Some more honours for Dr. Nikola Tesla
டா.டெஸ்லா தமது ஐரோப்பா சுற்றுலா செய்து தனது தாயை இழந்த துக்கத்துடனும் அந்த நினைவுகளுடன், ந்யூயார்க் திரும்பினார், அவர் தமது பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பித்தார். சிறிது நாட்களில் துக்கத்தை மறந்தார். அதே வருடம் 1892ல் டா.டெஸ்லா அவர் சாதனைகளுக்கு இரண்டு மகத்தான விருதுகள் பெற்றார்.அவர் ந்யூயார்க் திரும்புவதற்கு முன்னர் அவரை சர்பியாயவின் தலை நகரமான பெல்க்ரேட் நகராட்சிக்குறிய அதிகாரிகளினால் அன்நகர மக்களுக்கு டா.டெஸ்லாவில் பரிசோதனைகள், ஆராய்சிகள் , சாதனைகள் பற்றி விளக்க விண்ணப்பித்தனர். ஜூன் 1, 1892 சுமார் 11 மணி அளவில் டா.டெஸ்லா பெல்க்ரேட் ரயில் நிலையத்தை அடைந்தார்.ஆயிரக்கணக்கான மக்கள் பெல்க்ரேட் ரயில் நிலையத்திலேயே வரவேற்றனர், முக்கியமாக அவரை ப்பார்க்க விரும்பினர். அனைவருக்கும் பெருமையான ஒர் விஷயம் , அதுவும் தமது சர்பிய தாய்நாட்டு மண்ணின் புதல்வனின் சாதனைகளுடன் இணைத்துக் கொண்டனர். அவருக்கு பூக்கொத்து அளித்து - மாலையும் அணிவித்து , அன்பளிப்புகளும் கொடுத்து கௌரவித்து வரவேற்கயில் டா.டெஸ்லா மெதுவாக அவர்களிடையே நடக்கலானார். டா.டெஸ்லாவை சர்பியாவின் சாதனை சூரியனாக கருதினார்கள். அவருக்கு என ஒரு குதிரைவண்டி அலங்கரித்து காத்துகொண்டிருக்கையில் அவர் , இந்த வரவேற்பினாலும் ,உபசாரனையினாலும் உணற்சிக்கு வசமானார், கண் கரைந்தார். அவர் தாழ்மையுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து , நான் எனது கனவுகளில் சிலவற்றை இதுவறை நிஜமாகியதை கடவுள் க்ருபையாக கருதுகிறேன். ஆனால் எனது குறியான மனித சமுதாயத்திற்கு எனது ஆராய்சிகளினால் உதவி செய்யும் பலன் கிடைக்க வெகு தூரம் செல்லவேண்டும், அப்போதுதான் நான் சர்பிய நாட்டின் பெருமை புதல்வனாக கருதுவேன். ஜூன் 2, 1893ல் டெஸ்லா சர்பிய நாட்டு அரசரான அலெக்ஸாண்டர் ஆப்ரேனோவிச் சை சந்தித்தார்.பெல்க்ரேட் நகரத்தில் மின்சக்தியை இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அரசர் அவரை க்கேட்டும், அவரது ஆராய்சிகள் பரிசோதனைகள் கண்டு வியப்புற்று, அதே வருடம் 1893 லேயே பெல்க்ரேட் நகரத்தை மின்மயம் ஆக்கினார். அது ஒரு பெரிய திருவிழா போன்று கொண்டாடப் பட்டது. சர்பிய அரசர் டா.டெஸ்லாவிற்கு விஞான வளர்ச்சிக்காக புனித சவா என்ற அன்நாட்டு பதக்கம் அளித்து பாராட்டினார்.
அதே வருடம் 1892ல் டா.டெஸ்லாவை அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் அவரை கௌரவித்தது . அவருக்கு உபதலைமை அதிகாரியின் பதவியும் தந்தனர். அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் 1884ல் அமைக்கப்பட்டது. அவர்கள் கம்பியை கொண்டு மின் ஆற்றல் வினியோகம் சம்பந்தப்பட்ட தந்தி , தொலைபேசி, மின்விளக்கு , சக்தி ஆலைகள் வேலையில் செயல்பட்டு வந்த நிருவனம். மதிக்கப்பட்ட நிருவனமாக இருந்தது அக்காலத்தில். அந்த நிருவன சங்கம் இன்றும் இயங்கி வருகிறது, ஆனால் வேரு ஏதோ பெயரில் . இந்த சங்கத்துடன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரேடியோ இன்ஜினியர்ஸ் 1962ல் இணைந்து ஒரு புது விஞானிகள் சங்கமாக மாறியது. அதுவரை மின்-அணு சாரம் [எலெக்ட்ரானிக்ஸ்] ஒரு தனி கிளையாக தலைதூக்கி கிளம்பியது. ஆகையால் அந்த புதிதாக உறுவான விஞானிகள் சங்கத்தின் அங்கத்தினருடன் , மினணு விஞானிகளும் இணைந்தனர். ஆகையால் அந்த சங்கம் இன்ஸ்டித்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் அண்ட் இலெக்ட்ரானிக் இன்ஜினியர்ஸ் [ ஐ, ஈ. ஈ.ஈ(IEEE)]என்று அழைக்கப்பட்டது. அது இன்றும் ஒரு உலகபுகழ்பெற்ற , மதிக்கப்பட்ட நிருவனமாக செயல்பட்டு வருகிரது. டா.டெஸ்லா இன்நிருவனத்தில் 1892-1894 வரை உபதலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
நாம் கடந்த கட்டுறைகளில் டா.டெஸ்லா செய்த கம்பியில்லா மின்ஆற்றல் பரிசோதனைகள் அவரது ஆராய்சிகளே என்பதை பர்த்தோம். அதை வெளியிட்டு டெஸ்லா அதை சந்தைக்கு கொண்டுவரவில்லை ,அதற்கு அவருக்கு வெகு தூரம் செல்லவேண்டுமென்ற கட்டம் , முக்கியமாக கம்பியில்லா மின் ஆற்றலை சாதாரண மனிதனுக்கு பயன் படும் வகையில் செய்ய, 1892ல் கொலம்பியன் கண் காட்சிக்கு அவருக்கு மின் விளக்கு அலங்காரம் செய்ய குத்தகை கிடைக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் பல நிருவனங்களுக்கு திறக்கப்பட்டன. உலக கலாசார, விஞான முக்கியத்துவத்தை இந்த கண்காட்சியில் கருத்தில் கொண்டு தாமஸ் எடிஸன் எலெக்ட்ரிகஸ் கம்பெனி, இக்கண்காட்சியில் தமது நேர் மின் ஆற்றல் திட்டத்தை வெளிப்படுத்த கண்காட்சி முழுவதும் அலங்கரிக்க குத்தகை $18,000,00 [12 கோடி ரூபாய்] தேவையை தெரியப்படுத்தியது. இக்குத்தகை முன்வரும் அனைத்து நிருவனங்களுக்கும் வாய்ப்பளிக்க திறக்கப்ப்ட்டு இருக்கையில் , டா.டெஸ்லாவின் ஜார்ஜ் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமும் மனு விண்ணப்பம் செய்தது. ஆனால் அது 2கோடியே 40லக்ஷத்திற்கே ஆகும். இதைக்கண்டு டா.டெஸ்லாவின் மாறு திசை மின் ஆற்றல் திட்டத்தை முறி அடிக்க , எடிஸன் நிருவனம் தனது தரத்தை 3 கோடியே ,33லக்ஷமாக குறைத்தது [அதுவும் டா.டெஸ்லாவுடன் போட்டியிடவே 70% குறைத்தது]. அப்படியிருந்தும் டா.டெஸ்லாவின் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமே இக்குத்தகையை பெற்றது. இதற்கு இடையூராக எடிஸனின் நிருவனம் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்தை மின் விளக்கு பட்டயப்போறில் தள்ளி கண்காட்சிக்கு தேவையான மின் விளக்கு கிடைக்காது செய்த போதிலும் டா.டெஸ்லாவும் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவன தொழிலாளிகள் இரவு பகலாக கடுமையாக உழைத்து மூன்றே வாரத்தில் 2,000,00 பல்புக்கள் [விளக்குகள்] விசேஷமாக தயார் செய்து கண்காட்சியை அலங்கரித்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்தினர்.
இந்த உலக மஹா கொலம்பியா கண்கட்சி என்பது என்ன? ஏன் வெஸ்டிங்க் ஹவுஸ் , எடிஸன் நிருவனங்கள் இதற்காக கடுமையாக போட்டி இட்டன. அதன் முக்கியத்துவம் தான் என்ன. அதை அடுத்துவரும் கட்டுறையில் பார்ப்போம்.[தொடரும்].
ஹரி ஓம் || ஸ்ரீ ராம்|| நான் அம்பக்ஞன் ||
மூள லேக -
இம்க்லிஶ - டா.டெஸ்லாவிற்குக் கிடைத்த இன்னும் பல விருதுகள் - English