Tuesday 19 August 2014

கம்பியில்லா மின்ஆற்றல் [மின்சாரம்]- [Part-1]

1890 ஆம் ஆண்டு டாக்டர் நிகோலஸ் டெஸ்லா தாமாகவே  ஆடலான  மின் சக்தி எனும் மாறு திசை மின்சார தத்துவத்தை உறுவாக்கினார்.அதை அவர் மாற்றி திருத்தி அமைத்து பேரளவு உயர்ந்த வதிர்வெண்[ஹை ஃப்ரீக்வென்ஸி] மாறுதிசை மின்சார வளர்ச்சிக்கு காரணமாகி பிறகு கம்பியில்லா மின்சார செலுத்தல் என்னும் அதிசயைத்திற்கு வழிவகித்தது, அதை டாக்டர் டெஸ்லா இயற்கைத்தாயின்  இயல்பாகவே கருதினார். 

டாக்டர் டெஸ்லாவின் மாறு திசை த்தன்மை வாய்ந்த மின்சாரத்திட்டத்தை களங்கபடுத்துவதற்காகவே , தாமஸ் ஆல்வா எடிஸன் பகிரங்கமாக பொதுமக்கள் இடையே மிருகங்கள்மீது மின்சார சக்தி பாய்சினார் என்பதை அறிவோம்.அதனுடன்   மாறு திசை மின்சாரசக்தி பய்ச்சிய  நாற்காலி மீது உட்காரவைத்து சிறைக்கைதிகளின்  மரணதண்டனைக்கு உபயோகித்ததை அறிந்து தா. டெஸ்லா மிகவும் மனம் வருந்தினார்.   டா.டெஸ்லா கடவுள் பக்தி கொண்டவர், கருணைஉள்ளம் கொண்டவர்,  அவர் ஹ்ருதயம் இக்கைதிகள், மிருகங்களின் மீதான கொடுரமான  சித்திரவதையை நினைத்து உறுகியது.  டா,டெஸ்லா , தாமஸ் எடிஸனின் இந்த அவதூரு செய்திக்கு எதிர்த்து முறியடிக்க முடிவு செய்தார். அவர் ஜார்ஜ் வெஸ்டிங்க் ஹவுஸுடன் சேர்ந்து ஒரு பத்திரிகை மாநாடு ஏற்பாடு செய்து பல முக்கிய விஞானிகள், வாணிக த்தலைவர்கள் , பத்திரிகைகையாளர்களை மாறு திசை மின்சாரத்தின் செயல்முறை விளக்கத்திற்காக  தனது ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்திற்கு அழைத்தார்.  அங்கு அவர் ஒரு லக்ஷம் வால்ட் மின்சக்தி  விளைவிக்கும்  மாறு திசை பொறி ஒன்றை தயார்நிலயில் வைத்திருந்தார்.  ஏசி கரண்ட் என்னும் மாறு திசை மின் , அதை  க்கட்டுப்பாட்டுடன் இயக்கிப்பயன் படுத்தினால் அது மானிடர்களளுக்கு ஒரு தீங்கும் விளைவிக்காது என்பதை உறுதி ப்படுத்த தன் உயிரையே பணயம் வைத்து , டா.டெஸ்லா அந்த லக்ஷம் வால்ட மின் விளைவிக்கும் பொறி அறுகே அமர்ந்து செயல் படுத்தியும்  காட்டினார். அங்கு கூடியிருக்கும் அனைவரையும் ஆஸ்சரியத்துடன் திகைக்கவைத்தார்.  டா.டெஸ்லா ஒரு சிராய்ச்சல் இன்றி  வெளிவந்தார்.  இதை அவர் செய்தது மானிடத்தன்மை யை க்காப்பாற்றவும், மக்கள் நலனுக்காகவும், மாறு திசை மின்சாரம் பற்றிய தவரான கருத்தையும் , வதந்தியை நம்பாதிருக்க தம் உயிரை  பணயம் வைத்தார், எடிஸனோ ஏ.சி மின்சக்தியை மிருகங்களிலும், கைதிகளிலும் பாய்ச்சி கொடூரச்செயல்கள் புரிந்தார் என்பதை  கவனிக்கவும். 


கம்பியில்லா  மின்சார இயக்கத்தை பற்றிய விளக்கம் டா. டெஸ்லா மக்களுக்கு அளித்ததும் அதுவே முதன்முறையாகும்.  ஆம்,தாங்கள் யாவரும் கேட்டது சரியே. "வயர்லெஸ் இலெக்ட்ரிசிடி" கம்பியின்றி மின்சாரம்   என்பதை தெளிவு படுத்தும் வகையில்  மின்விளக்குகளை தன் கையிலேயே ஏற்றி க்காட்டினார். எவ்வாரு இச்சாதனையை செய்தார்? எப்படி ப்படைத்தார்? என்பதறிய நாம் அவர் அவரது  ந்யூயாரக்  ஆய்வுக்கூடத்தில் நடத்திய பரிசோதனைகள்  பார்ப்போம். அவரது ந்யூயார்க் ஆய்வுக்கூடம்  ஒரு பல தரப்பு ஆராய்ச்சிக்கூடமாகவும் , உற்பத்திநிலையமாகவும் செயல்பட்டு வந்தது. அதில் பல பகுதி, கிளைகள், பல மாடிகள் , மட்டங்கள் இருந்தன. அதை ஒரு சிறிய ஆராய்சி மற்றும்  வளர்ச்சி மய்யமாக கருதலாம்.  டா.டெஸ்லா பல மின் ஆற்றல் மாற்றும் கருவிகளும் , மின்விளைவிக்கும் பொறிகளும் அவரது கீழ் மட்டத்தில் தயார் செய்து வந்தார்.  அவரது தனி ஆராய்சிக்ககூடம் மேல் மட்டத்தில் இருந்தன. அவரிடம் இயந்திர நிபுணர்கள் சிலர் பணியாற்றி வந்தனர். அதில்  கோல்மன் ஜீடோ அவரது நம்பகமான நண்பர் அவருடன் இருதிவறை இருந்தார். டா.டெஸ்லா கடும் உழைப்பாளி என்பது அறிவோம். அவர் அவரது  அத்தகைய  ப்ரம்மாண்டமான ஆராய்ச்சி க்கூடம் வெஸ்டிங் ஹவுஸிடமிருந்து பெற்ற ஊதிய த்தொகையிலிருந்து தாமே பார்த்து பார்த்து க்கட்டியிருந்தார். அவரது ஆராய்ச்சியின் சமயம் வித்தியாசமாக  எதையும் உணர்ந்தாலோ , கண்டாலோ அதை மறு ஆராய்சி செய்து பல  விதத்தில் மாற்றி ப்பார்த்தும் ஆராய்ச்சிகள் நடத்துவார். இம்மாதிரியான  ஆய்வும் ஆராய்ச்சிகளும் அவருக்கு பல விஷயங்கள் அறிய வாய்ப்பு கிடைத்தது. ஆகையால் அவர் பல கண்டுபிடிப்புகள்   செய்தார், பல பட்டயங்களுக்கும் உறிமை யாளர் ஆனார். அவ்வாரே அவரது கண்டுபிடிப்புகளும் ,  படைப்பாற்றல்களையும் வளர்த்துக்கொண்டார்.

     டா.டெஸ்லா மிகவும் மேலோங்கியதான திறனான வெகுதூரம்வரை மின்சாரம் செலுத்தும்   பாலிஃபேஸ் ஏ.சி திட்டத்தை அளித்தார்.அங்கும் டெஸ்லா நிற்கவில்லை . அவரது , தளராத இடைவிடா முயற்சியால் ஏ.சி ஜெனரேட்டர்களின் வதிர்வெண் 30,000 ஹெட்ஜ் [வினாடிச்சுழல்கள்] வரை உயற்த்தினார், அதுவே ஹை ஃப்ரீக்வன்சி , அதாவது  உய்ர்ந்த வதிர்வெண்  கொண்ட  மாறு திசை மின் விளைவிக்கும் பொறிகள் பிறக்கக் காரணமாகும்.  இந்த உயர்ந்த வதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்சாரம் உலகத்திற்கு மின் சக்தி அளிக்கும் என்று நம்பினார். அவர் பல உயர்ந்த  வதிர்வெண்  கொண்ட மாறு திசை மின்விளைவிக்கும் பொறிகளை தாயரித்து பட்டயங்களும் பெற்றார்.  டா,டெஸ்லாவின் இந்த உயர்ந்த வதிர்வெண்  மின்சாரம்  மனிதனின் தொடர்பில் இருந்தாலும் ஒருவித  அபாயமும் இல்லை என்பதே.  எதிர்பாராது தவறி மனிதன் இம்மின்சாரத்தை தொட்டாலும் அதன் உயர்ந்த வ்த்ர்வெண்ணினால்  மனிதனின் வெளிமட்டத்திலிருந்து மனிதனை சிறிதளவும் பாதிக்காது வெளியேறிவிடும். விஞானத்தில் இதை ஸ்கின் எஃபெக்ட் , [தோல் பாதிப்பு] என்பார். டா டெஸ்லா மாறுதிசை மின்,  மனிதனுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தானது அல்ல என்பதை நிரூபித்தது.  அவர் அவரது அறிமுக விளக்கத்தின் சமயம் மாறுதிசை மின் பாயும் மின்வாய்களை தனது மூடப்படாத கைகளினால் தொட்டுக்கொண்டிருந்தும் அவருக்கு ஒன்றுமே ஆகாததை க்கண்டு மக்கள்  வியந்தனர். மக்கள் பாதுகாப்பே டா.டெஸ்லாவின் குறிக்கோளாக இருந்தது என்பதை கவனிக்கவேண்டும். 


இவ்வாரு உயர்ந்த வதிர்வெண்  மாறுதிசை மின் சக்தியை சார்ந்த  பரிசோதனைகளின் தருணம் ஒரு அதிசயமான நிகழ்ச்சியின் மூலம் டா. டெஸ்லாவின்  மின்சாரத்தைப்பற்றிய கருத்தே மாறியது. ஒரு பரிசோதனையில் ஒரு மெல்லிய கம்பியில் , பலத்த வால்டேஜ் ஏ,சி கரண்டினை பாய்ச்சி ஒரு வினாடியில் மின் சக்தி வளயத்தை முடியதை கண்டார். இத்தகைய மின் சக்தி ப்பாய்ச்சல் கம்பியை ஆவியாக்கியது. பாய்ச்சும் மின்சக்தியின் வால்டேஜ் அதிகரிக்கச்செய்கையில் அவர் அங்கம்முழுதும் ஊசிகுற்றுவது போன்று அனுபவித்தார். அவர் முதலில் அது வெடித்து சிதர்ய்தில்  அக் கம்பியின் சிறு துண்டுகளாக இருக்கும் என்று  நினைத்தார். அவர் தன்னை த்தானே தொட்டுப்பார்க்கயில் ஒரு துண்டும் இல்லை என்பதை அறிந்தார், ஒரு காயமும் இல்லை என்பதை உணர்ந்தார்.
 அதன்பிறகு அவர் அவருக்கும்  பரிசோதனை மேஜை கிடையே ஒரு பறுமனான  கண்ணாடியை வைத்தார், அதனுடன்  தாமர மின்வாய்களை செலுத்தி, பத்து அடி தொலைவில் நின்று  பார்த்தார்., அப்படியிருந்தும் , மின் வளயத்தை திரந்தவுடன்  அதே ஊஸிகுத்தும் உணர்வு இருந்தது.  பரிசோதனைகளை மாற்றி மாற்றி செய்து பார்க்கயிலும்,  ஊசிகுத்தும் உணர்வு  இருந்து கொண்டேஇருந்தது.  இதை அவர்,   அவர் உயர்ந்த மின்சக்தி சிறிதே நேரபபாய்ச்சலினால் அதாவது  ஆங்கிலத்தில் இம்பல்ஸ் என்பார்கள். இந்த ஆராய்சியே கம்பியில்லா மின்சக்தியின் பிறப்பாகும்.  இதிலிருந்து அவர் அறிந்தது,  பலத்த வால்டேஜ், உயர்ந்த வதிர்வெண்  மின்வளயத்தின் உடனடி மூடுதல் மின்சக்தியை காற்றுமூலம் பாய வைகின்றன,  அதுவே கம்பியில்லா மின் உடலை பாதிக்கின்றது என்பதை அறிந்தார்.  

இதன் பின் செய்த டா,டெஸ்லாவின்  பரிசோதனைகள் யாவும் திடீர்விசை மின்துடிப்பின்   , வதிர்வெண்  ,ரெஸோனென்ஸ்[ மின் ஒத்த அதிர்வு ]  கொள்கைகளைக் கொண்டு நடத்தப்பட்டன. இதை ப்பற்றி வரும் கட்டுரைகளில் கவனிப்போம், அடுத்த கட்டுறையில் டா டெஸ்லா எவ்வாரு காற்றில் பாயும் மின்சக்தியை கம்பியில்லா மின்சாரமாக மாற்றினார் என்ற  அதிசயத்தை ப்பார்ப்போம். 

                             ஹரிஓம் ||  ஸ்ரீ ராம் ||  அம்பக்ஞா||

மூள லேக -



No comments:

Post a Comment