Thursday 28 August 2014

குருக்ஷேத்திரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

Independence Day celebrations at Aniruddha Gurukshetram 




ஆகஸ்ட்  15,2014. அன்று குருக்ஷேத்திரத்தில் சுதந்திர தின விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. அநிருத்தா அகாடமி  ஆஃப் டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் [அநிர்த்தா திடீர்   அபாய சேவை கழகத்தின்]   டி எம் வி என்று அழைக்கப்படும் அங்கத்தினர்கள் அறங்கேற்றிய அணிவகுப்பு பயிற்சிகள் மிக அற்புதமாக நடந்தேரியது.நான் இங்கே சில புகைப்படங்களை இணைக்கிறேன். மொத்தாமாக 163 , டி எம் வீ க்கள்  கொண்டாட்டத்தில் அணிவகுப்பு பயிற்சிகளில் பங்கேற்றனர்.

அதன் விவரம் பின் வருமாரு.

தேசியக்கொடி தாங்கியவர்  ------             சுஷாந்த் ஸின்ஹ் ராவுத்
குருக்ஷேத்ரம் கொடி பிடித்தவர் ----------       ப்ரேமவீரா கதம்
ஸ்கந்த த்வஜம் தாங்கியவர்      ------------      ப்ரீதிவீரா பாஸ்கர்
அணிவகிப்பின் சேனாதிபதி   ------------       தீபாலிவீரா ராவுத்
வீரர் குழு   ஓன்று  ---------------------------       அஞ்சலிவீரா சிங்க்
வீரர் குழு  இரண்டு -------------------------        ரூபேஷ் ஸின்ஹ் மட்கே
வீரர் குழு  மூன்று  ---------------------------        ரவீணாவீரா காவ்லே
வீரர் குழு நான்கு  ---------------------------         ப்ரவீண் ஸின்ஹ் நாயிக்
காப்பாற்று குழு ------------------------------         ஸாகர்ஸின்ஹ் பாடில்
கோஷ பதக்        ------------------------------       ஷலாகாவீரா  கோவல்கர்

இதன் விரிவான விமரிசனம்




ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ|| 


மூள லேக -

Wednesday 20 August 2014

கம்பியில்லா மின்சாரம் - Part 2

கடந்த கட்டுரையில் டா.டெஸ்லா எவ்வாரு திடீர்விசை மின்துடிப்பை ப்பற்றி அறிந்தார் என்பதை பார்த்தோம் ,அதனுடன் அதி பேரளவான [உயர்ந்த] வதிர்வெண் மாறு திசை மின் சக்தி பயன்படுத்தி , மின்சாரம் காற்றிலும் பயணம் செய்வதை கண்டுபிடித்தார். அதுவே கம்பியில்லா மின்சாரத்தின் முதல் அடி ஆகும் .இந்தக்கட்டுரைகள் மூலம்  கம்பியில்லா மின்சாரம் பயன் படுத்துதல் , இந்த கொள்கை எவ்வாறு டா,டெஸ்லாவின் பல புது க்கண்டுபிடிப்புகளுக்கு காரணமாய் இருந்தன என்பதை பார்க்கப் போகிறோம்.

[மேலேஇருக்கும்   1892 ஆம்  ஆண்டு டா.டெஸ்லாவின் புகைப்படத்தில்  டா.டெஸ்லா  அவர் ஆய்வுக்கூடத்தில் ஒரு பெரிய டெஸ்லா சுருள் [காயில்]  அருகே டா.டெஸ்லா அமர்ந்திருக்கையில்   , வெளுத்த கண்ணை க்கூசும்   நெருப்பு பொரிகள் போன்ற வெளியீட்டினை க்காணலாம், சில அவர் உடல் வழியே பாய்கின்றன , அவருக்கு எந்தவித இடையூரும் விளைவிக்காமல். டா.டெஸ்லா எப்போதும் போல் அமைதியாக  புத்தகம் படித்தவாரு அமர்ந்திருக்கிறார்].  

        நாம் தற்போது அவரது பரிசோதனைகளுக்கு செல்வோம். மின்சாரம் கம்பியில்லாது திடீர்விசை மின்துடிப்பினால் முடியும் என்ற முடிவுக்கு வந்த டா.டெஸ்லா அதில் சில மாற்றங்கள் செய்ய அதே மின் வளயத்தில்   அதை  6ooo சுழல் வேகத்தில் திரக்கவும் மூடவும்  தன்மையுள்ள ஒரு   ரோடரி ஸ்விட்ச்  பொருத்தி மின் பாய்ச்சலை 15000 volts[வால்ட்ஸ்]க்கு உயர்த்தினார்.  அவர் மின் வளயத்தை தூண்டிவிடுகையில் , அந்த ஊசி குத்தும் வலி ரோடரி ஸ்விட்சினால்  கடுமையாகவே உணர்ந்தார்.. சாதாரணமாக [ஸ்டெப் அப் ட்ரான்ஸ்ஃபார்மர்] மின் சக்தி மாற்றும் பொறி ,மின் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தன்,  ஆனால் தற்போது மின்சக்தி மாற்றும் பொறி இல்லாது மின்சக்தி  திடீர்விசை மின்துடிப்பினால் வெகு சீக்கிரத்தில்  அதிகரிப்பதை கண்டார்(Impulses were amplifying the current and voltage) . தாமர கம்பியைச்சுற்றி வெள்ளை நீல மின் பொரிகள் இருந்ததை க்கண்டார். இந்த பரிசோதனையின் போது  டா.டெஸ்லா ஊசி குத்துவலி அதிகரிப்பதை உணர்ந்தார்.  அப்படியும் அவர் மின்சக்தியையும் [வால்டேஜையும் கரண்டையும்], வதிர்வெண்ணும் உயர்த்தி க்கொண்டும்,  மின்சக்தி பாய்ச்சலை நிருத்தியும் பரிசோதனைகள் பல செய்தார். அதற்குக் காரணம் அவர் அவரது ஆற்றலின் மேல் இருந்த தன் நம்பிக்கையும் ,கடவுள் மீதுள்ள விஸ்வாசமுமே காரணம்.  ஒரு விதமாக இந்த பரிசோதனை  செயல் படுததுதலில் வெற்றி பெற்றால் இது ஒரு புது வித மின்சாரத்திற்கு வழ  வகுக்கும் அதுவே  மானிடர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்பினார்.
     


அவரது  பரிசோதனைகளை வித்தியாசமாக வளர்க்க துணிச்சலான முயற்சிகள் செய்து டா .டெஸ்லா [rapid mechanical rotary switch] வேகமாக இயங்கும் சுழல் மின் தொடர் மாற்றியை தாமமே உருவாக்கினார், அது வினாடியின் பத்தாயிரம் பங்கின் ஒன்றின் நேரத்திற்குள்  செயல்படும்.  அதாவது, ஒரு நிமிடத்திற்குள் 600,000 சுழல்கள் ஆனது.  அவர் வால்டேஜை [மின்சக்தியை] ஒரு  லக்ஷம் வால்ட்ஸிற்கு உயற்தி ஒரு அற்புதத்தை கண்டார்,  அதையே  " எலெக்ட்ரிகல் ஸாவ்னா" எஃபெக்ட்  
‘Electrical Sauna’ effect என்பார்கள்.
    
டா.டெஸ்லா இந்த பரிசோதனையயும் மாற்றி மின்தொடர் மாற்றிக்கு[ ஸ்விட்ச்சிர்க்கு]  பதிலாக அவர் காந்த வளைவு இடைவெளியை  [magnetic arc gap]  உபயோகித்தார். அவர் முதல் சுழலும் , இரண்டாம் சுழல்களும் [  primary and secondary coil   ]  தயாரித்து , அதாவது ப்ரைமரி காயிலிலிருந்து செகண்டரி காயிலிற்கு மின்சக்தி அதிகமாக பாயும். டா.டேஸ்லா அவரது புதிய திடீர்விசை மின்துடிப்பு மின்சக்தி மாற்றி  அதில் பாயும் மின்சக்தி அளவை பன் மடங்கு பெருக்குவதை ப்பார்த்தார். அவ்வாரே கதிரொளி போன்ற சக்தி[ கம்பியில்லா மின்சார சக்தியும் அதிகரித்தது.  



டா.டெஸ்லா  பத்து லக்ஷ வால்ட்ஸ் மின்சக்தி இம்முறையினால் உற்பத்தி செய்து பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தார் . அதுவே அவருக்கு இந்த [கதிரொளி சக்தியை கம்பியில்லாம்லே  வெகு தூரம் வரை கொடுக்கவும் முடிந்தது,  அவர் பரிசோதனையில் வெளுத்த நீல கிரணங்கள்  முழு காயிலிலிருந்து  துள்ளி வெளிப்படுவதை பார்த்தார். அக்கிரண்ங்கள் எந்த பொருள் வழியாகவும் செல்ல வல்லதாக  இருந்தன.  அக்கிரணங்கள் குளுமையாகவும், ஊசிகுத்துதல் இல்லாது ,  அதுவே சிறிய வதிர்வெண்ணினால் உண்டாகும் எரிச்சலும் இல்லாது , உடலுக்கு இதமாகவே இருந்தன. அதற்கு மேல் சில  வதிர்வெண்ணில் [ஃப்ரிக்வென்ஸியில்] இந்த வெள்ளை நீலக்க்கிரணங்கள் மின் பல்புக்களையும் ,  ட்யூப் லைட்களையும்  கரண்ட் பாய்ச்சிய காயில்கள் அருகில் கொண்டுவரும் போது  இயங்க வைத்தன. டா.டெஸ்லா இவ்விளக்குகளை கம்பியில்லாது தம் வெரும்  கையில் பிடித்தவாரே இயக்கிக் காட்டினார்.


இதையொட்டிய மற்றொரு  பரிசோதனையில் ஒரு தாமர[செம்பு]  கடத்து கோளத்தை இரண்டாம் மின்சக்தி மாற்றி வாய்களுக்கு சேர்க்கப்பட்டது [ஒட்டுவிக்கப்ப்ட்டது].  எல்லா கிரண வெளியேற்றங்கள் இந்த  தாமர கோளத்தில் மய்யம் கொண்டன., இப்போது இந்த  தாமர கோளத்திலிருந்து வெடிப்பு சத்தத்துடன் வெளிப்படுத்தல் [கிரணங்கள்]  வெளியேறின. அது
 மின்பாய்ச்சும் சக்தி யை குறைந்த அளவில் வைத்து கம்பியில்லா மின் சக்தி பரப்புதலை அபாயமில்லாது  மனிதர்க்கள் யாவருக்கும்  உபயோகப்ப்டுத்துமாரு   பத்திரமானதாகவும் , மிகச்சரியானதாகவும் ஆக்கியது. கம்பியில்லா மின் வெகு தூரம் வரை விஸஸேஷமாக செயல் படுத்திய மின்வளயத்தினால் பெற்றுக்கொள்ள முடிந்தது.   டா.டெஸ்லா கம்பியில்லா மின்சார இயக்கத்தை இவ்வாரு பெற்றெடுத்தார் என்றே சொல்லலாம்.

இது கம்பியில்லா மின் சக்தியை பல இடங்களுக்கு பரப்பும் ஒரு பயிற்சிக்குறிய வழி. இதுவே டா.டெஸ்லாவின்  புகழ் பெற்ற டெஸ்லா காயில் ஆகும். இன்று பல அனிமேடட் திரைப்படங்களிலும், விளையாட்டுகளிலும் டெஸ்லா காயிலினால் அபாயத்தையும் , இக் காயில் எதன்மீது விழுகிறதோ அது எறிந்து  சாம்பலாகும் போல் காட்டப்ப்டுகின்றன, ஆனால் அது நேர் மாறானது , டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது வழிப்படி டெஸ்லா காயில் ஒரு முழுமையான கம்பியில்லா சக்தி பரப்பும், செலுத்தும்  அபாயமில்லாத  பத்திரமான ஒரு  கருவியாகும். இந்த டெஸ்லா காயில் பரிசோதனைகளை எந்தவித நிபுணர்கள் இல்லாமல், அதை பற்றி ச்ரியாக அறியாது   செய்து பார்கவே பார்காதீர்கள். ஆம் டெஸ்லா காயில் களை ப்பற்றி நன்கு  அறிந்து கொண்டு  அதை சரியாக  , கம்பியில்லா விளக்கு ஏற்றுதலுக்கும் மின்சக்தி செலுத்தவும் பரப்பவும் மனிதர்களுக்கு சாதகமாக உபயோகிக்கலாம்.பயனுள்ளதாகவெ உள்ளது

ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ||   

மூள லேக -

Tuesday 19 August 2014

கம்பியில்லா மின்ஆற்றல் [மின்சாரம்]- [Part-1]

1890 ஆம் ஆண்டு டாக்டர் நிகோலஸ் டெஸ்லா தாமாகவே  ஆடலான  மின் சக்தி எனும் மாறு திசை மின்சார தத்துவத்தை உறுவாக்கினார்.அதை அவர் மாற்றி திருத்தி அமைத்து பேரளவு உயர்ந்த வதிர்வெண்[ஹை ஃப்ரீக்வென்ஸி] மாறுதிசை மின்சார வளர்ச்சிக்கு காரணமாகி பிறகு கம்பியில்லா மின்சார செலுத்தல் என்னும் அதிசயைத்திற்கு வழிவகித்தது, அதை டாக்டர் டெஸ்லா இயற்கைத்தாயின்  இயல்பாகவே கருதினார். 

டாக்டர் டெஸ்லாவின் மாறு திசை த்தன்மை வாய்ந்த மின்சாரத்திட்டத்தை களங்கபடுத்துவதற்காகவே , தாமஸ் ஆல்வா எடிஸன் பகிரங்கமாக பொதுமக்கள் இடையே மிருகங்கள்மீது மின்சார சக்தி பாய்சினார் என்பதை அறிவோம்.அதனுடன்   மாறு திசை மின்சாரசக்தி பய்ச்சிய  நாற்காலி மீது உட்காரவைத்து சிறைக்கைதிகளின்  மரணதண்டனைக்கு உபயோகித்ததை அறிந்து தா. டெஸ்லா மிகவும் மனம் வருந்தினார்.   டா.டெஸ்லா கடவுள் பக்தி கொண்டவர், கருணைஉள்ளம் கொண்டவர்,  அவர் ஹ்ருதயம் இக்கைதிகள், மிருகங்களின் மீதான கொடுரமான  சித்திரவதையை நினைத்து உறுகியது.  டா,டெஸ்லா , தாமஸ் எடிஸனின் இந்த அவதூரு செய்திக்கு எதிர்த்து முறியடிக்க முடிவு செய்தார். அவர் ஜார்ஜ் வெஸ்டிங்க் ஹவுஸுடன் சேர்ந்து ஒரு பத்திரிகை மாநாடு ஏற்பாடு செய்து பல முக்கிய விஞானிகள், வாணிக த்தலைவர்கள் , பத்திரிகைகையாளர்களை மாறு திசை மின்சாரத்தின் செயல்முறை விளக்கத்திற்காக  தனது ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்திற்கு அழைத்தார்.  அங்கு அவர் ஒரு லக்ஷம் வால்ட் மின்சக்தி  விளைவிக்கும்  மாறு திசை பொறி ஒன்றை தயார்நிலயில் வைத்திருந்தார்.  ஏசி கரண்ட் என்னும் மாறு திசை மின் , அதை  க்கட்டுப்பாட்டுடன் இயக்கிப்பயன் படுத்தினால் அது மானிடர்களளுக்கு ஒரு தீங்கும் விளைவிக்காது என்பதை உறுதி ப்படுத்த தன் உயிரையே பணயம் வைத்து , டா.டெஸ்லா அந்த லக்ஷம் வால்ட மின் விளைவிக்கும் பொறி அறுகே அமர்ந்து செயல் படுத்தியும்  காட்டினார். அங்கு கூடியிருக்கும் அனைவரையும் ஆஸ்சரியத்துடன் திகைக்கவைத்தார்.  டா.டெஸ்லா ஒரு சிராய்ச்சல் இன்றி  வெளிவந்தார்.  இதை அவர் செய்தது மானிடத்தன்மை யை க்காப்பாற்றவும், மக்கள் நலனுக்காகவும், மாறு திசை மின்சாரம் பற்றிய தவரான கருத்தையும் , வதந்தியை நம்பாதிருக்க தம் உயிரை  பணயம் வைத்தார், எடிஸனோ ஏ.சி மின்சக்தியை மிருகங்களிலும், கைதிகளிலும் பாய்ச்சி கொடூரச்செயல்கள் புரிந்தார் என்பதை  கவனிக்கவும். 


கம்பியில்லா  மின்சார இயக்கத்தை பற்றிய விளக்கம் டா. டெஸ்லா மக்களுக்கு அளித்ததும் அதுவே முதன்முறையாகும்.  ஆம்,தாங்கள் யாவரும் கேட்டது சரியே. "வயர்லெஸ் இலெக்ட்ரிசிடி" கம்பியின்றி மின்சாரம்   என்பதை தெளிவு படுத்தும் வகையில்  மின்விளக்குகளை தன் கையிலேயே ஏற்றி க்காட்டினார். எவ்வாரு இச்சாதனையை செய்தார்? எப்படி ப்படைத்தார்? என்பதறிய நாம் அவர் அவரது  ந்யூயாரக்  ஆய்வுக்கூடத்தில் நடத்திய பரிசோதனைகள்  பார்ப்போம். அவரது ந்யூயார்க் ஆய்வுக்கூடம்  ஒரு பல தரப்பு ஆராய்ச்சிக்கூடமாகவும் , உற்பத்திநிலையமாகவும் செயல்பட்டு வந்தது. அதில் பல பகுதி, கிளைகள், பல மாடிகள் , மட்டங்கள் இருந்தன. அதை ஒரு சிறிய ஆராய்சி மற்றும்  வளர்ச்சி மய்யமாக கருதலாம்.  டா.டெஸ்லா பல மின் ஆற்றல் மாற்றும் கருவிகளும் , மின்விளைவிக்கும் பொறிகளும் அவரது கீழ் மட்டத்தில் தயார் செய்து வந்தார்.  அவரது தனி ஆராய்சிக்ககூடம் மேல் மட்டத்தில் இருந்தன. அவரிடம் இயந்திர நிபுணர்கள் சிலர் பணியாற்றி வந்தனர். அதில்  கோல்மன் ஜீடோ அவரது நம்பகமான நண்பர் அவருடன் இருதிவறை இருந்தார். டா.டெஸ்லா கடும் உழைப்பாளி என்பது அறிவோம். அவர் அவரது  அத்தகைய  ப்ரம்மாண்டமான ஆராய்ச்சி க்கூடம் வெஸ்டிங் ஹவுஸிடமிருந்து பெற்ற ஊதிய த்தொகையிலிருந்து தாமே பார்த்து பார்த்து க்கட்டியிருந்தார். அவரது ஆராய்ச்சியின் சமயம் வித்தியாசமாக  எதையும் உணர்ந்தாலோ , கண்டாலோ அதை மறு ஆராய்சி செய்து பல  விதத்தில் மாற்றி ப்பார்த்தும் ஆராய்ச்சிகள் நடத்துவார். இம்மாதிரியான  ஆய்வும் ஆராய்ச்சிகளும் அவருக்கு பல விஷயங்கள் அறிய வாய்ப்பு கிடைத்தது. ஆகையால் அவர் பல கண்டுபிடிப்புகள்   செய்தார், பல பட்டயங்களுக்கும் உறிமை யாளர் ஆனார். அவ்வாரே அவரது கண்டுபிடிப்புகளும் ,  படைப்பாற்றல்களையும் வளர்த்துக்கொண்டார்.

     டா.டெஸ்லா மிகவும் மேலோங்கியதான திறனான வெகுதூரம்வரை மின்சாரம் செலுத்தும்   பாலிஃபேஸ் ஏ.சி திட்டத்தை அளித்தார்.அங்கும் டெஸ்லா நிற்கவில்லை . அவரது , தளராத இடைவிடா முயற்சியால் ஏ.சி ஜெனரேட்டர்களின் வதிர்வெண் 30,000 ஹெட்ஜ் [வினாடிச்சுழல்கள்] வரை உயற்த்தினார், அதுவே ஹை ஃப்ரீக்வன்சி , அதாவது  உய்ர்ந்த வதிர்வெண்  கொண்ட  மாறு திசை மின் விளைவிக்கும் பொறிகள் பிறக்கக் காரணமாகும்.  இந்த உயர்ந்த வதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்சாரம் உலகத்திற்கு மின் சக்தி அளிக்கும் என்று நம்பினார். அவர் பல உயர்ந்த  வதிர்வெண்  கொண்ட மாறு திசை மின்விளைவிக்கும் பொறிகளை தாயரித்து பட்டயங்களும் பெற்றார்.  டா,டெஸ்லாவின் இந்த உயர்ந்த வதிர்வெண்  மின்சாரம்  மனிதனின் தொடர்பில் இருந்தாலும் ஒருவித  அபாயமும் இல்லை என்பதே.  எதிர்பாராது தவறி மனிதன் இம்மின்சாரத்தை தொட்டாலும் அதன் உயர்ந்த வ்த்ர்வெண்ணினால்  மனிதனின் வெளிமட்டத்திலிருந்து மனிதனை சிறிதளவும் பாதிக்காது வெளியேறிவிடும். விஞானத்தில் இதை ஸ்கின் எஃபெக்ட் , [தோல் பாதிப்பு] என்பார். டா டெஸ்லா மாறுதிசை மின்,  மனிதனுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தானது அல்ல என்பதை நிரூபித்தது.  அவர் அவரது அறிமுக விளக்கத்தின் சமயம் மாறுதிசை மின் பாயும் மின்வாய்களை தனது மூடப்படாத கைகளினால் தொட்டுக்கொண்டிருந்தும் அவருக்கு ஒன்றுமே ஆகாததை க்கண்டு மக்கள்  வியந்தனர். மக்கள் பாதுகாப்பே டா.டெஸ்லாவின் குறிக்கோளாக இருந்தது என்பதை கவனிக்கவேண்டும். 


இவ்வாரு உயர்ந்த வதிர்வெண்  மாறுதிசை மின் சக்தியை சார்ந்த  பரிசோதனைகளின் தருணம் ஒரு அதிசயமான நிகழ்ச்சியின் மூலம் டா. டெஸ்லாவின்  மின்சாரத்தைப்பற்றிய கருத்தே மாறியது. ஒரு பரிசோதனையில் ஒரு மெல்லிய கம்பியில் , பலத்த வால்டேஜ் ஏ,சி கரண்டினை பாய்ச்சி ஒரு வினாடியில் மின் சக்தி வளயத்தை முடியதை கண்டார். இத்தகைய மின் சக்தி ப்பாய்ச்சல் கம்பியை ஆவியாக்கியது. பாய்ச்சும் மின்சக்தியின் வால்டேஜ் அதிகரிக்கச்செய்கையில் அவர் அங்கம்முழுதும் ஊசிகுற்றுவது போன்று அனுபவித்தார். அவர் முதலில் அது வெடித்து சிதர்ய்தில்  அக் கம்பியின் சிறு துண்டுகளாக இருக்கும் என்று  நினைத்தார். அவர் தன்னை த்தானே தொட்டுப்பார்க்கயில் ஒரு துண்டும் இல்லை என்பதை அறிந்தார், ஒரு காயமும் இல்லை என்பதை உணர்ந்தார்.
 அதன்பிறகு அவர் அவருக்கும்  பரிசோதனை மேஜை கிடையே ஒரு பறுமனான  கண்ணாடியை வைத்தார், அதனுடன்  தாமர மின்வாய்களை செலுத்தி, பத்து அடி தொலைவில் நின்று  பார்த்தார்., அப்படியிருந்தும் , மின் வளயத்தை திரந்தவுடன்  அதே ஊஸிகுத்தும் உணர்வு இருந்தது.  பரிசோதனைகளை மாற்றி மாற்றி செய்து பார்க்கயிலும்,  ஊசிகுத்தும் உணர்வு  இருந்து கொண்டேஇருந்தது.  இதை அவர்,   அவர் உயர்ந்த மின்சக்தி சிறிதே நேரபபாய்ச்சலினால் அதாவது  ஆங்கிலத்தில் இம்பல்ஸ் என்பார்கள். இந்த ஆராய்சியே கம்பியில்லா மின்சக்தியின் பிறப்பாகும்.  இதிலிருந்து அவர் அறிந்தது,  பலத்த வால்டேஜ், உயர்ந்த வதிர்வெண்  மின்வளயத்தின் உடனடி மூடுதல் மின்சக்தியை காற்றுமூலம் பாய வைகின்றன,  அதுவே கம்பியில்லா மின் உடலை பாதிக்கின்றது என்பதை அறிந்தார்.  

இதன் பின் செய்த டா,டெஸ்லாவின்  பரிசோதனைகள் யாவும் திடீர்விசை மின்துடிப்பின்   , வதிர்வெண்  ,ரெஸோனென்ஸ்[ மின் ஒத்த அதிர்வு ]  கொள்கைகளைக் கொண்டு நடத்தப்பட்டன. இதை ப்பற்றி வரும் கட்டுரைகளில் கவனிப்போம், அடுத்த கட்டுறையில் டா டெஸ்லா எவ்வாரு காற்றில் பாயும் மின்சக்தியை கம்பியில்லா மின்சாரமாக மாற்றினார் என்ற  அதிசயத்தை ப்பார்ப்போம். 

                             ஹரிஓம் ||  ஸ்ரீ ராம் ||  அம்பக்ஞா||

மூள லேக -



Monday 18 August 2014

டாக்டர் நிகோலா டெஸ்லா அடிவைத்த கற்கள்

"நீரோட்டங்கள்போர்" சாட்சி. உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு மிகவும் அதிர்ச்சி தரும் அனுபவமாக இருந்தது.  தனது அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மேதையால் உலகம் முழுவதும் வழிபடப் படும் தாமஸ் ஆல்வா எடிசனின், டாக்டர் நிகோலா டெஸ்லாவை கடுமையாக எதிர்த்ததும், டாக்டர் டெஸ்லா அவரை எதிர்த்து தீவிரமாக அல்லது பரபரப்பின்று எதுவும் செய்யாமல் இருந்தார், அவரிடம் எடிசன் தோற்றார். அவர் ஒரு அகந்தை போராட்டத்தில் ஈடுபடாது, மாறாக அமைதியாக தனது சொந்த வேலையை நடத்தி மற்றும் அவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அனைத்து எதிர்ப்புகளையும் அடக்கினார். டாக்டர் டெஸ்லாவின் இயற்கை குணம் மற்றும் அவரது கடவுள் நம்பிக்கை இந்த நிகழ்வில் இருந்து தெளிவாக தெறிகிறது.  இப்போது நாம் முன்பு விட்ட இடத்தில் போவோம்.  எடிசன் இயந்திரத் தொழிர்சாலையில் இருந்து ராஜினாமா செய்த பிறகு, டாக்டர் நிகோலா டெஸ்லா, ந்யூ ஜெர்சியில் 1886 ஆம் ஆண்டில் தனது சொந்த நிறுவனம் அதாவது, டெஸ்லா எலக்ட்ரிக் லைட் & தயாரிப்பு அமைப்பை உருவாக்கினார்.

நீயூயாற்க் டெஸ்லா ஆர்க் விளக்குக்ள்
டெஸ்லா எலக்ட்ரிக் தயாரிப்பு ஆலையில்  வேலை செய்த டாக்டர் நிகோலா டெஸ்லாவின் முதல் மற்றும் நன்கு அறியப்பட்ட கண்டு பிடிப்பு "ப்ரதி  ஒளி"யாய் இருந்தது. டெஸ்லா கண்டுபிடித்த ஆர்க் விளக்குகள் மிகவும் திறமையான மற்றும் ஒரு பகட்டான முறையில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது.  
இந்த ஆர்க் விளக்குகளின் வெளிச்சம் முறை நீயூயாற்க் தெருக்களில் அந்த காலகட்டத்தில் நிறுவப்பட்டன.  டெஸ்லா நிறுவனம் நல்ல வருவாய் ஈட்டியது.  ஆனால் , அதை முக்கியமாக அனைத்து முதலலீட்டாளர்களும் பகிர்ந்தனர்.  டெஸ்லா எலக்ட்ரிக் லைட் & தயாரிப்பு ஆலையில்  இருந்த போது, டெஸ்லா பெற்ற காப்புரிமைகள் "டைனமோ எலக்ட்ரிக் இயந்திரங்கள் "ஆகும் டெஸ்லா எலக்ட்ரிக் லைட் & உற்பத்தியில் நிகோலா டெஸ்லாவிடம் அவரது "மாறுதிசை மின்சார முறை" மூலம் இயக்கப்படும் உபகரணங்கள் நடத்த ஒரு திட்டம் இருந்தது.  ஆனால் முதலீட்டாளர்கள் டாக்டர் டெஸ்லா திட்டத்தை ஒத்துக் கொள்ளாததன் விளைவாக, டாக்டர் டெஸ்லா தனது வசம் இருந்த சில அற்ப பங்கு சான்றிதழ்களுடன் நிறுவனத்தின் வெளியே தள்ளப்பட்டார்.  நிகோலா டெஸ்லாவால் டெஸ்லா நிறுவனம்
நிறுவப்பட்டும் இந்த நிகழ்வுகள் நடக்கத்தான் நடந்தன.   

இது கிட்டத்திட்ட காசின்றி நிகோலா டெஸ்லாவை விட்டது.  ஆனால் டாக்டர் டெஸ்லா எப்போதும் ஒரு பெரிய இதயம் படைத்தவராய் இருந்தார்.  டாக்டர் டெஸ்லா, உடலுழைப்பு உட்பட எந்த வேலையையும் தாழ்வான தரமாகக் கருதப்படாதது,  அவரது வாழ்க்கையின் இந்த ஆபத்தான கட்டத்தில் அவரை  ஆதரித்தது.  டாக்ட்ர் டெஸ்லா ஒரு பள்ளத்தில் தோண்டி எடுப்பவர் போன்று  பணியாற்றினார்.  ஆனால் டாக்டர்  நிகோலா டெஸ்லாவிடம் எப்போதும் மோசமான நிலைகளில் இருந்து மீளும் ஒரு தன்மை இருந்தது.  இதற்கு அவரது அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை மட்டுமே காரணமாக இருந்தது.  இதே கடவுள் கூட அவரை ஒருபோதும் கைவிடாததன் அடிப்படை காரணம் என்று நாம் உறுதியாக சொல்லமுடியும்.  டாக்டர் நிகோலா டெஸ்லா வின் இந்த உயர்ந்த குணம்,  மற்ற பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டது;  இந்த சூழ்நிலை அதற்கு விதிவிலக்கல்ல.

டாக்டர் டெஸ்லா ஒரு பள்ளத்தில் வெட்டி எடுப்பவர் வேலை
ஏப்ரில் 1887இல், டாக்டர் நிகோலா டெஸ்லா "டெஸ்லா எலக்ட்ரிக் கம்பெனி" என்னும் ஒரு புதிய நிருவனத்தைத் தொட்ங்கினார்.  நீயூயாற்க் அரசு வழக்கறிஞர் சார்லஸ் பெக் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் இயக்கினர் ஆல்ஃபிரட் பிரவுன் நிதி உதவியுடன் இந்த நிறுவனத்தை டெஸ்லா ஆரம்பித்ததன் முக்கிய நோக்கம், அவரது மாறு திசை மின்சார முறை" மற்றும் அதன்மூலம் இயக்கப்படும் சாதனங்கள் பற்றி மேலும் வேலை மற்றும் புரச்சாரம் செய்வதர்காக இருந்தது.  இதன்படி, இந்த நிருவனத்தின் மூலம், டாக்டர் டெஸ்லா தனது பணிகளை நடத்த, ஒரு ஆராய்சி மற்றும் ஆய்வகம், மன்ஹாட்டனில் உருவாக்கபட்டது. இங்கு 1887 ஆம் ஆண்டில் டாக்டர் டெஸ்லா நாம் ஏற்கெனவே பார்த்த, அந்த ஒரு சுழலும் காந்த கொள்கை அடிப்படையில், தற்போதைய ஒரு ப்ரஷ் இல்லாத மாறுதிசை மின்சார தூண்டல் மோட்டார்[ஜெனரேடர்] ஒன்றை வடிவமைத்தார்.  நிகோலா டெஸ்லா 1888 ஆம் ஆண்டில் அவரது இந்த ப்ரஷ் இல்லாத ஏசி தூண்டல் மோட்டாருக்கு காப்புரிமையை [பட்டயம்]  பெற்றார்.

அதே ஆண்டில், டாக்டர் நிகோலா டெஸ்லாவை அவரது ஒரு நண்பரும் ,மின் உலக பத்திரிகை ஆசிரியருமான தாமஸ் மார்ட்டின் அவரை மின் பொறியாளர்கள் அமெரிக்க நிருவனம் (AIEE) , இப்போது பிரபலமாக உலகம் முழுவதும் அழைக்கப்படும், மின்சார மற்றும் மின்னணு பொறியியல் பொறியாளர் நிருவனம் முன் தனது தூண்டல் மோட்டார் உட்பட அவரது மாறுதிசை மின்சார முறையைப்பற்றி நிரூபிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து இருந்தார். அவரது விவரிப்பால் எல்லோரும் வியந்தனர். விரிவுரையின் போது டாக்டர் டெஸ்லா மேலும் டிசி மீது ஏசி அமைப்பின் மேன்மை, டிசி மீது ஏசி அமைப்பின் நன்மைகள் பற்றித் தெளிவாகக் காட்டினார்.  

இந்த கூட்டத்தில் தொழில் மற்றும் அறிவியல் புள்ளிகள் பலர் கலந்து கொன்டனர்.  விவரிப்பு மண்டபம், ஆராய்ச்சியாளர்கள், இயற்பியல், பொறியாளர்கள், தொழில்நுட்ப, வணிகத் தலைவர்கள், மற்றும் செய்தியாளர்களால் நிறைந்து இருந்தது.  இந்தக் கூட்டத்தில் டாக்டர் டெஸ்லா, மின்சாரம் உற்பத்தி மற்றும் தொழிர்சாலைகளுக்கு மின்சார விநியோகம், அதை மேம்படுத்துதல், போக்குவரத்து அமைப்புகள், வீடுகள் முதலியனவற்றில் தனது ஏசி அமைப்பை விவரித்தார்.  மேலும், இது டாக்டர் டெஸ்லா அவரது ஏசி அமைப்பு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும், மற்றும் நமது கிரகத்தில் வாழ்க்கை புரட்சியை ஏற்படுத்தும் என்றும் கண்டார். மிகவும் ஈர்க்கப்பட்டார்கள் என்றாலும் கூட்டத்தில் கலந்துகொண்ட வணிகத் தலைவர்கள் டாக்டர் டெஸ்லாவின் ஏசி அமைப்பின் வெற்றிகரமான செயல் படுத்துதல் உத்திர வாதங்களை கேட்டார்கள். பின்னர் கூட்டத்தில் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் & தயாரிப்பு நிருவனத்தின் தலைமை வகித்து ஒரு தொலைநோக்கு காந்தம், ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் கலந்து கொன்டார்.  நிகோலா டெஸ்லாவின் சாதனையின்  ஏசி மோட்டார் மற்றும் ஆற்றல் அமைப்புகளை செயல் படுத்த வெஸ்டிங்ஹவுஸ் ஆர்வம் காட்டியதுமட்டுமில்லாமல் நிகோலா டெஸ்லா தன்னை மின் பொறியாளர்கள் அமெரிக்க நிருவனம் முன் விவரித்தமுறை அவரது நம்பிக்கை, தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவியல்மீது அவரது நம்பிக்கை பிரதிபலிப்பால், மிகவும் ஈர்க்கப் பட்டார்.

டாக்டர் நிகோலா டெஸ்லா,
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ்
இந்த கூட்டம் முடிந்த பிறகு, ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் டாக்டர் நிகோலா டெஸ்லாவை அணுகி வால் ட்ரோப் ஹோட்டலில் ஒரு இரவு விருந்திற்கு அவரை அழைத்தார். இது டாக்டர் நிகோலா டெஸ்லா மற்றும் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் இடையிலான உறவு மேம்பட காரணமாக இருந்தது.  இந்த கூட்டத்தின் போது ஒரு மில்லியன் டாலர்கள் மூலம் ஏசி அமைப்பின் டாக்டர் டெஸ்லா காப்புரிமைகள்[பட்டயங்கள்] அனைத்தையும் வாங்க திட்டமிட்டார்.  வெஸ்டிங்ஹவுஸ் இந்த காப்புரிமைகள் பின்னால் எப்படி அவரது தொழில் நுட்பங்கள் "வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் & தயாரிப்பு நிருவனத்தில்" பயன் படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய டாக்டர் டெஸ்லாவுக்கு சுதந்திரம் உறுதியளித்தார்.  இறுதியாக கூட்டம்.  டாக்டர் டெஸ்லாவின் ஏசி முறையில் இயங்கும் அவரது இயந்திரங்கள் மூலம் உற்பத்தி மற்றும் விநியோகப்படும் மின்சாரம் ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் ஒரு டாலர் டெஸ்லாவுக்கு கொடுக்க வெஸ்டிங்ஹவுஸ் உறுதிமொழியுடன் முடிவடைந்தது. வரும் நாட்களில், வெஸ்டிங்ஹவுஸ் தங்கள் பிட்ஸ்ப்ர்க் ஆய்வகத்தில் ஒரு ஆலோசகராக நிகோலா டெஸ்லாவை பணியமர்த்தினார்.  டெஸ்லா பிட்ஸ்ப்ர்கில் இருந்த காலத்தில் சக்திவீதி கார்கள் இயங்க ஒரு ஏசி மாற்று அமைப்பு உருவாக்கினார்.  ஆமாம், வீதிகார்கள் என்றால் மின்சார கார்கள் என அர்த்தம்.  சாலைகளில் முழுமையாக மின்சாரகார் இயங்கும் கருத்து இந்த உலகில் இன்னும் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   ஆனால், இங்கே நாம் மீண்டும் கடந்த 1880ல் மின்சார கார் இயங்க விரிவான மற்றும் பரிணாம ஏசி மின்சார முறை அமைப்பை உருவாக்கிய மேதை இந்த டாக்டர் நிகோலா டெஸ்லாவைப் பார்க்கிறோம்.  

மேலும் 1891ம் ஆண்டில், தனது 35 வது வயதில், நிகோலா டெஸ்லாவுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது; இதை அவர் பெரிதும் மதித்தார்.  ந்யூயார்க்கில் மற்றொரு ஆய்வகம் -தென் ஐந்தாவது அவென்யு மற்றும் ஹுஸ்டன் தெருவிலும் ,  பின்னர் மற்றொன்றும் டாக்டர் நிகோலா டெஸ்லா கீழ் உருவாக்கப்பட்டது.  இங்கே அவர் இந்த இரண்டு ஆய்வகங்களில் வயர்லெஸ் மின்சார விளக்குகளை ஏற்றினார்.  இது வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு திறனை சான்று வித்ததாகும்.  ஆமாம், வயர்லெஸ் பவர் டிரான்ஸ்மிஷன் மேலும் "டெஸ்லா விளைவு" என தெரிகிறது.  ஆச்சரியமாக மற்றும் வியக்கத்தகுந்ததாக தற்போது இல்லை?  மேலும் நாம் ஆண்டு 1891 பற்றி பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

என்ன, நாம் இதுவரை டாக்டர் நிகோலா டெஸ்லாவைப் பார்த்தது மிகவும் பொதுவான மற்றும் அவரது அடிப்படை கண்டு பிடிப்புகள் பற்றி இருந்தன.  ஆமாம், உங்கள்  யூகம் சரி. வெளித்தோற்றத்தில் சாத்தியமற்றது, தெரிய வில்லை. ஆனால், இன்னும் முற்றிலும் செய்தபின் தற்க்க அறிவியல், மற்றும் ஆன்மீக அடிப்படையில் டாக்டர் நிகோலா டெஸ்லா கண்டுப்பிடிப்புகள் அனைத்து போல், டாக்டர் நிகோலா டெஸ்லா கண்டுப்பிடிப்புகள் உலகில் மிக விரைவில் நாம் நுழையப் போகிறோம்.

ஹரி ஓம் || ஸ்ரீ ராம்||  அம்பக்ஞ

மூள லேக -