Saturday 31 August 2013

நந்தாமாதா ஆங்கிலம் கற்க எழுதிய புத்தகங்கள் வெளியீடு விழாவில் நம் பரம பூஜ்ய பாப்பு அவர்கள் செய்த ப்ரசங்கம்

நந்தாமாதா  ஆங்கிலம் கற்க எழுதிய புத்தகங்கள் வெளியீடு விழாவில் நம் பரம பூஜ்ய பாப்பு அவர்கள் செய்த ப்ரசங்கம்.

 Speech of Sadguru Bapu at the Launch of English Learning book authored by Nandai

நேற்று நான் நந்தா மாதா அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில மொழி கற்க , வளமடைய முதல் தொகுப்பு புத்தகங்கள் வெளியீடு விழாவில் நமது ஸத்குரு பரம பூஜ்ய பாப்பு செய்த ப்ரசங்கத்தை எனது ப்ளாகில் ஏற்றி வைத்திருக்கிறேன்[அப்லோட், upload செய்திருக்கிறேன்].இந்த "ஸாயீ ஃபார் மீ" [ஸாயீ எனக்காக] என்ற பெயரில் வெளியாகிய  தொகுப்பு ஏழு புத்தகங்களும்,ஒரு பயிற்சி புத்தகமும்  கொண்டது . இவை "ஹாப்பி இங்க்லீஷ் கதைகள்" [ஆங்கில ஆனந்த கதைகள்] என்ற தொடரின் ஓர் அங்கமாகும்.
Wednesday 28 August 2013

ஆங்கில மொழி வளர்ச்சிபெற[செம்மையாக்க] நந்தா மாதா எழுதிய, புத்தக வெளியீடு விழா".

ஆங்கில மொழி வளர்ச்சிபெற[செம்மையாக்க]
நந்தா மாதா எழுதிய,  புத்தக வெளியீடு விழா".

Launch of Books authored by Nandai to Improve English


உங்கள் அனைவருக்கும் நேற்று மிகவும் விமரிசையாக, கோலாகலமாக நம் பரம பூஜ்ய பாப்பு, நந்தாமாதா ,ஸுசித்தாதா முன் நிலையில்  "ஸாயீ ஃபார் மீ"[ஸாயீ எனக்காக] என்ற தலைப்பில் "ஹாப்பீ இங்க்லீஷ் ஸ்டோரீஸ்"[ ஆனந்த ஆங்கிலக் கதைகள்] என்ற தொடரிலிருந்து முதல் கணம் அல்லது  தொகுப்பு புத்தகங்கள் வெளியீடு விழா நடந்தேறியது என்பதறிவீர்கள், என்று நான் உறுதி. ஆத்மபல காரியதரிசியும் ,  மூத்தவரும்,  எண்பது வயதுக்கும் மேர்ப்பட்ட  பெரியவருமான ஆசிரியை "ஸ்ரீமதி துர்காவீரா வாக்" அவர்களை கௌரவிக்கும் வகையில் ,  அவர்கள் திருக்கரங்களினால்  இப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.இந்த புத்தகங்கள், ஆங்கில மொழி பயில ஆரம்பிப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் நன்கு தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்ற நோக்கத்தை கொண்டது.
 

இந்த புத்தக வெளியீடு விழாவுடன் "புக்ஷணரி பப்ளிகேஷன்ஸ்" [புக்ஷணரி ப்ரசுரம்] ப்ரசுர உலகத்தில் மனதைக்கவர்ந்த  ப்ரவேசம் செய்திருக்கின்றது.புக்ஷணரி பல தலைமுறைகளுக்கும்  ,விஷயங்களுக்கும் தரமான இலக்கியங்கள்  தர , வழங்க ஆயத்தமாய் உள்ளது, அவை புத்தகமாகமட்டும் அல்லாமல் சி.டீ, வீ.சீ.டீ, கணிப்பொறிக்கு ஏற்ற ,ஈ-புத்தகங்கள் தற்காலிக தேவைக்கேற்ப்ப கிடைக்கும் நவீன ப்ரசுர வசதிகளும் அளிக்க தயாராக உள்ளது.

பாப்பு தன் ராமராஜ்யம் 2025 என்ற கொரிக்கையை  அவரது  மே 6, 2010 ஆம் ஆண்டு ப்ரசங்கத்தில்  தெளிவு படுத்தி விவரிக்கும் போது பல ஆன்மீக தத்துவங்கள்,செயல்முறை கூறு கோணங்கள் ,தனி  நபருக்குறிய, குடும்பத்திற்குரிய, சமூகத்திற்குறிய, தேசத்திற்குறிய, ஏன் இந்த உலகத்திற்குறிய செயல்படுத்தவேண்டிய பட்டியல் அளித்தார். அதில் அவர் குறிப்பாக ஆங்கிலமொழியின்  தொடர்பு கொள்ளும் வழி,முறையின் முக்கிய அங்கமாக இருப்பதை அழுத்தமாக ச் சொன்னார்.

இன்று ஆங்கிலம் உலகமெங்கும் தொடர்புகொள்ள முக்கியாமான மொழியாக நிரந்தரமாகி விட்டது, எழுத்திலும் சரி , உறையாடல் வார்த்தைகளாகவும் அப்படியே.
இன்றைய காலகட்டத்தில் ,தொடர்பு கொள்ளுதல்  வாணிகம் வர்த்தகம் செய்ய ஒரு திறமான  மிக அவசியமான கருவியாகும், ஆகையால் ஆங்கிலத்தை அனைவரும் ஆதரிக்க அவசியம் நேரிடும். இன்று, ஆங்கில்த்தை  தவிர்த்த உலகப்ப்குதியிலும் , ஆங்கிலத்தை அங்கீகாரம் செய்ய நேரிட்டதால் , செய்தும் வருகின்றனர்.
ஆங்கிலத்தில் வல்லமை அன்றாடத் தேவையே, இல்லாவிடில் நமக்கு எந்த தகுதியோ, பட்டமோ, பதவியோ இருந்தாலும் , நாம் சமூகத்தில் தேவையற்றவர்களாகிவிடுவோம்.  இன்று சீனாவைவிட  நம்  பாரத தேசம் கணிப்பொறி [ப்ரோக்ராம், program] இயக்கும் நிரல் சம்பந்தப்பட்ட ஆற்றலில் முன்னிலையில் இருக்கக் காரணம், நம் ஆள்வலிமை வளம்[manpower resources] சீனாவைவிட அதிக விலைமதிப்புள்ளதாக இருப்பினும், நமது தேசத்து நிரல் அமைப்பவர்கள் [programmers]  சீனர்களைவிட ஆங்கிலத்தில் தேற்சிபெற்றவர்கள் என்பதால்தான், அதேசமயம் சீனர்கள் ஆங்கிலத்தில் வல்லவர்கள் அல்லர்.

2005 ஆம் ஆண்டு ப்ரதயக்ஷ என்ற அன்றாட பத்திரிகை வெளியீட்டின் போது ,நம்மை சுற்றி நடக்கும் மெய்மை, உண்மைகளைப்பற்றி   அறியாது இருத்தல் இருட்டை ப்போன்றதாகும், இந்த இருட்டு ஏமாற்றத்தை அளிக்கும். நம்மை, கசக்கிப்பிழிந்து  நாசமாக்கும்  என்று பாப்பு திட்டவட்டமாக கூறினார். . ஆகையால் அனைத்து ஸ்ரத்தாவன்களின்[பக்தர்களின்] நலனுக்காக , நமது நந்தா மாதா [டாக். ஸ்ரீமதி நந்தா அநிருத்த ஜோஷி ] அவர்கள் இந்த ப்ரசுரத்தின்  தொடர் புத்தகங்களை   நாம் லாபமடைய ,முன்னேற , ஆங்கில மொழி வளமாக்க வெளியிட்டிருக்கின்றார்கள். புத்தகங்கள் ,ஆங்கிலம்  கற்க  ஆரம்பிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளவும் அதை  செயல்படுத்தவும் அமைந்திருக்கின்றன. இப்புத்தகங்கள் ,ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களுக்கும் பல உதவி அளிக்கவல்லது.

இப்புத்தகங்கள் நமது குருக்ஷேத்ரத்திலிருந்து உறிய விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம். இவை ஸ்ரீ ஆஞ்சனேயா பப்ளிகேஷன்ஸ்லிருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள வெப் சைட்[www.aanjaneyapaublications.com]

" அடியேன் அம்பக்ஞ ஆதிமாதே"

"अंबञॊस्मी आदिमातॆ"


Friday 23 August 2013

நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்]ஹரிஓம்

நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்]

  Publication of English language learning guides authored by Nandai

ஆத்மபலம் வகுப்பெடுக்கும் சமயம் நந்தா மாதா அவர்கள்
மே மாதம் 6,2010 நாம் ஸ்ரத்தாவான்கள் அனைவரும் நமது அன்பார்ந்த பரம பூஜ்ய அநிருத்த பாப்பு அவர்கள் "ராமராஜ்யம் 2025" என்ற தனது மன உரு எண்ணத்தின் [தத்துவத்தின்] அடிப்படையில் பேசியதைக்க்கேட்டோம். இந்த ப்ரசங்கத்தில் பாப்பு பல முக்கியமான  விஷயங்களை ப்பற்றி பல  அரிக்கைகள் தந்தார். அதில் ஒரு முக்கியமான விஷயம் " தடையில்லாது { கஷ்டப்படாது} ஆங்கில மொழி பேச கற்றுக்கொள்ளுதல். பாப்பு சொன்னது இவ்வாரு ," இன்றைக்கு எல்லாவித வணிகம் ,வர்த்தகம் அனைத்தும் ஆங்கில மொழியிலேயெ நடைபெருகின்றன என்பதறிவோம். தாய்மொழியோ சொல்லாமலேயெ அனைவருக்கும் பெருமைக்குறிய விழயம்தான். ஆனால் ஒருவனின்  முன்னேற்றத்திற்கு ஒருவன் அவனது ஆங்கில மொழியை வளர்த்துக்கொள்வது இன்றைய அவசியம் ஆகிவிட்டது. நாம் இந்த  போட்டா போட்டியுள்ள உலகில் பிழைத்திருக்க , நாம் ஆங்கில மொழியை நன்கு கற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். ஆகையினால் " அநிருத்தாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் லாங்குவேஜ் அண்ட் லிங்க்விஸ்டிக்" என்ற நிலயம் [அதாவது "அநிருத்தரின் மொழி, மொழிநடை, மொழி ஆராய்சி நிலயம்] துவக்க்ப்படுகின்றது.
அவர் மீண்டும் சொன்னார். " பலர் தமது தாய்மொழியில் முதலில் சிந்தித்துவிட்டு பிறகு ஆங்கிலத்தில் பேச முயல்கிறார்கள்.  அது சரியல்ல. அது நமது எண்ணத்திற்கும் , சொல்வதர்கும் இடையே இடைவெளி அமைக்கும். இந்த இடைவெளி பேசும் ப்ரவாஹத்தையும், மொழியின்  அழகையும் அமைப்பையும் பாதிக்கும். மொழி பாய்ச்சல் எந்தவித இடையூரு இல்லாது இருக்கவேண்டும்.

த்துடன் பாப்பு ஸௌ ஸ்வப்னகந்தவீரா அநிருத்த ஜோஷி [ அநிருத்த பாப்புவின் தர்ம பத்னியான ] நம் நந்தா மாதா அவர்கள் இந்த நிலயத்தின் முக்கிய அதிகாரியாக பொறுப்பேர்ப்பார் என்று அறிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக நந்தா மாதா மகளிர்க்காக ஆத்ம்பல வகுப்பு எடுத்து வருகிறார் என்றும் அதில் " ஆங்கில மொழி கற்பது" அதில் ஒரு முக்கிய  அங்கமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில  ஆத்மபல  வகுப்பை புதிதாக ச்சேரும் மகளிர்களுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் அறியாதவர்கள். இவர்கள் ஆறுமாத காலத்திற்க்குள் ஒரு அளவுக்கு தினசரி வாழ்க்கைக்கு தேவையான  ஆங்கில மொழி பேசவும் எழுதவும் முடிகிறது. இவர்கள் சுயநம்பிக்கையுடன் ஆங்கில மொழி சிறு நாடகங்களில் பங்கேர்கின்றனர். இந்த ஆங்கில மொழி  சிறு நாடகங்களும்     ,ஆங்கில மொழி கற்கும் , முடிவில் ஒரு பாகமாகும்.
இதையே அடிப்படையில் கொண்டு ,ஆங்கில மொழி கற்க உதவும் நந்தாமாதா அவர்களாலேயே எழுதப்பட்ட வெகுவிறவில் சில வழிகாட்டு புத்தகங்கள்  தொகுப்புகளாக ப்ரசுரமாகவிருக்கின்றன. இந்த புத்தகங்கள் ஆங்கிலம் கற்கவிரும்பும் அனைத்து ஸ்ரத்தாவான்களுக்கும் ,  ஆங்கிலம் கற்க  எளிதான  உபயோகமான வழி காட்டும் . இப்புத்தகங்கள் படிப்பதற்கும், உபயோகிப்பதற்கும்  அதை பாற்ப்பதைப்போல்  ஒரு தனிப்பட்ட  ஆனந்த அனுபவங்களைத்  தரும். இது நமது ராமராஜயம் 2025 ,த்தின் பயணத்தில் ஒரு பாகமாகும் , ஆம் அதே  ராமராஜ்யம் எது நமது" அநிருத்த பாப்புவின் மன உருகோரிக்கையோ அதுவே" ஹரி ஓம்   "  அடியேன்  அம்பக்ஞ  ஆதிமாதே"


மூள லேக -

மராடீ - நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்] मराठी Blog

ஹிம்தீ  நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல் हिंदी Blog

இம்க்லிஶ  - நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்] English Blog