்சியாக கருதப்பட்டு "மின் யுகமே" நிலைநாட்டியது. டாக்டர் டெஸ்லாவின் சாதனைகள் இருபதாவது ‘நூற்றாண்டிற்குமட்டுமல்லாமல் இருபத்தொன்றாவது  நூற்றாண்டிற்கும் நல்லதொரு அஸ்திவாரம் ஆகும். அவரது சாதனைகள் காலத்திற்கு முன்னதாகவே இருந்ததால் , பல தேசங்கள் உளவர்கள் மூலம் அல்லது கணிப்பொறிமூலம்  இந்த நுண்ணறிவுள்ள சாமர்த்தியமானவரை வேவுபார்க்கவும் அனுப்பின , அமைத்தன.  

டாக்டர் டெஸ்லா ஒரு விஞானி,புதுமையாளர்,உயர்ந்த உத்தம மனிதர்.
அவர் விஞானத்தின் ஒவ்வொரு அதிசயச்சம்பவங்களில் கடவுளைக்கண்டார். அவர் அவரது ஒவ்வொறு கண்டுபிடிப்பிலும் விஞானமும், ஆன்மீகமும் ஒரே நாணயத்தின் இருபுரங்கள் , அவை ஒன்றுக்கொன்று சாதகமானவை  அத்துடன்  ஒரு அதிசய திவ்ய சக்தியால் இயக்கப்படுகின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார் .

அவரை ப்போன்ற விஞானத்தையும் , ஆன்மீகத்தையும் கடைந்தெடுத்த ஆற்றல்மிக்க தீர்க்கதரிசி இனி கிடைப்பது அறிது. அவரது கண்டுபிடிப்புகள், புதுமைத்தனம் முதலிய சாதனைகளினால் அவர் "விஞானத்தின் கடவுள்" என்றே கருதப்பட்டார்.

ஹரிஓம் || ஸ்ரீ ராம் || அம்பக்ஞ || 

Saturday, 14 June 2014

சத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்புவின் உபாசனா.



தற்போது, பரம்பூஜ்ய ஸத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்பு நம்மை போன்ற எளிய  அனைத்து பக்தர்களுக்காக (ஸ்ரத்தாவான்களுக்காக) வழங்கும் பிரவசன் (ப்ரவசன்) கடந்த 3 வியாழக்கிழமைகள் முதல் ஸ்ரீ ஹரிகுருகிராமில் வழங்க வர முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். பரம்பூஜ்ய ஸத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்புவின் மீது அதிக அன்பு மற்றும் பக்தியுடைய பக்தர்களுக்கு (ஸ்ரத்தாவான்கள்)  கடந்த 3 வியாழக்கிழமைகளிலிருந்து பாப்புவின் தரிசனம் பெற முடியவில்லை என்பதால் பாப்புப் பற்றி விசாரித்தார்கள். அதற்கிணங்க, நான் அனைத்து பக்தர்களுக்கும் தெரிவிக்க விரும்புவது, பாப்பு   கடுமையான உபாசனா செய்வது இன்னும் சில காலம் நீடிக்கும் என்பதாகும். அவரது கடுமையான உபாசனாவினால் தான், வியாழக்கிழமைகளில் ஸ்ரீஹரிகுருகிராமுக்கு பாப்பு வராமலிருக்கிறார்.  நான் உண்மையில், எல்லா பக்தர்களுக்கும் தெரிந்திருக்க விரும்பிகின்ற  குறிப்பானது, வரவிருக்கின்ற நாட்களில் பரம்பூஜ்ய பாப்புவின் வருகையானது அவரது கடுமையான உபாசனாவை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பதாகும்.

ஹரிஓம்.       " நான் அம்பக்ஞன் ஆவேன்"

Wednesday, 19 March 2014

நன்கொடை இப்போது ஆன்லைன் மூலம் அனுப்ப எல்லா இடங்களிவும் வசதி.

,உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,குருபௌர்ணமி அல்லது ,அநிருத்த பௌர்ணமி போன்ற உத்ஸவங்களுக்கு பாப்புவின் தரிசனத்திற்கு வருகின்றனர்.அவர்கள் அந்த உத்ஸவ சமயங்களில் பரந்த மனத்துடன் பாப்புவிற்கு, ஏதாவது குரு தக்ஷிணையாக கொடுக்க விரும்புகின்றனர்.ஆனால் பாப்பு ப்ரத்யேகமாக ஒரு பூ,பழம் கூட வாங்குவ்தில்லை.பாப்பூ, யாராவது ,கொடுக்க விரும்பினால் அவர்கள் காணிக்கையாக நமது உபாசனா மையங்களிலோ அல்லது ட்ரஸ்டிலோ ,உத்ஸவங்களுக்கும் சேவைகளுக்கும் காணிக்கையாக தரலாம்.  

ஸ்ரீமத் புருஷார்த்த க்ரந்தராஜ்,முதன்காண்டத்தில் தானத்தின் மஹிமையைப்பற்றி பாப்பு விவரித்து எழுதுகிறார்." எல்லா யுகத்தில்லும்[ஸத்ய, த்ரேதா,த்வாபரம்,கலியுகம்]

ஈடு இணையில்லாதது தானத்தின் மஹிமை.கலியுகத்தில் தான்த்தின் மிக எளிய தர்மசாதனம் ஆகும்.ஆசார தர்மத்தில் தான்மே இன்றியமையாதது.உண்மையாக் தானத்திற்கு நிகர் ஏதுமில்லை..தாமே ,கண்கள்தானம், ரக்த தானம்,அங்க அவ்யவங்கள் தானம் செய்து ஜீவன்த்தை அற்பணியுங்கள்.ஞானத்தின் தானம், தனத்தின் தானம், சேவாதானம் செய்யவேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவே செய்யுங்கள் , ஆனால் செய்யுங்கள்.ஸ்ரீகுரு தத்தா நித்ய தாத்தா[ தருபவர்] ஆவார்[ அகையால்தான், தத்தா என்றழைக்கப்படுகிறார்.எவர் தானம் செய்கின்றனரோ அவர்கள் தத்தகுருவின் அன்பிர்க்கு,க்ருபைக்குப் பாத்திரமாவார்.ஸ்ரீ ஸ்ரீமத்ப்ருஷார்த்தம், க்ரந்தராஜ் ஸத்யப்ரவேஷ், பக்கம் 242ல் பாப்பு குறிப்ப்ட்டுள்ளார்.
ஸாயீ ஸத்சரிதமும் இதையே தெளிவாக்குகிறது.

தனம் தங்கவேண்துமென்றால் ,தானம் செய்யவேண்டும்,ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கும், வேலைகளுக்குமே அது  செலவாகிவிடுகிறது.தானத்தினால் தர்மம் வளரும்,தர்மத்தினால் ஞானம் பெருகும்.இது சுயநலமாக தோஈன்றலாம் அனால் அதுவெ பர்மார்த்தத்திற்கு ஒரு வழி ஆனாலும் அதன்மூளம் மனம் நிறைவு காண்கிறது நிம்மதி கிடைக்கிறது.  
[ஸாயீ ஸத்சரிதம் அத்யாயம் 14,  வரி 113,114

இந்த நல்ல எண்ணத்தில் பக்தர்கள் பலர் நமது சங்கத்திற்கு நன்கொடை அனுப்ப ஆயத்தமாக உள்ளனர். உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,வெளி நாட்டில் உள்ளவர்கள் நெறில் சென்று நன்கொடை அளிப்பது கஷ்டமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு
www.aniruddhafoundation.com ஊடக வேப்சைட் மூலம் தொடர்பு கொண்டு "பேமண்ட் கேட்வே"காணியல் ஆன்லைன் வசதிமூலம் நன்கொடை செலுத்தலாம். பாரதத்தின் எந்த எல்லையிலும் இந்தவசதி செய்து தரப்பட்டுள்ளது.அனால் அவ்வாறு செலுத்துபவரிடம் வங்கியின் சொந்தகணக்கு எண், டெபிட் கார்ட்,
க்ரெடிட் கார்ட், தைனர் கார்ட் உடையவர்களுக்கு மட்டுமே இது முடியும். 




 இதை ச்சொல்ல எனக்கு  ஆனந்த மாக இருக்கிறது. நமது , குழுமத்தின்[அறக்கட்டளையின்] மூன்று பெரிய திட்டங்களின் வேலை வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ள்து அவை: -  ஜுயி நகர், நவீ மும்பையில் செயலாற்றவிருக்க நம் நாட்டின் முதல் "இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜெரியாட்ரிக்ஸ் அண்ட் ரிஸர்ச் சென்டர்.[முதியவர்கள் மருத்தவ மையம் பரிசோதனைக் கூடம்]
   ஆளந்தி அருகாமையில் அமைக்கபபட்டுவர இருக்கும் "அநிருத்த தாமம்"
   வேர்வை சிந்த உழைக்கும் விவசாயிகளுக்கென்று கர்ஜத்-கோதிம்பே அருகில் நடந்துவரும் "அநிருத்தாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் க்ராம்விகாஸ்".
இந்த மூன்று முக்கிய்த்திட்டங்களுக்கும் உதவ விரும்பும் பக்தர்கள் " பேமண்ட் கேட்வேயின்"வாயிலாக இயன்றதை செலுத்தலாம்.
 ஸ்ரீ அநிருத்த ஹ்பௌண்டேஷன் டாட்காம் [www.aniruddhafoundation.com]மீது க்ளிக் செய்யவும்
பிரகு .க்ளிக் ஹியர் டு டொனேட் ஆன்லைன்[click here to donate online] மீது க்ளிக் செய்யவும்
அது கேட்கும் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் நிரைப்பி "டொனேட் நவ்" என்ற பொத்தானை க்ளிக் செய்து செலுத்தவும்.அதற்கு முன் விண்ணப்ப படிவத்தில்
உங்கள் பெயர், ஈ-மெயில்,மொபைல் நம்பர் மற்றும்,நன்கொடைத்தொகை இருப்பது மிக அவசியம்.க்ரெடிட், டெபிட் கார்ட் முறையில் எப்படியோ அவ்வாறே.
உங்களுக்கு காணியல் மூலமே ரஸீதும் அளிக்கப்படும்.
இதற்காகவே ,பக்தர்களின் எளியமுறைக்காக குமழத்தினால். நெட்பேங்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
பெரும்பாலான பக்தர்கள் இந்த "பேமண்ட் கேட்வே" வசதியினால் பயனுற்று,பயன்பெற்று ,இயன்ற நன்கொடை அளிப்பார்கள், அளித்து வருவார்கள் 

"ஹரி ஓம்"   "ஸ்ரீ ராம்"    " அம்பக்ஞ"


                                                                    

Monday, 30 December 2013

தினசரி பத்திரிகை "ப்ரத்யக்ஷ"-புதுவருட ப்ரதி -2014 ப்ரசுரம் வெளியீடு

The Dainik Pratyaksha – The New Year Issue – 2014

பாரதத்தின் ஜனத்தொகை பெரும்பாலும் இளைஞர்களினால் ஆனது. அதுவும் தற்போது அதிகரித்தவாரே இருக்கின்றது. ஃபேஸ்புக் ,வ்ஹாப், யூட்யூப் போன்ற சகவாச சம்பந்த ஊடகங்களின்  பலத்த பாதிப்பு  இளைய சமுதாயத்தின் இடையே பரவலாக விரும்பப்பட்டதாக இருக்கிறது. அத்தோடு, கோடிக்கணக்கான அளவில் அதிகரிக்கும் இணையவாசிகள்[ இன்டர்னெட்டுடன் இணைந்துள்ளவர்கள்] சகவாஸ சம்பந்தப்பட்ட ஊடகங்களினால் ஏற்படும் பாதிப்புகளை  கட்டுப்ப்டுத்துவது கஷ்டமாகிவிட்டது.
     



அரசியல்வாதமில்லாத அற்புதப்பத்திரிகை
இந்த ஊடகம் {வழி, வாயில்}அல்லது மேடையானது நுட்ப அறிவியலை அதிக அளவில் பரப்பி தற்போது உலகத்தை ஆளுவதைமட்டுமல்லாமல் ஆதிக்கம் செலுத்திவருகின்றது என்பது தெளிவாவதோடு நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாக உள்ளது.

ஆகையால்  ஒரு பொருப்புள்ள நகரவாசியாக,இந்த ப்ரம்மாண்டமான ஆற்றல்மிக்க  வாயிலை [கருவியை] , புதுவிதமாகவும், ஜாக்கிரதையுடனும், பொருப்புடன் முதிர்ந்த முறையில் கையாளவேண்டும்.
இதையே குறிக்கோளாகக் கொண்டு"சகவாஸ சம்பந்த ஊடகங்கள்" -  தகுந்த உகந்த முதிர்ந்த உபயோகம்"
[ தெளிவான ஜாக்கிறதையான  உபயோக விதிமுறைகள்] என்ற தலைப்பை முக்கிய மத்தியத் தகவலாக கொண்டுள்ள " ப்ரத்யக்ஷஜனவரி 1 ,2014 அன்று புதுவருட ப்ரசுரத்தை வேளியிடுகிறோம்.

"அம்பக்ஞ"

Wednesday, 18 December 2013

மத்திய கிழக்கு நிலவரம்- பாகம் 2 [ உலகம் ஆட்டம் கண்டுள்ளது]

Middle East Situation – World at the Crossroads (Part II)


[பாகம் 1, அக்டோபர் 5,2013ன் தொடர்ச்சி] உலகத்தின் இந்த பாகத்தின் மேல் ரஷ்ஷியா, அமெரிக்கா இருவருக்கும் ஒரு கண்தான். ஸிரியாவின் தனக்கு சாதகமாக  நடந்து வரும் அரசு, ரஷ்ஷியாவிற்கு முக்கியம். ரஷ்ஷியா தனது மிகவும் அவசியாமான, முக்கியமான ராணுவ தளத்தை ஸிரியாவின் துறைமுகப்பட்டினம் டார்டஸில் அதை ஒரு கட்ற்படை நிறுவலாக பராமரித்து செயலாக்கியும் வருகிறது, ஏனெனில் இது ரஷ்ஷியாவின் பழைய ஸோவியட் யூனியனின் வெளியில் இருக்கும் ஒரே ஒரு ராணுவ தளமாகும். ரஷ்ஷியா  தற்போது ஸிரியாவின் ஆஸாத்  அரசுக்கு ஆதரவளிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். அதே சமயம்  ஸுன்னி முஸ்லிம் கொண்ட அமெரிக்காவை ஆதரித்து , நம்பி வாழும் இதர நாடுகள் ,ஆஸாத் அரசை கவிழ்க்க தீவிரமாக உள்ளன. கத்தார்,  ஐரோப்பாவிற்கு  இய்ற்கை எரி  வாயு வழங்க ஆயத்தமாக உள்ளது. அது அதற்கு வேண்டிய கத்தாரலிருந்து  ஐரோப்பா கொண்டு செல்ல குழாய் வழி நிறுவ திட்டமிட்ட நிலையில், இக்குழாய் ஸிரியா வழியாகவே செல்லவேண்டும். ஆனால் ஸிரியாவின் பாஷர் அல் ஆஸாத் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த கத்தாரி -  ஐரோப்பா குழாய் திட்டத்தை நிராகரித்தது இருக்கையில்  அதே போன்ற நூறுகோடி டாலர் [பத்து  பில்லியன் அமெரிக்க டாலர்] மதிப்புள்ள திட்டத்திற்கு  இரான், இராக்குடன் சேர்ந்து , கடந்த வருடம்  ஜூலையில் கையொப்பம் இட்டுள்ளார் ஸிரியாவின் பாஷர் ஆஸாத். கவனிக்கவேண்டியது என்னவென்றால் ஸிரியாவின் அரசு ராணுவத்திற்கும் , கலகஞ்செய் எதிரியினருக்கும் நடந்த கலவரமும்,  ஸிரியா அரசு கையொப்பமும் தற்செயலாக சேர்ந்தே நடந்துள்ளன.  கத்தாரின் விருப்பம் தெரிவிக்கும் அதே சமயம் ஸௌதி அரேபியாவும் ரஷ்ஷியாவுடன் மிகத்தீவிர ஆலோசனை நடத்தி தன்னையும் ஒரு உருப்பினராக சேர்த்து கோள்ள வினவியது. ஸௌதி அரேபியாவும் ஒரு நட்புக்குறிய அரசுடன் செயல்பட ஆவலாய் இருக்க காரணம் அது அதன் எரி பொருள் வாணிகம் பாதிக்காது ,தனது கை ஓங்கி  இருக்கவே ஆகும்.

தொன்று தொட்டு ரஷ்ஷியாதான் ஐரோப்பாவிற்கு எரிபொருள்கள் வழங்கி வந்தது. ஐரோப்பா நாடுகள் , ரஷ்ஷியா இந்த எரிபொருள்களை  ஒரு ஆயுதமாக பயன் படுத்துகின்றது என்று குற்றச்சாட்டினர். ஆகையால் ரஷ்ஷியா மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா கொண்டு செல்ல அனுமதிக்க அது கடைசி தேசமாகத்தான் இருக்கவேண்டும் [தன் வ்யாபாரத்தை எவர்தான் விட்டுக் கொடுப்பார்கள் . ரஷ்ஷியா,  ஸிரியாவின் பாஷார் ஆஸாத் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு முழுமையாக அளிக்க க்காரணம் இதுவும் ஒன்று.  உலகத்தின்  பல வலுவான தேசங்களின் இந்த தீவிர குழப்பமுள்ள சுயநல தனிப்பட்ட ஆர்வமே ஸிரியாவின் கலவர நிலவரத்துக்கு முடிவு காண்பது தூரத்து உண்மை எனலாம். தற்போதைய அமைதி நிலவரம் தற்காலிகமானதே. மத்திய கிழக்கு நாடுகளுடன், அமெரிக்கா, ரஷ்ஷியா ,இதர நாடுகளும் மெதுவாக இந்த விவகாரத்தில் ஈர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவின் அமெரிக்கா ஆதரிக்கும் யூ கே போன்ற தேசங்கள், ஜெர்மெனி, ஃப்ரான்ஸ்,இதாலி, டென்மார்க்,லக்ஸம்பர்க், ஸ்பெயின்,நெதர்லாண்ட்  அனைவரும் ஸிரியாவின் தஞ்சமடைந்தோருக்கு 430 மில்லியன்[43 கோடி] டாலர் அடமானம் வாக்குறுதி  தந்திருக்கின்றனர்.  யூ.கே யும் மூன்று மில்லியன் டாலர் தற தயார் என அறிவித்தது ,அவை ஸிரியாவின்  ரசாயன ஆயுதங்களையும்  அதன் வசதிகளையும்  அழிக்க உபயோகப்ப்டுத்தவேயாகும். எப்போதும் போல் சீனா, ரஷ்ஷியாவுடன் சேர்ந்து ஸிரியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல அமெரிக்காவின் ஸிரியாவை எதிர்த்து ஐனா சட்டசபையில் ஏவிவிட்ட தீர்மானங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. ஸிரரியாவின் மீது அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கு  சீனா கடும் கண்டனமும் ஏதிர்ப்பும் தெரிவித்தது. பேச்சு வார்த்தையே ஸிரியாவின்  இக்கட்டான நிலைக்கு தீர்வு காண வழி என்று திட்டவட்டமாக சீனா கூறியுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளின் கலவர நிலவரம் பாத்தியப்பட்ட நாடுகளுக்குமட்டுமின்றி அது கிட்டத்தட்ட 80% எரி பொருள் மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் நம் பாரத தேசத்திற்கு ஒரு பலத்த சவாலாக உள்ளது. நமக்கு பெருமளவு எரிபொருள் வழங்கிவந்த  இரானின் மீது அமெரிக்கா பல நிபந்தனை விடுத்து கட்டுப்ப்டுத்திவருகிறது. இரான்  பாரதத்திற்கு மூன்று மாத அவகாசத்துடன் ஸௌதி அரேபியா, இராக்கைவிட விலை குறைவாக அளிக்கின்றது. அது பணம் செலுத்துகையை இந்திய ரூபாயிலும் பெற்றுக் கொள்கிறது. ஆகையால் பாரதத்திற்கு சர்வ தேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னியதேசத்து மாற்ருப் பணம் மிஞ்ஜுகிறது. ஆனால் அமெரிக்காவின்  இரானின் மீதுள்ள கட்டாய நிபந்தனைகள், பாரதத்திற்கு இரானிலிருந்து எரிபொருள்  இரக்குமதி குறைத்து விட்டது. அதேபோல் ஸிரியாவும் பாரதத்திற்கு அதன்   எண்ணை நிலத்தில்  பாத்தியதை வழங்கியுள்ளது. அங்கு ஸிரியாவில் 14 கடலோரம் மேல்  6 கடல் நடுவே எரிபொருள் எண்ணை செமிப்பு கிணருகள் உள்ளன. ஆனால் தற்போதய கலவர நிலவரத்தினால் பாரதத்தின் எண்ணை கம்பெனிக்கள்,  தற்காலிகமாக தனது உற்பத்திகளை நிருத்திவைத்துள்ளது. ஓ.என் ஜீ.சி, பாரத் ஹெவி இலெக்ட்ரிகல்ஸ் இவையும் இந்த திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. பாரதத்திற்கு அங்கு ஒரு இரும்பு ஆலையிலும் பங்குண்டு. 

உலகின்  மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் இருக்கும் தேசங்களின் அரசியல் தடுமாற்றம் , கலவரங்கள், எரிபொருள்கள். கச்சா எண்ணை ஒரு கட்டுப்பாடில்லாத விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பு மிகச்சறிவை க்கண்டு ,எரிபொருள் இரக்குமதியை விலை அதிகரித்திருக்க மற்றொரு காரணம்.எரி பொருள்கள் விலை உயர்வு ,முன்பே வீழ்ச்சியடைந்துள்ள பாரதத்தின் பொருளாதாரத்திற்கு மேலும் சவாலாக இருக்கும். எரிபொருள்  எண்ணை இரக்குமதியின் மதிப்பு பாரதத்தின் இரக்குமதியின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆய்வாளர்களின் கணிப்பு படி,  ஸிரியாமீது எந்தவித தாக்குதலும் எண்ணை எரிபொருள் விலையை ஒரு பீப்பாய் இப்போதைய 115 டாலர் லிருந்து 150 அமெரிக்க டாலருக்குத் தள்ளிவிடும். எரிபொருள் , கச்சா எண்ணை விலை உயர உயர பாரதத்திற்கு பணவீக்கத்தை அடக்கி, கட்டுப்படுத்த திணரலாக இருக்கும்.
இந்த நிலவரம் பொருளாதாரத்திற்கு மட்டும் சவாலாக இல்லாமல், அது ஒரு போர் , ராஜ்ய அபாய நிலவரமாகவும் உள்ளது.  இரான் இன்னும் ஆறே மாதத்தில் அணுசக்தி ஆயுதமுள்ள தேசமாகிவிடும் என்று இஸ்ராயல் கறுதுகிறது. லெபனென்னில் இருக்கும் ஹெஜபொல்லா, பல அணு ஆயுத ஏவுகணைகளை வெற்றியுடன்  உபயோகித்து , இஸ்ரெயல் போன்ற பலத்த ராணுவ தேசத்தை முட்டியிடச்செய்திருக்கிறது. அது அவ்வாரிருக்க, ஸிரியாவின் அரசாங்க ராணுவத்தின் த்ரோகியான  கலவர எதிரியான ப்ரிகேடியர் ஜாஹேர் ஸாகேத் [ எவன் ஸிரியாவின் ரஸாயன ஆயுதங்களின் தலைவனாக செயல்பட்டு வந்தனோ அவன் தகவல் படி ஸிரியா தனது ரஸாயன ஆயுதங்களை கடந்த வாரம் யுனைடெட் நேஷன் ஸெக்யூரிட்டி  கௌன்ஸிலின் தீர்வின் அடிப்ப்டையில் அழிக்க ஒப்புக்கொண்டுவிட்டு,  அவைகளை அழிக்காது லெபனென்ன்னில் இருக்கும் ஹெஜபொல்லவிற்கும் , இராக்கிற்கும் அனுப்பிவருகிறதாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்வளவு அபாயங்கள் சூழ்ந்துள்ள நிலையில்  பொருமை இழந்துள்ள இஸ்ரேயல் இரான், ஸிரியா மீது ராணுவ ஆக்ரமிப்பு செய்ய ஆதரவளிக்கிறது , தாமே ஆயத்தமாகவும் இருக்கிறது. அதன் நடுவில் அமெரிக்கா கத்தார், யூ.ஏ.ஈ, சௌதி அரேபியாவுடன் சேர்ந்து தனது ராணுவ  சான்னித்யத்தை[இருக்கையை] அதிகரித்துவருகிறது. இஸ்ராயலுடன் சேர்ந்து  துர்கிஸ்தானும் தனது கை பளுவை  ஸிரியாமீது தனியாக சமீபத்தில்  செய்த தாக்குதலை க்கொண்டு உறுதியாக்கியது. இந்த நிலைமையை சமாளித்து வர ரஷ்ஷியாவும்  தனது ராணுவ அதிகாரத்தையும்,  பலத்தையும் மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த இரானின் அணு ஆயுத பயத்துடன் ,ஸிரியாவின் ரசாயன அயுதங்கள், ஹெஜபொல்லாவின் ஏவுகணைகள் இருவரும் இரானின் ஆதரவாளர்களிடமிருந்து  உலகத்தின் மத்திய கிழக்கு ப்ரதேசத்திற்கும், ஏன் உலகத்திற்கே தீவிர அபாயம் நிலவி வருகிறது. ஆம் இத்தருணம் உலகம் அனைத்தும் மத்திய கிழக்கினால் ஆட்டம் கண்டுள்ளது. [பாப்பு சொல்படி அனைவரும் உலகத்தின் நிலவர்ம் பற்றிய  செய்திகள் தெரிந்து கொண்டு எதையும் சந்திக்க த்தயாராக இருக்க எல்லாம் வல்ல இரைவனை ப்ரார்த்தித்து செயல்பட்டு வருவோமாக].



ஹரி ஓம், " நான் அம்பக்ஞன் ஆவேன்"   

மூள லேக -