Middle East Situation – World at the Crossroads (Part II)
[பாகம் 1, அக்டோபர் 5,2013ன் தொடர்ச்சி] உலகத்தின் இந்த பாகத்தின் மேல் ரஷ்ஷியா, அமெரிக்கா இருவருக்கும் ஒரு கண்தான். ஸிரியாவின் தனக்கு சாதகமாக நடந்து வரும் அரசு, ரஷ்ஷியாவிற்கு முக்கியம். ரஷ்ஷியா தனது மிகவும் அவசியாமான, முக்கியமான ராணுவ தளத்தை ஸிரியாவின் துறைமுகப்பட்டினம் டார்டஸில் அதை ஒரு கட்ற்படை நிறுவலாக பராமரித்து செயலாக்கியும் வருகிறது, ஏனெனில் இது ரஷ்ஷியாவின் பழைய ஸோவியட் யூனியனின் வெளியில் இருக்கும் ஒரே ஒரு ராணுவ தளமாகும். ரஷ்ஷியா தற்போது ஸிரியாவின் ஆஸாத் அரசுக்கு ஆதரவளிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். அதே சமயம் ஸுன்னி முஸ்லிம் கொண்ட அமெரிக்காவை ஆதரித்து , நம்பி வாழும் இதர நாடுகள் ,ஆஸாத் அரசை கவிழ்க்க தீவிரமாக உள்ளன. கத்தார், ஐரோப்பாவிற்கு இய்ற்கை எரி வாயு வழங்க ஆயத்தமாக உள்ளது. அது அதற்கு வேண்டிய கத்தாரலிருந்து ஐரோப்பா கொண்டு செல்ல குழாய் வழி நிறுவ திட்டமிட்ட நிலையில், இக்குழாய் ஸிரியா வழியாகவே செல்லவேண்டும். ஆனால் ஸிரியாவின் பாஷர் அல் ஆஸாத் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த கத்தாரி - ஐரோப்பா குழாய் திட்டத்தை நிராகரித்தது இருக்கையில் அதே போன்ற நூறுகோடி டாலர் [பத்து பில்லியன் அமெரிக்க டாலர்] மதிப்புள்ள திட்டத்திற்கு இரான், இராக்குடன் சேர்ந்து , கடந்த வருடம் ஜூலையில் கையொப்பம் இட்டுள்ளார் ஸிரியாவின் பாஷர் ஆஸாத். கவனிக்கவேண்டியது என்னவென்றால் ஸிரியாவின் அரசு ராணுவத்திற்கும் , கலகஞ்செய் எதிரியினருக்கும் நடந்த கலவரமும், ஸிரியா அரசு கையொப்பமும் தற்செயலாக சேர்ந்தே நடந்துள்ளன. கத்தாரின் விருப்பம் தெரிவிக்கும் அதே சமயம் ஸௌதி அரேபியாவும் ரஷ்ஷியாவுடன் மிகத்தீவிர ஆலோசனை நடத்தி தன்னையும் ஒரு உருப்பினராக சேர்த்து கோள்ள வினவியது. ஸௌதி அரேபியாவும் ஒரு நட்புக்குறிய அரசுடன் செயல்பட ஆவலாய் இருக்க காரணம் அது அதன் எரி பொருள் வாணிகம் பாதிக்காது ,தனது கை ஓங்கி இருக்கவே ஆகும்.
தொன்று தொட்டு ரஷ்ஷியாதான் ஐரோப்பாவிற்கு எரிபொருள்கள் வழங்கி வந்தது. ஐரோப்பா நாடுகள் , ரஷ்ஷியா இந்த எரிபொருள்களை ஒரு ஆயுதமாக பயன் படுத்துகின்றது என்று குற்றச்சாட்டினர். ஆகையால் ரஷ்ஷியா மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா கொண்டு செல்ல அனுமதிக்க அது கடைசி தேசமாகத்தான் இருக்கவேண்டும் [தன் வ்யாபாரத்தை எவர்தான் விட்டுக் கொடுப்பார்கள் . ரஷ்ஷியா, ஸிரியாவின் பாஷார் ஆஸாத் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு முழுமையாக அளிக்க க்காரணம் இதுவும் ஒன்று. உலகத்தின் பல வலுவான தேசங்களின் இந்த தீவிர குழப்பமுள்ள சுயநல தனிப்பட்ட ஆர்வமே ஸிரியாவின் கலவர நிலவரத்துக்கு முடிவு காண்பது தூரத்து உண்மை எனலாம். தற்போதைய அமைதி நிலவரம் தற்காலிகமானதே. மத்திய கிழக்கு நாடுகளுடன், அமெரிக்கா, ரஷ்ஷியா ,இதர நாடுகளும் மெதுவாக இந்த விவகாரத்தில் ஈர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவின் அமெரிக்கா ஆதரிக்கும் யூ கே போன்ற தேசங்கள், ஜெர்மெனி, ஃப்ரான்ஸ்,இதாலி, டென்மார்க்,லக்ஸம்பர்க், ஸ்பெயின்,நெதர்லாண்ட் அனைவரும் ஸிரியாவின் தஞ்சமடைந்தோருக்கு 430 மில்லியன்[43 கோடி] டாலர் அடமானம் வாக்குறுதி தந்திருக்கின்றனர். யூ.கே யும் மூன்று மில்லியன் டாலர் தற தயார் என அறிவித்தது ,அவை ஸிரியாவின் ரசாயன ஆயுதங்களையும் அதன் வசதிகளையும் அழிக்க உபயோகப்ப்டுத்தவேயாகும். எப்போதும் போல் சீனா, ரஷ்ஷியாவுடன் சேர்ந்து ஸிரியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல அமெரிக்காவின் ஸிரியாவை எதிர்த்து ஐனா சட்டசபையில் ஏவிவிட்ட தீர்மானங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. ஸிரரியாவின் மீது அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனமும் ஏதிர்ப்பும் தெரிவித்தது. பேச்சு வார்த்தையே ஸிரியாவின் இக்கட்டான நிலைக்கு தீர்வு காண வழி என்று திட்டவட்டமாக சீனா கூறியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் கலவர நிலவரம் பாத்தியப்பட்ட நாடுகளுக்குமட்டுமின்றி அது கிட்டத்தட்ட 80% எரி பொருள் மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் நம் பாரத தேசத்திற்கு ஒரு பலத்த சவாலாக உள்ளது. நமக்கு பெருமளவு எரிபொருள் வழங்கிவந்த இரானின் மீது அமெரிக்கா பல நிபந்தனை விடுத்து கட்டுப்ப்டுத்திவருகிறது. இரான் பாரதத்திற்கு மூன்று மாத அவகாசத்துடன் ஸௌதி அரேபியா, இராக்கைவிட விலை குறைவாக அளிக்கின்றது. அது பணம் செலுத்துகையை இந்திய ரூபாயிலும் பெற்றுக் கொள்கிறது. ஆகையால் பாரதத்திற்கு சர்வ தேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னியதேசத்து மாற்ருப் பணம் மிஞ்ஜுகிறது. ஆனால் அமெரிக்காவின் இரானின் மீதுள்ள கட்டாய நிபந்தனைகள், பாரதத்திற்கு இரானிலிருந்து எரிபொருள் இரக்குமதி குறைத்து விட்டது. அதேபோல் ஸிரியாவும் பாரதத்திற்கு அதன் எண்ணை நிலத்தில் பாத்தியதை வழங்கியுள்ளது. அங்கு ஸிரியாவில் 14 கடலோரம் மேல் 6 கடல் நடுவே எரிபொருள் எண்ணை செமிப்பு கிணருகள் உள்ளன. ஆனால் தற்போதய கலவர நிலவரத்தினால் பாரதத்தின் எண்ணை கம்பெனிக்கள், தற்காலிகமாக தனது உற்பத்திகளை நிருத்திவைத்துள்ளது. ஓ.என் ஜீ.சி, பாரத் ஹெவி இலெக்ட்ரிகல்ஸ் இவையும் இந்த திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. பாரதத்திற்கு அங்கு ஒரு இரும்பு ஆலையிலும் பங்குண்டு.
உலகின் மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் இருக்கும் தேசங்களின் அரசியல் தடுமாற்றம் , கலவரங்கள், எரிபொருள்கள். கச்சா எண்ணை ஒரு கட்டுப்பாடில்லாத விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பு மிகச்சறிவை க்கண்டு ,எரிபொருள் இரக்குமதியை விலை அதிகரித்திருக்க மற்றொரு காரணம்.எரி பொருள்கள் விலை உயர்வு ,முன்பே வீழ்ச்சியடைந்துள்ள பாரதத்தின் பொருளாதாரத்திற்கு மேலும் சவாலாக இருக்கும். எரிபொருள் எண்ணை இரக்குமதியின் மதிப்பு பாரதத்தின் இரக்குமதியின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆய்வாளர்களின் கணிப்பு படி, ஸிரியாமீது எந்தவித தாக்குதலும் எண்ணை எரிபொருள் விலையை ஒரு பீப்பாய் இப்போதைய 115 டாலர் லிருந்து 150 அமெரிக்க டாலருக்குத் தள்ளிவிடும். எரிபொருள் , கச்சா எண்ணை விலை உயர உயர பாரதத்திற்கு பணவீக்கத்தை அடக்கி, கட்டுப்படுத்த திணரலாக இருக்கும்.
இந்த நிலவரம் பொருளாதாரத்திற்கு மட்டும் சவாலாக இல்லாமல், அது ஒரு போர் , ராஜ்ய அபாய நிலவரமாகவும் உள்ளது. இரான் இன்னும் ஆறே மாதத்தில் அணுசக்தி ஆயுதமுள்ள தேசமாகிவிடும் என்று இஸ்ராயல் கறுதுகிறது. லெபனென்னில் இருக்கும் ஹெஜபொல்லா, பல அணு ஆயுத ஏவுகணைகளை வெற்றியுடன் உபயோகித்து , இஸ்ரெயல் போன்ற பலத்த ராணுவ தேசத்தை முட்டியிடச்செய்திருக்கிறது. அது அவ்வாரிருக்க, ஸிரியாவின் அரசாங்க ராணுவத்தின் த்ரோகியான கலவர எதிரியான ப்ரிகேடியர் ஜாஹேர் ஸாகேத் [ எவன் ஸிரியாவின் ரஸாயன ஆயுதங்களின் தலைவனாக செயல்பட்டு வந்தனோ அவன் தகவல் படி ஸிரியா தனது ரஸாயன ஆயுதங்களை கடந்த வாரம் யுனைடெட் நேஷன் ஸெக்யூரிட்டி கௌன்ஸிலின் தீர்வின் அடிப்ப்டையில் அழிக்க ஒப்புக்கொண்டுவிட்டு, அவைகளை அழிக்காது லெபனென்ன்னில் இருக்கும் ஹெஜபொல்லவிற்கும் , இராக்கிற்கும் அனுப்பிவருகிறதாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்வளவு அபாயங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பொருமை இழந்துள்ள இஸ்ரேயல் இரான், ஸிரியா மீது ராணுவ ஆக்ரமிப்பு செய்ய ஆதரவளிக்கிறது , தாமே ஆயத்தமாகவும் இருக்கிறது. அதன் நடுவில் அமெரிக்கா கத்தார், யூ.ஏ.ஈ, சௌதி அரேபியாவுடன் சேர்ந்து தனது ராணுவ சான்னித்யத்தை[இருக்கையை] அதிகரித்துவருகிறது. இஸ்ராயலுடன் சேர்ந்து துர்கிஸ்தானும் தனது கை பளுவை ஸிரியாமீது தனியாக சமீபத்தில் செய்த தாக்குதலை க்கொண்டு உறுதியாக்கியது. இந்த நிலைமையை சமாளித்து வர ரஷ்ஷியாவும் தனது ராணுவ அதிகாரத்தையும், பலத்தையும் மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த இரானின் அணு ஆயுத பயத்துடன் ,ஸிரியாவின் ரசாயன அயுதங்கள், ஹெஜபொல்லாவின் ஏவுகணைகள் இருவரும் இரானின் ஆதரவாளர்களிடமிருந்து உலகத்தின் மத்திய கிழக்கு ப்ரதேசத்திற்கும், ஏன் உலகத்திற்கே தீவிர அபாயம் நிலவி வருகிறது. ஆம் இத்தருணம் உலகம் அனைத்தும் மத்திய கிழக்கினால் ஆட்டம் கண்டுள்ளது. [பாப்பு சொல்படி அனைவரும் உலகத்தின் நிலவர்ம் பற்றிய செய்திகள் தெரிந்து கொண்டு எதையும் சந்திக்க த்தயாராக இருக்க எல்லாம் வல்ல இரைவனை ப்ரார்த்தித்து செயல்பட்டு வருவோமாக].
ஹரி ஓம், " நான் அம்பக்ஞன் ஆவேன்"
மூள லேக -