Tuesday 29 July 2014

மின்னோட்டகளின் யுக்தம்

கடந்த வாரம், நிகோலா டெஸ்லாவின் கருத்துக்கள் இதுவரை நடைமுறைக்கு வந்திருந்தது என்றால், தாமஸ் அல்வா எடிசன் தனது வணிக சாம்ராஜ்யம் எப்படி அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருக்கும் என்றும் மற்றும் அவர் மிகவும் வருத்தம் அடைந்ததை நாம் பார்த்தோம். இந்த நிலையில், எடிசன், மாறுதிசை மின்னோட்டம் என்ற டெஸ்லா யோசனையை நிராகரித்தும்  மற்றும் அவரை ஏளனம் செய்தாலும், எடிசன் அவரது மனதில் நிகோலா டெஸ்லா என்ற மேதையினால் அவரது வணிக சாம்ராஜ்யத்தை  வளர்க்க மாறாக அவரது தொழில் நுட்பத்தை பயன் படுத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். எடிசனுக்கு மாற்று மின்னோட்டம் மற்றும் காந்தங்களின் சுழற்சி பற்றிய கருத்து புரியவில்லை என்றாலும் அவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார், டெஸ்லா குறிப்பிடத்தக்க மகா மேதை என்றும் அவர் தனது சொந்த வணிகத்தை வலுவூட்டும் பொருட்டு  ‘மேதை டெஸ்லாவை பயன்படுத்த' முடிவெடுத்தார்.

Add caption
எனவே 1884 லிருந்து, நிகோலா டெஸ்லா எடிசன் இயந்திரம் பயன்பாடு வேலையை செய்யத்தொடங்கினார். ஆரம்பத்தில், டெஸ்லாவுக்கு மின் பொறியியல் தொடர்பான எளிய பணிகளே வழங்கப்பட்டது, ஆனால் ஒரு சில நாட்களிலேயே நிறுவனம் எதிர்கொண்ட மிக சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. டெஸ்லா, அவரது பேட்டியின் போது, எடிசனின்  DC அமைப்பை எதிர்த்த போதும் எடிசன் போல் இல்லாமல் டெஸ்லா கண்மூடித்தனமாக மற்ற தேர்வை புறக்கணிக்கவில்லை. டெஸ்லா முற்றிலும் DC அமைப்பை நிராகரிக்க முடியவில்லை ஆனால் அவரது சொந்த படைப்பாற்றல் மற்றும் சிந்தனை கொண்டு, DC அமைப்பை பயன்படுத்தி அதனுடைய   சிறந்த அதிகபட்ச திறனுடையதாக செய்தார்.

இங்கே நான் ஒரு தவறான கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சில உரைகள் மற்றும் குறிப்புதவி நூல்களில் குறிப்பிடுள்ளது போல் அதாவது தாமஸ் எடிசன் நேரடி பாயும் மின்சாரத்தைக் கண்டு பிடித்தவராவர். ஆனால் இதற்கு மாறாக, உண்மையில் அது, மைக்கேல் ஃபாரடேவால் 1821ஆம் ஆண்டில் மின்சார மோட்டாராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் 'நேரடி மின்சாரம்’, என்று பெயர் குறிப்பிடவில்லை என்றாலும்  அதை முதல் முறையாக நேரடி மின்சாரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எடிசன் உண்மையில் DC மின்சக்தியை தனது  மின்சார அமைப்புகளில் தூரங்களில் மின்சாரத்தை வழங்கப்  மட்டுமே பயன் படுத்தினார். DC மின்சக்தி உற்பத்தியானது  தாமஸ் எடிசனுக்கு ரொம்ப முன்பாகவே பயன்பாட்டில் இருந்தது.

மின்சார விளக்கை காட்டுவது தாமஸ் அல்வா எடிசன்
தாமஸ் அல்வா எடிசன் தான் உலகத்திற்கு மின்சார ஒளி விளக்கை காட்டியுள்ளார். நிகோலா டெஸ்லாவை அவரோடு வேலைக்கு அமர்த்திய போது, அவரைக் கொண்டு தனது வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதற்காக ஒரு அமைப்பு தேவைப்பட்டது. எடிசன் பொறியாளர்கள் வடிவமைத்தார்கள் என்றாலும், DC அமைப்பில் பல குறைகள் மற்றும் பிழைகள் கொண்டிருந்தது. எடிசன் இயந்திரம் வேலை செய்த போதிலும் நிகோலா டெஸ்லா அவரது மேதாவித்தனத்திற்காக மிகவும் மதிக்கப்படுகிறார். இதன்படி அவர் எடிசனின் நேரடி மின்னோட்ட ஜெனரேட்டர்களை மறுவடிவமைப்பு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டார். எடிசன்,  டெஸ்லா தன்   வேலையில் வெற்றி பெற்றார் என்றால், அதற்காக கூட அவருக்கு ஐம்பது ஆயிரம் டாலர்கள் வழங்கினார். இரண்டு மாதங்களுக்குள்,  ஆனால் தன்னுடைய அதிக கடின உழைப்பால், டெஸ்லா மறுவடிவமைப்பில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்த விளைவாக எடிசன் மெஷினின் வேலையினால், பல லட்ச ரூபாய் டாலர்கள் இன்றைய தரத்தில் பில்லியன் சேமிப்பு கணக்காக மாற்றப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே முடிந்தது. எடிசன் நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்ட DC அமைப்பை, வேறு யாருமல்ல டாக்டர் நிகோலா டெஸ்லாவால் சரிசெய்யப்பட்டு  வடிவமைக்கப்பட்டுள்ளது தான்.

இந்த சாதனையை எட்டியவுடன், நிகோலா டெஸ்லா எடிசனிடம் தனது வெகுமதி பற்றி விசாரித்தார். ஆனால் அது அவருக்கு ஆச்சரியம் மற்றும் மிகுந்த மன வருத்தத்தையும் தரும் வகையில் இருந்தது. தாமஸ் எடிசன் அவரது வார்த்தையை காப்பாற்றவில்லை மாறாக அவர் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்றுக் கூறி விட்டார். மேலும் அவர் டெஸ்லாவை குறித்து ’செர்பியன்’ என்றுக் கூறி கேலி செய்தார்; டெஸ்லாவுக்கு 'அமெரிக்க நகைச்சுவை', என்று அழைக்கப்படும் அவற்றை புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர் வாக்குறுதி அளித்த ஐம்பது ஆயிரம் டாலர்களுக்கு பதிலாக, எடிசன், டெஸ்லாவுக்கு ஒரு அற்ப உயர்வுத் தொகையை வழங்கினார். எனவே கண்ணியத்தை, நம்பிக்கை துரோகத்துடன் ஒப்பீட்டு பார்க்கும் போது டெஸ்லா எடிசனிடம்  வேலை செய்வதை விட்டு விட்டார். இந்த தருணத்திலிருந்து எடிசன் டெஸ்லாவுடன் பகைமையை வளர்த்து கொண்டார். மற்றும் தன்னுடைய மீதமிருந்த வாழ்நாளில் நிகோலா டெஸ்லாவை மற்றும் அவரது கண்டுபிடிப்புகளை இழிவுபடுத்தும் முயற்சியில் செலவிட்டார்.
இந்த மிக முக்கிய நிகழ்ச்சியே டாக்டர் நிகோலா டெஸ்லாவை தாமஸ் எடிசனுக்கு எதிரான ஒரு உண்மையான எதிர்ப்பாளரக நினைக்க செய்தது. டாக்டர் நிகோலா டெஸ்லாவை எத்தனை இழிவுபடுத்த முடியுமோ மற்றும் அவரது கண்டுபிடிப்புகள் மனித இனத்திற்கு ஊறுவிளைவிப்பவைகள் அல்லது குறைந்தபட்சம் பயனற்றது என்று நிரூபிக்க அனைத்தையும் செய்தார். எடிசன் டெஸ்லாவை அழிக்க ஒவ்வொரு வர்த்தக தந்திரத்தையும் முயற்சித்த அந்த நிகழ்வுகளின்  தொடரையே “மின்னோட்டகளின் யுக்தம்” ' என அழைக்கப்படுகிறது. 
எடிசனிடமிருந்து  ராஜினாமா செய்த பிறகு, டெஸ்லா தனது சொந்த நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் லைட் & தயாரிப்பு  என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனத்தை மூடப்பட்டபின், நிகோலா டெஸ்லாவினால் தனது  டெஸ்லா எலக்ட்ரி கம்பெனி என்ற நிறுவனம்  உருவாக்கப்பட்டது. (நாம் நமது அடுத்த கட்டுரையில் டாக்டர் நிகோலா டெஸ்லாவின் இந்த இரண்டு நிறுவனங்களை பற்றி பார்க்கப் போகிறோம்). இறுதியாக டெஸ்லா அந்த காலத்தில் மின்சார துறையில் ஒரு மரியாதைக்குரிய நபராக விளங்கிய  ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ்ஸின், கீழ் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரி & தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் அந்த காலத்தில் மின்சார துறையில் ஒரு மரியாதைக்குரிய இடத்தை  பெற்றிருந்த   நபராக விளங்கிய  வெஸ்டிங்ஹவுஸ், டெஸ்லாவின் உதவியுடன், DC மின்சக்தியிலிருந்து AC மின்சார அமைப்புகளுக்கு மாற்றி அமைத்தார்.

AC மின்சார வடிவமைப்பு புழக்கத்தில் கொண்டுவரப்பட்டால், அவரது வணிக பேரரசு போய்விடுமோ என்ற பயத்தில், எடிசன் அவர்கள் AC மின்சாரத்தை கண்டிக்கும் வகையிலும் மற்றும் அதன் பயன்பாட்டின் ஊக்கத்தை கெடுக்கும் வகையில் பல்வேறு தவறான தகவல்கள் மற்றும் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதை செய்ய அவர் மிக மோசமான, மனிதாபிமானமற்ற அளவுக்கு நடந்துக்கொண்டார். ஆரம்பத்தில் எடிசன் அவர்கள் AC மின்சாரம் பயன்படுத்துவதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகிறது என்று தவறான செய்தியை பரப்ப தொடங்கினார். அவர் தனது அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி, பல்வேறு மாநில மற்றும் தொழில் 'கிளப்கள் மற்றும் அமைப்புகளில் AC மின்சார அமைப்பை பயன்படுத்தப்படுவதை தடுக்க தன் செல்வாக்கைப் பயன் படுத்தினார்.


எடிசன்  அவர்கள் இதை செய்வதோடு நில்லாமல், அவர் தானே  பல்வேறு விலங்குகளை இயற்கைக்கு மாறான மற்றும் மிருகத்தனமான முறையில் மின்சார அதிர்ச்சியைக் கொடுத்து மற்றும்  மின்சாரம் அதன் மேல் செலுத்தப்பட்டு இறக்கும் (கொலை) காட்சிகளை படமாக்கி, மக்கள் நடமாடும் பொது இடங்களில் காணுமாறு ஏற்பாடுகள் செய்திருந்தார்.  இவற்றில் ரோட்டில் சுற்றித் திரிகிற பூனைகள், நாய்கள், மாடுகள் மற்றும் குதிரைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஜனவரி 1903 4 ம் தேதி, எடிசன் பகிரங்கமாக AC மின்சாரத்தை பயன்படுத்தி ஒரு சர்க்கஸ் யானை கூட கொன்றார். இந்த மிக வெறுக்கத்தக்க செயல் மூலம் திருப்தி அடையாத எடிசன் மேலும்  ஒரு படி சென்று, இந்த கொலையை படமாக்கி, 1903 ல் ‘மின்னேற்றபட்ட யானை”, என்ற தலைப்பில் கீழ் ஒரு படக்காட்சியையும் வெளியிட்டார். இது எல்லாவற்றோடும் கூட குறிப்பாக யானைக்கு மின்சாரம் பாய்ச்சி அதனை கொன்று, எடிசன்  அதன் மூலம் AC மின்சாரத்தால் ஒரு யானையை கொல்ல முடியும் என்றால், அது நிச்சயமாக மக்கள் மற்றும் குறிப்பாக அவர்களின் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்று மக்களுக்கு நிரூபிக்க முயன்றார். இவ்விதத்தில் எடிசன் பொது உணர்ச்சிகளுடன் விளையாடி, உண்மையில் AC மின்சாரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து   தடுக்க மக்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அச்சுறுத்தல் செய்தலில் வெற்றி பெற்றார்.

வில்லியம் கேம்லர் மின்சார நாற்காலியின்
செயல்படுத்துதலை காணல்.
அவர் குறிப்பாக இரண்டு இன்ஜினியர்ஸ்களை பொது இடங்களிலும் மற்றும் பயத்தை பரப்பும்  பிரச்சாரங்களை செய்வதற்காக வேண்டியே நியமனம் செய்திருந்தார். அந்த இரண்டு பேர்களில் ஒருவர் ஹரோல்ட் பிரவுன், ஒரு மின்சார நாற்காலியைக் கண்டுபிடித்தவராவார். எவை எல்லாம் அவரது கீழுள்ள பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைகளோ அதனை தனது வழக்கமான நடைமுறை பழக்கமாக கொண்டிருந்த முறையில் தனது பெயரையே இந்த கண்டுபிடிப்புக்கும்  உரிமையாக்கிக்கொண்டார். இந்த கண்டுபிடிப்புகளை ஐக்கிய அமெரிக்க அரசு தன் நாட்டிலுள்ள எல்லா சிறைச்சாலைகளிலும் மரணம் தண்டனையின் வரிசையில் இருக்கும் கைதிகளை தூக்கிலிட பயன்படுத்தியது. எடிசன் வேண்டுமென்றே பிரவுனிடம், இந்த மக்கள் மனதில் பன்மடங்கு பயம் அதிகரிக்க வேண்டி, தனது மின்சார நாற்காலியில் AC மின்னினைப்பில் இயங்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தச் சொல்லி, இது மேலும் மக்கள் மனத்தில் AC மின்னினைப்பை பயன்படுத்துவதிலிருந்து விலகி இருக்க செய்யுமாறு செய்ய உத்தரவிட்டார். எடிசன் கூட மின்னினைப்பால் கொல்லுதலை, வெஸ்டின்ஹவுஸ் என்றே அழைத்தார். அந்த வெஸ்டின்ஹவுஸ் தான் நிகோலா டெஸ்லா என்பரின் AC மின்சார தொழில்நுட்பத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்தவராவார். அது உடனடியாக மின்சார நாற்காலியை பயன்படுத்தி, மின்சாரத்தை பாய்ச்சி இறத்தல் முறையிலான,  மரண தண்டனையை மின்சாரத்தின் மூலம் நிர்வகிக்கப்படுவது பகிரங்கமாக அறியப்பட்ட வழக்கு ஆனது. அந்த முதல் மின்சார நாற்காலி நியூயார்க் மாநில சிறைச்சாலையில் கட்டப்பட்டது மற்றும் அதன் முதல் பயன்பாடு, வில்லியம் கேம்லர் என்ற மரணதண்டனை விதிக்கப்பட்ட  கைதிக்கு மின்சாரம் பாய்ச்சி கொல்லும் தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டது. கேம்லரை கொல்லப் பயன்படுத்திய நாற்காலி,  உண்மையில் திட்டமிடப்பட்டது போல முழுமையாக, அமைதியாக அவரை கொல்லுவதை விட்டு, அவரின் பாதி உடலே எரிந்தது. இந்த செயல்முறையை பலமுறை திரும்ப திரும்ப பயன்படுத்திய  பிறகே கேம்லரை கொல்ல முடிந்தது. இந்த நிகழ்வு முழுவதுவும் செய்தி ஊடகங்களின் முன்னிலையில் குறிப்பாக நடத்தப்பட்டிருப்பதற்கான காரணம், செய்தி எங்கும் பரவ வேண்டும் என்பதாகும். இந்த கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான  இந்த கொலையை கண்ட  நிருபர்கள் , இது தூக்கு தண்டனையை விட மோசமாக இருக்கிறது என்று விவரிக்கின்றனர். உண்மையிலேயே இதை குறிப்பிடுவதற்கும் மற்றும்  இந்த இரக்கமற்ற மற்றும் கொடூரமான முறை,  இன்றும் கூட மரண தண்டனையை நிறைவேற்றும் முறையில் இந்த பயிற்சியை,  ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதுவும் பொதுவாக நடைமுறையில் கொண்டுள்ளது என்று  மதிப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நீங்கள் உங்கள் கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் சாதனங்களில், இந்த கட்டுரையை வாசிக்கும் போது, உங்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த மாறுதிசை மின்னோட்டத்தால் இயக்கப்படுகின்றன என்று தான் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதிலிருந்து ஒன்று நன்கு தெளிவாகிறது, அது என்னவென்றால் இறுதியில் எல்லா நேரத்திலும் உண்மையே நிலைத்திருக்கின்றது என்பதாகும். பல தவறான பிரச்சாரங்கள் மற்றும் சதித்திட்டங்களின் பிடியில் இருந்த போதிலும், டாக்டர் நிகோலா டெஸ்லா மற்றும் அவரின் “மின்னோட்டத்தின் யுத்த்தில்”, அவரது மாறுதிசை மின்னோட்டம் வெற்றிப்பெற்றது என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது  தாமஸ் எடிசனின் அனைத்து அசிங்கமான தந்திரங்களின் முயற்சி  இருந்தது என்று அழுத்தமாக குறிப்பிடுவதும், டாக்டர் நிகோலா டெஸ்லா என்றைக்கும் எடிசனுக்கு மற்றும் அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த  ஒரு வார்த்தையும் பேசவில்லை அல்லது அவரின் இந்த போரினால் உண்டான  எந்த  வகையான சேறடிப்புக்களும் ஆளாகவில்லை என்றாலும், இருந்தாலும் இறுதியில் அவரே வெற்றி பெற்றார்.
ll ஹரி ஓம் ll       ll ஸ்ரீராம்  ll       ll அம்பக்ஞ ll


மூள லேக -

இம்க்லிஶ  - மின்னோட்டகளின் யுக்தம் English Blog

Friday 18 July 2014

ஆடலான[மாறிமாறி விட்டு விட்டு வரும்] மின் சக்தியும் டாக்டர் டெஸ்லாவும்

ஒரு  ப்ரபலமான  பழமொழி உண்டு. அகந்தை, ஆணவம் ஒருவனின்  வீரமோ, வலிமையோ இல்லை அது அவனுக்கு பயம் என்னும் முகமூடி, இதையே இந்த கட்டுறையின் முடிவில் தெரியவரும்.

அனைவரும் ஆடல் மின் சக்தியைப்பற்றி அறிந்திருப்பீர்கள்[ஏ.சீ].இந்த ஆல்டர்னேடிங்க் கரண்ட் மின் சக்தியின் ப்ரவாஹம் முன்னும் பின்னும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.அதை ஒப்பிடும் போது டைரெக்ட் கரண்ட் [அதாவது நேர் மின் சக்தி] மின் ப்ரவாஹம் ஒரே திசையில் இருக்கும்.நமது தினசரி வாழ்கையில் நம் இல்லத்தில் உபயோகப்ப்டுத்துவது[ ஆல்டர்னேடிங்க் கரண்ட்] ஆடல் மின் சக்தியே ஆகும். சமீபத்தில் நமது இந்திய ரயில்  சில பகுதிகளில்  ரயில்களை ஓட்டுவதற்கு  டயரெக்ட் கரண்ட்லிருந்து ஆல்டர்னேடிங்க் கரண்ட்டிற்கு மாருவதை பற்றி அறிந்தோம். இந்த மாற்றம் முக்கியமாக மும்பையில் தினசரி எழுபத்தைந்து லக்ஷம் பயணிகளை புளிமூட்டை போல் அடைத்து செல்லும் பிணையத்திற்கு[நெட்வொர்க்] பொருந்தியது.  
டாக்டர் நிகோலா டெஸ்லா ,எவர் 1882 ஆல்டர்னேடிங்க் கரண்ட் எவ்வாரு செலுத்தவேண்டும் என்று கண்டுபிடித்தாரோ,  வாணிக ஒப்பேரல் செயல்படுத்தவும் விவரித்தார். கவனிக்கவேண்டியது என்னவென்றால் டாக்டர் டெஸ்லாவிற்கு ஆல்டெர்னேடிங்க் கரண்டின் நிலைத்த எண்ணம் எப்படி வந்தது? டாக்டர் டெஸ்லாவிற்கு அடிக்கடி அவருக்கு அவரது கண்டுபிடிப்புகள் பற்றி[கனாபோன்று]  முன் கூட்டிய உணர்வு வரும்.   ஏ.சி கரண்ட் மோட்டார் பற்றிய எண்ணம் அவருக்கு அவ்வாறே ஒரு கனவில் உருவாயிற்று.1882ல் அவர் புடாபெஸ்டில் இருந்தார். ஒரு மதியம் டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது நண்பருடன் பூங்காவில் உலாவிக்கொண்டு ஒரு பாடல் பாடிவந்தார்.அவரது அந்த சிறு வயதில் அவருக்கு புத்தகமே மனப்பாடம். அதில் கோதேஸ் ஃபாஸ்ட் ஒன்றாகும். சூரியன் மறையும் தருணம் அவருக்கு கோதேஸ் ஃபாஸ்ட்லிருந்து ஒரு அற்புதமான பத்தி[பேரா] நினைவிற்கு வந்தது.அதன் அர்த்தம் கீழ்வருமாரு.

" ஒளிர்வு பின்வாங்குகிறது,தினத்தின் உழைப்பு முடிந்தது அது அங்கு அவசரம், வாழ்க்கையின் புதிய பாதை தேடுகிறது ஆஹா என்னை எந்தப்பரவையும்  இம்மண்ணிலிருந்து தூக்காத ஆகாயத்தில் வழி நடத்தது". இதை சொன்ன மாத்திறத்தில் டாக்டர் டெஸ்லாவிற்கு மின்னல் போல் எண்ணம்  பளிச்சிட்டு தோன்றியது.ஒரு வினாடிக்குள் உண்மை விளங்கியது. அதை அவர் கடவுளின் செயல் என்றே எண்ணினார்.நிகோலா டெஸ்லா ஒரு குச்சியினால் ஆல்டர்னேடிங்க் கரண்ட் திட்டத்தின் மின்சுற்று வரைவடிவத்தை   அங்கேயே மணலில் வரைந்தார் .அந்த வரைவடிவம் ஒரு சுழலும் காந்த சக்திப்பரப்பானது. டாக்டர் டெஸ்லா அந்த வரைவடிவம் எவ்வாரு செயல்படும் என்பதை ஆறு வருடத்தின்  பின் அமெரிக்க இன்ஸ்டிட்யூட் மின் பொறியியலாளர்களுக்கு  தெளிவாக விளக்கினார். புகைப்படங்கள் தெளிவாகவும் கூர்மையாகவும் இருந்தன . அவருக்கு சுலபமாக இருந்தது."பாருங்கள் எனது இந்த மோட்டாரை, எப்படி திசை மாறுகிறது என்று கவனிப்போம்.

அவரது அனுமானத்தால் நிகோலா டெஸ்லா பாலிஃபேஸ் அதாவது இன்றைய மூன்று ஃபேஸ் [முன்று வழிகள் , பாசிடிவ், நெகடிவ், ந்யூட்ரல்] ஆல்டெர்னேடிங்க் கரண்ட் சிஸ்டம் ஆஃப் ஜெனரேடர்ஸ்[ஆடலான மின் ஆற்றல் உற்பத்தி பொறி],மின்னோடிகள், [மோட்டார்கள்],மின் சக்தி மாற்றும் சாதனம்,மின் ஓட்டம் உண்டாக்கும் சாதனம்.மின் சக்தி அதிகரிக்கும், மின்சக்தி குரைக்கும் மாற்றல் சாதனம், ஆல்டர்னேடிங்க் கரண்ட் மோட்டார் மறுபுரம். டாக்டர் நிகோலா டெஸ்லா 40 தனியுரிமை அமெரிக்கப்  பட்டயங்களுக்கு சொந்தக்காரர். அவர் அவரது மோட்டார்கள், மின் முறைகள் சாதனைகள் பற்றி அவரது " நூதன ஆடலான மின்சக்தி முறைகள் மின்னோடிகளும்,  மின்சக்தி மாற்றும் பொறிகளும் " என்ற தலைப்பில் பத்திரிகை வெளியிட்டார்.அதை அவர் 1888ல் அமெரிக்க இன்ஸ்டிட்யூட்டின் பொறியியலாளர்களுக்கு விவரித்தார் அது அனைவரது கவனத்தை ஈர்த்தது.டாக்டர் நிகோலா டெஸ்லா மூன்று வழி ஆடல் மின் சக்தியைப்பற்றி ஆராயும்  சமயம்  கடவுளின்  புனிதமான த்ரிமூர்த்தி ஸ்வரூபத்தை தரிசித்தார் அனுபவித்தார்.   1888 லிருந்து டாக்டர் டெஸ்லாவின் ஆடல் மின் சக்தி முறை நம் இல்லத்தில் மின்சக்தியாக ஒளிர்கிறது , வாணிக வளர்ச்சிக்கும், கொண்டு செல்லுதற்கும் அதே அளவுகோலில் இன்றும் சிரிதும் மாறாது செயல்பட்டு வருகிறது.இந்த டாக்டர் டெஸ்லாவின் கண்டுபிடிப்பே இரண்டாவது ஆலை புரட்சிக்கு அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலைகள் மின் ஆற்றல் இயக்கமாகவும், திரளான உற்பத்தி, உற்பத்தி வரிசைகள் முதலியன இயங்கின.  

டாக்டர் நிகோலா டெஸ்லாவிற்கு  சுமார் 700 பட்டயங்களுக்கு மேல் அவர் பேரில் பதிவாகி உள்ளன. அவை நூற்றுக்கும் மேலான உற்பத்திகளுக்கும் ஆயிரத்திற்கும் மேலான  உபயோகங்களும்  உள்ளன. அவரது ஏ.சி மின் சக்தியிலிருந்து ஆரம்பித்து டாக்டர் டெஸ்லாவின் கணக்கில் அடங்கா கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு வீட்டில் ஏதாவது ஒர் வகையில் புகுந்திருக்கிறது என்பதை நமது பரம் பூஜ்ய பாப்பு நமக்கு  அவரது ப்ரசங்கத்தில் எடுத்து ச் சொல்லும்வரை நாம் டா.டெச்லாவின்  பெயரைக்கூட அறிந்ததில்லை.
அதன்  தொடற்சியை கவனிப்போம்  டா.டெஸ்லா எவ்வாரு தாமஸ் ஆல்வா எடிஸன்னை சந்தித்தார், அவரைப் போல் ப்ரதிபலித்தார்.அவர்கள் முதல் சந்திப்பில் எடிஸன் டா.டெஸ்லாவை பேட்டி க் செய்தார். அப்போது தாமஸ் ஆல்வா எடிஸன் உலகத்தில் மின்சக்தியின் ராஜாவாக மதிக்கப்பட்டவர். அவரது மின்சக்தி டயரெக்ட் கரண்ட் என்னும் நேர்மின் சக்தியே எந்த மின்  யந்திரங்களையும், பொறிகளையும் இயக்கியும் ஓட்டியும் வந்தன,பொறிகளும் யந்திரங்களும் டி.சி க்கு உகந்தவாரே அமைக்கப் பட்டு வந்தன.


எடிஸனுடன்  ஆன பேட்டியில் டா.டெஸ்லா எவ்வாரு சுழலும் காந்தத்தின் சக்திப் பரப்பு நியமத்தைக்கொண்டு ஆடலான மின்சக்தி மின்னோடிகள் மின் சக்தி உற்பத்தி செய்கின்றன என்பதை தெளிவாக விவரித்தார்.  தாமஸ் எடிஸனுக்கு இதைப்பற்றிய விஷயம் தெரியாததும், புரியாததையும்  கண்டு டா.டெஸ்லாவிற்கு ஆஸ்சரியமாக இருந்தது. அதையே விரிவாக விளக்கும் போது எவ்வாறு எடிஸனின் நேர்மின்சக்தி,  கொண்டு செல்லவும் , வினியோகம் செய்ய ந்யூயார்க் நகரத்தில் மட்டுமே நூற்றுக்கும் மேலான நேர்மின் சக்தி உற்பத்தி நிலையங்கள் தேவைப்படும்,  அது வெகுதூரம் வரை செல்லாது, அதோடு ஒப்பிடுகையில் எவ்வாரு தமது ஆடல் மின்சக்தி ந்யூயார்க் நகரம் மற்றுமின்றி ந்யூயாரக் நகரத்தின் வெளியிலும் ஒரே மின் உற்பத்தி நிலையித்திலிருந்து  கொண்டுசெல்லவும் , வினியோகிக்கவும் முடியும் என்பதை தெளிவும் படுத்தினார். டா.டெஸ்லா நேர்மின்சக்தி வெகுதூரம் கோண்டு செல்லுகையில் கழிவு ஏர்ப்படுகின்றன என்பதையும் எடுத்து உறைத்தார் அதுவே ஆடல் மின் சக்தியில் அவ்வாரு கழிவு , கசிவு  இல்லை என்றார். அது மட்டுமின்றி டா,டெஸ்லாவின் மின்சக்தி வால்டேஜ் ஆயிரக்கணக்கான பங்கு   அதிகரிக்கவும் , குறைக்கவும் மாற்று சாதனம் உதவியால் முடியும்,  அது சிக்கனமானதும் பத்திரமானதாகவும் உள்ளது. மின்சக்தி கழிவு என்பது நமக்கு இயற்கை கொடுத்ததை நிராகரிப்பது போல் ஆகும் ,அதே சமயம் நேர்மின் சக்தி சரியானது அல்ல அது இயற்கைக்கு மாறானது என்றும் அழுத்தமாக ச்சொன்னார்.அது இயற்கை வழியும்  அல்ல என்றார். அவ்வகையில் எவ்வாரு நேர்மின் சக்தியிலிருந்து ஆடலான மின் சக்திக்கு மாற்றம் உலகத்தின் மனித இனத்திற்கு முழுமையாக பயனுள்ளதாக அமையும் என்பதை உறுதியாகக் கூறினார்.


இந்த புரட்சி திட்டத்தை கண்டு திகைத்த தாமஸ் திடுக்கிட்டார். அவர் அவரது மின்சக்தி வ்யாபாரத்திற்கு வரும் ஆபத்தை உணர்ந்தார். அதுவே அவருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. அந்த பயத்தில் அவர் டா.டெஸ்லாவின் முயற்ச்சிகளை ஒரேமூச்சில் நிராகரித்து பொறாமை கொண்டு, "இது தப்பான வழி, செயல் படாது என்று டா.டெஸ்லாவை ஏளனம் செய்தார்.
மேல்கண்ட பேட்டியிலிருந்தே டா. டெஸ்லா எவ்வளவு தெளிவானவர்,நேர்மையானவர், உண்மைக்கு உறுதியானவர்   என்பது தெறிகிறது.  டா.டெஸ்லா எடிஸனை

நேரடியாக "உமது நேர்மின் சக்தியில் குறைஉள்ளது,  உலகத்துக்கு உபயோகமற்றது என்றும்" , அதே சமயம் நான் எனது ப்ரேரணையை அறிவிக்கும் ஆடலான மின் சக்தி பன் மடங்கு முன்னேற்றமானது ,அதுவே எல்லாவிதத்திலும் சாதகமானது , உபயோகமுள்ளது என்று அழுத்தமாகக்கூறி வேளியேறினார். இந்த தைரியம் டா. டேஸ்லாவிரற்கு கடவுள் மீதுள்ள நம்பிக்கையினால்தான் வந்தது. அதே சமயம் அவரது விஞான ஞானத்தின் தன் நம்பிக்கையி்னால் அவர் புகழ்பெற்ற விஞானியுடன் மோத முடிந்தது. இதுவே இங்கு " அகந்தை, ஆணவம் ஒருவனின்  வீரமோ, வலிமையோ இல்லை, அது பயம் "என்பதை தெளிவு படுத்துகிறது.

அடுத்த கட்டுறையில்,  மின்சக்தி ஜாம்பவான்களின் மோதல் பற்றி பார்ப்போம். [தொடரும்].
ஹரிஓம் || அம்பக்ஞ||  

Thursday 17 July 2014

டாக்டர். டெஸ்லாவின்- சிறுவயது காலம்

கடந்த கட்டுறையில் நமக்கு கோபுரம் போன்ற உலகளவில் புகழ் பெற்ற டாக்டர் டெஸ்லா என்ற  பெரியவர் அறிமுகமானார். டா.டெஸ்லாவின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் கோபுரம் போன்ற என்பது அவருக்கு மிகச்சிறிய கௌரவ வார்த்தையாகும். அவரை மின்சக்தி சாதனைகளின் இமயம் என்றே அழைக்கவேண்டும் ஏனெனில் டா.டெஸ்லா இமயத்தின் உயரத்திற்கு மேல் சாதனைகளால் கடந்ததால் அவர் "விஞானத்தின் கடவுள்" என்று ஆராதிக்கப்பட்டார்.நாம் இன்று இந்த மேதையுடன் கொஞ்சம் அதிகமாக பழகுவோம். எனது முந்திய ப்ளாக் ஸ்பாட்டில் டா.டெஸ்லாவின் பிரப்பு ,அவரது கல்வி, பட்டம், பட்டயங்கள், பதவி முதலியன சிறிதளவு வர்ணித்தோம். இன்றைய ப்ளாக் ஸ்பாட் அவரது குழந்தை பருவம் பற்றி பார்க்கும். பிறகு வாலிப வயது ,புதிதாக த்தோன்றும் கண்டுபிடிப்பாளர். இந்த பருவத்தில் தான் டா.டெஸ்லா பக்தியிலும் மூழ்கினார், அதுவே அவரை ஒரு ஆராய்சியாளராகவும்,, ஆய்வாளராகவும்,  ,கண்டுபிடிப்பாளராக ஆக்கியது 
டா.நிகோலா டெஸ்லா ஒரு கேதலிக் மதத்தைசார்ந்த குடும்பத்தில் பிறந்தது நாம் அறிவோம். அவரது தந்தை மிலுடின் டெஸ்லா ஒரு பாதிரி, அவர் அம்மாவழி பாட்டியும் அப்படியே. அவர் தாய் ல்யூகா டெஸ்லா ஒரு க்ராமத்துப் பெண் ஆவாள். அவர் தாய் படிக்காவிட்டாலும் வீட்டை நன்கு கவனித்து வந்தாள் . அவளுக்கு புது வழிகள் , முறைகள், வேலை சமயல், செயல்முறைகள் ஆர்வம் உண்டு. அவளது  புது வழி ஆர்வத்தின் பலன் அவளே ஒரு முட்டை அடிக்கும் பொறி தயார் செய்தாள்[ இக்காலத்து மிக்சி போன்ற ஒன்று]. அவ்வாரே சிறு டா.டெஸ்லாவின் வாழ்கையில் ஆன்மீகமும்[பக்தியும்] விஞானமும் கலந்தே  இருந்தது. பக்தியும் விஞானமுமே ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்று அவரது ஒவ்வொரு வாழ்கை க்ட்டிடத்தின் செங்கல்கள் போல் சரி சமமாக சேர்ந்தே சென்றன.நிகோலா அவர் தாய்க்கு நெருங்கியவர் ஆவர், அவர் அவரது புகைப்படம் போன்ற ஞாபக சக்திக்கும் , புதுமைக்கும் அவர் தாய்கு பாராட்டு சேரும் என்பார். ஆம் குழந்தைகளின் இனிய இளைய தனித்தன்மை பெற்றோர்களே உருவாக்குகின்றனர். ஆனாலும் டா. நிகொலா டெஸ்லாவை ப்போன்று வளர்க்க பெற்றோர்கள் புதுமை ஆர்வத்துடனும் ,  தகுந்த முறை, பயமில்லாமை , இவைகளுக்கு அப்பார்ப்பட்ட  கடவுள் பக்தி [ஆன்மீகம்] மிகவும் அவசியம், அவை பரிபூரணாமாக இருந்தன. 

அவர் பெற்றோர்கள் தவிர அவருக்கு மில்கா, எஞ்சலீனா, மாரிகா என்று மூன்று சகோதரிகள் ,மற்றும்  டேன் என்ற ஒரு மூத்த  சகோதரர் இருந்தனர். டேன்  ஒர் குதிரை சவாரி விபத்தில் அல்பாயுளில் பரிதாபமாக காலமானார்.  டா. டெஸ்லா எதிரிகள் அவரது சகோதரின் மரணத்திற்கு , டா. நிகோலாவையே காரணம் என்று பழி சுமத்தினர். அது ஒரு சுத்தப் பொய் . டா.டெஸ்லாவின் பெயரைக் கெடுக்க செய்த சதியே என்று நிரூபிக்கப்பட்டது.


அவர் அவரது  பிறந்த இடமான ஸ்மில்ஜானில் ஜெர்மன் பாஷை , கணிதம் ,  மதம் முதலியவன பற்றி அவரது முதல் நிலைப்பள்ளியில் கற்றார். நிகோலாவின் தந்தைக்கு காஸ்பிக் என்ற இடத்திற்கு வேலை மாற்ற்த்துடன் சமயகுருவாக [பாதிரியாக] பணியாற்றினார். அப்போது நிகோலா பள்ளி கல்வியை முடித்தார்.

நிகோலா பிறகு கார்வோலாக் என்ற இடத்தில் உயர்தர க்கல்வி கற்றார். இங்கு  நிகோலா "இன்டெக்ரல்  கல்குலஸ்" என்ற கணித முறைகளை காகிதத்தில் எழுதாமலேயே மனத்திலேயே கணக்கிடுவார்.ஆம் மனத்திலேயே, அதுவே  ஆஸ்சர்ய்ம் ஒரு பக்கம் இருக்கையில் , அவர் ஆசிரியர்கள் அதிசயித்து  அவர் ஏதோ ஏமாற்றுகிறார் என்று நினைத்தனர்.அது அப்படி இல்லாது நிகோலா உண்மையாகவே ஒரு மேதை என்பதை  நான்கு ஆண்டு தேர்வை மூன்றே ஆண்டுகளில் எழுதி  1873 ல் தேர்ச்சி பெற்றவர் ஆவார். அதே  வருடம் அவர் ஸ்மில்ஜான் வந்த சமயம் பலத்த காலரா நோயினால் பாதிக்கப்பட்டு, குணமாகி வெளிவந்தார். 

1874ல் டா.டெஸ்லா மலை ப்ரதேசங்களில் உலாவி இறைவனையும் , இயற்கையையும் பற்றி ஆறாய விரும்பினார்.இந்த மோதல் அவருக்கு  மனோபலத்தையும் , தன் நம்பிக்கை , தைரியம் தருவதுடன் இயற்கையுடன் ஒத்துப்போகவும் , அதுவே அவருக்கு அவரது கண்டுபிடிப்புகளின் சாதனைகளுக்கு ஆதாரமாக  இருந்தது. 

1875ல் அவர் க்ராஜ்ஜில்  ஆஸ்ட்ரியன் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். இங்கு அவரது தங்குதல் குறிப்பிடத்தக்கது.இங்கு அவர் தகுதி ப்படிப்புதவித் தொகையில் சேர்ந்தார். அவர் கற்பதற்கு ப்பசி, ஆர்வத்தி்னால் ஒரு அறிவுறை வகுப்பும் செல்லாது இருக்கமாட்டார்., மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைந்தார் , ஒன்பது தேர்வுகளில் தேர்ச்சிகள் பெற்றார். அதுவே அவசியத்திற்கு மேல் இருமடங்காக  இருந்தன. அவர் ஸெர்பிய சங்கம் ஆரம்பித்தார். முடிவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலதிகாரி  டா. டெஸ்லாவின்  தந்தைக்கு கடிதம் எழுதி நிகோலா "கல்லூரியின் நக்ஷத்திரமாக " தேர்ந்தெடுக்கப்பட்டதை தெரிவித்தார். அந்த பூரிப்பை அடுத்து நிகோலா கடுமையாக காலை மூன்று மணியிலிருந்து இரவு  பதினொன்றுவரை , இருபது  மணி நேரம் வேலை செய்வார்.அதுவும் வார ஓய்வு , வேரு எந்த விடுமுறை பெறாமல். 1878ல் அவர் க்ராஜ்ஜை விட்டு காஸ்பிக் வந்தார். இங்கு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியாராக வேலை பார்த்தார். 1880ல் ப்ரேக்கில் இருந்துவிட்டு நிகோலா டெஸ்லா புடாபெஸ்ட் வந்தார்.  அங்கு ஃப்ரென்க் புஸ்காஸ் என்ற அப்போது புதிதாக கட்டப்பட்டு வந்த தொலைபேசி  மாற்று நிருவனத்தில் பணியாற்றினார்.  ஆகையினால்  மத்திய தந்தி அலுவலகத்தில் அவர் உருவரை படங்கள் எழுதுபவராக வேலை ஏற்றுக்கொண்டார்.  

சில மாதங்களில் புடாபெஸ்ட் தொலைபேசி மாற்று நிருவனம் இயங்க ஆரம்பித்த்வுடன் டா.டெஸ்லாவை முக்கிய மின்பொறியாளராக நியமித்தனர்.அவர் இங்கு மத்தியநிலையத்தில்  இயந்திரங்களில்  பல முன்னேறங்கள் செய்வித்தார். இங்கு அவரது  முதலாவது கண்டுபிடிப்பு . டா. டெஸ்லா தொலைபேசியின் ரிபீடர்[ மறு இயக்கம் யந்திரம்] ,ஒலிபெருக்கி முதலியன மக்களின் நலனுக்காக செய்தார். அவர் இந்த சாதனைகளுக்கு ப்பட்டயங்கள் கேட்டுவாங்கவில்லை.

பிறகு டெஸ்லா ஃப்ரான்ஸில் பாரிஸில் உள்ள காண்டினென்டல்  எடிஸன் நிருவனத்தில் பொறியியலாளராக வடிவமைப்புக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றினார். இங்கும் அவர் மிகவும் ஆற்றல் மிக்க  பணியாற்றினார். அவரது வேலை திறனை கௌரவிக்கும் வகையில் அவரது மேலதிகாரி சார்ல்ஸ் பேச்சுலர் அவரை அமெரிக்காவில் உள்ள ந்யூயார்க்கிற்கு அனுப்பினார், தாமஸ் ஆல்வா எடிஸனனை சந்திக்க. அவரது எடிஸனுக்கு எழுதிய டெஸ்லாவைப்பற்றிய அறிமுகக் கடிதத்தில் எனக்கு தெறிந்தவரை இரண்டே உயர்ந்த மனிதர்கள் உள்ளனர் ,அதில் ஒன்று நீங்கள் மற்றொன்று இந்த இளம் மனிதர்’  .ஆம் 1884ல் டா. டெஸ்லா ஜேப்பில் நான்கு ரூபாயுடன் அமெரிக்காவின் மண்ணை மிதித்தார், அதுவே அறுபது ஆண்டில்  அவர் சாதனைகளுக்கு அனுகூலமான  நிலமாகியது,அங்கேயே அவர்700க்கும்  மேலான பட்டயங்களுக்கு  உறிமையாளராக அவர் பெயரில் பதிவும் ஆயின. நிகோலா டெஸ்லா தாமஸ் ஆல்வா எடிஸனை  சந்திக்க ஆவலுடன் இருந்தார் ,ஏனெனில் அவர்  தாமஸ் எடிஸனை ஒரு சான்றாக கருதிவந்தார், ஆனால் அது விறைவில்  மறைந்தது[தொடரும்]

அம்பக்ஞ|| ஸ்ரீ ராம்|| 

Wednesday 16 July 2014

டாக்டர் நிகோலா டெஸ்லா அறிமுகம்- "விஞானத்தின் கடவுள்"

மார்ச் 27,2014 அன்று  ஸத்குரு அநிருத்த பாப்பு எங்கள் அனைவருக்கும்  டாக்டர் நிகோலா டெஸ்லாவை அறிமுகப் ப்டுத்தினார்கள். டாக்டர்  டெஸ்லா இவ்வுலகத்தின் மாபெரும் விஞானியாக விளங்கினார். அவரை உலகம் மரந்திருந்தாலும் ,அவரது கண்டுபிடிப்பு சாதனைகள் மனித அன்றாட வாழ்க்கைக்கு இந்த க்ரகத்தில் இன்றியமையாதவை. ஆகையால் இன்றுமுதல் நான்  டாக்டர் நிகோலா டெஸ்லாவை ப்பற்றிய தொடரை ஆரம்பிக்கிறேன், அதுவே அவரது அருட்தொண்டரான தனித்தன்மையும் அவரது, காலத்தை முந்திய கண்டுபிடிப்பை பற்றியும் தெளிவு படுத்தும்.

டாக்டர் நிகோலா டெஸ்லா ஸெர்பியாவில்  பிறந்த அமெரிக்கர் ஆவர் ,"மிகச்சிறந்த பல்லாயிராண்டு ப்ரபல விஞானி" என்று அழைக்கப்பட்டார்,, உண்மையிலேயே உயர்ந்த கண்டுப்டிப்பு சாதனையாளர், முன்நோக்கி , இயர்பியல்துறை கர்ப்பனை வல்லுணர். அவரது பல " வழி வகுக்கும் ஆடலான மின்னோட்டம்"[ஆல்டர்னேட்டிங்க் கரண்ட்], சுதந்திர மின் சக்தி ,கம்பியில்லா மின் சக்தி அனுப்புதல்[ வயர்லெஸ் பவர்/ எனர்ஜி ட்ரான்ஸ்மிஷன்] இவை அவரது ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில் சில ஆகும். டாக்டர் நிகோலஸ் டெஸ்லா 10 ஜூலை 1856 மத்திய இரவில் பலத்த கோடை மின்னல் புயலிற்கிடையே ஒரு கேதோலிக் மதம் சார்ந்த ஆஸ்த்ரிய சாம்ராஜ்யத்தில் [தற்போது க்ரோஷியா என்றழைக்கப்படும்]உள்ள குடும்பத்தினருக்கு பிறந்தார்.குறிப்பாக எந்த மருத்துவச்சி டாக்டர் நிகோலாவின் அன்னைக்கு அவர் பிறக்கும்போது உதவி செய்தாளோ அவள்’ இக்குழந்தையே ஒரு புயலாக திகழ்வான் என்று சொன்னது பலித்ததுபோலும்.

மின், யந்திரப் பொறியாளரே உறுவான டாக்டர் நிகோலா டெஸ்லா,   க்ராஜ் என்ற இடத்தில் ஆஸ்த்ரிய பொறிஇயல் பள்ளியில் எல்லை ராணுவ தகுதிப்படிப்பு உதவித்தொகையின் உஅதவியில் [ஆதாரத்தில்] சேர்ந்தார். அங்கிருந்து ப்ரேக்கில் உள்ள சர்வகலாசாலையில் தத்துவ சாஸ்த்ரம் கல்வி தொடர சேர்ந்தார். டாக்டர் டெஸ்லாவிற்கு யேல் பல்கலைக்கழகமும் கொலம்பியா பல்கலைக்கழகமும் கௌரவத்திர்குறிய மேதை என்ற சான்றிதழை அளித்தன. டாக்டர் டெஸ்லாவிற்கு 18 மொழிகள் தெரிந்திருந்தது , 12 மொழிகளில் வெகு தேற்சி பெற்றவர் அதில் அவரது தாய் மொழி ஸெர்போ-க்ரோட் , லாடின் , இடாலியன் , ஃப்ரெஞ்ச் , ஜெர்மன் , ஆங்கிலம் முதலியன ஆகும்.

டாக்டர் நிகோலா டெஸ்லா 700 க்கும் மேல் ஆன தனியுரிமை பட்டயங்கள் [பேடெண்ட்] உரிமையாளர் சான்றிதழ்கள் பெற்றவர் ஆவார், அதுவே யாரும் செய்ய இயலா உளகளவு சாதனை ஆகும். டாக்டர் டெஸ்லாவின் கண்டுபிடிப்பில் ஆடலான மின்னோட்டத்துடன், அமைதி கிரணம்[பீஸ் ரே], மனித யந்திரம் ,தொலைகாட்சி , தூரத்து கட்டுப்பாடு [ரிமோட் கண்ட்ரோல்] , எக்ஸ் ரேஸ் , கம்பியில்லா சக்தி அனுப்புதல் , அண்டக்கதிர் சக்தி [காஸ்மிக் ரே எனர்ஜி],தூண்டிமின் மோடார் [இன்டக்ஷன் மோடார்] , ரேடியோ[வானொலி] ,சுழலும் காந்த சக்தி கொள்கை ,தொலை பேசி மீள் செயல் [டெலிஃபோன் ரிபீடர்] , டெஸ்லா காயில் ட்ரான்ஸ்ஃபார்மர்[டெஸ்லா மின் ஆற்றல் மாற்றி],கம்பியில்லா  தொடர்பு.டெலி போர்டேஷன் , ஆகாய சமய வளைவு [ஸ்பேஸ்டைம் பெண்டிங்க்] , பயண நேரம் அளவு , முதலியன ,பட்டியலில் அடங்கா சாதனைகள். 


டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது அதிசயிக்கும் கண்டுபிடிப்பினால் பல விருதுகளினாலும், பட்டங்களினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.அவ்விருதுகளில் சர்பியா நாட்டு அரசர் மிலான்-I னால்  "தி ஆர்டர் ஆஃப் ஸெயிண்ட் ஸாவா" என்று 1883 ல் அளிக்கப்ப்ட்ட தேசிய விருதும் ஒன்றாகும். இதைத்தவிர "தி இலியட் க்ரெஸெண்ட் மெடல்[பதக்கம்] தி  ஃப்ராங்க்லின் இன்ஸ்டிட்யூட்டினால் அளிக்கப்ப்டும் உயர்ந்த விருது ஆகும். "தி ஜான் ஸ்காட் அவார்ட்"  மனித இனத்திற்கு  தேவையான சுகம், நலம், சௌக்கியம் சார்ந்த கண்டுபிடிப்புகளிற்கு கௌரவிக்கும் வகையில் அமைந்தன.  மோண்ட்னெக்ரோ நிகோலா ராஜாவின் "தி ஆர்டர் ஆஃப் ப்ரின்ஸ் டேனிலோ",எடிசன் பதக்கம்- அமெரிக்காவில் மின் பொறியியலாளற்கென்று வழங்கப்படும் மகத்தான விருது 1917ல் வழங்கப்பட்டது. காந்தத்தின் ஃப்ளக்ஸ் அடர்த்தி
"டெஸ்லா" என்ற அளவு கோலில் அளக்கப்படுகிறது.  அது இந்த டாக்டர் நிகோலா டெஸ்லா வின் பேரில்தான். 1975ல் டாக்டர் நிகோலா டெஸ்லா கண்டுபிடிப்பு சாதனையாளர்கள் பட்டியலில் சேர்க்கப்ப்ட்டார். அமெரிக்காவின் தபால் சேவை 1983ல்  டாக்டர் நிகோலா டெஸ்லாவின் ஒட்டுவில்லையை வெளியிட்டு அவர் மறைந்தபின் கௌரவித்தது. இன்ஸ்டிட்யூட் ஆஃப் இலெக்ட்ரிகல் இன்ஜினியரிங்க் வருடந்தோரும் ,மிகவும் கௌரவமான "டாக்டர் நிகோலா டெஸ்லா அவார்ட்" என்ற விருதினை மிகச்சிறந்த மின் பொறியியல் மாணவருக்கு 1976 லிருந்து வழங்கி வருகிறது.

டாக்டர் டெஸ்லாவின் சாதனைகளை நினைவில் நிருத்த வருடா வருடம் ஜுலை 10 ஆம் தேதி அமெரிக்காவில் " டாக்டர் நிகோலா தினம்" கொண்டாடப்படுகிறது.  டாக்டர் நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்பு சாதனைகள் முன்னேற்றத்திற்கு உகந்ததாகவும் அது காலத்திற்கு முன்னதாகவே இருந்தவகையில் அது தொழில்களின் இரண்டாவது புரட்சியாக கருதப்பட்டு "மின் யுகமே" நிலைநாட்டியது. டாக்டர் டெஸ்லாவின் சாதனைகள் இருபதாவது ‘நூற்றாண்டிற்குமட்டுமல்லாமல் இருபத்தொன்றாவது  நூற்றாண்டிற்கும் நல்லதொரு அஸ்திவாரம் ஆகும். அவரது சாதனைகள் காலத்திற்கு முன்னதாகவே இருந்ததால் , பல தேசங்கள் உளவர்கள் மூலம் அல்லது கணிப்பொறிமூலம்  இந்த நுண்ணறிவுள்ள சாமர்த்தியமானவரை வேவுபார்க்கவும் அனுப்பின , அமைத்தன.  

டாக்டர் டெஸ்லா ஒரு விஞானி,புதுமையாளர்,உயர்ந்த உத்தம மனிதர்.
அவர் விஞானத்தின் ஒவ்வொரு அதிசயச்சம்பவங்களில் கடவுளைக்கண்டார். அவர் அவரது ஒவ்வொறு கண்டுபிடிப்பிலும் விஞானமும், ஆன்மீகமும் ஒரே நாணயத்தின் இருபுரங்கள் , அவை ஒன்றுக்கொன்று சாதகமானவை  அத்துடன்  ஒரு அதிசய திவ்ய சக்தியால் இயக்கப்படுகின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார் .

அவரை ப்போன்ற விஞானத்தையும் , ஆன்மீகத்தையும் கடைந்தெடுத்த ஆற்றல்மிக்க தீர்க்கதரிசி இனி கிடைப்பது அறிது. அவரது கண்டுபிடிப்புகள், புதுமைத்தனம் முதலிய சாதனைகளினால் அவர் "விஞானத்தின் கடவுள்" என்றே கருதப்பட்டார்.

ஹரிஓம் || ஸ்ரீ ராம் || அம்பக்ஞ ||