World Columbian Exposition
நாம் யாவரும் தற்போது உலக கால்பந்து க் கோப்பை போட்டிகளை ஸ்வாரஸ்யமாக கவனித்து வருகிறோம். அது ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அடுத்த படியான ஒரு விளையாட்டுப் போட்டி என்று கருதப்பட்டது. உலகத்தின் முப்பத்தி இரண்டு நாடுகளிலிருந்து 550வீரர்கள் விளையாடும் போட்டி. கோடிக்கணக்கான மக்கள் காணும் , கண்டு களித்துவரும் போட்டி.
நாம் யாவரும் தற்போது உலக கால்பந்து க் கோப்பை போட்டிகளை ஸ்வாரஸ்யமாக கவனித்து வருகிறோம். அது ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அடுத்த படியான ஒரு விளையாட்டுப் போட்டி என்று கருதப்பட்டது. உலகத்தின் முப்பத்தி இரண்டு நாடுகளிலிருந்து 550வீரர்கள் விளையாடும் போட்டி. கோடிக்கணக்கான மக்கள் காணும் , கண்டு களித்துவரும் போட்டி.
அதேபோல் 1893ல் அமெரிக்காவில் ஒரு வியக்கத்தக்க நிகழ்சி நடந்தேறியது. 46 நாடுகளிலிருந்து 2.8 கோடி மக்கள் பங்கேற்றனர். அது ஒரு விளையாட்டு நிகழ்சி அல்லாமல் அது அக்காலத்து ஒரு மிகப்பெரிய கலாசார ,விஞான கண்காட்சியாக புகழ் பெற்றது. அது அமெரிக்க நகரான சிகாகொவில் 1893 ல் நடைபெற்ற கொலம்பியன் எக்சிபிஷன் என்று அழைக்கப்பட்டது. அது 1492 ல் க்ரிஸ்டாஃபர் கொலம்பஸ் அமெரிக்க பூமியில் கால்வைத்த 400 ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு நடத்தப் பட்டது. 630 ஏகர் நிலப்பரப்பில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. ஒரு பெரிய குளம் கொலம்பஸ்ஸின் மிகப்பெரிய உலகப்ப்ரயாணத்தின் சின்னமாக நடுவில் அமைந்திருந்தது. கண்காட்சி பல வித்தியாசமான சிர்பசாஸ்த்ரம் ப்ரதிபலிக்கும் கொள்கை கொண்ட சுமார் 200 கட்டிடங்கள் இருந்தன. அது உழவுத்தொழில், சுதந்திரக் கலை, சுறங்கத்தொழில் , பொறிஇயல், யந்திரம் , மின்சக்தி , அனுப்புத்தொழில் , கட்டிடத்தொழில் ஆகியவற்றைப்பற்றி ,இக்கண்காட்சியில் பல தேசங்களின் கலாசாரம் வெளிப்படுத்தப்பட்டது.
இக்கண்காட்சி 1893ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி ஆரம்பித்து அக்டோபர் 30 , 1893 வரை நீடித்தது. கிட்டத்தட்ட ஆறு மாத காலம். , அது மிசிகன் ஏரியை ஒட்டி அமைந்துள்ள ஜாக்ஸன் பூங்காவில் , கடல் , ரயில், சாலை வழியாக பல நாட்டிலிருந்து வருவோற்களின் வசதியை க்கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது. அது ஒரு பல தேசங்களிலிருந்து மூலை , முடுக்குகளிலிருந்து திரளாக வந்து . திட்டங்கள் அல்லது எண்ணங்கள், மக்கள், தொழில்நுட்ப அறிவியல்கள் ஒன்று கூடி அவரவர்களது யந்திரத்தொழில்கல், கலாசாரங்கள், வாணிகம் , கல்வித்துரையின் திறனை வெளிப்படுத்தும் சங்கமக் கூட்டமாக அமைந்தது. இக்கண்காட்சியில் ஐரோப்பாவிலிருந்து 35 கப்பல்கள் , 10000 அதிகாரிகள் , கடல் மனிதர்கள், கடல் சம்பந்தப்பட்டவர்கள் , அவர்களது நாட்டின் திறமையைக்க் காட்டினர். இன்நிகழ்சி ஒரு முக்கியமான, மதிப்புக்குறிய, சமூக சம்பந்தமான, பண்பாட்டு சம்பந்தாமான நிகழ்சியாகவும் இருந்தது. அது, கலை, சிற்பசாஸ்திரம் , அமெரிக்காவின் யந்திர தொழில், எதிர்பார்ப்பு முதலியனவின் மேல் ஆழ்ந்த , நற்பயன் விளைவுகள் கொண்டன. அக்காலத்தில் அமெரிக்காவில் நடந்த கண்காட்சி உலகத்திலேயே நடந்த ஒரு மிகப்பெரிய நிகழ்சியாகும். சுமார் முப்பத்திஐந்து லக்ஷம் சதுர அடி இக்கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது, கண்காண்காட்சியில் , மின் ஆற்றல் கண்காட்சி ஒரு பலத்த பங்கை கொண்டிருந்தது.
வெஸ்டிங்க் ஹவுஸும் டாடெஸ்லாவும் இம் மாபெரும் கண்காட்சிக்காக தயார் செய்யும் முயற்சியில் இரங்கினர். இது டா டெஸ்லாவிற்கு , உலகத்திற்கே மாறு திசை மின் ஆற்றலை ப்பற்றி விளக்க ஒரு மகத்தான வாய்ப்பு எனலாம். டாடெஸ்லா சுமார் 1200 கிமி சிகாகோ ப்ரயாணம் செய்து இந்த உலகமகா நிகழ்சிக்கு தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். வெஸ்டிங்க் ஹவுஸிற்கு பாலிஃபேஸ் மாறு திசை மின் ஆற்றல் விதிமுறைகள் பொறுப்பு தறப்பட்டிருந்தத்து. இதுவே தக்க தருணமாக , கிடைத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. டா டெஸ்லாவும் இந்த கண்காட்சியில் மாறு திசை மின் ஆற்றலைக் கொண்டு இக்கண்காட்சிக்கே மின் லிளக்கு அலங்காரம் செய்ய திட்டமிட்டார். இந்த வேலை சுலபமானது அல்ல . டாடெஸ்லா இரவு பகலாக உழைத்து தாமாகவே கம்பி இணைப்புகள் சரிவர செய்து மின் ஆற்றல் கொண்ட விளக்குகளை இயக்கினார். அப்போது அங்கு கனத்த குளிர்காலம்,குளிர் தாங்கமுடியயாமல் கண்காட்சியின் வேலைப்பாடுகளை இரண்டு மூன்று வாரம் நிருத்தவேண்டிய தாயிற்று. அதை பொருட்படுத்தாமல் டாடெஸ்லா கடுமையாக உழைத்து மாறுதிசை மின் ஆற்றல் பாலிஃபேஸ் கருவியை உருவாக்கி உலகிற்கு சமர்ப்பித்தார். இந்த குளிர் மட்டும் டாடெஸ்லாவிற்கு இடையூராக இல்லை, ஜெனரல் இலெக்ட்ரிக் நிருவனம் , டா.டெஸ்லாவுடன் சேர்ந்திருந்த வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்தை ஒரு பட்டயப் போரில் இழுத்தது,ஆதலால் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்திற்கு சந்தையில் கிடைக்கும் விளக்கு பல்ப் களை உபயோகிக்க முடியாது போயிற்று. அது கண்காட்சிக்கு இரண்டு மூன்று மாதம் முன் நிகழ்ந்தது. இந்த காரணத்தினால் . வெஸ்டிங்க் ஹவுஸ் டா.டெஸ்லா கலந்த திட்டத்துக்கு தடை. டா.டெஸ்லா இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கண்காட்சி க்கு வேண்டிய சுமார் இரண்டு லக்ஷம் விளக்கு பல்புக்களை உற்பத்திசெய்து வாங்கி உபயோகித்தார். இது ஒரு பெரிய சாதனை ,ஏனெனில் இரண்டு லக்ஷம் பல்புக்கள் அமெரிக்காவின் இருபத்தைந்து சதவிகித பல்புக்களுக்கு சமமாகியது.
அனைத்து கண்காட்சி அரங்கம் முழுவதும் இரண்டு லக்ஷம் மின் விளக்குகளினால் அலங்கரிப்பது எப்பேர்பட்ட் சாதனை. கண்காட்சிக்கு சில வாரங்கள் முன், தானாக இயங்கும் மிக வேகத்தில் செயல்படும் யந்திரங்கள் இல்லாத, நாளில் 1893 ஆம் ஆண்டு 200000 மின் பல்புக்களை தயாரிப்பது கற்பனைக்கு எட்டா விஷயம் இருந்தும் டாடெஸ்லாவும் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமும் செர்ந்து அயராது பாடுபட்டு கண்காட்சி முழுவதும் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கவைத்து வெற்றி கண்டனர். அதுவும் மிகக் கடுமையான சூழ்நிலயில் அதுவும் மாறுதிசை மின் ஆற்றலை கொண்டே .வெஸ்டிங்கஹவுஸ் நிருவனமும் டாடெஸ்லாவும் பல பாலிஃபேஸ் மாறு திசை கருவிகள் கண்காட்சியில் காண வைத்திருந்தனர். அதில் பாலிஃபேஸ் மாறு திசை மின் ஆற்றல் உற்பத்தி யந்திரங்கள், மின் சக்தி அதிகரிக்கும் கருவி, மின் சக்தி குறைக்கும் கருவி, ,மின் அனுப்பும் கம்பிகள், தூண்டுமின் மோட்டார்கள், நேர் மின் லிருந்து மாறு திசை மின் மற்றும் சாதனம், ரயில் மின்னோடி, இன்னும் பல கண்டு பிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்ப்ட்டிருந்தன.
டா.டெஸ்லாவே இந்தக் கண்காட்சிக்காக பல பரிசோதனைகள் வரிசைப்படுத்தி இருந்தார். இக்கண்காட்சிக்காக டா.டெஸ்லா பல வாயு நிரப்பப்பட்ட மின்னும் [பல்புக்களை] விளக்குகளை வடிவமைத்திருந்தார். அவ்விளக்குகள் எந்தவித வாயுவோ, அதன் வதிர்வெண்ணிற்கேற்ப பல வண்ணங்களில் பளிச்சிட்டன, மின்னின.இது சாதாரண பல்புக்களை விட நன்கு வேலை செய்தன. இம்மாதிரியான வாயு நிரப்பிய பல்புக்கள் முன்னதாகவே இருந்தாலும் ,டா.டெஸ்லா அதில் உயர் வதிர்வெண் , உயர் வால்டேஜ் உபயோகித்து பலமடங்கு நன்றாக திறனுடன் வேலை செய்ய வைத்தார்.அதே முறை தான் இக்காலத்து வாயு நிறைந்த பல்பு விளக்குகள் கையாண்டிருக்கின்றன அதுவே நம் ட்யூப்லைட்டுக்கள், சிஎஹ்ப்எல்கள், நியான் விளக்குகள் , ஸோடியம் வேபர் விளக்குகள் முதலியனவாகும். யார் இந்த காண்டுபிடிப்புக்கு காரணம் என்று புரிந்திருக்கும்.
நாம் டா.டெஸ்லா எவ்வாரு விதவிதமான மின்னும் விளக்குகள் வடிவமைத்தார் அதை எவ்வாரு கண்காட்சியில் யாவரும் வியக்கச்செய்தார் என்பதை மட்டும் பார்க்காமல் அவர் சில கற்பனைகெட்டா பரிசோதனைகளும் செய்வித்து கண்காட்சியில் யாவரது மனதையும் கவர்ந்தார் என்பதையும் பார்க்கப்போகிறோம்.
ஹரி ஓம் || ஸ்ரீ ராம் || அம்பக்ஞ
என்ற வெப்ஸைட்டில் பார்க்கலாம்
மூள லேக -
இம்க்லிஶ - குருக்ஷேத்திரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - English