Friday 19 January 2018

ஓம் மனஸாமர்த்யதாத்தா ஸ்ரீ அநீருத்தாய நம: நான்கு சேவைப் பரிசு- ஸ்ரீ அநிருத்த பாப்புவின் [பித்ருவசனம்]- "தந்தைசொல்"


பரம பூஜ்ய ஸத்குரு பாப்பு நவம்பர் மாதம் 30/2017 அன்று அவரது பித்ருவசன ப்ரசங்கத்தில் நான்கு  சேவை பரிசு என்ன என்பதை வர்ணித்தார். ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு தினமும்,ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு ஸ்ரத்தாவான் அதாவது பக்தர்கள்  மனத்தில் , நான் எந்த நிலையில் இருக்கின்றேனோ, அந்த நிலையிலிருந்து எவ்வாரு முன்னேறுவேன், எனது வளர்ச்சி எவ்வாரு ஆகும் , எனக்கு எவ்வாரு சுகம் கிடைக்கும், எனது  துக்கம் எப்பொழுது தீரும், எவ்வாரு எனது துக்கத்திற்கு தீர்வு காண முடியும். இது ஒவ்வொருவருக்கும் உள்ள இயல்பான சிந்தனைதான்.

ஆகையால், இதற்காகவே , புண்ணியம் கிடைப்பதற்கு பல வழிகள் தேடப்படுகின்றன, பாபம் போக்கும் மார்கம் , பாபத்தை விமோசனம்  செய்யும்  வழிமுறைகள் ஆராயப் படுகின்றன. பலமுறை முயற்சிகள்  செய்தபின்னும் ஒன்றும் சரிவர கிடைப்பதாக இல்லை. சமாதானமாக இல்லை.  அதற்காகவே யாம் குருக்ஷேத்ர மந்திரம், ஸ்ரீ ஸ்வஸ்திக்ஷேம ஸம்வாதம், ஸ்ரீ ஷப்தஞான யோகம் ,  ஸ்ரீ குஹ்யஸூக்தம் , என்ற வழிமுறைகள் நம்முடன் இருப்பதை பாற்க்கின்றோம்.  மாத்ரு வாத்ஸல்ய விதானம் இருக்கின்றது, மாத்ரு வாத்ஸல்ய  உபனிஷத் முதலிய க்ரந்தங்கள் இருக்கின்றன, ராம ரசாயனம் இருக்கிறது , ஸ்ரீ குருக்ஷேத்ரம் உள்ளது. இத்துடன் இன்னும் சில உள்ளன. பலர் எனக்கு கடிதம் எழுதுகின்றனர், வியாழக்கிழமைதோரும் என்னிடம் கேட்கின்றனர். பாப்பு நாங்கள் மந்த்ர ஜபம் செய்ய ஆசைப்படுகிறோம், ஆனால் அதில் வரும் ஸம்ஸ்க்ருத மொழி உச்சாரணங்கள் எங்களுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.

எமது அனைத்து அன்பர்களுக்காகவும், அதற்காகவே யாம் ஒரு சில திட்டம் வகுத்துள்ளோம். அவைகளை விவரிக்கின்றேன். நமது நலத்திற்கான நான்கு திட்டங்கள்.  யாவரின் நலத்திற்கான, அனைவரின் நலத்திற்கான. வேண்டிய நல்லவை வளர, வேண்டாத தீயவை மாய,  ஆம் நான்கு திட்டங்கள். அதில் முதலாவது.

1,ஸ்தோத்ர படன ,மந்த்ர படன பாடசாலை:
இவை இரண்டு இடங்களில் நடைபெரும். இது ஞாயிற்றுக்கிழமை தோரும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் . வகுப்புக்கள் உண்டு. ஒரு வகுப்பு ஸ்ரீ க்ஷேத்ரம் ஜுயீநகரிலும், ஸ்ரீ குருக்ஷேத்ரத்திலும். இவ்விரு இடங்களிலும். இதன் முக்கிய காரியதரிசி ஸ்ரீ அஜீத்ஸின்ஹ்  பாத்யேயும், அவரது உப காரியதரிசிகள்  டாக்டர் ஸ்ரீ கேஷவ்ஸின்ஹ் நர்ஸீகர் , ஸ்ரீ ஸசின்சின்ஹ் ரேகே  அவர்கள் ஆவார்கள். அவர்களுடன் இன்னும் சிலர் சேர உள்ளனர். எமது  மூத்த காரியவாகிகள் [ சீனியர் வாலன்டியர்ஸ்] சின்ன சின்ன குழுவாக அமைத்து உங்களுடன் சேர்ந்து  உட்கார்ந்து ஸ்தோத்ர பாராயணம்[ படனம்] செய்வார்கள், மந்த்ர படனம் செய்வார்கள். தேவைப்பட்டால் திருத்தவும் செய்வார்கள்.

க்ருபாஸிந்துவில் இதன் நிகழ்சி நிரல் அறிவிக்கப்படும். எந்த ஞாயிற்றுக்கிழமை என்ன சொல்லிக்கொடுக்கப்படும். ஒரு மாதம் முன்பதாகவே. அவ்வாறே இத்தகவல் அந்த அந்த நமது மன்றங்களின்  சி.சி.சி என்ற தலைவர்கள் மூலம் அறிவிக்கப்படும். இவ்வாறு நாம் எப்பொழுதும் கற்றுக்கொள்ளலாம். எந்த ஸ்தோத்ரம் நாம் கற்க விரும்புகின்றோமோ , அஸ்தோத்திரத்தையோ, மந்திரத்தையோ நல்ல முறையில் , சொல்லவும் , செய்யவும், எது தப்பு எது சரி என்பதை அவர்கள் நமக்கு சொல்லித்தருவார்கள்.

எமது மஹாதர்ம்வர்மனான ஸ்ரீ யோகீந்த்ர ஜோஷி அவர்கள், அவர் தர்மபத்னியான ஸௌ விசாகா வீரா அவர்கள் ஸ்ரீ அஜித்ஸின்ஹ் பாத்யே அவர்களுக்கும்  , அவரது சகாக்களுக்கும் உதவுவார்கள். இது  எப்போது ஆரம்பமாகும்?. ஆம் வரும் ஜனவரிமாத  21.01.2018லிருந்து. இத்துடன் சேர்ந்த இன்னும் மூன்று  திட்டங்களும். அதாவது மொத்த  நான்கு திட்டங்களும், மாகீ கணபதி எனப்படும் மாசி மாத கணேச சதுர்த்தியன்று  ஆரம்பமாகும். நாம் நல்லமுறையில் பாராயணம் செய்தால் நமக்கு சமாதானமாகும், பகவான் சந்தோஷம் அடைவார். ஆம் நாம் இவ்வளவு முயற்சி செய்கிறோம், கற்பதற்கு. பகவான் என்ன  விரும்புகிறார். நமது அன்பு , பக்தி, ப்ரயாசம் [முயற்சி], புருஷார்த்தம் [நேர்மை] எதிற்பார்க்கிறார்.

ஆம் இதுவும் புருஷார்த்தம்தான் . பக்தி, புரிஷார்த்தம் செய்வதற்கு, ஸ்தோத்ர  பாராயணம், படனம் , நன்கு அமைந்தால் நன்று. அதற்கு முழு முயற்சி தேவை. நேர்மை முறையில் வரும். ஆகையினால் இது அனைவருக்கும் நல்லதொரு வாய்ப்பு. நல்லவிதமாய் ,மந்திரம் சொல்ல, உச்சாரணம் செய்ய. ஆம் , அனைத்து ஸ்லோகங்களும் இங்கு கற்றுத்தரப்படும். கோரகஷ்ட உத்தாரண ஸ்தோத்ரத்திலிருந்து தேவி அபராதக்ஷமா ஸ்தோத்ரம் வரைக்கும், தேவி அதர்வசீர்ஷ  மந்திரத்திலிருந்து , நமது மாத்ருவாத்ஸல்ய விதானம் , உபனிஷத்த்தில் வரும் ப்ரார்த்தனைகள் அனைத்தின் உச்சாரணங்களும் கற்று தரப்படும். தத்தமாலா மந்திரமும் , ஆம் எல்லாம் கற்று தரப்படும். உங்கள் கையை பிடித்து , தாழ்த்தியவாரு அல்ல. எவ்வளவு முறை தப்பு செய்தாலும், யாரும் எதுவும் சொல்ல  மாட்டார். இழிவு சொல்ல மாட்டார். எல்லாம் அன்புடன் செயல்படுத்தப்படும், இதுவே  நமது முதல் யோஜனை அல்லது திட்டம். இரண்டாவது திட்டமும் பாடசால போன்ற வகுப்புதான்.

2,பவித்ர முத்ரா வகுப்புக்கள்: 
 நம்மில் சிலர்  அவதூத முத்ரா போன்ற , முத்ராக்களை பற்றி கற்றுள்ளோம். நாம் அம்முத்ராக்களுடன் சேர்ந்து அதர்குறிய  ஸ்தோத்ரங்கள் பாராயணம் செய்கையில்  குறிப்பாக ஸ்ரீ குஹ்ய ஸ்தோத்திரம்  சொல்லும் பொழுது நமக்கு என்ன பயன் என்றரிவோம் , அதன் அனுபவங்கள் சிலருக்கு தெரிய வந்தது. ஆனால் , இம்முத்ராக்களைப்பற்றி அனைவரும் அறிய நாம்  ,வீடியோ சீடி தயார் செய்து வருகிறோம். மராத்தி, ஹிந்தி , குஜரத்தி , கன்னடம் , தெலுங்கு முதலிய மொழிகளில் வந்துவிடும். இம்முத்ராக்கள் பற்றிய தகவல்கள் , அதன் பலன்கள், செய்முறைகள் யாவும் அம்மன்றங்களுக்கும்  அனுப்பப்படும். ப்ரதிகள் விற்பனைக்கும் கிடைக்கும்.வீட்டிலேயே கற்றுக்கொள்ளலாம், எங்கும் போகவேண்டிய  அவசியம் இல்லை. சீடி வாங்க வேண்டாம் என்று இருந்தால் , அதை நமது கேந்திரங்களில் சென்று கற்றுக்கொள்ள  முடியும். நமது கேந்திரங்கள், மன்றங்களில்  என்று முத்ரா சீடிக்கள்  காண்பிக்கப்படும்  என்று  யார் , செயல்முறை சொல்லிக்கொடுப்பார் என்று முடிவு செய்வார்கள். இம்முத்ராவிலிருந்து என்ன பயன்?. இந்த முத்ராக்களினால் நமது சரீரத்தின்  சக்தி க்ரஹிக்கக் கூடிய சக்திக்ஷேத்ர நரம்பு நாடிகள் சக்தி பெற்று உயர்ந்த நிலை அடைகிறது , நன்றாகிவிடுகின்றன, சாந்தமாகின்றன. சாந்தமாவதினால் சக்தியின் பாதிப்பு இருக்கும். அது ஒரு கட்டுண்ட நிலையில் சீராக இயல்படும், இருக்கும். எனவே மிகுந்திருக்காது, குறைந்தும் இருக்காது. இதனால் , சரீரத்தின் ஆர்ரோக்யத்திற்கும் , மனத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது. இம்முத்ரா வகுப்புகளும் அன்றே ஆரம்பமாகும். சீடிக்களும் இருக்கும் , அத்துடன் வழிமுறை காட்டுபவர்கள் இருப்பார்கள். வாலன்டியர்ஸ் இருப்பார்கள். இந்த இரு வகுப்புகளுக்கும் எந்த கட்டணமும் கிடையாது, இலவச வகுப்புகளே. கட்டணம் என்னவென்றால் , பக்திதான்.அன்புதான்.


 
3, ராம நாம புத்தகத்திலிருந்து சமித்து[ஹோமம், யாகம் செய்ய] : 
இந்த மூன்றாவது திட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. யாம் யஞம் செய்கிறோம், ஹோமம் செய்கிறோம். ராமநவமி, தனத்ரயோதசி அன்று  செய்கிறோம், மற்றும் சில விசேஷ உத்ஸவ  தினங்களில் செய்கிறோம். இதற்கு சமித்து எங்கிறுந்து வருகிறது. மரத்திலிருந்துதானே?  காட்டிலிருந்து. மரத்தைவெட்டி. அதேபோல் நம் ராமநாம புத்தக காகிதம் கூட மரத்திலிருந்துதான் வருகிறது. பாரதத்தில் இவ்வளவு மரங்களை வெட்டுவதால்தானோ உலகத்தில் பூ உஷ்ணத்தாக்கம் அதிகரித்துள்ளது என்று நினைக்கிறேன். நாம் மும்பையில் பார்க்கிறோம், ஒருநாள் மழை பலமாக, அடித்து சேதம் விளைவிக்கின்றது, அல்லது பேய்வதே இல்லை.குளிர் நாளிலும் உஷ்ணத்தாக்கம் அதிகமாவதை காண்கிறோம். இது பூமண்டல உஷ்ணம் அதிகரிப்பின் பின் விளைவு. அதற்கு ஒரே வழி மரம் , செடி கோடிகளை காப்பது, மரங்கள்நடுவது, அதன் எண்ணிக்கை பெருக்குவதே ஆகும். ஆகையால் நான் முடிவு செய்துள்ளேன், இனி நாம் செய்யப் போகும் ஹோமம், யாகங்களுக்கு, சமித்துக்கள் நம் ரமநாம புத்தகத்திலிருந்து தயார் செய்தவனயாக இருக்கும். இந்த ராமநாம புத்தகத்திலிருந்து சமித்து , மரங்களிலிருந்து கிடைக்கும் சமித்து போல் எவ்வாரு தயார் செய்யலாம் என்பதைப்பற்றியும் சீடி வெளிவர உள்ளன. நமது கேந்திரங்களில்[மன்றங்களில்] , அத்துடன் ஹரிகுருக்ராமில்,  தரவர இருக்கும்  காகிதங்களிலிருந்து எவ்வாரு பல்ப் [பசை] செய்யலாம் என்பதை கற்றுகொள்ளலாம். அதிலிருந்து எவ்வாரு சமித்து  தயாரிக்கலாம் என்பது பற்றி. வீட்டிலிருந்தே இத்தகைய சேவைகளில் பங்கு கொள்ளலாம்.

என்ன நடக்க இருக்கின்றது சற்று நினைத்து பாருங்கள். உங்கள் கைகளால் செய்யப்பட்ட சமித்துக்கள் நமது பவித்ரமான யஞங்களில் ஆஹுதியாக சேர்க்கப்படும். நம் தத்த பகவானுக்கு, மாதா சண்டிகைக்கு, ஹனுமனுக்கு,நம் ராமனுக்கு. இவ்வாரு செய்த சமித்துக்கள் நன்கு உலர்ந்த பின் நம் கேந்திரத்திலோ அல்லது ஹரிகுருக்ராமிலோ சேர்த்துவிடுங்கள். இதன் மற்ற ஏற்பாடு விவரங்கள் , விரைவில் முழுமையாக அறிவிக்கப்படும்.  இதன் பயன் என்ன?   ராம நாம் எழுதிய புத்தகங்களின் சமித்து அதிக பவித்ரமானவையா இருக்கும். அதற்கு ஈடான மரங்கள் காப்பாற்றப்படும். ஆகையினால் புண்ணியம் கிடைக்கும், அதிகரிக்கும். நமது முயற்சியின் பலன் சமித்து ஆஹுதியினால்  புண்ணியமாக பலன் அளிக்கும். அதற்கு தேவையான ராம நாம புத்தக காகிதம்  நம் கேந்திரங்களிலும், ஹரிகுருக்ராமிலும் கிடைக்கும். அவற்றின் சீடியும்  கேந்திரங்களில், ஹரிகுருக்ராமிலும்  காட்டப்படும்.  திரும்ப திரும்ப க்காட்டப்படும். பலமுறை கற்றுக்கொள்ளலாம். ஆதலினால் ஜனவரி  21, 2018 பின் , என்ன யஞம், ஹோமம் நடக்கவிருக்கின்றனவோ அவற்றில் இந்த  சமித்துக்களே உபயோகிக்க இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் ,எவ்வளவு சமித்து தேவைப்படும் என்று, பார்த்தும் இருக்கிறீர்கள். அதுவும் ராம நவமி அன்றும் , தனத்ரயோதஷி அன்றும் மிக அதிக அளவில் தேவைப்படும். ஆகையால் ராம நாமத்திலிருந்து, ராமநாம காகிதத்திலிருந்து, நமக்கு இன்னும் தூய்மை , பவித்ரம் மங்களம் உண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை . இத்துடன் சேர்த்தார் போல் நம் நான்காவது திட்டம் அமைந்துள்ளது. அது வனதுர்கா திட்டம்.

4, வனதுர்கா திட்டம்: 
நாம் வீட்டில் பழம் தின்கின்றோம். உதாரணமாக சபோடா பழம், அதன் விதை எவ்வளவு பெரிது. அது விரைவில் கெடாது. சீதாபழம் விதைகளும் பெரிதானவை, அவையும் கெடாதவை. அதுபோன்று   நாம் உண்ணும் பழங்கள் எதில் விதைகள் பெரிதாக உள்ளனவோ, கெடாதவையோ அதை வீட்டில் சேர்த்து நம் கேந்திரத்தில் கோண்டு தரவும். ஹரிகுருக்ரமத்தில் தானமாக சேர்க்கவும். பிறகு, மரம் நட ஆசை உள்ளவர்கள், யார் சுற்றுலா செய்கிறார்களோ  வாரக்கடைசியில் பிக்னிக் செல்பவர் , அவ்விதைகளை ஹரிகுருக்ராம் அல்லது கேந்திரத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் . வெரும் நிலம் ,  மரம் செடி கொடி இல்லாது கிடைத்தால் அங்கு இவ்விதைகளை மண்ணில் புதைத்து , மூடி அதன் மேல் சிறிது நீர்ஊற்றவும் , அவ்வளவேதான். நூறு விதைகளில் ஐம்பதாவது வளராதா என்ன?  அதுவே  நமக்கு நல்லது. எங்கு சென்றாலும் இதை செய்யலாமல்லவா.இவ்விதைகளை நடும்போது நாம் என்ன சொல்லவேண்டும்?  ஓம் நம:சண்டிகாயை அல்லது ஓம் ஸ்ரீ வனதுர்காயை நம:  முடிந்தால் இரண்டையும் சொல்லலாம்.

யாம் குஹ்யஸூக்தம் , ஸ்ரீ ஷ்வாஸம் நிகழ்சிகள் நடத்திய சமயம் அதில் நம் ஆதிமாதாவின் 24 ரூபம்  பார்த்தோமே , அதில் உரு ரூபம்  வனதுர்கையும் ஆவாள். வனதுர்கை ஒரு சக்தி மிகுந்த அவதார ஸ்வரூபம் ஆகும். அதாவது  நாம் யாரை " நமோ தேவ்யை, மஹா தேவ்யை  சிவாயை சததம் நம: ||  நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியத; ப்ரணதஸ்மதாம். ப்ரக்ருத்யை  பத்ராயை என்றால் , இயற்கையை பத்திரமாகக் காக்கும் தேவியே என்பது. இவளும் நம் தாயின் ,என் தாயின் ரூபம்தான்.  அன்னை ஜக்தம்பாவின் ஒரு ரூபம்தான்  வனதுர்கா. நாம் இவ்வாரு விதைகள் நட்டால் அதில் இருந்து சில விதைகள் மரமாக வளரக்கூடும். இதை ஒரு ப்ரார்த்தனையாக நினைத்து செய்யவேண்டும். அது நகரத்தில் நடக்காவிடில் நகரத்து வெளியிலோ , திறந்த , பறந்த வெளியிலோ ஒரு பத்து விதை நட்டு , நீர் ஊற்றினால்  அதில் இரண்டாவது கண்டிப்பாக வளரும்., மரம் ஆகும். வனதுர்கா சந்தோஷம் அடைவாள். நான் வனதுர்காவை சந்தோஷப்படுத்த விரும்புகிறேன்.

வீட்டில் அவ்வித பழங்கள் உண்டு,  கேந்திரத்தில் தராது , விதைகள்  நட விரும்பவர் , அவர்களே  நடலாம். எந்த ப்ரச்னையும் இல்லை. அதுவும் ஒருவிதத்தில் ப்ரார்த்தனைதான். ஆனால் விதை விதைக்கும்போது ஓம் நம: சண்டிகாயை , ஓம் வனதுர்காயை நம: என சொல்லி செயல்படுவது முக்கியம்.  இந்த வனதுர்கா திட்டத்தின்மூலம் இந்த இயற்கையின் சக்தியை நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள முடியும். இயற்கையின் ஜீவசக்தி நமதுள் வெகுவேகமாக பெருகும். இந்த ஜீவசக்தி யாருக்கு வேண்டாம். இச்சக்தியினால் நமது புத்தி கூற்மையாகும்..  நமது இந்திரியங்கள் சரிவர செயல்படும். வலுக்கும். அவற்றினால் ஆயுள் பெருகும். இந்த வனதுர்கா திட்டமும் வரும் ஜனவரி21, 2018 அன்றே ,விதைகள்  வினியோகத்துடன் ஆரம்பமாகும்.

ஆம், வனதுர்காவிற்கும் ,  கணேஷ் பகவானுக்கும் என்ன சம்பந்தம்  என்று கேட்பீர்கள். நம் குருக்ஷேத்ரத்தில் இருக்கும் மூலார்க்க கணபதியும் மந்தார மரத்தின் வேரிலிருந்துதானே வந்திருக்கிறார். அம்மரத்தின் வயது 25க்கும் மேல் ஆனது, நீர் கிடைக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. கிழக்குப்பக்கம் உள்ளது. அவ்வாரான மந்தார மரத்திலிருந்துதான் மூலார்க்க கணபதி தயார் ஆவார். ஆதலினால் ஆராதனைக்கு பாத்திரமாகிறார். இவ்வாரு ஆராதனைகள்  செய்து நாம் மூலார்க்க கணபதியை ஸ்தாபனம் செய்துள்ளோம். அப்படியானல் நாம் இயற்கையின் புத்திரனைத்தானே ஸ்தாபனம் செய்திருக்கிறோம். ஆகையால் இவர் நம் தாயான வனதுர்காவின்  அருமை புத்திரனாச்சே. நம் வனதுர்கா திட்டத்தில் நம் தாய் வனதுர்காவுடன்  அவளது  புத்திரன்  அதாவது கணபதியும்தான் ஆராதனை செய்யப்படுவார். அதற்கான பலன்  நிச்சயம் கிடைக்கும்.

இந்த நான்கு திட்டங்கள், எனது ஆசை திட்டங்கள்.  அதுவும் உங்கள்  யாவரின் நலத்திற்காகவே. என் அன்பு குழந்தைகளுக்காக , அவர்கள் முன்னேறத்திற்காகவே. புண்ணியம் பெருகவே. எவை  நமக்கு ச்சாதகமாக இல்லனவையோ அரவே விலக , இந்த நான்கு திட்டங்கள் மிகவும் உதவும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது .  நான் இதுவரை  அளித்து வந்த திட்டங்கள் எவ்வாரு ஏற்று நடத்தி வந்தீர்களோ அவ்வாரே இன் நான்கு திட்டங்கள் ஏற்று செயல்ப்டுவீர்கள் என்று.  ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். எனக்கு உஅதவிக்கரமாய் இருப்பீர்கள்.

இந்த நான்கு திட்டங்களும் ஜனவரி21,2018 லிருந்து.
மந்திர படனம் வகுப்பில் சில குறிப்பிட்ட எண்ணிக்கைதான் இருக்கலாம், இடவசதியை பொருத்து . 30, 40 அல்லது  100 நபர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்பின் பலர் இருந்தால் , இரண்டாவது வகுப்பும் நடத்தப் படும். குறிப்பிட்ட நேரம் உண்டு. நாற்பது பெயர்கு உறிய இடத்தில் நான்கு ஐந்து நபர் சற்று ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் அனுமதிக்கப்படுவார். ஆனால் அரைமணி நேரம் தாமதம் என்றால்  அனுமதி கிடையாது, இரண்டாவது வகுப்பிற்கு இடம் இருந்தால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

நேர நிபந்தனைகள் இருக்கும்.  இல்லாவிடில் நாள் முழுவதும் வகுப்பு நடத்த வேண்டியிருக்கும். வேர வேலை இல்லையா என்ன?. உங்களுக்கும் தான் பல ஜோலியுண்டு. வழிமுறைகள் நமது,   எவ்வாரு நடத்துகின்றோமோ அவ்வாரே இவ்வகுப்புகளுக்கும்தான். முத்ரா வகுப்பு நடக்கும் , முத்ரா சீடி  கிடைக்கும். சமித்து நீங்கள்  தயார் செய்வீர்கள். அதை யாகத்தில் அர்ப்பணம் செய்வோம். ஆம் நான் செய்வேன். அவை செய்யும் முழு  விவரம் உள்ளது. சீடி தயார் ஆனதும்  உங்களுக்கு காட்டப்படும். நான் சொன்ன நான்கு திட்ட  தகவல்கள் உங்கள்  மனதில் பதிந்திருக்கும்  என உறுதி . நீங்கள் அனைவரும் பாப்பு ஒரு பரிசு அளிக்கிறார் என்று நினைத்தால் , ஏற்றுக்கொள்ளவும். யார் பங்கேற்கின்றனரோ அவர்களுடன் நான் நிற்கிறேன். அவர்களுக்கு உதவ . யாருக்கு விருப்பமில்லையோ அவர்களுக்கும் மனதில் இச்சை வர நான் முயற்சி செய்வேன். அவர்களுக்கும்  பலன் கிடைக்கட்டும். யார் ஏற்று நடத்த ஆயத்தம் செய்கின்றனரோ அவர்களுக்கு என் அன்பு ஆசி.

நான்கு சேவை திட்டம் - பரிசு , பாப்புவின் பித்ருவசன்  ப்ரசங்கத்தை இந்த வீடியோவில் அனைவரும் காணலாம்.
 ஹரிஓம் || ஸ்ரீ ராம் || அம்பஞ