Friday 14 August 2015

இந்திய ராணுவம் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகளை ஒழித்தது,அருகாமை தேசங்களுக்கு எச்சரிக்கை சவால்

இந்திய ராணுவம்  வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகளை ஒழித்தது,அருகாமை தேசங்களுக்கு எச்சரிக்கை சவால் 
ஆம் நமது பாரத  அரசாங்கத்தின் "கிழக்கே பார்"கொள்கைக்கு சற்றே ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியிருக்கும் அதுவே " கிழக்கே செய்ல்படு" என்று மாறியது போலும். ஆம் கடந்த ஐந்து  தினங்கள் அதன் சுருக்கமான விளக்கம் ஆகும். நமது  பாரத ப்ரதமர் பாங்க்லாதேஷ் சென்று சிறப்பான மிக நாட்களாக காத்திருந்த  எல்லைப்பகுதி ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அதுவே ஒரு 41 ஆண்டு  பிறகு கைகூடியது. 
இந்த  இனிய இன்றியமையா , நிலம் பொளக்கும் ஒப்பந்தத்தை ஒட்டி, நேற்று இரவிலிருந்து வானத்தை ப்பொளக்கும்  செய்தியை ஊடகங்கள் யாவிலும்  நம் இந்திய ராணுவம்  வடகிழக்கு எல்லைக்கு அப்பால்  சற்று  ஆழமாக உள்ள  தீவிரவாதி பாசறை , குடியிருப்பு [குகையின்]  மீது அபார தாக்குதல் பற்றி, அலருகின்றது.  ஆம் அது உண்மைதான் . நமது  ராணுவப் படை கொண்ட பாதுகாப்பு படை வண்டி ஒன்றின் மீது  மணிபூரில் கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய அநியாய தாக்குதலில் 18,படை  வீரர்கள் பலியானதை அடுத்து , நமது ராணுவம் 21 பாரா விசேஷக்குழுவை செர்ந்த ,  இந்திய ஏர்ஃபோர்ஸ், கமாண்டோ மற்றும் ,ட்ரோன்களின் உதவியினால் பர்மா மாயன்மார் உள் புகுந்து  இரண்டு தீவிரவாதி அடித்தளங்களை  தாக்கி தரைமட்டமாக்கினார்கள். இந்த அடித்தளங்கள் " நேஷனலிஸ்ட்  சோஷியலிஸ்ட் கௌன்ஸில் ஆஃப் நாகாலாண்ட் [காப்ளாங்க்} என்னும் பயங்கர தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்தது. பல ஊடகங்கள் மூலம்  எனெஸ் சீ என் -கே  வின்  சேதம்  20-50 இருக்கக் கூடும் . இந்த இரண்டு தாக்குதல்களும்  நாகாலாண்ட் , மணிபூர் , மாயன்மாருடன் சேர்ந்திருக்கும் எல்லை பகுதிக்குள் நடத்தப் பட்டது.  முக்கியமாக சொல்லப்போனால் இந்திய ராணுவத்திற்கு ஒரு சேதமும் ஆகவில்லை.
இந்த வீர முயற்சி அரச்சாங்கத்தின் பல ஈதல் இணைப்புகள் ஒன்று கூடி ஒரே சமயத்தில்  செயல்பட்டது  பாராட்டுக்குறியது.    இது இந்திய  துப்பறியும் குழு , தாக்குதலிற்கு இரு நாட்கள் முன்பே மாயன்மாரில் சென்று ஆய்வு செய்ததலிருந்து ஆரம்பம் ஆயிற்று.  அத்துடன் அத்தீவிரவாதிகள்  அடித்தளம் பற்றிய தகவல் புகைப்படங்களுடன்  இந்திய ராணுவத்திற்கு அளித்ததே ஆகும். அதைத் தொடர்ந்து இந்திய வான் படை , ராணுவம் இருவரும் சேர்ந்து ,  மாயன்மாரின் உள்ளே சென்று குறிவைத்த இத்தளங்களை தகர்த்து எறிந்தன. இந்திய ராணுவ வீரர்களை  ஆகாய மார்கத்திலிருந்த்  கீழே இரக்கி,  பிறகு சிறிது தூரம் மண்டி யிட்டு நூற்றுக்கும் மேல் மீட்டர்கள் தவழ்ந்து  தீவிரவாதிகள் தளம் வரை சென்று  தாக்கினார்கள்.  அதன்பின் நமது  வெளித்துரை அமைச்சரகம் மாயன்மாரின்  வெளித்துறையுடன்  அதை  சமாளித்தது. இந்த முக்கிய ராணுவ நடவடிக்கை மேர்க்கொள்ள , நமது தேசிய பாதுகாப்பு அறிவுரையாளர் ஸ்ரீ அஜீத் டோவல் அவர்களும், நமது  பாரத ராணுவத்தின் முக்கிய முகவரும் ஆன டால்பிர் சிங்க் சுஹாக் அவர்களும் மணிபூரில்  தங்கியிருந்தனர்.அஜித் டோவல் அவர்களோ பங்களா தேஷில் முக்கியமான  எல்லை ப்பகுதி ஒப்பந்தத்தில்  கையொப்பம் செய்யவிருக்கும்  ப்ரதமர் மோதி அவர்களுடன் செல்லாது  மணிபூரிலேயே  தங்கிவிட்டார். தால்பிர் சிங்க் சுஹாக் அவர்கள் யூ.கே செல்வதை தள்ளிப்போட்டுவிட்டார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெண்றால்,  இதில் சற்றும் தாமதமில்லாது உடனுக்குடன் பாரதத்தின் உயர்ந்த அதிகார டெல்லியில் உள்ள  அலுவலகமான ப்ரதமர் அலுவலகம் எடுத்த முடிவு .  ஆம் நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து  ஏதாவது எல்லைப்பகுதி தீவிரவாத தாக்குதல்கள்  சந்தித்தும் சமாளித்தும் வந்தது, ஆனால் இத்தகைய அபார செயல்பாடு இதுவரை எந்த உயர்ந்த அதிகாரமும் சாதிக்கவில்லை.  இம்மாதிரியான இயக்கம் இதுவே முதன் முறையாகும்.  இதுவே ஹாட் பர்ஸூட் என்னும் சூடான பின் துரத்தல் ஆகும்.  இது இரண்டு படை அதாவது  வான்படையும்,  ராணுவமும் இணைந்து வெளிதேசத்தில்  செயல்பட்ட முதல் தாக்குதல் ஆகும். 

முதலில்  தேடு பிறகு அழித்துவிடு என்னும் கோரிக்கை ஏற்று , துப்பறிவு தகவல் பலத்தில் செய்த தாக்குதல்.  இந்த இயக்கம் தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்க  நமது விசேஷ படையினர் வடகிழக்கில்  செய்த சாதனை எனலாம். இதை கோட்பாட்டின் அடிப்படையில் செய்த  செயல்பாடு என்றும் விவரிக்கலாம், இம்மதிரியான தாக்குதல்கள் , இச்ராயல் , மற்றும் சி்ல வட நாத்கள் செய்துள்ளன.

தாக்குதல் பின்  நமது பாரத   தலைமை அதிகாரங்கள் , கடுமையான எச்சரிக்கை  நமது அருகாமை தேசங்களுக்கு விடுத்தனர். சீனா, பாகிஸ்தானுக்கும் சவுக்கடி போன்ற விஷயம் ஆகும்.  இன்னும் சில தேசங்கள் பாரதத்திற்கு எதிராக ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கும் நாடுகளுக்கும் ஒரு பாடம் ஆயிற்று. இந்திய ராணுவப்படையின்  டைரக்டர் ஜெனரல் ஃபார் மிலிடரி  ஆபரேஷனின்  மேஜர் ஜெனரல் ரன்பீர் சிங்க் அவர்கள்  " கடந்த சில நாட்களாக

துப்பறியும் தகவல் படி, இந்திய எல்லைக்குள் பல தாக்குதல்கள் நடத்தவிருப்பதாக நம்பகமான ,குறிப்பான தகவல்கள் கிடைத்தன. அதுவே   நம் எல்லை பாதுகாப்பு  படையினரையும்  ,  அதைசேர்ந்த சில  குழுக்களை த்தாக்கவே, இதற்கு முன் இயங்கி வந்த ராணுவத்தை தாக்கிய  அதே சங்கங்கள் திட்டமிட்டு வந்தன.  அதற்காகவே இந்த திடீர்  அபாயத்தை தவிர்க்கவும் , அதேசமயம் தக்க பதிலும்  அளிக்க வேண்டியதாயிற்று.  அவர் கர்ஜித்தார். நம் நாட்டின் பாதுகாப்பிர்க்கோ, பத்திரத்திற்கோ அல்லது  தேசத்தின் ஒருமைபாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகள் முழுதாக முறியடிக்கப்படும் ,  முடிவும் காணுவோம்.  அத்துடன் எல்லை பகுதியின்  மாநிலங்களில் ,நிம்மதிக்கும் சாந்திக்கும் வழி வகுப்போம் என்றார்.
பாரதத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்பு  உப மந்திரியான ராஜ்யவர்தன் சிங்க் ராதோர் அவர்கள் ஊடகங்களுக்கு பதிலளிக்கையில் , இத்தாக்குதல் ப்ரதமர் அலுவலகத்திலிருந்து ஆணையிடப்பட்டது என்றார். ஆம் பாரதம் இவ்வாரு பாகிஸ்தானிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளக்கூடும் என்றார்.   இது பாரதத்திற்கு எதிராக தீவிரவாதிகள் ஏவிவிடும் அனைத்து தேசங்களுக்கும் ஓர் எச்சரிக்கை யாகும். தீவிரவாதி தீவிரவாதிதான் அதற்கு வேரு தடயம் தேவையில்ல. எப்போது வேண்டுமானாலும்  தாக்குவோம்.  எவ்வளவு தூரம் மாயன்மாரினுள் புகுந்தீர்கள் என்று கேட்கையில்  .தீவிரவாதிகள் எங்கு  பத்திரம் என்று பதுங்கியிருந்தனரோ, அவ்வரு  நினைத்தார்களோ அதுவரை புகுந்தோம். மாயன்மார் உதவியுடனா  என்று கேட்கயில். " மாயன்மார் நமது நண்பர்கள் தேசம் ஆகும் அவர்கள் எப்போதும்  ஒத்துழைப்பார்கள் என்றார். ஆகையால் நமது  பரம பூஜ்ய பாப்புவின் பக்தர்களின் சார்பாக நான்  பாரத அரசாங்கத்திற்கு பாராட்டு  தெரிவிப்பதுடன், நம்மை சீண்டினால் பாய்ந்து தாக்குவோம் என்ற கர்ஜனையுடன்  சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.
 ஹரிஓம் ||ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ||

No comments:

Post a Comment