Friday 18 September 2020

ஹனுமான் சாலீஸா பாராயணம்.

ஹரி ஓம் ஸ்ரீ ராம் அம்பஞ.



அனைத்து பாப்பு பக்தர்களுக்கும் ஒரு நற்செய்தி. வருடம்தோரும் அநிருத்த   குருக்ஷேத்ரத்தில் நடந்துவரும் ஹனுமான் சாலீஸா பாராயணம் இவ்வாண்டு அதிக் அஸ்வின் மாதம் , அதாவது திங்கள் 21-09-2020 முதல் ஞாயிறு 27-09-2020 வரை ஏழு நாட்களில் நடந்தேறும். ஆனால் இந்த கோவிட் இடையூறுகளினால் அதுவே குருக்ஷேத்திரத்தில் நடக்க இயலாது. ஆகையால் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஒலிப்பதிவை உபயோகித்து , அநிருத்தா டீ.வி, பேஸ்புக் , யூ ட்யூப் , அநிருத்த பஜன் ம்யூசிக் ரேடியோ மூலம் இந்த பாராயணத்தின் பலன் பக்தர்கள்  பெற  ஏற்பாடுகள் செய்யவிருக்கிறோம்.


இப்பாராயணத்தில் பக்தர்கள் அவரவர்கள் வீட்டிலிருந்து ஒரு நாள், இரண்டு நாள் ,  ஏழு நாட்களும் கலந்து கொள்ளலாம்.


எப்போதும் போல் ஒவ்வொரு நாளும் 2 அணிகளாக அதாவது  "ஏ" அணி "பீ" அணி என்று பிரிக்கப்பட்டு , அதில் ஏதாவது ஒரு அணியில் பங்கேற்க பக்தர்கள் அவரவர் பெயரை பதிவு செய்யலாம்.


பாராயண அட்டவணை கீழ் வருமாறு.

தினம் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 8.15 க்கு முடிவடையும்.



இப் பாராயணத்தில் பங்கேற்க அவரவர் பெயர் பதிவு செய்ய வெப்ஸைட் இணைப்பு - https://pathan.aniruddha-devotionsentience.com


மில் பதிவு செய்து கொள்ளலாம். நேற்று ஞாயிறு 13-09-2020 லிருந்து  பதிவு செய்ய திறக்கப் பட்டுள்ளது.


அவ்வாறே பக்தர்கள் ஒரு நாள் முழுதும் பாராயணம் செய்ய இயலாதவர்கள் அவரவர் வசதிக் கேற்ற அவகாசத்திலும் பதிவு செய்து பங்கேற்கலாம்.


பங்கேற்கும் பக்தர்களுக்கு உணவு, மற்றும்  உடை விதிமுறைகள் ஏதும் இல்லை. ஆனால் அசைவம் தவிர்ப்பது நல்லது.


சத்குரு அநிருத்த பாப்பு வினால் அளிக்கப்படும் இந்த வாய்ப்பின் பயனை அனைத்து , அதிகளவு அன்பர்கள், பக்தர்கள் , ஷ்ரத்தாவான்கள் அடைய வேண்டுகிறோம்.8


ஹரி ஓம் ஸ்ரீ ராம் அம்பஞ

நாத்ஸம்வித் நாத்ஸம்வித் நாத்ஸம்வித்

ஸமீர்ஸின்ஹ் தத்தோபாத்யே.

11/09/2020




Friday 19 January 2018

ஓம் மனஸாமர்த்யதாத்தா ஸ்ரீ அநீருத்தாய நம: நான்கு சேவைப் பரிசு- ஸ்ரீ அநிருத்த பாப்புவின் [பித்ருவசனம்]- "தந்தைசொல்"


பரம பூஜ்ய ஸத்குரு பாப்பு நவம்பர் மாதம் 30/2017 அன்று அவரது பித்ருவசன ப்ரசங்கத்தில் நான்கு  சேவை பரிசு என்ன என்பதை வர்ணித்தார். ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு தினமும்,ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு ஸ்ரத்தாவான் அதாவது பக்தர்கள்  மனத்தில் , நான் எந்த நிலையில் இருக்கின்றேனோ, அந்த நிலையிலிருந்து எவ்வாரு முன்னேறுவேன், எனது வளர்ச்சி எவ்வாரு ஆகும் , எனக்கு எவ்வாரு சுகம் கிடைக்கும், எனது  துக்கம் எப்பொழுது தீரும், எவ்வாரு எனது துக்கத்திற்கு தீர்வு காண முடியும். இது ஒவ்வொருவருக்கும் உள்ள இயல்பான சிந்தனைதான்.

ஆகையால், இதற்காகவே , புண்ணியம் கிடைப்பதற்கு பல வழிகள் தேடப்படுகின்றன, பாபம் போக்கும் மார்கம் , பாபத்தை விமோசனம்  செய்யும்  வழிமுறைகள் ஆராயப் படுகின்றன. பலமுறை முயற்சிகள்  செய்தபின்னும் ஒன்றும் சரிவர கிடைப்பதாக இல்லை. சமாதானமாக இல்லை.  அதற்காகவே யாம் குருக்ஷேத்ர மந்திரம், ஸ்ரீ ஸ்வஸ்திக்ஷேம ஸம்வாதம், ஸ்ரீ ஷப்தஞான யோகம் ,  ஸ்ரீ குஹ்யஸூக்தம் , என்ற வழிமுறைகள் நம்முடன் இருப்பதை பாற்க்கின்றோம்.  மாத்ரு வாத்ஸல்ய விதானம் இருக்கின்றது, மாத்ரு வாத்ஸல்ய  உபனிஷத் முதலிய க்ரந்தங்கள் இருக்கின்றன, ராம ரசாயனம் இருக்கிறது , ஸ்ரீ குருக்ஷேத்ரம் உள்ளது. இத்துடன் இன்னும் சில உள்ளன. பலர் எனக்கு கடிதம் எழுதுகின்றனர், வியாழக்கிழமைதோரும் என்னிடம் கேட்கின்றனர். பாப்பு நாங்கள் மந்த்ர ஜபம் செய்ய ஆசைப்படுகிறோம், ஆனால் அதில் வரும் ஸம்ஸ்க்ருத மொழி உச்சாரணங்கள் எங்களுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.

எமது அனைத்து அன்பர்களுக்காகவும், அதற்காகவே யாம் ஒரு சில திட்டம் வகுத்துள்ளோம். அவைகளை விவரிக்கின்றேன். நமது நலத்திற்கான நான்கு திட்டங்கள்.  யாவரின் நலத்திற்கான, அனைவரின் நலத்திற்கான. வேண்டிய நல்லவை வளர, வேண்டாத தீயவை மாய,  ஆம் நான்கு திட்டங்கள். அதில் முதலாவது.

1,ஸ்தோத்ர படன ,மந்த்ர படன பாடசாலை:
இவை இரண்டு இடங்களில் நடைபெரும். இது ஞாயிற்றுக்கிழமை தோரும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் . வகுப்புக்கள் உண்டு. ஒரு வகுப்பு ஸ்ரீ க்ஷேத்ரம் ஜுயீநகரிலும், ஸ்ரீ குருக்ஷேத்ரத்திலும். இவ்விரு இடங்களிலும். இதன் முக்கிய காரியதரிசி ஸ்ரீ அஜீத்ஸின்ஹ்  பாத்யேயும், அவரது உப காரியதரிசிகள்  டாக்டர் ஸ்ரீ கேஷவ்ஸின்ஹ் நர்ஸீகர் , ஸ்ரீ ஸசின்சின்ஹ் ரேகே  அவர்கள் ஆவார்கள். அவர்களுடன் இன்னும் சிலர் சேர உள்ளனர். எமது  மூத்த காரியவாகிகள் [ சீனியர் வாலன்டியர்ஸ்] சின்ன சின்ன குழுவாக அமைத்து உங்களுடன் சேர்ந்து  உட்கார்ந்து ஸ்தோத்ர பாராயணம்[ படனம்] செய்வார்கள், மந்த்ர படனம் செய்வார்கள். தேவைப்பட்டால் திருத்தவும் செய்வார்கள்.

க்ருபாஸிந்துவில் இதன் நிகழ்சி நிரல் அறிவிக்கப்படும். எந்த ஞாயிற்றுக்கிழமை என்ன சொல்லிக்கொடுக்கப்படும். ஒரு மாதம் முன்பதாகவே. அவ்வாறே இத்தகவல் அந்த அந்த நமது மன்றங்களின்  சி.சி.சி என்ற தலைவர்கள் மூலம் அறிவிக்கப்படும். இவ்வாறு நாம் எப்பொழுதும் கற்றுக்கொள்ளலாம். எந்த ஸ்தோத்ரம் நாம் கற்க விரும்புகின்றோமோ , அஸ்தோத்திரத்தையோ, மந்திரத்தையோ நல்ல முறையில் , சொல்லவும் , செய்யவும், எது தப்பு எது சரி என்பதை அவர்கள் நமக்கு சொல்லித்தருவார்கள்.

எமது மஹாதர்ம்வர்மனான ஸ்ரீ யோகீந்த்ர ஜோஷி அவர்கள், அவர் தர்மபத்னியான ஸௌ விசாகா வீரா அவர்கள் ஸ்ரீ அஜித்ஸின்ஹ் பாத்யே அவர்களுக்கும்  , அவரது சகாக்களுக்கும் உதவுவார்கள். இது  எப்போது ஆரம்பமாகும்?. ஆம் வரும் ஜனவரிமாத  21.01.2018லிருந்து. இத்துடன் சேர்ந்த இன்னும் மூன்று  திட்டங்களும். அதாவது மொத்த  நான்கு திட்டங்களும், மாகீ கணபதி எனப்படும் மாசி மாத கணேச சதுர்த்தியன்று  ஆரம்பமாகும். நாம் நல்லமுறையில் பாராயணம் செய்தால் நமக்கு சமாதானமாகும், பகவான் சந்தோஷம் அடைவார். ஆம் நாம் இவ்வளவு முயற்சி செய்கிறோம், கற்பதற்கு. பகவான் என்ன  விரும்புகிறார். நமது அன்பு , பக்தி, ப்ரயாசம் [முயற்சி], புருஷார்த்தம் [நேர்மை] எதிற்பார்க்கிறார்.

ஆம் இதுவும் புருஷார்த்தம்தான் . பக்தி, புரிஷார்த்தம் செய்வதற்கு, ஸ்தோத்ர  பாராயணம், படனம் , நன்கு அமைந்தால் நன்று. அதற்கு முழு முயற்சி தேவை. நேர்மை முறையில் வரும். ஆகையினால் இது அனைவருக்கும் நல்லதொரு வாய்ப்பு. நல்லவிதமாய் ,மந்திரம் சொல்ல, உச்சாரணம் செய்ய. ஆம் , அனைத்து ஸ்லோகங்களும் இங்கு கற்றுத்தரப்படும். கோரகஷ்ட உத்தாரண ஸ்தோத்ரத்திலிருந்து தேவி அபராதக்ஷமா ஸ்தோத்ரம் வரைக்கும், தேவி அதர்வசீர்ஷ  மந்திரத்திலிருந்து , நமது மாத்ருவாத்ஸல்ய விதானம் , உபனிஷத்த்தில் வரும் ப்ரார்த்தனைகள் அனைத்தின் உச்சாரணங்களும் கற்று தரப்படும். தத்தமாலா மந்திரமும் , ஆம் எல்லாம் கற்று தரப்படும். உங்கள் கையை பிடித்து , தாழ்த்தியவாரு அல்ல. எவ்வளவு முறை தப்பு செய்தாலும், யாரும் எதுவும் சொல்ல  மாட்டார். இழிவு சொல்ல மாட்டார். எல்லாம் அன்புடன் செயல்படுத்தப்படும், இதுவே  நமது முதல் யோஜனை அல்லது திட்டம். இரண்டாவது திட்டமும் பாடசால போன்ற வகுப்புதான்.

2,பவித்ர முத்ரா வகுப்புக்கள்: 
 நம்மில் சிலர்  அவதூத முத்ரா போன்ற , முத்ராக்களை பற்றி கற்றுள்ளோம். நாம் அம்முத்ராக்களுடன் சேர்ந்து அதர்குறிய  ஸ்தோத்ரங்கள் பாராயணம் செய்கையில்  குறிப்பாக ஸ்ரீ குஹ்ய ஸ்தோத்திரம்  சொல்லும் பொழுது நமக்கு என்ன பயன் என்றரிவோம் , அதன் அனுபவங்கள் சிலருக்கு தெரிய வந்தது. ஆனால் , இம்முத்ராக்களைப்பற்றி அனைவரும் அறிய நாம்  ,வீடியோ சீடி தயார் செய்து வருகிறோம். மராத்தி, ஹிந்தி , குஜரத்தி , கன்னடம் , தெலுங்கு முதலிய மொழிகளில் வந்துவிடும். இம்முத்ராக்கள் பற்றிய தகவல்கள் , அதன் பலன்கள், செய்முறைகள் யாவும் அம்மன்றங்களுக்கும்  அனுப்பப்படும். ப்ரதிகள் விற்பனைக்கும் கிடைக்கும்.வீட்டிலேயே கற்றுக்கொள்ளலாம், எங்கும் போகவேண்டிய  அவசியம் இல்லை. சீடி வாங்க வேண்டாம் என்று இருந்தால் , அதை நமது கேந்திரங்களில் சென்று கற்றுக்கொள்ள  முடியும். நமது கேந்திரங்கள், மன்றங்களில்  என்று முத்ரா சீடிக்கள்  காண்பிக்கப்படும்  என்று  யார் , செயல்முறை சொல்லிக்கொடுப்பார் என்று முடிவு செய்வார்கள். இம்முத்ராவிலிருந்து என்ன பயன்?. இந்த முத்ராக்களினால் நமது சரீரத்தின்  சக்தி க்ரஹிக்கக் கூடிய சக்திக்ஷேத்ர நரம்பு நாடிகள் சக்தி பெற்று உயர்ந்த நிலை அடைகிறது , நன்றாகிவிடுகின்றன, சாந்தமாகின்றன. சாந்தமாவதினால் சக்தியின் பாதிப்பு இருக்கும். அது ஒரு கட்டுண்ட நிலையில் சீராக இயல்படும், இருக்கும். எனவே மிகுந்திருக்காது, குறைந்தும் இருக்காது. இதனால் , சரீரத்தின் ஆர்ரோக்யத்திற்கும் , மனத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது. இம்முத்ரா வகுப்புகளும் அன்றே ஆரம்பமாகும். சீடிக்களும் இருக்கும் , அத்துடன் வழிமுறை காட்டுபவர்கள் இருப்பார்கள். வாலன்டியர்ஸ் இருப்பார்கள். இந்த இரு வகுப்புகளுக்கும் எந்த கட்டணமும் கிடையாது, இலவச வகுப்புகளே. கட்டணம் என்னவென்றால் , பக்திதான்.அன்புதான்.


 
3, ராம நாம புத்தகத்திலிருந்து சமித்து[ஹோமம், யாகம் செய்ய] : 
இந்த மூன்றாவது திட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. யாம் யஞம் செய்கிறோம், ஹோமம் செய்கிறோம். ராமநவமி, தனத்ரயோதசி அன்று  செய்கிறோம், மற்றும் சில விசேஷ உத்ஸவ  தினங்களில் செய்கிறோம். இதற்கு சமித்து எங்கிறுந்து வருகிறது. மரத்திலிருந்துதானே?  காட்டிலிருந்து. மரத்தைவெட்டி. அதேபோல் நம் ராமநாம புத்தக காகிதம் கூட மரத்திலிருந்துதான் வருகிறது. பாரதத்தில் இவ்வளவு மரங்களை வெட்டுவதால்தானோ உலகத்தில் பூ உஷ்ணத்தாக்கம் அதிகரித்துள்ளது என்று நினைக்கிறேன். நாம் மும்பையில் பார்க்கிறோம், ஒருநாள் மழை பலமாக, அடித்து சேதம் விளைவிக்கின்றது, அல்லது பேய்வதே இல்லை.குளிர் நாளிலும் உஷ்ணத்தாக்கம் அதிகமாவதை காண்கிறோம். இது பூமண்டல உஷ்ணம் அதிகரிப்பின் பின் விளைவு. அதற்கு ஒரே வழி மரம் , செடி கோடிகளை காப்பது, மரங்கள்நடுவது, அதன் எண்ணிக்கை பெருக்குவதே ஆகும். ஆகையால் நான் முடிவு செய்துள்ளேன், இனி நாம் செய்யப் போகும் ஹோமம், யாகங்களுக்கு, சமித்துக்கள் நம் ரமநாம புத்தகத்திலிருந்து தயார் செய்தவனயாக இருக்கும். இந்த ராமநாம புத்தகத்திலிருந்து சமித்து , மரங்களிலிருந்து கிடைக்கும் சமித்து போல் எவ்வாரு தயார் செய்யலாம் என்பதைப்பற்றியும் சீடி வெளிவர உள்ளன. நமது கேந்திரங்களில்[மன்றங்களில்] , அத்துடன் ஹரிகுருக்ராமில்,  தரவர இருக்கும்  காகிதங்களிலிருந்து எவ்வாரு பல்ப் [பசை] செய்யலாம் என்பதை கற்றுகொள்ளலாம். அதிலிருந்து எவ்வாரு சமித்து  தயாரிக்கலாம் என்பது பற்றி. வீட்டிலிருந்தே இத்தகைய சேவைகளில் பங்கு கொள்ளலாம்.

என்ன நடக்க இருக்கின்றது சற்று நினைத்து பாருங்கள். உங்கள் கைகளால் செய்யப்பட்ட சமித்துக்கள் நமது பவித்ரமான யஞங்களில் ஆஹுதியாக சேர்க்கப்படும். நம் தத்த பகவானுக்கு, மாதா சண்டிகைக்கு, ஹனுமனுக்கு,நம் ராமனுக்கு. இவ்வாரு செய்த சமித்துக்கள் நன்கு உலர்ந்த பின் நம் கேந்திரத்திலோ அல்லது ஹரிகுருக்ராமிலோ சேர்த்துவிடுங்கள். இதன் மற்ற ஏற்பாடு விவரங்கள் , விரைவில் முழுமையாக அறிவிக்கப்படும்.  இதன் பயன் என்ன?   ராம நாம் எழுதிய புத்தகங்களின் சமித்து அதிக பவித்ரமானவையா இருக்கும். அதற்கு ஈடான மரங்கள் காப்பாற்றப்படும். ஆகையினால் புண்ணியம் கிடைக்கும், அதிகரிக்கும். நமது முயற்சியின் பலன் சமித்து ஆஹுதியினால்  புண்ணியமாக பலன் அளிக்கும். அதற்கு தேவையான ராம நாம புத்தக காகிதம்  நம் கேந்திரங்களிலும், ஹரிகுருக்ராமிலும் கிடைக்கும். அவற்றின் சீடியும்  கேந்திரங்களில், ஹரிகுருக்ராமிலும்  காட்டப்படும்.  திரும்ப திரும்ப க்காட்டப்படும். பலமுறை கற்றுக்கொள்ளலாம். ஆதலினால் ஜனவரி  21, 2018 பின் , என்ன யஞம், ஹோமம் நடக்கவிருக்கின்றனவோ அவற்றில் இந்த  சமித்துக்களே உபயோகிக்க இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் ,எவ்வளவு சமித்து தேவைப்படும் என்று, பார்த்தும் இருக்கிறீர்கள். அதுவும் ராம நவமி அன்றும் , தனத்ரயோதஷி அன்றும் மிக அதிக அளவில் தேவைப்படும். ஆகையால் ராம நாமத்திலிருந்து, ராமநாம காகிதத்திலிருந்து, நமக்கு இன்னும் தூய்மை , பவித்ரம் மங்களம் உண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை . இத்துடன் சேர்த்தார் போல் நம் நான்காவது திட்டம் அமைந்துள்ளது. அது வனதுர்கா திட்டம்.

4, வனதுர்கா திட்டம்: 
நாம் வீட்டில் பழம் தின்கின்றோம். உதாரணமாக சபோடா பழம், அதன் விதை எவ்வளவு பெரிது. அது விரைவில் கெடாது. சீதாபழம் விதைகளும் பெரிதானவை, அவையும் கெடாதவை. அதுபோன்று   நாம் உண்ணும் பழங்கள் எதில் விதைகள் பெரிதாக உள்ளனவோ, கெடாதவையோ அதை வீட்டில் சேர்த்து நம் கேந்திரத்தில் கோண்டு தரவும். ஹரிகுருக்ரமத்தில் தானமாக சேர்க்கவும். பிறகு, மரம் நட ஆசை உள்ளவர்கள், யார் சுற்றுலா செய்கிறார்களோ  வாரக்கடைசியில் பிக்னிக் செல்பவர் , அவ்விதைகளை ஹரிகுருக்ராம் அல்லது கேந்திரத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் . வெரும் நிலம் ,  மரம் செடி கொடி இல்லாது கிடைத்தால் அங்கு இவ்விதைகளை மண்ணில் புதைத்து , மூடி அதன் மேல் சிறிது நீர்ஊற்றவும் , அவ்வளவேதான். நூறு விதைகளில் ஐம்பதாவது வளராதா என்ன?  அதுவே  நமக்கு நல்லது. எங்கு சென்றாலும் இதை செய்யலாமல்லவா.இவ்விதைகளை நடும்போது நாம் என்ன சொல்லவேண்டும்?  ஓம் நம:சண்டிகாயை அல்லது ஓம் ஸ்ரீ வனதுர்காயை நம:  முடிந்தால் இரண்டையும் சொல்லலாம்.

யாம் குஹ்யஸூக்தம் , ஸ்ரீ ஷ்வாஸம் நிகழ்சிகள் நடத்திய சமயம் அதில் நம் ஆதிமாதாவின் 24 ரூபம்  பார்த்தோமே , அதில் உரு ரூபம்  வனதுர்கையும் ஆவாள். வனதுர்கை ஒரு சக்தி மிகுந்த அவதார ஸ்வரூபம் ஆகும். அதாவது  நாம் யாரை " நமோ தேவ்யை, மஹா தேவ்யை  சிவாயை சததம் நம: ||  நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியத; ப்ரணதஸ்மதாம். ப்ரக்ருத்யை  பத்ராயை என்றால் , இயற்கையை பத்திரமாகக் காக்கும் தேவியே என்பது. இவளும் நம் தாயின் ,என் தாயின் ரூபம்தான்.  அன்னை ஜக்தம்பாவின் ஒரு ரூபம்தான்  வனதுர்கா. நாம் இவ்வாரு விதைகள் நட்டால் அதில் இருந்து சில விதைகள் மரமாக வளரக்கூடும். இதை ஒரு ப்ரார்த்தனையாக நினைத்து செய்யவேண்டும். அது நகரத்தில் நடக்காவிடில் நகரத்து வெளியிலோ , திறந்த , பறந்த வெளியிலோ ஒரு பத்து விதை நட்டு , நீர் ஊற்றினால்  அதில் இரண்டாவது கண்டிப்பாக வளரும்., மரம் ஆகும். வனதுர்கா சந்தோஷம் அடைவாள். நான் வனதுர்காவை சந்தோஷப்படுத்த விரும்புகிறேன்.

வீட்டில் அவ்வித பழங்கள் உண்டு,  கேந்திரத்தில் தராது , விதைகள்  நட விரும்பவர் , அவர்களே  நடலாம். எந்த ப்ரச்னையும் இல்லை. அதுவும் ஒருவிதத்தில் ப்ரார்த்தனைதான். ஆனால் விதை விதைக்கும்போது ஓம் நம: சண்டிகாயை , ஓம் வனதுர்காயை நம: என சொல்லி செயல்படுவது முக்கியம்.  இந்த வனதுர்கா திட்டத்தின்மூலம் இந்த இயற்கையின் சக்தியை நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள முடியும். இயற்கையின் ஜீவசக்தி நமதுள் வெகுவேகமாக பெருகும். இந்த ஜீவசக்தி யாருக்கு வேண்டாம். இச்சக்தியினால் நமது புத்தி கூற்மையாகும்..  நமது இந்திரியங்கள் சரிவர செயல்படும். வலுக்கும். அவற்றினால் ஆயுள் பெருகும். இந்த வனதுர்கா திட்டமும் வரும் ஜனவரி21, 2018 அன்றே ,விதைகள்  வினியோகத்துடன் ஆரம்பமாகும்.

ஆம், வனதுர்காவிற்கும் ,  கணேஷ் பகவானுக்கும் என்ன சம்பந்தம்  என்று கேட்பீர்கள். நம் குருக்ஷேத்ரத்தில் இருக்கும் மூலார்க்க கணபதியும் மந்தார மரத்தின் வேரிலிருந்துதானே வந்திருக்கிறார். அம்மரத்தின் வயது 25க்கும் மேல் ஆனது, நீர் கிடைக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. கிழக்குப்பக்கம் உள்ளது. அவ்வாரான மந்தார மரத்திலிருந்துதான் மூலார்க்க கணபதி தயார் ஆவார். ஆதலினால் ஆராதனைக்கு பாத்திரமாகிறார். இவ்வாரு ஆராதனைகள்  செய்து நாம் மூலார்க்க கணபதியை ஸ்தாபனம் செய்துள்ளோம். அப்படியானல் நாம் இயற்கையின் புத்திரனைத்தானே ஸ்தாபனம் செய்திருக்கிறோம். ஆகையால் இவர் நம் தாயான வனதுர்காவின்  அருமை புத்திரனாச்சே. நம் வனதுர்கா திட்டத்தில் நம் தாய் வனதுர்காவுடன்  அவளது  புத்திரன்  அதாவது கணபதியும்தான் ஆராதனை செய்யப்படுவார். அதற்கான பலன்  நிச்சயம் கிடைக்கும்.

இந்த நான்கு திட்டங்கள், எனது ஆசை திட்டங்கள்.  அதுவும் உங்கள்  யாவரின் நலத்திற்காகவே. என் அன்பு குழந்தைகளுக்காக , அவர்கள் முன்னேறத்திற்காகவே. புண்ணியம் பெருகவே. எவை  நமக்கு ச்சாதகமாக இல்லனவையோ அரவே விலக , இந்த நான்கு திட்டங்கள் மிகவும் உதவும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது .  நான் இதுவரை  அளித்து வந்த திட்டங்கள் எவ்வாரு ஏற்று நடத்தி வந்தீர்களோ அவ்வாரே இன் நான்கு திட்டங்கள் ஏற்று செயல்ப்டுவீர்கள் என்று.  ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். எனக்கு உஅதவிக்கரமாய் இருப்பீர்கள்.

இந்த நான்கு திட்டங்களும் ஜனவரி21,2018 லிருந்து.
மந்திர படனம் வகுப்பில் சில குறிப்பிட்ட எண்ணிக்கைதான் இருக்கலாம், இடவசதியை பொருத்து . 30, 40 அல்லது  100 நபர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்பின் பலர் இருந்தால் , இரண்டாவது வகுப்பும் நடத்தப் படும். குறிப்பிட்ட நேரம் உண்டு. நாற்பது பெயர்கு உறிய இடத்தில் நான்கு ஐந்து நபர் சற்று ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் அனுமதிக்கப்படுவார். ஆனால் அரைமணி நேரம் தாமதம் என்றால்  அனுமதி கிடையாது, இரண்டாவது வகுப்பிற்கு இடம் இருந்தால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

நேர நிபந்தனைகள் இருக்கும்.  இல்லாவிடில் நாள் முழுவதும் வகுப்பு நடத்த வேண்டியிருக்கும். வேர வேலை இல்லையா என்ன?. உங்களுக்கும் தான் பல ஜோலியுண்டு. வழிமுறைகள் நமது,   எவ்வாரு நடத்துகின்றோமோ அவ்வாரே இவ்வகுப்புகளுக்கும்தான். முத்ரா வகுப்பு நடக்கும் , முத்ரா சீடி  கிடைக்கும். சமித்து நீங்கள்  தயார் செய்வீர்கள். அதை யாகத்தில் அர்ப்பணம் செய்வோம். ஆம் நான் செய்வேன். அவை செய்யும் முழு  விவரம் உள்ளது. சீடி தயார் ஆனதும்  உங்களுக்கு காட்டப்படும். நான் சொன்ன நான்கு திட்ட  தகவல்கள் உங்கள்  மனதில் பதிந்திருக்கும்  என உறுதி . நீங்கள் அனைவரும் பாப்பு ஒரு பரிசு அளிக்கிறார் என்று நினைத்தால் , ஏற்றுக்கொள்ளவும். யார் பங்கேற்கின்றனரோ அவர்களுடன் நான் நிற்கிறேன். அவர்களுக்கு உதவ . யாருக்கு விருப்பமில்லையோ அவர்களுக்கும் மனதில் இச்சை வர நான் முயற்சி செய்வேன். அவர்களுக்கும்  பலன் கிடைக்கட்டும். யார் ஏற்று நடத்த ஆயத்தம் செய்கின்றனரோ அவர்களுக்கு என் அன்பு ஆசி.

நான்கு சேவை திட்டம் - பரிசு , பாப்புவின் பித்ருவசன்  ப்ரசங்கத்தை இந்த வீடியோவில் அனைவரும் காணலாம்.
 ஹரிஓம் || ஸ்ரீ ராம் || அம்பஞ


Thursday 5 May 2016

ஹிந்தி சினிமா [ஹிந்தி படக்காட்சி] : விசேஷமான , சிலிப்புடன் மகிழ்விற்கும் , வித்தியாசமானது விசித்திரமானது

இது ஒரு உண்மை சம்பவமோ அல்லது எட்டுக்கட்டினதோ  என்று யாருக்கும்  தெறியாது. 1980ல் இந்தியாவில் ஒரு சர்வதேச திறைப்பட காட்சி  போட்டி நடந்தது.   ஒரு ப்ரபல நடிகர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக்கொண்டிருந்தார். ஒரு வெளிதேசத்து போட்டியாளர் ,இந்திய பங்கேற்பாளரிடம் அந்த முக்கிய நபர் யார் என்று கேட்டார்.  அந்த சர்வதேச போட்டியாளர் ஒரு இந்திய நடிகர் பரிசு[மெடல் ] வினியோகம் செய்கிறார் என்பதை அறிந்து வியப்புற்றார். ஆம் அகையால் தான் உங்கள் நாடு பின்தங்கியிருக்கின்றது என்றார் அந்த வெளிநாட்டு போட்டியாளர்.
 நாம் பின் தங்கியிருக்கின்றோமோ அல்லது முன் நிற்கின்றோமோ என்பது முக்கியமில்லை,  ஆனால் நம் தேசத்தில் சினிமா நக்ஷத்திர கலைஞர்களும்,  ஸூபர் ஸ்டார் நடிகர்கள்,  மக்களால் புகழ் பெற்றும் , போற்றப்பட்டும் வருகின்றனர் , அவர்கள் இனியும் அவ்வாரே போற்றப்படுவர். ஏனெனில் நமது இந்தியாவில்  சினிமவை [திறைப்படத்தை]  ஒரு படக்காட்சி என்று மட்டும் பார்க்காமல் அதை ஒரு கொண்டாட்டமாக காண்கின்றனர். இந்தியர்கள் திரறைப்படங்களை  அடிக்கடி கொண்டாடுவார்கள். அதற்கென்று இந்தியர்கள் திரறைப்படங்களை , எப்போதும் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியர்கள் திரைப்படங்கள்  பொருட்டு  எதாவாது செய்வார்கள்.  சிலர்  படங்களின்  பாட்டு க்கேட்பதும் , அவர்களுக்குப் பிடித்த நடிகர்கள் பற்றி கட்டுறைகள் வாசிப்பதும் , இன்றைய உலக முன்னேற்றத்துடன்  அவர்கள் ஸ்மார்ட் செல் ஃபோன்களில் பிடித்த  திறைப் படங்களும் பார்த்து மகிழ்கின்றனர்.

திறைப்  படங்கள் இக்காலத்தில்  சமுதாயத்தை கடுமையாக பாதிக்கின்றன. யாவருக்கும் அதைப்பற்றிய எதிர்ப்பில்லை.  பாரதத்தில் முதல் திறைப்படம் சுமார் நூன்று ஆண்டுகள் முன் தயாரிக்கப்பட்டது. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் முன்னிலிருந்து  , திறைப்பட  தயாரிப்பு அரசாங்கத்தினால்  ஒரு முறையான தொழில் [நிருவனமாக] கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகிறது.  சமீப காலத்தில் திறைப்பட தயாரிப்பில் மிக அதிகமான அளவு உற்பத்தி செய்யும் தேசமாக அமெரிக்க்காவையும் மிஞ்ஜியிருக்கிறது. திறைப்படம்  பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை இந்தியாவிலும் , வெளி நாடுகளிலும்  அதிசயைக்கும் வகையில் அதிகரித்துக்கொண்டே போகின்றன. வெளி நாடுகளில் இயங்கும் ஹிந்தி திறைப்படங்கள் இந்தியர்களை மட்டும்  கவர்ச்சிக்காமல் , இந்தியமற்றவர்களையும் ஈர்க்கின்றன. ஆகையால்  ஹிந்தி திறைப்படங்கள் பற்றிய  கட்டுறை ,விசேஷமானது , ஆனந்தம் அளிக்கும் அற்புதமானது, ஆம் இயற்கைக்கும் அப்பார்ப்பதத்து , விசித்திரமானது என்பதை படித்து உணருங்கள்.       


விசேஷமானது : 1913ம் ஆண்டு  தாதா சாஹெப் ஃபாள்கேயின் "ராஜா ஹரிஷ்சந்த்ரா" என்ற திறைப்படம் முதன் முதலில் வெளிவந்தது. ஆகையால்தான் 2012ம் ஆண்டு திறைப்பட தொழிலின் நூற்றாண்டாக கொண்டாடப் பட்டது. உண்மையாக இந்த நுறு ஆண்டு காலகட்டத்தில்  இந்திய திறைப்பட தொழில் வளர்ச்சியைப்பற்றி அறிவதே அற்புதமானது. திறப்பட தயாரிப்பு ஒரு வளற்சி பெறும் உத்தியோகமாகிவிட்டது. ஹிந்தி திறைப்படங்களுடன் , தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் திறைப்பட தயாரிப்பும் வளற்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன.  பாரதத்தில்  வருடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திறைப்படங்கள் தயாராகி  வருகின்றன. 2012ம் ஆண்டு இந்தியாவின் திறைப்பட  தயாரிப்பிலிரிந்து பெற்ற வருமானம் 1120  கோடியாகும்.2017ல் வளற்ச்சியடைந்து மீண்டும் 1930 கோடியை த்தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் உற்பத்தி சதவிகிதம் பெருகிக்கொண்டே உள்ளது. .ஹிந்தி திறைப்பட வருமானம்  இதர திரறைப்பட்ங்களை ஒப்பிடுகையில் வருமானம் அதிகமாகவே இருக்கும் , அதுவே  400-500 கோடியாகும். ஆமீர்கானின் "தூம்-3" நான்நூறு கோடி ரூபாயை த்தாண்டி விடும் என்று  பேசிக்கொள்கின்றனர். சல்மான்கானின் திறைப்படங்கள் வருமானம் குறைவாகவே இருந்த போதிலும் , ஹிந்தி திறைப்படங்கள் பல கோடி கணக்கில்  வாணிகம் செய்யும் பொருட்டு.  ஆமீர்கானின் ஒரு சில படங்கள் அவ்வப்போது சம்பாதிப்பது  எவரையும்  பாதிக்காது உள்ளன.  அது  பெரிய விஷயமில்லை என்கிறார்  சல்மான் கான்..
பாரத ஜனத்தொகை அதிகரித்து வருகிறது , அத்துடன் திறைப்படம் பார்ப்பவர் எண்ணிக்கையும் வளர்கின்றது. காட்சி நிலயங்களும் அதிகரித்து வருகின்றன. ஆகையால் , வருங்காலத்தில் திறைப்படங்கள் பல சாதனைகளை முறியடிக்கும் என சல்மான்கான் நம்புகிறார். சமீபத்தில்  திறைப்பட  வியாபரம் மீது ஒரு கண்ணோட்டம் விட்டால் , சல்மான்கான் கூறுவது சரியென்று புரியும்.

ஹிந்தி திறைப்படங்கள் வடக்கில் நன்றாக ஓடும் அதே சமயத்தில், ரஜினிகாந்த் தமிழ் திறையுலகில் மட்டுமல்லாமல், உலக புகழ் பெற்றவர்,  தனது புதிய   திறைப்படம் "கோச்சடையான்" ஜனவரி மாதம் வெளியிட இருக்கிறார். ரஜினி சார் இப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ்  பதிவுருவை முறியடித்து புதிய சாதனை புரிவார் என்று  க்ரேப்வைன் கணிப்பு கூறுகின்றது. ஒக்குமொத்தமாக பார்க்கையில் திறைப்பட தயாரிப்பு வணிகம் வளமாக உள்ளது. 
இந்த பரபரப்பான  வளற்ச்சியினால் அமெரிக்கா இயக்குனர் , வார்னர் சகோதரர்கள், வால்ட் டிஸ்னீ போன்ற பல  ஸ்டூடியோதாரர்களும்  இந்தியாவுடன் இணைந்து செயல்பட  தயாராக இருக்கின்றனர்.
பாக்ஸ் ஆஃபீஸ்  வசூல் தொகை [வருமானம்] வளரற்ச்சி சில நூறு கோடிகளாக  இருப்பினும் ,திறைப்பட  தயாரிப்பு  வரவு செலவு வழிவகை திட்டம் அடுக்குகுறியாக வளர்ந்து வருகின்றது. சில பெறிய திறைப்படங்களின் வரவுசெலவு திட்டம்  சமீபத்தில்   80-120 கோடியாக உயர்ந்துள்ளது.  ஹ்ரிதிக் ரோஷனின் "க்ருஷ்ணா-3" 115 கோடி ரூபாயைத் தாண்டியது. ரஜினி சாரின் "கோச்சடையான்" நூறு கோடிக்கும் மேல் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தகைய பெரிய வரவுசெலவு திட்டமிட்ட  திறைப்படங்கள் , பாக்ஸ் ஆஃபீஸ் வஸூலிலூம் சாதிக்கும் வல்லமையுள்ளன. அதற்கு ஒரு சமன்படை கணக்கிட்டு வைத்திருக்கக் கூடும். ஆனால் ஒரு ஆபத்தையும் ஏற்றுக்கொள்ளாத  சிறு திட்டப்த் திரறப்படங்கள் 3.5-5 கோடியிலும் தயாராகி வருகின்றன.
1999 ஆம் ஆண்டு திறைப்பட தயாரிப்பு இந்திய அரசாங்கத்தினால் ஒரு தொழிற்சாலையாக உணர்ந்து கொண்டு ,கருதப்பட்டும் வருகிறது. அதன் பின் திறைப்பட  தயாரிப்பில் முதலீடு,  பன் மடங்கு வளர்ச்சி யடைந்துள்ளது.
பெறிய நிருவனங்கள் தனது உற்பத்திசாலைகளை  அமைத்தன. திறைப்பட தயாரிப்பு வேகம் அதிகரித்துள்ளது. காட்சிக்கூடங்கள்,  அதாவது தேட்டர்கள் , பல  மல்டிப்ளெக்ஸ்கள்  பல படர்ந்துள்ளன. சர்வதேச அணுகூலமாகவிருக்கும்   பாரதத்தில் , சிறிய  ஊர்களும் எதிர்பார்ப்பிற்கு எஞ்ஜி வளர்கின்றன. இத்தகைய  இரண்டாம் தர நகரங்களிலிருந்து வரும் வஸூல் ஒரு திறைப்படத்தின் [திறனை]  தலைஎழுத்தை[நிர்ணயிக்கும்] தெரியப்படுத்திவிடும்,அறிகுறியாகும். 
ஆகையால் இத்தகைய இரண்டாம்  தர நகரங்களை ஒன்றிய கதை , கதாபாத்திரம் சமீபத்தில் மக்கள் விரும்புகின்றனர் என நம்பப்படுகிறது. 
  
கடைமூடி த்தொழில். வரும் நாட்கள் எவ்வாரு இருக்கும் என்பதை ஓரளவு எதிர்பார்க்கலாம். இவ்வளவு மாற்றங்கள்  மத்தியில் , ஒற்றை கண்காட்சிக்கூடம் , மல்டிப்ளெக்ஸ் [பலரக கண்காட்சிகூடங்கள்] , இடையே மோதல் காண்கிறோம். புதிய காட்சிக்கூடங்கள் அனைத்தும் மள்டிப்ள்க்ஸில்  உள்ளன. தனிப்பட்ட  காட்சிக்கூடங்கள் மெதுவாக மறைந்து வருகின்றன. தற்போது 87% மல்டிப்ளக்ஸும்   13% ஒற்றை திறை க்கூடங்களே  பாரதத்தில் உள்ளன. பாரதத்தில் 2012ல்  , 97 ஒருதிறை க்கூடங்கள்  உள்ளன என்று கணக்கிடப்பட்டது.
இரண்டாம்  தர நகர் ரசிகர்களும் நூற்றுக்கணக்கில் கொடுத்து டிக்கெட்  வாங்க அஞ்ஜுவதில்லை. அது  திறைப்படத்தின் புகழையும் , வரவேற்ப்பையும் பொருத்தது.  மல்டிப்ளெக்ஸ்கள் "தூம்-3"போன்ற படத்திற்கு , டிக்கெட்டிற்கு ரூபாய் 600க்கு வைத்து விற்கின்றன.  இந்த டிக்கெட் விலை ரசிகர்களை பாதிக்காது என்ற நம்பிக்கை மல்டிப்ளெக்ஸ்களுக்கு இருக்கிறது. 
திறைப்பட  உலக உத்தியோக வளற்ச்சியும் , பரவலும், பாரதத்தின் பொருளாதார வளற்ச்சிக்கும் உதவுகின்றது. அதன் விளைவு வேலை வாய்ப்பு விரிவடைந்துள்ளது.  பல ஆயிரம் கைகள் உதவி ஒரு திறைப்பட தயாரிப்புக்கு தேவைப்படும். ஸ்பாட் சிறுவனிலிருந்து பொரியியல் நிபுணன் வரை. பல திறைப்பட தயாரிப்பினால் வேலை ஊதியம் அதிகரிக்கிறது. அதன் விளைவு அரசாங்கத்திற்கு சேர வேண்டிய வரித்தொகை யும் வளர்ந்துள்ளது.

இரண்டாம் பாகம்:
பொழுது போக்கு  மகிழ்விக்கும் சாதனம்.Enthralling
இந்தியாவின் ம்ருதுவான பலம் 
தேசத்தின் பொருளாதாரநிலை, பூகோள இருப்பிட முக்கியத்துவம், தற்காப்பு அளவுகோல், இவைகளுடன் அதன் ம்ருதுவான சக்தி[பலம்] சிறப்பிடம் பெருகிறது. ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் ஒருவர் ஜோஸஃப் நை அவர்கள், ம்ருதுவான சக்தி என்ற தத்துவத்தை உருவாக்கி  அறிமுகப்படுத்தினார். ஒரு தேசம் , தனது கலச்சாரம் , ,தொன்று தொட்டு வழிமுறை, அதன் விளையாட்டு போட்டி திறமை,இலக்கியம் , கலைகள் மூலம் ,சர்வதேச அரங்கில் தனது உருவை பதித்துக் கொள்ளலாம். அதுவே அத்தேசத்தின் ம்ருதுவான பலம் ஆகும்[ஸாஃப்ட் பவர்].
உதாரணம், பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடத்துவது, ’குங்ஹ்பூ"[Kung Fu ] போட்டிகள் நடத்துதல் , அத்தேசத்தின் ம்ருதுவான பலத்தின் அறிகுறி.  ஹாலிவுட்  அமெரிக்காவின் ம்ருதுவான சக்தியின் பிரியா அங்கமாகும். ஹாலிவுட் திறைப்படங்கள்  ரசித்து ,  ரசிகர்கள் அமெரிக்காவை பற்றிய  ஒரு கற்பனை உருவாக்கி கொண்டனர். இதை ப்புரிந்து கொண்டால் பாரதத்தின் ம்ருதுவான பலம்  எங்குள்ளது என்பது தெரியும். இந்தியாவின் வெளியில் இருக்கும் இந்தியர்களால்   பாலிவுட் திறப்படங்களிலிருந்து   பாரதத்தின்  உரு அவரவர்கள் இடத்திலிருந்தே பாரதத்தின்  அமைப்பு  தெரியக்கூடும். பாட்டு கூத்து, உணற்ச்சி பொங்கும் மசாலா திறைப்படங்கள் பலர் பாரதத்திற்கு வெளீயில் வரவேர்க்கின்றனர். சசி தாரூர்  அவர்கள் ந்யூயார்க்கில் கண்ட ஒரு நபரைப்பற்றி ,  தேசிய தொலைகாட்சியில் சொன்னார். அந்த நபரின் ஆஃப்ரிகத் தாய் செனேகல்லிருந்து  சிடிக்கு ச்சென்று வாரம் ஒருமுரை ,தேட்டரில்  ஹிந்தி திரைப்படம் பார்க்க சென்கிறார் என்றார். அவருக்கு ஹிந்தி திறைப்பட பாட்டும்  நாட்டியமும்  பிடிக்குமாம். அவர்களுக்கு ஹிந்தி தெரியாது, கீழே வரும் ஆங்கில மொழி பெயற்சியும் தெரியாது. அப்படியிருந்தும் , அவர்களுக்கு ஒர் அளவு கதை தெரிகிறது. அதை அவர்கள் மிகவும் ரசிக்கின்றனர். ஆகையால்  ஹிந்தி படம் பார்ப்பதே அவர்களுக்கு அவசியம் போலும்.
ஹிந்தி படங்களின் வெளி நாட்டு வரவேர்ப்பு ஒரு தனிப்பட்ட  நிகழ்வல்ல. இன்றும் ரஷ்ஷிய மக்கள் ஹிந்தி ப்படப்பாட்டு " ஆவாரா ஹூன்"  முணுமுக்கின்றனர். ஷம்மி கபூர் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புகழ் பெற்ற
வர், மக்களால் விரும்பப்பட்டவர் ஆவர்.  இருந்தும் ஹிந்தி ப்பட ரசிகர்கள்  வெளி நாடுகளில் , வடிவியலாக வளர்ந்துள்ளனர்.  
திறைப்படங்கள் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகின.  இந்தியா இதன்வாயிலாக  உலக அரசியல் , திட்டம் முதலில் உந்தி முந்த முயலுகிறது. ஆய்வாளர்கள் பலர் பாலிவுட்,  பாரதத்திற்கு நல் பார்வை அளித்திருக்கிறது என்கின்றனர். ஹிந்தி திறைப்படங்களை வெளி நாட்டில் காண்பித்து பாரதத்தின் நோக்கம் எவ்வாரு ப்ரதிபலிக்கமுடிந்ததோ அதையே , நம் கலந்து கட்டிய கலாசாரம், பல மொழிகள்,  பல மதங்கள் கொண்ட பாரதத்தை பற்றி பேசியோ ப்ரசங்கம் செய்தோ  முடியாது. அல்லது பாரதத்தின் , குடியரசு பற்றியோ அல்லது அதன் உயர்ந்த ப்ராசீன பரம்பரை பண்பாட்டை பற்றி குறிப்பிட்டோ சாதித்திருக்க முடியாது.  அதுவே பாரதத்தின் திறைப்படங்கள் மூலம் வெளிநாடுகளில்   எளிதாக சாதிக்க முடிந்தது.   

கவர்ச்சியால் கட்டுப்படுத்துதல்
பாகிஸ்தானின்  காதல், வெருப்பை தெளிவாக்கி விளக்குதல்:-
இந்திய திரைப்படங்கள் வெளிநாடுகளில் பலத்த வணிக வளர்ச்சியை கண்டுள்ளது , அதைவிட அவை பாரத கலாசாரத்தை ப்பரப்பும் வகையில் உள்ளதென்பதை முக்கியமாக நாம் அறிய வேண்டும். சில ஆய்வாளர்கள் பாகிஸ்தானை ,ம்ருதுவான சக்தியில் பாரதத்துடன் போட்டியிடவேண்டாம் என்று திட்டவட்டமாக,  அறிவுறை கூறியுள்ளார். அவர் பாரதம் சீனாவைவிட  அந்த விஷயத்தில் ஒருபடி மேலே உள்ளதென்றார். ஆனாலும் பாரத அரசாங்கம் அவ்வித ம்ருதுவான பலத்திற்கு ஒரு  திட்டமான வழி வகுக்கவில்லை. பாரதத்தின்  ம்ருதுவான பலம் ,பாலிவுட் திறப்படங்களிலிருந்து உற்பத்தியாகிறது. ஆமீர், சல்மான், ஷாஹ்ருக் கான்கள் வேறு மதமாக இருப்பினும்,   பாரதத்தில் மிகவும் பெயர் போன்றவர்கள். அவர்கள் முஸ்லிம் [இஸ்லாமியர்கள்] ,அதுவே  பாரதத்தில் மத வேறுபாடு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த போதனையையே  இந்திய திறைப்படங்கள் வெளிநாடுகளில் எளிதாகவும் அழுத்தமாக பரப்புகிறது. ஹிந்தி திரறைப்பட கதைகள் பெரும்பாலும் இந்திய கலாசாரம், குடும்ப வழிமுறைகள், தகுதி ,மதிப்பு, சமுதாயப்பண்பு, மரபு சார்ந்த இசை, திருவிழாக்கள் , ஆடைஉடை முதலியன அங்கமாக கொண்டிருக்கும். அதுவே  வெளிநாட்டவரை ஈர்க்கின்றன. வெளிநாட்டு ரசிகர்கள் இந்திய திறைப்பட வண்ணத்தைக் கண்டே வியந்துள்ளனர்.
   
ஒரு காலத்தில் பாரதம் பாம்பாட்டி ,  செப்பிடு வித்தை நாடு என்று பெயர் பெற்றிருந்தது.  கலை திறைப்படம் என்று வெளி வந்தது , பாரதத்தின் வருமையை காட்டியது. அதுவும் வேண்டுமென்றே வெளியிட்டு வீணாக்கியதோ?. அது பாரதத்திற்கு நல்ல பாதிப்பை தரவில்லை. பாரதம் இன்றும் வருமையிலிருந்து வெளிவரவில்லைதான். ஆனால் பாரதத்தின் வருமைக்கு அப்பால் , பல்வெரு  பொருள்கள்  தர இயலும் என்பதை உலகம் அறியும். பல அறிவாளிகள், இத்தகைய விளக்கம் பாரதத்தின் நலத்திற்கு அல்ல என்றும்  விமரிசத்தனர். அதுவே  இதை ஒரு  நடவடிக்கையாக மேற்கொண்டு அதையும் அரசியல் ,  வழி முறை   திட்டம் வகிக்க பாரதத்தின் ஒரு வடிவத்தை அமைக்க  இந்திய திறை ப்படங்கள் பங்கு பெரும்பாலும் உண்டு.

பாகிஸ்தானில் இந்திய இசைக்கும் , திறைப்படத்திற்கும் பலத்த எதிர்ப்பு உள்ளது. பாகிஸ்தான் , பாரதத்தை,  பாகிஸ்தானின் கலாசாரம் பாரதத்தின் திறைப்படங்கள் வாயிலாக  அதன் கலாசாரத்தை உலகத்தில்  பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளது. சிலர்  இந்திய திறைப்படங்கள் தேட்டரில் காண்பிக்க தடுக்கும் வேலையிலேயே காலையிலிருந்து மாலை வரை ஈடுபட்டுள்ளனர். இந்திய திறைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியிட விடாத போதிலும் , பாகிஸ்தானில், டீ.வீடீ வாயிலாக மரறைமுகமாக, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று  கொண்டுதான் இருக்கின்றன. பாகிஸ்தானி ரசிகர்கள் , இல்லத்தில் இலவசமாக, சுகமாக கண்டு களிப்பது இயல்பு. பாரத திறைப்படங்களில் , பாகிஸ்தானின் நடிகர்கள், பாடகர், பாடகி, இசை அமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றன. சில விதண்டாவாதிகள், திவிரவாதிகள் , அவ்வாரு வாய்ப்பளித்ததற்கு , ஏதோ சில்லரை வாய்ப்பு அளித்து பாகிஸ்தான் கலைஞர்களின் வருங்காலத்தை  கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். பாகிஸ்தானின் அலி ஜாஃபர் என்ற நடிகர் இந்திய திறைப்படத்தில் கதா நாயகனாக  நடித்தார். பாகிஸ்தானின் கதா நாயகிகள் , ஜேபா புக்தார், மீரா, வீணாமாலிக், மோனாலிஸா இந்திய ஹிந்தி திறைப்படங்களில் முக்கிய கதா பாத்திரம் பெற்றனர். பாகிஸ்தானிலிருந்து வரும் புதிய நடிகர்களோ இந்திய ஹிந்தி படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு  , அவர்கள் வாழ்க்கை கனவு நிஜமானது போலும் ,  என்கின்றனர். பாகிஸ்தானிய ரசிகர்களுக்கு ஹிந்தி படங்களில் அத்தேசத்து ந்டிகர்களுக்கு  கிடைக்கும் வாய்ப்பை நினைத்தே பெருமிதம் அடைகின்றனர். 

தீவிர வாதிகள் , எவ்வளவுதான் பார்தத்தை எதிர்த்து  பகைமை வளர்க்க முயற்சித்த்தாலும் , தொப்புள் கொடி போன்ற அந்த பாகிஸ்தானிய ரசிகர்களுக்கும் , இந்திய ஹிந்தி திறைப்பட த்திற்கும் உள்ள தொடர்பை அறுக்க முடியாது என்று அவர்களும் உணர்ந்தனர். இதில் தீவிரவாதிகள் தோல்வி கண்டனர். என்ன இருந்தாலும் பாகிஸ்தானிய கலசாரம் ,பாரத கலாசாரத்திலும்  பல ஒற்றுமையே உள்ளன என்ற  உண்மை பாகிஸ்தானிய ரசிகர்கள் அறிவர். ஆகையால் இந்த தீவிரவாதிகள் , பாரதத்திற்கு எதிர்,  பகைமை வளர்ப்பு செயல் , முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்ஜுகின்றனர். அதுவே  அவர்களுக்கு முடிவும்  காணும் என்ற பயமும் உள்ளது. இதுவே ஒரு ஆர்வத்தை உண்டு பன்ணும் விஷயமில்லையா, அதாவது , பாரத திறைப்படம் எவ்வாரு  தீவிரவாதிகளுக்கும்  ஒரு சவாலாக இருக்கும் என்பது. 

Enthralling:ஆர்வமூட்டும் பரபரப்பானது
ஹிந்தி திரைப்படஙளினால் பாதிப்பும்  அதன் சம்பந்தப்பட்ட விளைவுகளும்:
ஒருகால் திறைப்பட  தயாரிப்பாளர்களுக்கே , அவர்கள் படம் சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கும் என்று தெறியாது. சில வருடம் முன் ந்யூஜிலாண்ட் ப்ரதமர் ஹெலன் க்ளார்க் மும்பை வருகை தந்தார்.அவர்கள் ஹிந்தி பட இயக்குனர், உர்பத்தியாளர் ஸ்ரீ ராகேஷ் ரோஷன் அவர்களை கௌரவிக்க வந்தார். 2000 ஆம் ஆண்டு ராகேஷ் ரோஷன் அவர்கள்  வெளியிட்ட  திறைப்படம் " கஹோனா ப்யார் ஹை" பல சாதனைகள்  புரிந்து ஓடியது.அது அவர் மகன் ஹ்ரிதிக்  ரோஷன் நடித்த முதல் படம்  ஆகும். அது ந்யூஜீலாண்டில் படம் பிடிக்கப்பட்டது. அந்த ப்படத்தை பார்த்த பின்னர்,ந்யூஜீலாண்டின் சுற்றுலா வணிகம் பல  மடங்கு பெருகியது. ஆகையால் அத்தேசத்து ப்ரதமர் ராகேஷ் ரோஷனை கௌரவிக்க வந்திருந்தார்.
இந்திய ஹிந்தி  திறைப்பட  தயாரிப்பாளர்களை  படப்பிடிப்பிற்காக  ஊக்குவிக்க,  ஐரோப்பா, லாடின் அமெரிக்கா, பல ஆசியா நாடுகள் இடையே பலத்த போட்டி இருக்கிறது. சில நாட்கள்  முன் அஹ்ப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்ஜாயீ  பாரதம் வர்கை தந்து , ஹிந்தி  திறைப்பட பிடிப்பு அவர்தேசத்தில் செய்ய வரவேர்ப்பு வேண்டுதல் விடுத்தார்.  பல ஹிந்தி நடிகர்கள்  அஃப்கானிஸ்தானிலும் மக்களால் விரும்பப்பட்டவர்  ஆவர். அவர்கள் அஹ்ப்கானிஸ்தானிற்கு சாதகமாக இருக்கும் என்று.  ஹிந்தி படம் அங்கு வரவேற்றால், அவர்கலள் தேசத்து சுற்றுலா இலாக்கா பயனடையும் என்ற  நம்பிக்கையே.

பல அரசியல் தலைவர்கள், உயர் பதவியினர்,  உத்யோகஸ்தர்கள்  பாலிவுட் நடிகர்களை சந்திக்க வருகின்றனர். அதற்கு காரணம் ஹிந்தி திறைப்படம் அவரவர்கள் தேசத்தில் படம்பிடித்தால் அவர்கள் தேசத்து சுற்றுலா வணிகம் வளற்ச்சி பெரும் என்பதற்கே. ஆகையால் பல தேசங்கள் இந்த திறைப்பட  தொழிலிர்க்கு சலுகைகளும் அளித்து வருகின்றனர். ஃபிஜி  தீவு அவர்கள் நாட்டில் படம் பிடிக்க 47% வரி விலக்கு அறிவித்திருக்கிறது. "3G" , வார்ணிங்" என்ற   படங்கள் ஃபிஜி தீவில் படமெடுக்கப்பட்டன. "ஜெர்மன் ஃபெடரல்  ஃபில்ம் ஃபண்ட்" இருவது சதவிகிதம் தள்ளுபடி அவர் ஸ்டூடியோவில் விசேஷ விளைவு [ஸ்பெஷல் இஃபெக்ட்] செய்ய அளிக்கின்றது. 


தென் ஆஹ்ப்ரிகாவும்,  ஆஸ்த்ரேலியாவுன் முறையே 30%, 40% தள்ளுபடி அவர்களது தேசத்தில் படம் பிடித்தால்  அளிக்கின்றனர். ஹ்ரிதிக்,ஹ்பர்ஹான் அக்தர், அபய் தேவுல் சேர்ந்த படம் " ஜிந்தகீ நா மிலேகீ தோபாரா"  ஸ்பெயினில்  எடுக்காப்பட்ட படம். அப்படத்தின் வெற்றிவெளியீடு பின் ஸ்பெயினின் சுற்றுலா இலாகா 65% வளர்ச்சி கண்டது. ஆகையால் , அவர்கள் தேசத்தில் இந்திய  ஹிந்தி படம் எடுக்க , வெளி நாடுகள் இடையே ஏகப் போட்டியாக உள்ளது. ஆகையால் எவ்வளவிற்க்கு சலுகை கிடைக்கின்றதோ அவ்வளவிற்கு படத்தின் விலை குறைய சாதகமாக அமையும். அதன் விளைவு ஹாலிவுட் படங்களுத்டன் ஒப்பிடும் வகையில் இந்திய படமும் தரமும் , மதிப்பும் உயரும். இந்திய அரசாங்கம் ப்ரிடன் , ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இங்லாண்ட் , இடாலி , ஸ்பெயின் , போலாண்ட், ப்ராஜில் முதலிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினால் இந்திய திறைப்பட தயாரிப்பாளர்களுக்கு சுலபமாக வெளிநாட்டு முதலீடு பெறமுடிகிறது.வெளிநாட்டு முதலீடும் பல திறைப்படங்களுக்கு கிடைக்கின்றது. ஆகையால் இந்த இந்திய திறைப்பட  வணிகம் இந்தியாவிற்கு , வெளி நாடுகளுக்கும் சாதகமாகவே உள்ளது.

பாகம் 3 
வித்தியாசமானது, விசித்திரமானது
அடித்து ஒடு மாலிவுட்டிற்கு

இந்திய திறைப்பட ,வணிகம் வளர்கின்றது. சுருக்குமாக  திறைப்படங்களே  ஒரு கலையாக திகழ்கிறது. திறைப்பட  உற்பத்தியின் வேகம்  நல்ல தரமான படத்திற்கு  பாதிப்பாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு  பதில் ,  சில இளைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சில தத்துவம் கொண்ட படத்தின் வாயிலாக  பதில் அளித்தும் உள்ளனர்.அனுராக கஷ்யப் , திபாகர் பேனர்ஜீ, திக்மான்ஷூ தூலியா, நீரஜ் பாண்டே, விக்ரமாதித்ய மோட்வானி, போன்ற இயக்குனர்கள் , இந்திய திறைப்படங்களுக்கு ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கின்றனர். அவர்கள்  நம் கற்ப்பனைக்கு அப்பாற்பட்ட ,எண்ணத்தையும் கதையையும் கையாளுகின்றனர். இந்திய  திறைப்படங்களுக்கு  பல விதம், பலரகம் , பலவகை  அவசியம். இருந்தும் , ஒரு மெலிதான கதையை கொண்ட சில படங்களும் , வ்யாபார தந்திரத்தினால் ,பல கோடி  ரூபாய் சம்பாதிதுள்ளன என்பதை சற்று வருத்தத்துடன் தெரிவிக்க நேரிடுகிறது.  

ஒரு திறைப்படம் பல கோடி ரூபாய் செலவில் வெளி வருகின்றது. ஒரு வெள்ளியன்று வெளி வந்தால் மூன்று நாடகளில் பல கோடி ரூபாய் வருமானம்  இருக்கிறது. தன் தரக்குரைவு பற்றி  தகவல் வரும் முன் பல லக்ஷம் ரசிகர்கள்  பார்த்திருப்பார்கள், அதுவே  தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய தொகை தந்துவிடும். இத்தகைய அடித்து ஓடும் மரபு,   இந்திய சினிமா தொழிலில் சகஜம்.  தரக்குறைவான படங்களின் வெற்றி , ரசிகர்களின் ருசியா அல்லது  ,சாமர்த்தியமான  வ்யாபார தந்திரமா என்ரறு  சற்று  சிந்திக்க வேண்டிய விஷயம் ஆகும்.  சில  வருடம் முன் , திறைப்பட தயாரிப்பாளர்கள் , விளம்பரத்திற்கென்றே சில சதவிகிதம்  பண ஒதுக்கீடு செய்து வந்தனர். தற்போது  வணிக த்துறை  பலத்த முன்னேற்றத்தினால் , ஒரு தவரான விளம்பரத்தைவிட  தரக்குறைவு படத்தையும் சாமர்த்தியமான வ்யாபர தந்திரத்தினால் , வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது.

 சில சமயம் வ்யாபார பொருளாதாரதிட்டம் , திறைப்படத்தின் திட்டத்தைவிட அதிகமாக இருக்கும். வ்யாபார பொருளதாரத் திட்டம் திறைப்பட அளவுகோலைவிட   பெறியது என்பதை திறப்பட தயாரிப்பாளர்கள் சாதித்துள்ளனர்.’ விக்கி டோனர் " என்ற  படம் ஐந்து கோடியில் முடிக்கப்பட்டது.அதன் வ்யாபார செலவு ஏழு கோடியாக இருந்தது. இரண்டு  கோடி அதிகமாகவே இருந்தது. அதுவே நஷ்டமானதாக அமயவில்லை. அது பாக்ஸ் ஆஃபீஸிலோ 46 கோடி சம்பாதித்தது. அந்த படத்தில் பெறிய புகழ் பெற்ற  நடிகர் இல்லாத போதும்  , அப்படம் சாதனையே செய்தது எனலாம். அதுவே  படம் நல்ல தர மாக  இருந்தால்  அத்துடன் , வ்யாபார தந்திர நல்ல முயற்சியும் மெச்சத்தக்கதாகும்.    

நாஸீருத்தின் ஷா ப்ரபல  இந்தி நடிகர் கருத்து,திறைப்பட தயாரிப்பாளர்கள் பொருளாதாரத் திட்டத்தை ஆனாவசியாமாக உயர்த்தியுள்ளனர் என்று. அவரது விமரிசனத்தை புரக்கணிக்க முடியாது ஏனெனில் ஒரு பாட்டின் படப்பிடிப்பு செலவு ஏரக்குறைய ஐந்து கோடியாகிரது. இச்சூழ் நிலையில் ,எவர் திறைப்ப்டங்களை ஒரு ஆக்கச் சம்பந்தமான சாதனமாக கருதுவோர் , குறைந்த  பண அளவில்  தயாரிக்க வேண்டும் என்று நாஜீருத்தின் ஆலோசனை கூறுகிறார். அவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த  அவரது படம் " வெட்னெஸ்டே"[புதன்கிழமை]  பாக்ஸ் அஃபீஸில் வெற்றிகரமாக  ஒடிற்று. அந்த ப்படம் வெரும் ஐம்பது லக்ஷத்தினுள் தயரிக்கப்பட்டது என்பது நாசீர் ஷாவின்  கருத்து.இந்த  போதனையை , வளர்ந்து வரும் இளைய தலைமுறை திறைப்பட  தயாரிப்பாளர்கள் ஏற்ப்பது கடினம், ஆனால்  இப்போது மாலிவுட் என்ற திறைப்பட  உற்பத்தி நிருவனம் விரைவில் வரவிருக்கிறது. அதில் சில ஆயிர ரூபாயில் திரைப்படம் தயாரிக்க முடியுமாம். பலர் ரமேஷ் சிப்பி அவர்களின் "ஷோலே" படத்தைப் போல் படம் எடுக்க முயன்றனர். ஸிப்பி அவர்களாலேயெ மீண்டும் அது போன்ற படம் எடுக்க முடியவில்லை. 2000ம் ஆண்டு " மாலேகாவ் கி  ஷோலே " என்ற படம் ஒன்று வெளிவந்தது, முழுவதும் மாலேகாவில் படமெடுக்கப்பட்டது. அது தயாரிப்பாளர்களுக்கு  ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே செலவாயிற்று .அப்படம் பாக்ஸ் அஃபீஸில் ருபாய் இரண்டரை லக்ஷம் செய்தது, அதுவும் மாலேகாவிலேயே. அதன் விளைவு மாலிவுட் என்ற நிருவனம் நிலை கொண்டது.

"கஜானா", தேஷ் கி புகார்", தீஸ்ரா பஹர்" , முதலியன, இயக்கிய சித்திக்கி சொல்கிறார்,"  நான் இப்படங்களை மூன்று மிகவும் வெற்றிகரமான திறைப்படங்களிலிருந்தும் ஊக்குவிக்கப்பட்டேன். மாலிவுட்  திறைப்பட பாடல்கள் , பாலிவுட் படப்பாட்டு போல் இருக்காது.மாலிவுட்  தனது  பாட்தை  அமைத்து அதற்கு தனிப்பட்ட தேவையான நாட்டியத்தை அமைக்கின்றது. மாலிவுட்  திறைப்படம் உள்தேச  உள்ளூர் அங்காடியில் செல்லும். அவை  சில  கேளிக்கை , விழா, கண் காட்சி சாலை  போன்ற இடத்தில் காட்டப்படுகின்றன. அதையும் மக்கள் ரசிக்கின்றனர். பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ப கோடி ரூபாய்  ஒரு தரமற்ற  திறைப்படங்களுக்கும்  பெருகின்றனர். அதையே  ரசிகர்கள் நடுவில் திணிக்கின்றனர். அதே சமயம் மாலிவுட் திறைப்படங்கள் சில ஆயிரம் ரூபாய் செலவில் பாக்ஸ் ஆஃபீஸில் பல  லக்ஷ ரூபாய் பெற்று பல ஏழைகளுக்கு ஒரு பொழுது போக்கு சாதனமகிவிட்டது.மாலிவுட்  பாரத திறைப்பட சீர் காணும் குழுவின் கீழ் திறைப்படம் உற்பத்திசெய்ய மாலிவுட்டும் முயற்சி செய்து வருகின்றது. இவர்களும் திறைப்படத்தில்  தகாத பாகம் வராது மிக ஜாக்கிறதையாக இயங்கி வருகின்றனர். மாலிவுட மட்டும் அவ்வாரு செயல்படவில்லை.

பலர் மாலிவுட் திறைப்படங்களை வரவேற்கின்றனர்.. அதேசமயம் மாலேகாவில் தயாரிக்கப்பட்ட " மாலேகாவ்கா சூபர் ஹீரோ" என்ற படம் , லாஸ் என்ஜல்சில்  இந்திய திறைப்பட  திருவிழாவில் காட்டப்பட்டது. , அதுவே  ,இத்தாலியின் ரோமிலூம் ஏசியாடிகா திறைப்பட  விழாவிலும் காட்டப்பட்டது. ஆம் எவர் மாலிவுட்டிடம் தொடர்புள்ளவர்களோ அவர்கள் சூபர்மென் ஆவார்கள். திறைப்பட தயாரிப்பை பற்றி சிறிதே அறிந்தவர்கள், சற்றே தொடர்பு கொண்டவர்கள் கூட  திறைப்பட  தயாரிப்பின் சவாலும் , அதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவைப்படும் என்பதை அறிவர். இச்சூழ் நிலையில் , வாயிற்கும் கைக்கும் பற்றாத நிலையில் இந்த மாலிவுட் மக்கள் சமுதாயத்திற்கு ஏற்ப்ப திறைப்படம் அளிக்கின்றனர். அவர்கள் அவர் ஆவலை தீற்த்துக்கொள்ளவே  உழைக்கின்றனர். இவர்களை "சூபர் மேன்" என்று  அழைப்பதே பொருந்தும். 

கட்டுறை முற்றிற்று
உத்தரவாதக்காரார்: ப்ரஸாத் சௌபள்.
  

Friday 14 August 2015

இந்திய ராணுவம் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகளை ஒழித்தது,அருகாமை தேசங்களுக்கு எச்சரிக்கை சவால்

இந்திய ராணுவம்  வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகளை ஒழித்தது,அருகாமை தேசங்களுக்கு எச்சரிக்கை சவால் 
ஆம் நமது பாரத  அரசாங்கத்தின் "கிழக்கே பார்"கொள்கைக்கு சற்றே ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியிருக்கும் அதுவே " கிழக்கே செய்ல்படு" என்று மாறியது போலும். ஆம் கடந்த ஐந்து  தினங்கள் அதன் சுருக்கமான விளக்கம் ஆகும். நமது  பாரத ப்ரதமர் பாங்க்லாதேஷ் சென்று சிறப்பான மிக நாட்களாக காத்திருந்த  எல்லைப்பகுதி ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அதுவே ஒரு 41 ஆண்டு  பிறகு கைகூடியது. 


Wednesday 8 April 2015

"விஞானமும் , வேதாந்தமும்[சமயம்,மதம் ] ஒரே கதையையே [தத்துவத்தை] சொல்லும் வெவ்வேரு மொழிகள்". ----டேன் ப்ரவுன் கருத்து.


கடந்த வருடம் நான் படித்து வந்த கட்டுரைகள் பட்டியலில் டேன் ப்ரவுன் அவர்கள் எழுதிய "டிஜிடல் ஃபோர்ட்ரெஸ்" , டிசெப்ஷன் பாயிண்ட்இரண்டும் உண்டு. அவை  எனக்கு மிகவும்  பிடித்திருந்தன, ஆகையால் ,அதன் எழுத்தாளரான டேன்ப்ரவுனையும் புகழ்ந்து எனது ப்ளாக்கில் இரு கட்டுரைகள் போஸ்ட் செய்திருந்தேன்


உங்களுக்கும் டேன்ப்ரவுன் பிடித்தமான ஒருவராக இருந்தால், இந்தவாரம் நீங்கள் பாரதத்தில் [இந்தியாவில்] இருந்திருந்தால் ஒரு கிளர்ச்சியூட்டும் வாரமாக அனுபவித்திருக்கக்கூடும். ப்ரபல அமெரிக்கப்பத்திரிகையான "டைம்ஸ் மெகஜினால்" அறிவிக்கப்பட்ட 100 உலகில் மிகுந்த செல்வாக்குள்ள நபர்களில் ஒருவரான டேன்ப்ரவுன் டெல்ஹியில் ஒரு வருடாந்திர இலக்கிய விழாவில் கலந்து கொண்டு , பிறகு மும்பையில் நேஷனல் சென்டர் ஃபார் பர்ஃபார்மின்க் ஆர்ட்ஸ் [என்.சீ.பீ.]   வந்திருந்தார். அவர் அவரது  காலம் கடந்த பாரத சுற்றுலா வில்  நம் மக்களினால் கிடைத்த   வரவேற்ப்பு  , அன்பு ஆதரவு கண்டு ," நான் என் வீட்டிற்கே வந்திருக்கிறேன்" என்றார்.