யுக ப்ரவர்த்தக்


|| ஹரி ஓம் ||

ஓம் மனஸாமர்த்யதாத்தா ஸ்ரீ அநிருத்தாய நம:
  அடியேன் அம்பக்ஞ ஆவேன்.
 யுக ப்ரவர்தகர்.
(தலைமுறைகளை மாற்றி புதிதாகத் துவங்கி வழிவகுக்கும் வல்லவர்.) 


      இந்த வருடம் (2008) அநிருத்த பௌர்ணமி(த்ரிபுராரீ பௌர்ணமி என்ற சுபதின வாய்ப்பில் ஏறக்குறைய 24-25 லக்ஷம் (ஸ்ரத்தாவான்கள்) பக்தர்கள் பம்பாயில்(மும்பையில்) ஸத்குரு அநிருத்த பாப்புவை தரிசனம் செய்தனர்.மும்பை,மஹாராஷ்டிரம்,இந்தியாவின் வெவ்வேறு ப்ரதேசத்திலிருந்து மற்றுமல்லாமல்,உலகத்தின் 
மற்ற வேறு தேசத்திலிருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.இந்த பக்தர்களில் நம்மை போல் சாதாரணவர்களோடு,
வைத்தியர்கள்,வழக்கறிஞற்கள்[வக்கீல்க்ள்],இஞ்ஜினியர்கள் முக்கிய அதிகாரிகள்,வாணிகம்,உத்யோகம்,மற்றும் ஸமூகத்தின் வெவ்வேறு தொகுதிகள்,பகுதிகளிலிருந்தும் கலந்திருந்தனர். அநிருத்த பாப்புவின் தரிசனம் பெற வெகுதூறத்திலிருந்து மிக பக்தியுடன்,விஸ்வாஸத்துடன்
வந்தவர்கள் ,பாப்புவின் ஒருகண தரிசனத்திலேயே பரவஸம் அடைந்தனர். 
      
காவி உடுக்கவில்லை, கையிலோ கமண்டலமில்லை,தண்டு கோல் இல்லை,கழுத்தில் மாலையுமில்லை
கையில் ஜப மாலை இல்லை,நெற்றியில் சந்தனமோ,பொட்டோ,திலகமோ இல்லை, இதுமட்டுமல்லாமல் " வியக்கத்தக்க செயல்கள் வெறும் கண்கட்டி வித்தையே (மாயா ஜாலங்களே) என்றுப் பளிச்சென்று சொல்லும் பாப்புவை லக்ஷக்கணக்கான மதிப்பிற்குறியவர்கள்,நன்கு உயர்ந்த கல்வி உடையோரும் கூட ஏன் ஸ்த்குரு என்று பூஜிக்கின்றனர்?
     
அவர்கள் அவ்வப்போது அடைந்த அனுபவங்களினால் அநிருத்தரை ஆண்டவன் (பரமாத்மா) என்றே கருதுகின்றனர்.இவ்வளவு பக்தர்கள் ஜன ஸமுத்திரம் இருந்தும் இந்த உத்ஸவம் மிக ஒழுக்கத்துடனும்,சீராகவும்
சிரப்பாகவும் நடந்தேரியது. வழக்கம்போல் இந்த ஸங்கத்தின் [அநிருத்த உபாஸனா ஃபௌண்டேஷன் ] பல
உத்ஸவ கொண்டாட்டங்களைப் போலவே பாப்புவின் ஒருகண  தரிசனத்திற்காக 7-8 மணி நேரம் க்யூ வரிசையில் அமைதியுடனும் ,ஒழுங்குமுறை கெடாது நின்றுகொண்டும்,சிலர் யுனிவர்ஸல் பாங்க் ஆஃப் ராம நாம் நோட்டில் எழுதிகொண்டும், வித வித ஸ்தோத்திரங்கள்,ஸ்லோகங்கள் ,ஜபங்கள் ,பாராயணங்கள் செய்துவரும் பக்தர்களைப் பார்த்து எந்தவித சாதாரண மனிதனுக்கும் பாப்புவைப்பற்றி அறிய  ஆவல் எழும்.
     
அநிருத்த பாப்பு யார்? செய்முறையில் ஆன்மீகம் என்று சொல்லக்கூடிய் எந்தவித அறிகுறியுமில்லாமல் இருப்பவரை இந்த உணர்ச்சி பொங்க பக்தர்கள் , பாப்புவை ஸத்குரு என்று ஏன் ஏற்றுக்கொண்டனர்?பாப்புவின்
வழி நடத்தலில்,இச்சங்கத்தின் அங்கத்தினர்கள்,தம் குடும்பம்,உத்யோகம் ,முதலியன கவனித்துக்கொண்டும் எவ்வளவு உற்சாகத்துடனும் வெவ்வேறு சேவைகளில் பங்கேற்று செயல்படுவதைக் கண்டு வியககத்தக்கது.
விசேஷ்மாக எந்தவித ப்ரசாரமும் [publicity] இல்லாமல் இருந்தும இன்று பாப்பு அவர்களோடு இவ்வளவு பெரிய ஜன ஸ்முதாயம் ஏன்?.பாப்புவின் குறிக்கோள்தான் என்ன?அவ்ர் என்ன செய்ய விரும்புகிறார்? இதெல்லாம் அவர் ஏன் செய்து வருகிறார்? தெறியாதவர்களுக்கு  இக்கேள்விகள் எழும்.
    
டாக்டர் அநிருத்த  தைர்யதர் ஜோஷி "ஸத்குரு அநிருத்த பாப்பு " பாம்பே யுனிவர்ஸிடி எம்.டி(M.D) மாஸ்டர் ஆஃப் மெடிசின்ஸ் பட்டதாரி, வாதம்,முடுக்குவாதம் விஸேஷ நிபுண வைத்தியர்.தாம் ஒரு குடும்பத்தினராக இருந்து, குடும்பம்,குடுத்தனம்,குழந்தைகளுடன் இருந்து கொண்டே பரமார்த்தம் என்ற
மோக்ஷத்தை அடைய முடியும் என்ற தத்துவத்தை தானே அனுஸரித்து நடைமுறையில் செய்து காண்பித்து இயக்குகிறார். ஆன்மமீகம் என்பது தன் பொறுப்போ,கடமையையோ விட்டுவிட்டு,குடும்பத்தை
த்யாகம் செய்வது, உடம்பில் சாம்பல் பூசியும் ,கமண்டலம் கையில் ஏந்தி ,மாலை அணிந்து ஓடுவது  பரமார்த்தம் ஆகாது. எவனது ஸம்ஸாரத்தில்(குடும்பத்தில்) பற்று,ஒற்று இல்லையோ,அவனது ஆன்மீகமும் அருந்ததே(துண்டித்ததே)  என்ற தத்துவத்தை பாப்பு சீரடி ஸாயீ ஸத்சரிதம் மூலம் விவரிக்கிறார்.

   " வ்யவஹாரத்தில்(ஸம்ஸாரத்தில்),பாதத்தை உறுதியாக ஊனினும்
     பரமார்த்தம் ப்ரயத்னமில்லாமலே கிடைக்கும்
     ஆதலினால் உலகில் ஸோம்பேரித்தனம் இருக்கலாகாது
     புருஷார்த்தத்தில்(தன் நேர்மையான கடமைகளில்) உதாஸீனம் இருக்கலாகாது.(ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம் அத்யாயம் 14/27)

 அர்த்தம்: தன் கடமைகளில் நேர்மை தவறாது இருந்தாலே, பரமார்த்தம் சகஜமாகக் கிடைக்கும்.ஆகையால் க்ரஹஸ்தனின் (குடும்பஸ்தனின்) பொறுப்பிலிருந்து ஓடாதீர்கள்,புருஷார்த்தத்தை செய்து கொண்டிருங்கள்.
க்ரஹஸ்தனின் கடமை தவறாது,மரியாதை புருஷனாக வாழ முயலுங்கள்.
பாப்பு என்ன செய்ய விரும்புகிறார்? . நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்? என்ற கேள்விக்கு பதில் மேலேகிடைத்துள்ளது.பாப்பு ஒவ்வொரு மனித இனத்தை சேர்ந்தவரை ஒரு நேர்மையான ஆற்றல்மிக்க மனிதனாக்க முயல்கிறார். தர்மம் ,கர்மம், மோக்ஷம் அர்த்தம்(ஐஸ்வர்யம்)பக்தியோடு,மரியாதை என்ற ஆறு புருஷார்த்த விதிமுறைகளை ஸித்தி செய்வதே மனித ஜன்மத்தின் முழுக்கடமை யாகும்.க்ரஹஸ்தாஸ்ரமம்(குடும்பம்)  நடத்திக்கொண்டே குடுத்தனம், ஆன்மீகம் இரண்டையும் சேர்த்தே பலன் அடைய மனிதனை மரியாதை புருஷனாக  மாற்ற அநிருத்த பாப்பு "க்ரந்தராஜ் ஸ்ரீமத்புருஷார்த்தம்" என்ற இலக்கியங்களை தன் சொந்த சொற்களில் இயற்றியுள்ளார். க்ரந்தராஜ புருஷார்த்தத்தில் ஒருவன் ஆயுள் காரிய விதிமுறைகளை ஸ்பஷ்டமாக விவரிக்கும் வகையில் பாப்பு கூறுகிறார்."என்னுடைய அன்பார்ந்த நண்பர்களே,நான் உங்களுடைய நண்பன்,தோழன் அநிருத்தன்.என்னுடைய ஒரே ஒரு ஜீவன கார்யம் எது என்றால், இந்த உலகம் முழுதும் புருஷார்த்த ஸாதனையும் ,ஸித்தி செய்வதுமே,மரியாதை புருஷார்த்தத்தை கடைபிடிக்க கற்றுக் கொடுப்பதே.அதை நிலைநாட்டுவதே எனது குறிக்கோள்.மரியாதை புருஷார்த்தத்தை கடைப்ப்டிக்கவில்லையோ அல்லது நிலை நாட்டவில்லை எனில் ராம ராஜ்யம் வராது(ராமர் மரியாதை புருஷர் ஆவார்). அதனால் மரியதை புருஷார்த்தத்தை விதை விதைக்க வேண்டும்.அதை வளர்க்க வேண்டும். அதை காத்துவறும் போதே அதை அளவே இல்லாம்ல் வளற்பதே எனது கோறிக்கை(ஸங்க்கல்பம்).


பாப்புவின் உறையாடல் ஒரு பக்தனுக்கு எப்போதும் ஒரு நண்பன் என்றமுறையில் ஆகும்.பாப்பு தன்னை ஒரு அவதாரப்புருஷன் என்று சொல்லிக்கோள்வ்தே இல்லை. க்ரந்தராஜ புருஷார்த்தத்தில் பாப்பு தன் கையொப்பத்துடன் கூறுகிறார் " நான் உங்கள் நண்பன்,நான் யாருடைய அவதாரமுமில்லை. நான் இதற்கு முன்பு அநிருத்தனாக இருந்தேன், அநிருத்தனாகவே இப்பவும் இருக்கிறேன், அநிருத்தனாக நாளையும் இருப்பேன். நான் ஒரு மாவீரன் . எவரெவருக்கு தன் ப்ராரப்தத்துடன் (கர்மவினைகளின் பலன்களுடன்) போறாட ஆயத்தமோ, அவர்களுக்கு போறாடும் கலையை கற்றுக்கொடுப்பதே என் விருப்பம். க்ரந்தராஜ் புருஷார்த்தம் (மூன்று ப்ரதிகள் அதாவது மூன்று புத்தகங்கள் "ஸத்யஸ்ம்ருதி,ப்ரேம ப்ரவாஸ், ஆனந்த ஸாதனா" என்ற பொக்கிஷ்ங்கள்) அனைத்து க்ரந்தங்கள்,இலக்கியங்களின் ராஜாஎன்று கருதப்படும். இவைகளின் மூலம் ஒரு நண்பனாக உறையாடி, ஆன்மீக வழிகளில் செயல்பட்டு நம் வாழ்க்கை எவ்வாறு வளர்ச்சி அடையலாம் என்பதை  அநிருத்த பாப்பு மிகவும் எளிமையான வார்த்தைகளில் விவரித்திருக்கிறார். நீங்கள் எனக்கு எந்த பேர் வேண்டுமோ கொடுங்கள்,ஆனால் நான் என்னை உங்கள் நண்பனாகவே நினைக்கிறேன். நட்புக்கு களங்கமில்லா நண்பன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக காண விரும்பும் நண்பன். தர்மம் என்ற புருஷார்த்தத்தை விவரிக்கும்போது பாப்பு எப்போதும் சொல்கிறார் "பவித்ரத்தை ( தூயம்,ஸுத்தம்,கற்பு) நாடும் புண்ணியவான்களே அதற்கு தூயமே(கற்பே) சான்று என்ற தத்துவத்தை அடிவாரமகக் கொண்ட ஸத்யம் (உண்மை), ப்ரேமை(அன்பு), ஆன்ந்த்(இன்பம்) என்ற தெய்வத்தின் தன்மைகளே தர்மம் ஆகும்.(சுய) மரியாதை என்ற வழிமுறையே(மார்கமே) மனித நேயத்திற்கு(தர்மத்திற்கு) ஆன்மீக ஐஸ்வர்யத்தை தருகிறது என்று க்ரந்தராஜ புருஷார்த்தத்தில் பாப்பு விவரித்துள்ளார்.
இந்த நம் பாரத தேசத்தின் அனைத்து ஸித்தர்கள், ஸான்றோர்கள்,ஸாதுக்கள்,முன்னோர் கலாசாரத்திலும் பொதுவாக பக்தி மார்கத்தையே (வழிமுறையையே) உபதேசித்தனர். பரந்த மனமுடையீர்- ஸுய நலக்காரர்கள் மத்தியில்  அவரவர்கள் நிலையிலிருந்து அகலாமை, ஸமூஹத்தில் விதண்டாவாதத்தில் முடிகின்றன. ஸமுதாயத்தில் கலவரத்தின் காரணமும் அதுவே. விஞானத்திற்கும் ஆன்மீகத்திற்கும் விரோதமில்லாது அது ஒன்றுக்கொன்று உதவியே செய்கிற்து. இது இரண்டும் சேர்ந்து இருப்பதால்தான் ஸமூகம் முன்னேறும் என்று பாப்பு அழுத்தமாக சொல்கிறார். ஸாயீ ஸத்சரிதம் என்ற இலக்கியத்தின் மேல் "பஞ்சஷீல் பரீக்ஷா" பாப்பு ஆரம்பித்து வைத்தார். அதிலும் பக்தித் தவத்தினை செய்முறையோடு விவரித்து ஒழுங்கு முறைகளை தாமே இயக்கப்படுத்தி உள்ளார். ஸ்ரீமத் புருஷார்த்தத்தில் பாப்பு தமது பஞ்ச(ஐந்து) குருக்கள் பற்றி தெரியப்படுத்தும் வகையில் " தத்தகுரு (த்த்தாத்ரேயர்) என்னை செயல்பட வைக்கும் குரு. காயத்ரீ(அனுஸூயாமாதா) எனது வாத்ஸல்யத்தின் (தாயின் பாசம் போன்ற)  அன்பின் குரு. ஸ்ரீ ராமர் எனது கர்தா குரு(செய்தலுக்கே,செயலே).  ஹனுமான் என்னை ரட்சிக்கும் குரு. சீரடி சாய்பாபா என்னை இயக்கும்(வழிநடத்துபவர்) குரு ஆவர்.ஸமர்த்த ராமதாஸரின் மனாசே ஸ்லோக், பீமரூபீ மஹாருத்ரா ஹனுமான் ஸ்தோத்ரம், தாஸ்போத்,ஸந்த துளஸீதாஸர் ஸுந்தரகாண்டம்,ஹனுமான் சாலீஸா,ஹனுமானின் ஸங்கடமோசன் கவச், இவை அனைத்தின் பெறுமையையும் சிறப்பையும்  பாப்பு பலமுறை வர்புருத்தியிருக்கிறார். பாப்புவுடன் சீரடீ, அக்கல்கோட்(ஸ்வாமி ஸமர்த்த்ர்) ,டேஹூ(துக்காராம்), ஆளந்தி(ஞானேஷ்வரர்),கோவா( ம்ங்கேஷ்-சாந்தாதுர்கா)என்ற பல ஸ்தலங்களின் ரஸ யாத்திரை, பண்டர்பூர்(பாண்டுரங்கன்) பாவ யாத்திரையில் பங்கு கொண்ட பக்தர்கள் அனுபவங்கள் பல உள்ளன. பாப்புவின் இல்லத்தில் கணேஸோத்ஸவத்தில் (விநாயகச்சதுர்த்தி),லக்ஷக்கணக்காண பக்தர்கள பங்கேற்பார்கள். விநாயகர் விஸர்ஜன்(வழிஅனுப்பு விழா) போது ஜன ஸமுத்திரம் அலை மோதும், பக்திப்ரவாஹமாக இருக்கும்.மங்களமான புண்ணிய க்ஷேத்ரங்கள் தரிசனம் செய்வதும்,வழிபாடு செய்வதும் தொன்று தொட்டு பக்தர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இம்மாதிரியான தீர்த்த க்ஷேத்திரங்கள் பட்டியலில் அநிருத்த பாப்புவின் ஜுயீநகர் குருகுல், கர்ஜத்தில் உள்ள கோவித்யாபீடம், ரத்னாகிரியில் இருக்கும் அதுலிதபலதாமம் ,துளே (அவர் மனைவியின் பிறந்த ஊர்), சீரடீ ஸாயீபாபாவின் ஸத்சரிதம் எழுதிய ஹேமாட்பந்தின் வீடான "ஸாயி நிவாஸ்" முதலியன இடம் பெறுகின்றன.மும்பையில் பாந்த்ராவில் இருக்கும் இந்த ஸாயி நிவாஸில் ஹேமாட்பந்தின் பேரன் ஸ்ரீ அப்பா தாபோள்கர், அவர் மனைவி ஸௌ மீனா அவர்கள் இருவர் கரத்தினால் ஸ்ரீ சீரடீ ஸாயிபாபாவின் த்யான மூர்த்தியை அநிருத்த பாப்பு ஸ்தாபனம் செய்து வைத்தார். மும்பை கார் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ அநிருத்த குருக்ஷேத்ரம் பக்தர்களின் பரம உச்சகட்டமான தீர்த்தக்ஷேத்ரமாகும். தீர்த்தக்ஷேத்ரங்களின் க்ரீடம் போலும்.
      
ஸுயந்லமில்லா அன்பு,எந்தவித எதிர்ப்பார்ப்பில்லாத அன்பே ஸ்ரீ அநிருத்தரின் மூல தர்மமாகும் என்பது அவருடன் தொடர்பு  கொண்ட ஒவ்வொருவருக்கும் உண்டு. பாப்புவிற்கு யாரிடமிருந்தும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. எந்த உத்ஸவமோ, கொண்டாட்டமோ, ஏன் குரு பூர்ணிமா அன்று கூட பாப்பு எதுவும் வாங்க மாட்டார்.அவரது ப்ரசநங்கம், உபன்யாஸம் கேட்டு மகிழும் அன்பர்களிடமிருந்து ,நமஸ்காரமோ, கைத்தட்டலோ எதிர்ப்பார்ப்பதில்லை. குடும்ப தர்மத்தை விடாது பக்திமாற்கத்தில் முன்னேற வழிகாட்டும் முறை பாப்பு எளிதான வார்த்தைகளில் சுலபமாக செய்கிறார்.ஒவ்வொரு வ்யாழக்கிழமை பாப்பு குருசரித்திரத்தின் பதிநான்காவது அத்யாயம் படித்துக்கொண்டு ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு அபிஷேகம், பூஜை செய்வார்.அதன் பின்னர் ஆராதனை ஜோதி உபாஸனை செய்வார். பிறகு நாமஸங்கீர்த்தனம் செய்விப்பார்.
    
வரப்போகும் விபரீதமான காலகட்டத்தில் எதிர்கொண்டு ஜெயிக்கவும், அதோடு பக்தர்கள் வாழ்க்கை வளம்பெற  அநிருத்தர் ஆராதனை ஜோதி உபாஸனை(கூட்டுப்ரார்த்தனை) ஆரம்பித்தார். ஏனெனில் பாப்பு சொல்படி பக்தியே, திவ்ய சக்தியாகும். வரப்போகும் சவாலாய் இருக்கப்போகும் காலகட்டத்தை நினைவில் கொண்டு அன்பர்கள் அயலாது விழிப்புணர்வுடன் செயல்பட "மூன்றாவது உலக யுத்தம்" என்ற புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் ஒரு முன் ஜோஸியம் ஆகாது, அதுவே நடந்த இதிஹாஸம் (வரலாறு). ,நடந்துவரும் சம்பவங்கள், முதலியனவற்றின் அன்வயம் ,பகுப்பு அலலது கணிப்பின் மூலம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி நேரலே. இதில் எவ்வாறு முதல் இரண்டு மஹாஉலக யுத்தம் உறுவாகியது, அதன் விளைவு, உலகத்தின் பாதிப்பு, அன்றிலிருந்து இன்றுவரை நடந்து வந்த, நடந்துவரும் நிகழ்ச்சிகளை கணக்கிட்டு, மூன்றாவது உலக யுத்தம் என்பது என்ன? என்றவிளக்கம் அதில் உள்ளது. ரஸாயன யுத்தம்(chemical warfare),கிருமி(புழூ, பூச்சி) யுத்தம் (biological warfare)  ,அணுஆயுத யுத்தம் பற்றிய விவரங்கள் உள்ளன. இதுகுறித்து மூன்று வருடம் முன்பே அதாவது 2006 ஆண்டு மார்கழி மாதம் பௌர்ணமி (தத்த ஜெயந்தி -தத்தாத்ரேயர் பிறந்த தினம்)
முதலில் மராத்தி, ஆங்கிலம் மொழியில் வெளிவந்தன, இதின் ஹிந்தி மொழிப்பெயற்சியும் உள்ளது.இதை ப்படிக்கும்போது படித்தவர்களுக்கு, இந்த புத்தகத்தில் வர்ணித்திருக்கும் சம்பவங்கள் சில நாட்கள், மாதங்கள் முன்பே நடந்து வந்தன ,வருகின்றன என்றரிவார்கள். அதுவே சீனாவின் குருட்டு யோசனையாக இருககட்டும் ,அல்லது வேறு எந்த நாட்டிலும் நடந்தவையாக இரக்கட்டும் ,முன்கூட்டிய  குறிப்புகள் உள்ளன.(உ.தா), இஸ்ராயல் -ஹமாஸ் சண்டை.
  
மூன்றாவது உலக மஹாயுத்தத்தின் பயங்கரத்தை சந்திக்க ஒவ்வொருவரும் எல்லா சவாலை சமாளிக்க  வல்லவனாக இருப்பது அவசியம். பார்துக்கொள்வது படுதோல்விக்கு சமம். ஆக்ரமணமே தன்னை காப்பாற்றிக்கொள்ள சிறந்த முறையே(attack is the best form of defence) என்பது இயல்பான வழிமுறைதான். இதையே முக்கியமாக கருதி பாப்பு தான் பயிற்சி பெற்ற ப்ராசீன(பழங்கால) பலவித்யா,முத்கல் வித்யா, ஸூர்யபேதன வித்யா க்களூக்கு புனர்ஜன்மம் அளித்தார். அதோடு இந்த மூன்றாவது உலக மஹா யுத்தத்தில் மனிதனாலோ அல்லது இயற்கையாலோ நேரிடும் அல்லது நேரப்போகும் அபாயத்திலிருந்து தன்னையும் ,தன் அக்கம் பககம் இருப்பவர்களையும் காப்பாற்றிக்கொள்ள "அபாய அவஸர கால சங்கத்தின் பயிற்சி ஒவ்வொறுவனும் கற்று அறிந்து கொள்ளவேண்டும்  என்று உத்தேசித்து "அநிருத்தாஸ் அகாடமீ ஆஃப் டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட்" (AADM : Aniruddhas academy of disaster management) என்ற பயிற்சி மய்யம் ஸ்தாபித்தார். ஸ்ரீ அநிருத்தரின் 13 புள்ளித்திட்டம் (thirteen point  program) 2002ல் வெளி வந்ததில் இந்த  ஏ.ஏ.டீ,எம் ஒரு அநங்கமாகும். இந்தப்பயிற்சி மிகவும் எளிமையான முறையில் தரப்படுகிறது. இதில் விதவித மான தருணத்தில் தன்னையும், காப்பாற்றிக்கொண்டு, பிறரையும் காப்பாற்றும் முறை(rescue) , இதயத்தை மீண்டும்  இயக்குதல்(உயிற்மூச்சளிதல் CPCR) என்றவை அடக்கம். இதில் தேற்சி பெற்றவர்கள் வெவ்வேறு சம்பவங்கள் போது இன்றியமையாத சேவை, ஸாதனை செய்துள்ளனர். மும்பையில் 26 ஜூலை, 2005ம் ஆண்டு  விடாது பெய்த மழை வெள்ளம்,  ஸாகிநாகா நிலச்சறிவு, குஜராத்தில் பூஜ் நிலநடுக்கம்   11 ஜூலை 2006  ரயில் வெடிகுண்டு ஸம்பவம் ,  2002 காட்கோபர் குண்டு வெடிப்பு  போன்ற எந்தவித அபாய அவசர கால திடீர் நிகழ்சிகளில் ஏ.ஏ.டீ.எம் அங்கத்தினர்கள் பலர் பங்கேற்று உதவிகள் அளித்தனர். இதைத்தவிர, மாண்டர் தேவி, ஜ்யோதிபா, நாஸிக் கும்பமேளா திருவிழா, விநாயகர்  சதுர்த்தி, நவராத்திரி முதலிய பண்டிகைகளில் கூட்டத்தை சமாளிக்கவும் வரிசைப் படுத்தவும் ,கண்காணிப்பு பணியும் செய்கின்றனர். 
          
13 புள்ளித்திட்டத்தோடு அநிருத்த பாப்புவின் போதனைப்படி, வழிமுறைபடி பக்தி கலந்த சேவையும் இயககப்படுகிறது. சென்ற ஐந்து வருடமாக கோல்ஹாபூர் -கரஞ்ஜபேண் ஊர்களில் ஸுகாதாரத்தோடு ,ஆரோக்யம் ,மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் (2008) சுமார் 16300  மாணவர்கள் ,க்ராமவாஸிகளுக்கு ஆரொக்ய பரிசோதனை செய்து மருந்தளிக்கப்பட்டது. சிலருக்கு மூக்குக் கண்ணாடியும் அளிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில். ஈ.சீ.ஜி(ECG), ஸோனோக்ராஃஹ்பி(sonography) , எக்ஸ் ரே(x-ray), முதலியன இலவஸமாக அளித்தனர். பல் பரிசோதனையும் இலவஸமாகவே நடத்தப்பட்டது. 7634 மாணவர்களுக்கு பள்ளிக்கூட உடைகள் இரண்டு ஜோடி(15238) ,விளையாட்டு பொம்மைகள்,தொப்பிகள், செருப்பு ஜோடிகள் முதலியன  அத்யாவஸ்யமாக தேவைப் படுபவர்களுக்கு இலவஸமாக வழங்கப் பட்டது. இதனால் மாணவர்களுக்கு பள்ளி சென்று படிக்க எந்தவித கஷ்டமும் இல்லாது பார்த்துக்கொண்டனர்.

மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட யூனிஃபார்ம் பாப்புவின் ,13 புள்ளித்திட்டத்தின் ஓர் அங்கமான (சர்கா சாலன்) கைராட்டினத்தில் இருந்து வெளிவந்த நூலினால் நெய்யப்பட்டு தயாறானது. இன்று ஏறக்குறைய 4000 கைராட்டினங்கள் மூலம் 1,58,700 கஜம்(மீட்டர்) துணி நெய்யப்படுகிறது .அதிலிருந்து 71376   யூனிஃபார்ம்ஸில் 35683  அத்யவஸ்யமான மாணவர்களுக்கு இலவஸமாகத் தரப்பட்டன. 
    
ஸ்ரீ அன்னபூர்ணா ப்ரஸாதம் என்ற திட்டத்தின் கீழ் க்ராமத்தில் ஆதிவாஸிகள் வஸிக்கும் இடங்களில் பள்ளிமாணவர்களுக்கு தினசரி மதியம் உணவு அளிக்கப்படுகிறது . அங்கத்தினர்கள் தினமும் உணவு தாமே தயார் செய்து மிகவும் அன்புடன் படைக்கின்றனர். இதுவரை மொத்தம்  32 பள்ளிகளில் 3100- மாணவர்கள் பலன் அடைகின்றனர். அங்கு  கோல்ஹாபூரில்  அறங்கேறிய முகாமில் இந்தத்திட்டத்தின் கீழ் சுமார் 40000 மாணவர்கள், க்ராமவாஸிகள் பலனுற்றனர்.

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறையில் இயற்கைக்கு உகந்த திட்டத்தின்படி, விநாயகர் சிலைகள், பக்தர்களால் எழுதப்பட்ட ராம நாமம் நோட்டுப் புத்தக காகிதத்திலிருந்து அங்கத்தினர் செய்து வருகின்றனர். 
இந்த 2008 ஆண்டு சுமார் 3200 பக்தர்கள் பலனடைந்தனர்.

வேறு சில திட்டத்தின் கீழ் குஷ்டரோகவாஸி விடுதிகளில் தினசரி அனனம்,துணிமணி, மருந்து முதலியனவும் , அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கு உதவும் பொருள்கள் , அதோடு அத்யாவஸ்யமான பொருள்கள் வினியோகிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கை வாழும் முறைகள் கற்றுவிக்கப் படுகின்ற. புத்திஸ்வாதீனம் இல்லாதவர்கள் ,மனோவ்யாதி கொண்டவர்கள் ,ஊனமுற்றோர்கள் இருக்கும் நோயகம் மற்றும் விடுதிக்குச் சென்று இந்த திட்டத்தின் கீழ்  அவ்ர்களுக்கு வேண்டிய அத்யாவஸ்யமான
பொருள்கள்  வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இது அனைத்தும்  அநிருத்தரின் ஃபௌண்டேஷன் (நிறுவனம்/சங்கம்) செய்து வருகிறது.
         
2005-2006ஆண்டு பூனாவில் புரந்தரே தாலுக்காவில்  400 -500 பஞ்சத்தினால் வாடிய ஆடுமாடுகள்,குதிரை,எறுமைகளுக்கு சாரா யோஜனா என்ற திட்டத்தின் அடிப்படியில் நாள்தோரும் ஒரு ட்ரக் நிரம்ப நான்கு ஐந்து மாதத்திற்கு ப்ற்றாக்குறை பார்த்து,பார்த்து ஆகாரம் அனுப்பியதால்  பட்டினி த்தீர்வு கண்டது. அதன் பின்னர் பஞ்சம் என்ற பேச்சே அங்கு இல்லை. ஏனெனில் அங்கு பாப்புவின் நிருவன அங்கத்தினரின் உழைப்பினால் ஒரு அணை எழுப்பி நீர் பாய்சனை வழி செய்தனர். 13 புள்ளி த்திட்டத்தில் பழயது தங்கமானது[ Old is Gold]  என்றவகையில் புரந்தரே தாலுகாவில் உலாவந்து அத்யாவ்ஸ்யமானவர்களுக்கு வாழ்க்கைக்கு பயன் படும் பொருள்கள் வினியோகம்  இலவஸமாக செய்யப்பட்டது. இம்மாதிரியான பொதுஜன சேவை, உதவி செயல்படுத்திவரும் ஸ்ரீ அநிருத்த பாப்புவின் நிருவன அங்கத்தினர்களுக்கு பாப்பு தெளிவாக " பக்தியே சேவையின் ஹ்ருதயமாகும் என்கிறார்.நாம் ஆன்மீக, பக்தி சேவையில் ஈடுபட்டுள்ளோம் என்ற எண்ணன்  என்றும் இருக்கட்டும் . பக்தி என்ற வார்த்தை " பஜஸேவாயாம்" என்ற த்ரவ்யத்திலிருந்து உண்டாகியது. அதாவது பக்தி என்றால் ஆத்மார்த்தமாக செய்யப்பட்ட உதவி அல்லது சேவை. சேவை/ உதவியில்லாது  பக்தி பூரணமாகாது, பக்தி இல்லாது உண்மையான சேவை ஆகாது. பக்தியினால் சேவை/உதவியில் அஹங்காரம் வராது. இதையே அநிருத்த பாப்பு அழுத்தமாக ச்சொல்கிறார். முதலில் தான் செய்வோம் பிறகு செய்யச்சொல்வோம் என்ற அடிப்படையில் பாப்பு ஒவ்வொரு செயலும் தான் செய்து பார்த்து பிறகே செய்யச்சொல்வார். இதன் உதாரணமாக பாப்பு தினமும் கைராட்டினம் ஓட்டுகிறார். ராமநாம நோட்டுப் புத்தகம் தாமே எழுதுகிறார்.  ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி, அவர் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கிறார். ஸ்ரீ ஸாயி ஸத்சரிதத்தின் ஒரு அத்யாயம்,ஸ்ரீ குருசரிதத்தின் இரண்டு அத்யாயம் தினசரி பாராயணம் செய்வார்.
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ராமசரிதமானஸ், தத்தபாவனீ, ராமரஸாயன், ஸுந்தரகாண்டம், கோரகஷ்டோத்தாரண ஸ்தோத்ரம், தத்தமாலா, ராம்ரக்ஷா ஸ்தோத்ரம், தினசரி பாராயணம் செய்கிறார்.
       
பாப்பு பலமுறை சொல்வது என்னவென்றால்" எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் "ராமநாம் ஜபத்தை த்தாருங்கள், நான் இந்தப் பொக்கிஷத்தை எனது தத்தகுருவின்  வங்கியில் வைக்கிறேன், எனக்காக இல்லை, உங்களுக்காக, உங்களுக்கு இது எப்போது அவசியமோ, அப்போது பெறலாம். ஆகையினால் கொஞ்சம் நேரம் கொடுங்கள் ,கொஞ்சம் முயற்சியை தாருங்கள். தேவைப்படும் சகோதர சகோதரிக்காக, பகவானின் ஆராதனைக்காக , ஒரு நாளின் 24  மணி நேரத்தில் 24 நிமிடமாவது பகவானுக்கென்று ஒதுக்குங்கள். முடிவில் இதுதான் பலன் தரும். 
      
வரவிருக்கும் மூன்றாவது உலக மஹா யுத்தத்தின் காலகட்டத்தில் இந்த சேர்த்து வைத்த பக்திப்  பொக்கிஷம் தான் நன்மை தரும் ,நம்மைக் காக்கும். பக்தி செய்வது வீரனின் செயல்பாடு, கோழைகளது கிடையாது. நாங்கள் பக்தர்கள் ஆதலால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வேன்,முறை கேடாக இருப்பேன், நமக்கென்ன என்று இருப்பேன் என்பது மொத்தமாக கண்டனத்துக்குறியது. இன்றைய விஞானம்,தந்தர ஞானம் , கம்ப்யூடர் இயக்கம்,இக்காலப் போக்கோடு தம்மை வளர்த்துக் கொண்டும் ஒழுக்கத்துடன்  முன்னேறுவது முக்கியம். மூன்றாவது மஹாயுத்தம் புத்தகத்தில் அநிருத்தர்  வரும் 20-25 வருடகாலம் ,போராட்டமே தினசரி வாழ்க்கை முறையாகும் என்கிறார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த வரும் காலகட்டத்தில் இன்றைய நிலை நாளை இராது. காலை 7.00 மணி உள்ள நிலை        7.05 க்குள் வேறோடு கிள்ளி எறியப்பட்டிருக்கும். ஒவவொரு வருடமும் பஞ்சாங்கம், காலண்டர் கணிக்கப்படுகிறது,அது ஒரு முறையான கணக்கு க்ரஹங்களின் ஸ்தானத்தின் அடிப்படையில்  செய்யப்பட்டது. ஆனால் இந்த மூன்றாம் மஹாயுத்தப் பஞ்சாங்கம் , காலண்டர் இக்கணக்கில் அடங்காது.  தினமும் புதியதாகவே இருக்கும், என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாது.
      
மூன்றாவது உலகமஹா யுத்தத்தில் பாரதத்தின் பங்கே முக்கியத்துவம் பெரும்."அநிருத்தர் சொல்கிறர் "முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் மூன்றாவது மஹா யுத்தத்தின் பின் , எஞ்ஜியோ மிஞ்ஜியோ இருக்கும் உலகத்தை மீண்டும் உயிற்பிக்கும் கடமை பாரதத்தின் ஜாதகத்தில் உள்ளது என்று தோன்றுகிறது."
  
ஸ்ரீ அநிருத்தருக்கு நம்பிக்கையான ஒரு விஷயம் எது என்றால் நஷ்டப்படுத்தும், கஷ்டப்படுத்தும் தீய சக்தி எவ்வளவு பெரிதாக இருப்பினும்  சீர்ப்ப்டுத்தும், உற்பத்தியாக்கும்  நல்ல சக்திக்கு முன் அது  ஒரு தூசி போன்றதே ஆகும். அது பரமேஸ்வரி சக்தி ஆன்மீக தத்துவத்தின் அடிப்படையில் நற்சக்தியையே வழி நடத்தும்.  அனைத்து அன்பர்கள், பக்தர்கள், பாப்புவின் நண்பர்களாக எல்லோரும் சேர்ந்து ,நல்ல வழிமுறையோடு இந்த போராட்டத்தை கடந்து  செல்ல ,முழு உலகத்தையே அழைத்துச் செல்ல ஓர் ஆத்மார்த்த நண்பனாக அநிருத்த பாப்பு நிறந்தரமாக செயல்பட்டு வருகிறார்.

       
ஒரு புதூ யுகத்தை ஆரம்பிக்க ஆயத்தம் கொண்டுள்ளார். அந்த யுகம் அன்பானது,அன்பே உருவானது,மனித தர்மமானதான நண்பர்களது ஆகும். இந்த புதிய யுகத்தின் கனவு, ஸங்கல்பம் தன் கண்ணினால் கண்டு கொள்வது மட்டுமல்லாமல் , அதை நிஜமாக்கும் உறுதி கொண்டு, கஷ்டப்படும் நம் கண்கண்ட தெய்வமான ,யுகத்தை மாற்றி வழி வகுக்கும் வல்லுவரான அநிருத்த பாப்புவின் கோறிக்கையே. 

   " இந்த ஸம்ஸாரத்தை (உலகத்தை) சுகமாக்குவேன்
     மூன்று உலகும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் " என்பது உறுதி என்கிறார் பாப்பு.

                                                            டாக்டர். யோகீந்த்ர ஜோஷி (எழுதியது)

|| ஹரி ஓம் ||

No comments:

Post a Comment