ஹரி ஓம் ஸ்ரீ ராம் அம்பஞ.
அனைத்து பாப்பு பக்தர்களுக்கும் ஒரு நற்செய்தி. வருடம்தோரும் அநிருத்த குருக்ஷேத்ரத்தில் நடந்துவரும் ஹனுமான் சாலீஸா பாராயணம் இவ்வாண்டு அதிக் அஸ்வின் மாதம் , அதாவது திங்கள் 21-09-2020 முதல் ஞாயிறு 27-09-2020 வரை ஏழு நாட்களில் நடந்தேறும். ஆனால் இந்த கோவிட் இடையூறுகளினால் அதுவே குருக்ஷேத்திரத்தில் நடக்க இயலாது. ஆகையால் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஒலிப்பதிவை உபயோகித்து , அநிருத்தா டீ.வி, பேஸ்புக் , யூ ட்யூப் , அநிருத்த பஜன் ம்யூசிக் ரேடியோ மூலம் இந்த பாராயணத்தின் பலன் பக்தர்கள் பெற ஏற்பாடுகள் செய்யவிருக்கிறோம்.
இப்பாராயணத்தில் பக்தர்கள் அவரவர்கள் வீட்டிலிருந்து ஒரு நாள், இரண்டு நாள் , ஏழு நாட்களும் கலந்து கொள்ளலாம்.
எப்போதும் போல் ஒவ்வொரு நாளும் 2 அணிகளாக அதாவது "ஏ" அணி "பீ" அணி என்று பிரிக்கப்பட்டு , அதில் ஏதாவது ஒரு அணியில் பங்கேற்க பக்தர்கள் அவரவர் பெயரை பதிவு செய்யலாம்.
பாராயண அட்டவணை கீழ் வருமாறு.
தினம் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 8.15 க்கு முடிவடையும்.
இப் பாராயணத்தில் பங்கேற்க அவரவர் பெயர் பதிவு செய்ய வெப்ஸைட் இணைப்பு - https://pathan.aniruddha-devotionsentience.com
மில் பதிவு செய்து கொள்ளலாம். நேற்று ஞாயிறு 13-09-2020 லிருந்து பதிவு செய்ய திறக்கப் பட்டுள்ளது.
அவ்வாறே பக்தர்கள் ஒரு நாள் முழுதும் பாராயணம் செய்ய இயலாதவர்கள் அவரவர் வசதிக் கேற்ற அவகாசத்திலும் பதிவு செய்து பங்கேற்கலாம்.
பங்கேற்கும் பக்தர்களுக்கு உணவு, மற்றும் உடை விதிமுறைகள் ஏதும் இல்லை. ஆனால் அசைவம் தவிர்ப்பது நல்லது.
சத்குரு அநிருத்த பாப்பு வினால் அளிக்கப்படும் இந்த வாய்ப்பின் பயனை அனைத்து , அதிகளவு அன்பர்கள், பக்தர்கள் , ஷ்ரத்தாவான்கள் அடைய வேண்டுகிறோம்.8
ஹரி ஓம் ஸ்ரீ ராம் அம்பஞ
நாத்ஸம்வித் நாத்ஸம்வித் நாத்ஸம்வித்
ஸமீர்ஸின்ஹ் தத்தோபாத்யே.
11/09/2020
No comments:
Post a Comment