கடந்த கட்டுரையில் டா.டெஸ்லா எவ்வாரு திடீர்விசை மின்துடிப்பை ப்பற்றி அறிந்தார் என்பதை பார்த்தோம் ,அதனுடன் அதி பேரளவான [உயர்ந்த] வதிர்வெண் மாறு திசை மின் சக்தி பயன்படுத்தி , மின்சாரம் காற்றிலும் பயணம் செய்வதை கண்டுபிடித்தார். அதுவே கம்பியில்லா மின்சாரத்தின் முதல் அடி ஆகும் .இந்தக்கட்டுரைகள் மூலம் கம்பியில்லா மின்சாரம் பயன் படுத்துதல் , இந்த கொள்கை எவ்வாறு டா,டெஸ்லாவின் பல புது க்கண்டுபிடிப்புகளுக்கு காரணமாய் இருந்தன என்பதை பார்க்கப் போகிறோம்.
நாம் தற்போது அவரது பரிசோதனைகளுக்கு செல்வோம். மின்சாரம் கம்பியில்லாது திடீர்விசை மின்துடிப்பினால் முடியும் என்ற முடிவுக்கு வந்த டா.டெஸ்லா அதில் சில மாற்றங்கள் செய்ய அதே மின் வளயத்தில் அதை 6ooo சுழல் வேகத்தில் திரக்கவும் மூடவும் தன்மையுள்ள ஒரு ரோடரி ஸ்விட்ச் பொருத்தி மின் பாய்ச்சலை 15000 volts[வால்ட்ஸ்]க்கு உயர்த்தினார். அவர் மின் வளயத்தை தூண்டிவிடுகையில் , அந்த ஊசி குத்தும் வலி ரோடரி ஸ்விட்சினால் கடுமையாகவே உணர்ந்தார்.. சாதாரணமாக [ஸ்டெப் அப் ட்ரான்ஸ்ஃபார்மர்] மின் சக்தி மாற்றும் பொறி ,மின் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தன், ஆனால் தற்போது மின்சக்தி மாற்றும் பொறி இல்லாது மின்சக்தி திடீர்விசை மின்துடிப்பினால் வெகு சீக்கிரத்தில் அதிகரிப்பதை கண்டார்(Impulses were amplifying the current and voltage) . தாமர கம்பியைச்சுற்றி வெள்ளை நீல மின் பொரிகள் இருந்ததை க்கண்டார். இந்த பரிசோதனையின் போது டா.டெஸ்லா ஊசி குத்துவலி அதிகரிப்பதை உணர்ந்தார். அப்படியும் அவர் மின்சக்தியையும் [வால்டேஜையும் கரண்டையும்], வதிர்வெண்ணும் உயர்த்தி க்கொண்டும், மின்சக்தி பாய்ச்சலை நிருத்தியும் பரிசோதனைகள் பல செய்தார். அதற்குக் காரணம் அவர் அவரது ஆற்றலின் மேல் இருந்த தன் நம்பிக்கையும் ,கடவுள் மீதுள்ள விஸ்வாசமுமே காரணம். ஒரு விதமாக இந்த பரிசோதனை செயல் படுததுதலில் வெற்றி பெற்றால் இது ஒரு புது வித மின்சாரத்திற்கு வழ வகுக்கும் அதுவே மானிடர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்பினார்.
அவரது பரிசோதனைகளை வித்தியாசமாக வளர்க்க துணிச்சலான முயற்சிகள் செய்து டா .டெஸ்லா [rapid mechanical rotary switch] வேகமாக இயங்கும் சுழல் மின் தொடர் மாற்றியை தாமமே உருவாக்கினார், அது வினாடியின் பத்தாயிரம் பங்கின் ஒன்றின் நேரத்திற்குள் செயல்படும். அதாவது, ஒரு நிமிடத்திற்குள் 600,000 சுழல்கள் ஆனது. அவர் வால்டேஜை [மின்சக்தியை] ஒரு லக்ஷம் வால்ட்ஸிற்கு உயற்தி ஒரு அற்புதத்தை கண்டார், அதையே " எலெக்ட்ரிகல் ஸாவ்னா" எஃபெக்ட்
‘Electrical Sauna’ effect என்பார்கள்.
டா.டெஸ்லா இந்த பரிசோதனையயும் மாற்றி மின்தொடர் மாற்றிக்கு[ ஸ்விட்ச்சிர்க்கு] பதிலாக அவர் காந்த வளைவு இடைவெளியை [magnetic arc gap] உபயோகித்தார். அவர் முதல் சுழலும் , இரண்டாம் சுழல்களும் [ primary and secondary coil ] தயாரித்து , அதாவது ப்ரைமரி காயிலிலிருந்து செகண்டரி காயிலிற்கு மின்சக்தி அதிகமாக பாயும். டா.டேஸ்லா அவரது புதிய திடீர்விசை மின்துடிப்பு மின்சக்தி மாற்றி அதில் பாயும் மின்சக்தி அளவை பன் மடங்கு பெருக்குவதை ப்பார்த்தார். அவ்வாரே கதிரொளி போன்ற சக்தி[ கம்பியில்லா மின்சார சக்தியும் அதிகரித்தது.
டா.டெஸ்லா பத்து லக்ஷ வால்ட்ஸ் மின்சக்தி இம்முறையினால் உற்பத்தி செய்து பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தார் . அதுவே அவருக்கு இந்த [கதிரொளி சக்தியை கம்பியில்லாம்லே வெகு தூரம் வரை கொடுக்கவும் முடிந்தது, அவர் பரிசோதனையில் வெளுத்த நீல கிரணங்கள் முழு காயிலிலிருந்து துள்ளி வெளிப்படுவதை பார்த்தார். அக்கிரண்ங்கள் எந்த பொருள் வழியாகவும் செல்ல வல்லதாக இருந்தன. அக்கிரணங்கள் குளுமையாகவும், ஊசிகுத்துதல் இல்லாது , அதுவே சிறிய வதிர்வெண்ணினால் உண்டாகும் எரிச்சலும் இல்லாது , உடலுக்கு இதமாகவே இருந்தன. அதற்கு மேல் சில வதிர்வெண்ணில் [ஃப்ரிக்வென்ஸியில்] இந்த வெள்ளை நீலக்க்கிரணங்கள் மின் பல்புக்களையும் , ட்யூப் லைட்களையும் கரண்ட் பாய்ச்சிய காயில்கள் அருகில் கொண்டுவரும் போது இயங்க வைத்தன. டா.டெஸ்லா இவ்விளக்குகளை கம்பியில்லாது தம் வெரும் கையில் பிடித்தவாரே இயக்கிக் காட்டினார்.
இதையொட்டிய மற்றொரு பரிசோதனையில் ஒரு தாமர[செம்பு] கடத்து கோளத்தை இரண்டாம் மின்சக்தி மாற்றி வாய்களுக்கு சேர்க்கப்பட்டது [ஒட்டுவிக்கப்ப்ட்டது]. எல்லா கிரண வெளியேற்றங்கள் இந்த தாமர கோளத்தில் மய்யம் கொண்டன., இப்போது இந்த தாமர கோளத்திலிருந்து வெடிப்பு சத்தத்துடன் வெளிப்படுத்தல் [கிரணங்கள்] வெளியேறின. அது
மின்பாய்ச்சும் சக்தி யை குறைந்த அளவில் வைத்து கம்பியில்லா மின் சக்தி பரப்புதலை அபாயமில்லாது மனிதர்க்கள் யாவருக்கும் உபயோகப்ப்டுத்துமாரு பத்திரமானதாகவும் , மிகச்சரியானதாகவும் ஆக்கியது. கம்பியில்லா மின் வெகு தூரம் வரை விஸஸேஷமாக செயல் படுத்திய மின்வளயத்தினால் பெற்றுக்கொள்ள முடிந்தது. டா.டெஸ்லா கம்பியில்லா மின்சார இயக்கத்தை இவ்வாரு பெற்றெடுத்தார் என்றே சொல்லலாம்.
இது கம்பியில்லா மின் சக்தியை பல இடங்களுக்கு பரப்பும் ஒரு பயிற்சிக்குறிய வழி. இதுவே டா.டெஸ்லாவின் புகழ் பெற்ற டெஸ்லா காயில் ஆகும். இன்று பல அனிமேடட் திரைப்படங்களிலும், விளையாட்டுகளிலும் டெஸ்லா காயிலினால் அபாயத்தையும் , இக் காயில் எதன்மீது விழுகிறதோ அது எறிந்து சாம்பலாகும் போல் காட்டப்ப்டுகின்றன, ஆனால் அது நேர் மாறானது , டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது வழிப்படி டெஸ்லா காயில் ஒரு முழுமையான கம்பியில்லா சக்தி பரப்பும், செலுத்தும் அபாயமில்லாத பத்திரமான ஒரு கருவியாகும். இந்த டெஸ்லா காயில் பரிசோதனைகளை எந்தவித நிபுணர்கள் இல்லாமல், அதை பற்றி ச்ரியாக அறியாது செய்து பார்கவே பார்காதீர்கள். ஆம் டெஸ்லா காயில் களை ப்பற்றி நன்கு அறிந்து கொண்டு அதை சரியாக , கம்பியில்லா விளக்கு ஏற்றுதலுக்கும் மின்சக்தி செலுத்தவும் பரப்பவும் மனிதர்களுக்கு சாதகமாக உபயோகிக்கலாம்.பயனுள்ளதாகவெ உள்ளது
ஹரி ஓம் || ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ||
மூள லேக -