Monday 1 July 2013

தாரீ தேவியின் சீற்றம்

                                                                  || ஹரி ஓம் ||


[தமிழில் தாரை என்றாலே ப்ரவாஹம் என்பது பொருள் அதுவே சம்ஸ்க்ருதத்தில்  தாரா.இங்கு தேவியின் பெயர் தாரி தேவி என்பதை கவனிக்கவும்] 

சார்தாம் யாத்ரா என்று சொல்லப்படும் நான்கு தாமங்கள்[புண்ணிய ஸ்தலங்கள்]  யாத்திரையின் சமயம் பக்தர்களை  ஸம்ரக்ஷணை செய்து  காப்பவள் "ஸ்ரீ தாரீ தேவி" என்று நம்பபடுகிறது.ஆதலால் உத்தரகாண்டத்தில் ஸ்ரீநகரில் அலக்நந்தா நதி தீரத்தில் அமர்ந்திருக்கும் " தாரீ தேவியின்" ஆல்யத்தை[ கோவிலை] அரசாங்கம் வீழ்த்த வேண்டாம் என்று கடந்த இரண்டு வருட காலமாகஅங்குள்ள குடிமக்கள் விண்ணப்பித்து வந்தனர். அலக்நந்தா நதியின் ப்ரவாஹத்தை அடக்கி ஆள்பவள் "தாரீ தேவியே"  அவளது அருளால் அலக்நந்தா கட்டுப்பாட்டில் இருப்பதனால், அலக்நந்தா ஸௌம்யமாக சாந்தமாக இருக்கிறாள் என்று அங்குள்ள ஜனங்களின் நம்பிக்கை இருந்தது.ஆகையால் அப் ப்ரதேசத்து தார்மீக சங்கங்களிலிருந்து சாதாரண குடி மக்கள் வரை, அரசாங்கத்திடம் அவ்வாரு முடிவெடுக்க வேண்டாம் என்று வேண்டி வினவினர், கெஞ்ஜினார்கள். ஆனால் முன்னேற்றத்துக்கு மின் வசதி தேவை என்று, இந்த வேண்டுகோளை அரசாங்கத்தினர் நிராகரித்தனர். ஜூன் 16, மாலை 6 மணிக்கு [விளக்கேற்றும் சமயம்] "தாரீ தேவியின்" ஆலயம் வீழ்த்தப்பட்டது. கோயில் உள் குடி கொண்டிருக்கும்  தேவியின் சிலையும் இடம் மாற்றப் பட்டது. 


அதே சமயம் கேதாரநாத்தில்  பெரும் " மேகவெடிப்பு" [cloud burst} ஏர்ப்பட்டு அதைத்த்தொடர்ந்து  இரண்டு மணி அடித்த பலத்த மழையில் சாமான்ய வாழ்க்கை சின்னாபின்னம் ஆயிற்று. நான்கு தாமங்கள் யாத்திரையில்  வந்த பக்தர்கள் இங்கு கேதாரநாத்தில்  சிக்கிக்கொண்டனர். அடாத மழை விடாது பெய்ததாலும், அங்கங்கே நிலச்சரிவுகளினாலும் இங்கு சிக்கியிருக்கும் பக்தர்களை கஷ்டமில்லாது  சௌக்கியமாக்  வேளியேற்றும் பணி சவாலாக,  முடியாத ஒன்றாக இருந்தது.  அத்துடன் நிலவரம் மோசமாக மாறி வந்தது. இம்மாதிரியான அபாய நிலைக்கு க்காரணம் யார் என்று தேடி," மக்கள் செய்தி வாயில்கள் ,ஊடகங்கள் பல  பொருப்பேற்று செயல்படுகின்றன. உத்தராகாண்டம் பேரிடர்  அபாய சம்பவத்திலும் அவ்வாரே ஆயிற்று, இதில் பலியானவர்கள், சிக்கியிருப்பவர்கள் எண்ணிக்கை செய்தி தரும் தருணம்   , கடைசியில் சுற்றுச்சூழல் நிலவரம் கவனிக்காது அவசரமாக ,முட்டாள்தனமாக  அரசாங்கம் இயக்கிய உத்தேஸ, உபாயம் திட்டத்தினால்தான்   ஆயிற்று என்று ஒரு முடிவுக்கு வர,  அம்மாநில அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் { புட்டு புட்டு வைத்தனர்} பல தொலைக்காட்சி செய்தி வாயில்கள் பகிரங்கமாக,கணடனம் செய்து  வெளிப்படுத்தினர். இது அனைத்தும் ஒர் அளவுக்கு ஒப்புகொண்டாலும் அங்குள்ள மக்கள் வீழ்த்தப்ப்ட்ட "தாரீ தேவியின்" ஆலயத்தை  க்காட்டி தமது துக்கத்தை தெரிவித்தனர்.

கடந்த 800 ஆண்டுகளாக தாரீதேவியின்  ஆலயம்  இந்த இடத்திலேயே இருந்தது. இது பழங்கால ப்ராசீன சித்தர்பீடமாக கருதப்படுகிறது ".தாரீதேவி காளிகாம்பாளின்" ஒரு அம்சம் என்றும் நம்புகின்றனர். இந்த சித்தபீடத்தின் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது என்று  ஆவணங்கள் தெரிவிக்கின்றன. உத்தராகாண்டத்தில் [வடக்குப்ரதேசம்] இருக்கும் ஸ்ரீநகரில் [ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அல்ல, அது வேறு]  காலியாஸுர் என்ற க்ராமத்தில்  அமைந்த  "தாரீதேவியின்"  ஆலயம்  அங்குள்ள அன்பர்களின் நம்பிக்க்கைக்குறிய  இடமாகும் [ஸ்ரத்தா ஸ்தானமாகும்]. தாரீதேவியின் விக்ரஹம் உக்ரமாக[ கோபமாக]  இருந்தாலும், தேவி மேற்கொண்ட உக்ரகோலம் நம் யாவரையும் தீய சக்தி, விபத்துகளிலிருந்து காப்பாற்றவே என்று அங்குள்ளவர்கள் பரம்பரை பரம்பரையாக புரிந்து கோண்டதேயாகும். அதை ப்பற்றி சரித்திரவரலாற்றில் கதை கூட உள்ளதாம். 1882ம் ஆண்டில் ஒரு புத்திகெட்ட ராஜா இந்த ஆல்யத்தை அவ்வாரே தொந்தரவு செய்தபோது , அப்போதும் பயங்கர  இயற்க்கை சங்கடம் ஆயிற்று. ஆகையினால் காப்பற்றும் காளி  தேவியான "தாரீ தேவியின் மேல் கொண்டுள்ள அசையா பக்தி என்பதில் ஆஸ்சர்ய்ம் இல்லை.

இந்த  ஆலயத்தை அரசாங்கம் வீழ்த்தினாலும் அதன் பயங்கர பின் விளைவு நாமே  அனுபவிக்க நேரிடும் என்று அங்குள்ளவர்கள் நன்கு அரிவார்கள்.  ஆனதும் அவ்வாரே. "தாரீ தேவியின் ஆலயத்தை தரைமட்டம்  ஆக்கிய  சில மணி நேரத்துக்குள் பலத்த ப்ரளயம் போன்ற மழை, கங்கையின் உப நதியான அலக்நந்தா ருத்ராவேஸத்துடன் சீறி ப்பாய்கிறாள், அது ஒரு சாதாரண நிகழும் சம்பவம் அல்ல என்று பகதர்கள் நம்புகின்றனர். அந்த ப்ரதேசத்தின்  ஊடகம் மூலம் ஜனங்களது கோரிக்கை வெளிஆயின. தார்மீக சங்கங்கள் தாரீதேவியின் ஆலயம்  தகர்த்த அரசாங்கத்தை கடுமையாக  கண்டனம் தெரிவித்தனர்.  உத்தர காண்டத்தில் சுற்றுச்சூழல் பற்றி சற்றும் யோசிக்காது ,கவனிக்காது, பொருட் படுத்தாது , அலட்சியம் செய்து  பல நூற்றுக்கணக்கான,  திட்டங்கள் மத்திய அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. தாரீ  தெவியின் ஆலயத்தை தகர்த்தி அங்குள்ள அலக்நந்தா நதிமீது அணைகட்டும் திட்டமும் அதில் ஒன்றாகும். வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு சாதாரணமாக அங்குள்ளவர்கள்  எதிர்ப்பு வரும். தாரீ தேவி ஆலயம் தகர்ப்பதற்கு எதிர்ப்பும் அவ்வாரே என்று அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதே காரணத்தினால் பக்தர்களின்  ஆலயத்தை  சம்பந்தப்பட்ட  ஸ்ரத்தை, மனோபாவத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை, அதை அவசியம் என்று கருதவில்ல. அதோடு எந்த ஸ்ரத்தை மனோ பாவத்துடன் இந்த நான்கு தாமம் யாத்திரை செய்து வரப்படுகிறது என்ற அந்த பக்தி ஸ்ரத்தைக்கே  இத்திட்டங்கள் இடையூராக இருக்கும் என்பதை திட்டமிட்டவர்களே,   மரந்தேபோயினர். அதற்க்கு பயங்கரமாக ஈடு கட்ட நேரிடும் என்று  அங்குள்ளவர்கள் உணர்ந்தனர். ஆன்மீகம், தர்மத்தில் நம்பிக்கையில்லா சுற்று சூழல் குழு, கழகங்கள்,சங்கங்கள்  கூட இந்த அணைக்கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் அரசாங்கம் சுற்றுசூழலையும் அலட்சியம் செய்து, ஆன்மீக மக்களின் ஸ்ரத்தா பாவத்தையும் பொருட்படுத்தாது அலக்நந்தாமீது அணைக்கட்ட தீர்மானித்தது.

 தாரீதேவியின் ஆலயத்தை தரைமட்ட மாக்கியதால் மட்டும் இது நடக்கவில்லை, சுற்றுசூழல் காரணங்களே என்று நம்புவோர்க்கு   கூட, 800 ஆண்டு புராதன ஆலயத்தை தகர்த்த .அரசாங்கத்தின்   பிடிவாதம் பிடிக்கவில்லை. இந்த அபாயச்சம்பவம் நேர்ந்திராது, அப்படியும் அரசாங்கம் ஜனசமுதாயத்தின் மனோபாவத்தை புரிந்து கொள்ளாமல், சொரணையற்ற, உணர்வே இல்லாது செயல் பட்டது , அயோக்கியத்தனத்தையே குறிக்கிறது. மின்சாரத் திட்டங்களின் அடிப்படையில்  "தெய்வ பூமி" என்று கருதப்படும் ஹிமாலயத்தில் , அம்மலை ப்ரதேசத்தில் மத்திய அரசாங்கமும், மாநிலை அரசாங்கமும்  செய்து வரும் அராஜகம் , ஆன்மீக ஸ்ரத்தை பாவத்துடன் , சுற்றுச்சூழலையும் அலட்சியப்ப்டுத்துவது தெளிவாகிறது.


கங்கையின் ப்ரவாஹத்தின் மீது கட்டப்படும்  அணைகள் , மின் உர்பத்திக்கு வசதியாக இருக்கும்  ,என்று  அரசாஙகத்தின் கருத்து, ஆனால்  அது கங்கையின் ,பண்புக்கும் தர்மத்திற்கும் இடையூரு என்றரியவில்லை. இதனால் கங்கை சூழல் சீர்க்கேடாகிறது , என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. இது வெரும் ஆன்மீகம் ஸ்ரத்தை சம்பத்தப்பட்ட விஷயமில்லை. அப்படி இருக்கையில்  பாரத வாசிகளின் ஜீவனம் இந்த நதிகளை நம்பியிருக்கிறது என்பது அரசாங்கம் அரியாதா? சொல்லித்தரவேண்டுமா? சுற்றுச்சூழல் சீர்கெடும் அபாயம்  பற்றி விவரிக்கும் போது  பாரதீய  தர்ம  கலாசாரத்திலிருந்து , நிதிவசதி வரை பாரதவாசிகளின் வாழ்க்கயின் ஒவ்வொரு அடியிலும் ,வாழ்க்கயின் அனைத்து ப்பகுதியிலும்   அங்கமான நதிகளின் விஷயத்தில் அரசாங்கம் என்ற யந்திரம் இவ்வளவு பொருப்பில்லாது கேவலமாக நடந்து கொண்டது ஏன்? என்ற கேள்வி உத்தரகாண்டத்தின் இந்த அபாயத்தினால் எழுகிறது. அரசாங்கத்தின் கருத்தின்மை, அசட்டைத்தனம், பொருப்பின்மை {எந்த பெயர் உரிச்சொல்லால் [adjective]}  வர்ணிப்பது. பூரணமாக சுதந்திரமுடையது என்று கருதப்படும் கணிஇயல்களில் இயங்கும் இன்டெர்னெட் ஊடகவாயிலாக  அரசாங்கத்தின் பொருப்பில்லாமையை  கண்டனம் செய்து தாக்கியுள்ளனர். 

சமூக சம்பந்தமான வலைவேலை[பிணயம்]  {உதா..ஃபேஸ்புக்} போன்ற வற்றிலும் அரசாங்கத்தின் உணர்வற்ற [சொரணையற்ற] செயலை கணடனம் செய்து தம்தம் கருத்துகளை வெளிப்படுத்தி விமரிசனம் செய்து வருகின்றனர். இந்த ப்ரளயம் தாரீதேவியின் ஆலயத்தை வீழ்த்தியதால் ஆகியிருக்குமோ என்ற சந்தேகக் கேள்வி கிள்ம்பியிருப்ப்தோடு , இதன் இணைப்பில் கட்டுறைகளும் வெளியாகின்றன. அதேசமயம் கங்கா நதியை தேசிய நதியாக்க நமது ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பம் சென்றிருக்கிறது. பாரத தேசத்தின் கலாசாரத்தின் அசாதாரண நிலை கொண்ட இந்த இமயத்தின் நதிகளின், தகுந்த முரையில் சுற்றுச்சூழலை பாது காக்கவேண்டும் என்று வேண்டி,  வெரும் ஆன்மீக , தர்ம காரியதரிசி மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழல்காரர்கள் அவ்வளவே விஸ்வாசத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் இதை கண்டுக்காது இருக்கமுடியாது.

மக்களின்  மனோபாவத்தையும் வேண்டுகோளையும் பொருட்படுத்தாது , அலட்சியம் செய்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பிறகு அதன் பின் விளைவுகளை சந்திக்க தைரியம் இல்லாது ,தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று விலகி இருக்கலாம் என்ற கர்பனையில் , மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இருந்துவிடக்கூடாது.  தாரீ தேவி ஆலயத்தை தரைமட்டம் ஆக்கிய்தும் நிகழ்ந்த ப்ரளயம், அதில் உயிரிழந்தோர்களின்  உற்றார் உறவினர்களுக்கு நிதி உதவி  அறிவிப்பதாலோ, அல்லது புதிய திட்டங்கள் அறிவிப்பதாலோ , இழந்தவைகளுக்கு ஈடு ஒருபோதும் ஆகாது. ஜனங்களின் ஸ்ரத்தையை ,நம்பிக்கையை  முரிஅடிப்பது முன் , அதன் பின் விளைவுகள்  எவ்விதமாவது ப்ரதிபலிக்கும் என்று  அரசாங்கம் நினைவில் வைத்திரல் வேண்டும். கட்டுகடங்கா நதிகளும், சீற்றம் கோண்ட சமுத்திரம், கோபமுற்ற  இயற்கையின்முன் விஞானம் எதுவும் செய்ய இயலாது, விஞானிகளுக்கு எந்தவித வழியும் கிடைக்கவில்லை,தெரியவும் இல்லை. ஆகையால் வினாசத்தை வரவேர்கும் "அதர்ம வளர்ச்சிகளை"  அரசாங்கம் உடனே  நிருத்தவேண்டும். கோபமோ, சீற்றமோ ,இயற்கையோ, தெய்வீகமோ என்பதை  விவாதிக்காமல் தமது தப்பை உணர்ந்து,  அதை சரிப்படுத்த, துரிதப்படுத்த அரசாங்கம் செயல்பட வேண்டும். அவ்வாரே செய்தால்தான் அரசாஙகத்திற்கு உணர்ச்சி கொஞ்சனஞ்சம்  இப்பவும் உள்ளது என்றும், இழந்த நம்பிக்கை மீட்க உதவலாம். இல்லையெனில் இம்மாதிரியான பெருத்த அபாய ச்சங்கடங்கள் சமயம், அரசாங்கத்திற்கு,  தெய்வகுற்ற கோபம், இயற்கையின் கோபம் மற்றும் ஜனசமுதாயத்தின் கோபம் மூன்றிர்கும் பலியாக வேண்டியிருக்கும்.
ஸித்தார்த்த நாயிக் எழுதியது

- ஸித்தார்த்த நாயிக் எழுதியது


                                                                || ஹரி ஓம் ||
No comments:

Post a Comment