Friday 14 August 2015

இந்திய ராணுவம் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகளை ஒழித்தது,அருகாமை தேசங்களுக்கு எச்சரிக்கை சவால்

இந்திய ராணுவம்  வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகளை ஒழித்தது,அருகாமை தேசங்களுக்கு எச்சரிக்கை சவால் 
ஆம் நமது பாரத  அரசாங்கத்தின் "கிழக்கே பார்"கொள்கைக்கு சற்றே ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியிருக்கும் அதுவே " கிழக்கே செய்ல்படு" என்று மாறியது போலும். ஆம் கடந்த ஐந்து  தினங்கள் அதன் சுருக்கமான விளக்கம் ஆகும். நமது  பாரத ப்ரதமர் பாங்க்லாதேஷ் சென்று சிறப்பான மிக நாட்களாக காத்திருந்த  எல்லைப்பகுதி ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அதுவே ஒரு 41 ஆண்டு  பிறகு கைகூடியது. 


Wednesday 8 April 2015

"விஞானமும் , வேதாந்தமும்[சமயம்,மதம் ] ஒரே கதையையே [தத்துவத்தை] சொல்லும் வெவ்வேரு மொழிகள்". ----டேன் ப்ரவுன் கருத்து.


கடந்த வருடம் நான் படித்து வந்த கட்டுரைகள் பட்டியலில் டேன் ப்ரவுன் அவர்கள் எழுதிய "டிஜிடல் ஃபோர்ட்ரெஸ்" , டிசெப்ஷன் பாயிண்ட்இரண்டும் உண்டு. அவை  எனக்கு மிகவும்  பிடித்திருந்தன, ஆகையால் ,அதன் எழுத்தாளரான டேன்ப்ரவுனையும் புகழ்ந்து எனது ப்ளாக்கில் இரு கட்டுரைகள் போஸ்ட் செய்திருந்தேன்


உங்களுக்கும் டேன்ப்ரவுன் பிடித்தமான ஒருவராக இருந்தால், இந்தவாரம் நீங்கள் பாரதத்தில் [இந்தியாவில்] இருந்திருந்தால் ஒரு கிளர்ச்சியூட்டும் வாரமாக அனுபவித்திருக்கக்கூடும். ப்ரபல அமெரிக்கப்பத்திரிகையான "டைம்ஸ் மெகஜினால்" அறிவிக்கப்பட்ட 100 உலகில் மிகுந்த செல்வாக்குள்ள நபர்களில் ஒருவரான டேன்ப்ரவுன் டெல்ஹியில் ஒரு வருடாந்திர இலக்கிய விழாவில் கலந்து கொண்டு , பிறகு மும்பையில் நேஷனல் சென்டர் ஃபார் பர்ஃபார்மின்க் ஆர்ட்ஸ் [என்.சீ.பீ.]   வந்திருந்தார். அவர் அவரது  காலம் கடந்த பாரத சுற்றுலா வில்  நம் மக்களினால் கிடைத்த   வரவேற்ப்பு  , அன்பு ஆதரவு கண்டு ," நான் என் வீட்டிற்கே வந்திருக்கிறேன்" என்றார்.

Friday 27 February 2015

 அநிருத்த பாப்புவின் தினசரி சிற்றுண்டி- அம்பில் அல்லது இட்லி.

அவசர வாழ்க்கையில் மக்களுக்கு சரியான சிற்றுண்டி கூட சாப்பிட நேரமில்லை ,இன்நிலையில் பன் அல்லது ப்ரெட் சாப்பிட்டு ஓடுவது வழக்கமாகியிருக்கிறது..ப்ரெட் இல்லையேல் வாழ்க்கையில்லை போலும். சிலர் வித விதமான சிற்றுண்டி பட்டியல் இட்டு மகிழ்கின்றனர்.

ஆனால் அநிருத்த பாப்பு விற்கு இரண்டே ஐடம் தான். ஒன்று இட்லி, மற்றொன்று அம்ப்லி[அம்பில்]. இட்லி அதுவும் உளுந்து அரிசி கலவையில் செய்ததுதான் சாப்பிடுவார். சிலர்  அர்சிமட்டும் உபயோகித்து செய்யும் இட்லி சாப்பிட்மாட்டார்.