Wednesday 26 November 2014

டாக்டர் டெஸ்லாவின் ஐரோப்பா பயணம்.

Dr. Nikola Tesla’s Journey to Europe!

கடந்த , கட்டுரையில் டா,டெஸ்லா எவ்வாறு டெஸ்லா காயில் தயார் செய்தார் என்பதை பார்த்தோம் , அத்துடன் ஆராய்சிகளினால்  மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்க அரும் பாடு பட்டார். திடீர்விசை த்தூண்டுதல் மின் சக்தியை காற்றில் ஏவவும் ,  பரப்பவும் காரணம் ஆகும் என்று நம்பினார்.  இந்த திடீர்விசைகளினால் மின் சக்தி அக்காயிலினிருந்து அலைகளாக வராமல் கிரணங்களாக வெளிவருகின்றன.   டா.டெஸ்லா அந்த கிரணங்கள்   ஆகாய இடைவெளியில் தீர்கரேகையாக வருவதைக்கண்டார். அவர் அவரது ஒரு பட்டயத்தில் "ஒளி போன்ற கிரணங்கள் என்று வர்ணித்திருக்கிறார். இந்த கண்டுபிடிப்பு அவரது வருங்கால புதுமை ஆராய்சிகளுக்கு வழி வகுத்தது.   
டா.டெஸ்லா நம் இயற்கை த்தாயும் இந்த திடீர்விசை தூண்டுதல்  [ஆங்கிலத்தில் இம்பல்ஸ்] அடிப்படையில் இயங்குகிரது என்பதை உணர்ந்தார். இயற்கை , பலவித திடீர்விசை களை  வெள்ளமாகக் கொண்டது. அது மின்னலாக இருக்கட்டும் , நமது மூளையின்  நரம்பு செயல்பாடுகளாக இருக்கட்டும் , திடீர் யோசனைகள் , எல்லா வித சக்தி அசைவுகள் , திடீர் விசையின் உதாரணங்கள். டா.டெஸ்லா இது அனைத்தோடும் ஆண்டவன் தொடர்பு  கொள்ளும் வழியாகவே நினைத்தார் [ அது ஜீவன் உள்ள , இல்லாத ஜடப்  பொருளும் அடக்கம்].  அவர் இந்த இம்பல்ஸ் ப்ரபஞ்சத்தின்  இயற்கையிலும்,  ஆன்மீகத்திலும் , பக்தியிலும் இருக்கிறது என்பதை ப்பார்த்தார். அவர் தன் வேலகளையும் , கண்டிபிடிப்பும் அனைவருடன் எந்தவித சந்தேகம் இல்லாது தெளிவாக பகிர்ந்து கொள்வார்..அவர் வழக்கமாக அவரது புதுமை ஆராய்சி கண்டுபிடிப்புகளை பத்திரிகைகள் வெளியீடுகள் மூலமாகவும் , பத்ரிகையாளர்கள்  கலந்தாய்வு மூலமாகவும் பகிர்ந்து கொண்டார்.  அவ்வாரே அவரது பரிசசோதனைப் பற்றிய தகவல்கள் அறிவியல் வர்தக நாளேடுகளில் [ டெக்னிகல் ட்ரேட் ஜர்னல்] வெளியிடப்பட்டன.  டா.டெஸ்லாவின் புகழ் , பெயர்  அங்கங்கே பரவியது.  மக்கள் வருங்கால திட்ட்ங்களைப்பற்றிய விஷயங்கள் அறிந்து பூரித்துப்போயினர்.  ஜூலை 31 , 1891 ஆம் ஆண்டு  டா,டெஸ்லாவிற்கு அமெரிக்க குடிமக்கள் உறிமை கிடைத்தது.  ஜூன் 6,1884 ல் அவர் ந்யூயார்க் வந்தடைந்தார் , அவர் கையில் நான்கு தம்புடி காசே இருந்தது. ஏழு ஆண்டு பிறகு அவர்  அமெரிக்காவின் அதிகாரம் சார்ந்த அமெரிக்காவின் இயற்கை குடிமகன் ஆனார்.அவரது பெயர் விஞான உலகத்தில் பரவலாக ஊனத்தொடங்கியது. டா.டெஸ்லா தனது விஞான கௌரவத்திற்கு மேல் அவரது அமெரிக்க குடியுறிமையை மேலாகக் கருதுவதாக அவர் நண்பர்களிடம் சொன்னதுண்டு. அதற்கிடையில் டா.டெஸ்லா , லார்ட் கெல்வின் [லார்ட் வில்லியம் தாம்ஸன்]  இடமிருந்து  லண்டனின் ராயல் சொசைடி யில் ப்ரசங்கம் செய்ய வேண்டி அழைப்பிதழ் பெற்றார்.   

  

டா.டெஸ்லா  ப்ரசங்கங்களுக்கு தன்னை தயார் செய்து கொண்டார். தன்னுடன் தமது லண்டன் ராயல் சொசைடி அங்கத்தினர்களுக்கு நேர்முக செயல்முறை விளக்கங்களுக்கு தேவையான அனைத்து யந்திரங்கள், பொருள்கள் கொண்டு சென்றார். அவர் தனது விளக்கத்தை முதலில் தனது மாறுதிசை மின் சக்தியுடன் ஆரம்பித்து உயர்ந்த வால்டேஜ் ,உயர்ந்த வதிர்வெண் [ஃப்ரீக்வென்ஸீ] பற்றி சொல்லிவிட்டு , கம்பியில்லா  கதிர்வீசல் மின்சக்தி அதன் தன்மைகளை  அங்கத்தினர்களுக்கு செய்துகாட்டி விளக்கினார். அவர் அதேசமயம் இருளில் ஒளியாக இருக்கும் விளக்குகள், ட்யூப் லைட்கள் கம்பியில்லாது அவர் கையிலேயே எரியவிட்டு க்காட்டினார். அவரது  அழுத்தமான உறுதியாக உறைத்த குரல் அங்கத்தினர்கள் அமைதியின் மத்தியில்  தெளிவாக ஒலித்தது. அங்கத்தினர்கள் அனைவரும் அதிசயித்தனர்.  

கம்பியில்லா விளக்குகள்  கதிர்வீஸு மின் சக்தியினால் முழு ப்ரகாசத்துடன் எரிவதை செய்து காட்டினார் . அவர் சில சிறிய மோட்டார்களும்  சிறிது தூரத்தில் கம்பியில்லாது இயக்கமுடியும் என்பதையும் ஓட்டி காட்டினார். எவரெவர் டா,டெஸ்லாவின் அனைத்து பரிசோதனைகளும் கண்டனரோ வியப்பல் திகைத்தனர்.

ப்ரிசோதனைகளை விவரிக்குமாறு சில பொறியியல் நிபுணர்கள் கேட்கவே டா.டெஸ்லா மிகத்தெளிவாக விளக்கியும்   ; அதை மறுபடி செய்து காட்ட டா.டெஸ்லா கேட்க அதை ஒரு சிலரால்மட்டுமே அதை செய்து காட்டமுடிந்தது.  டா.டெஸ்லா    சில மாதங்கள் ஐரோப்பவில் தங்கியிருந்து , இதேபோல் ப்ரசங்கங்களும் பரிசோதனைகளும் செய்து அவரது மாறுதிசை மின் சக்தி விதிமுரைகள் பற்றி  விளக்கி வந்தார்.  அவர் பல விஞானிகளையும் சந்தித்து அவர்களது  பல சாதனைகள் பற்றியும் அறிந்து கொண்டார். அவர் எப்போதும்   இதர விஞானிகளின் ஆற்றல் அறிந்து மதித்தார் , அவர்களது புதிய நுடபங்க ளை  கற்றுக்கொண்டு அதன் அதிசய சம்பவங்கள் பற்றி ஆராய்வார். இதிலிருந்து  டா டெஸ்லாவின்   பறந்த மனத்தை  காட்டுகிறது. 

ஐரோப்பிய பண்டிதர்களுக்கு டா.டெஸ்லாவின்  ப்ரசங்கங்களும் , பரிசோதனைகளும் வியப்பூட்டினாலும் , அது வருங்கால புரட்சியாக கருதினார்கள்.
ஆகையால் சிலரே  எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓர் இரவு அவர் பேரிசில் இருந்த சமயம் அவரது தாயாரின் உடல்நிலை சரியில்லாதது பற்றி தந்தி வந்தது . அவர் அவரது ஐரோப்பா பயண வேலைகளை அப்படியே விட்டுவிட்டு படுத்த படுக்கையாக இருந்த தாயாரின் அருகில் இருந்தார்.  அவள் அருகில் இருந்து கொண்டு ஒரு சில மணிநேரமே உறையாடி இருக்க வேண்டும். அவர் தாயார் மிகக்கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் டா.டெஸ்லாவைக் கண்டு மகிழ்ச்சியுற்றார் அவர் அவரை , நீ வந்து விட்டாயா என் கண்ணா நிட்ஜோ என் கௌரவமே" என்று வரவேற்றி  வாழ்த்தினார். அவர் , அவர் தாயார் அருகில் வெகு நேரம் இருந்தார். அன்று இரவு அவர் சரியாக தூங்கவில்லை , டா.டெஸ்லா அந்த அனுபவத்தை  அவரது வார்த்தைகளில் வர்ணித்தது பின் வருமாரு.   இரவு முழுதும் எனது மூளையில் உள்ள ஒவ்வொரு பாகமும் எதிர்பார்ப்பினால் துடித்து களைத்தன. ஆனால் அதிகாலைவரை ஏதும் ஆகவில்லை . சிறிது கண் அயர்ந்த போது ஒரு தேவதை போன்ற  அழகான மேக அமைப்பு செல்கையில் அதில் இருந்த  ஒன்று என்னை அன்பாக பார்த்தது ,  அதுவே என் தாயாரின் உருவமாக மாறியது.  இந்த கனவிலிருந்து திடீரென்று விழிக்கையில் அவர் அவரது தாயாரையே அந்த உயரச்செல்கின்ற மேகமாக இருப்பாள் என்று நம்பமுடியவில்லை. சிறிது நிமிடங்களில் தாயாரின் உயிர் பிறிந்த தகவல் கிடைத்தது ,ஜூன் 1 ,1892 தாயார் ட்யூகா டெஸ்லா  காலமானார்.

டா.டெஸ்லாவை  ,தாயாரின் மரணம் கடும் துக்கத்தில் ஆழ்த்தியது. அவரது தந்தை 1879ல் காலமானார். டா.டெஸ்லாவின் வயது இருபத்து மூன்று. பதிமூன்று வருடங்கள் பின் தாயாரையும் இழந்தார். டா.டெஸ்லா அவரது தாயாரை மிகவும் விரும்பினார் , ஏனெனில் அவர் தாயாரே அவரது அதிசய ஆற்றலைப்பற்றி முழுமையாக புரிந்து கொண்டிருந்தார்.    

அவர் தாயாரே  சிறு வயதில் டா. டெஸ்லாவின்  எண்ணத்தை தெரிவித்தபோது  அவருக்கு ஊக்கமளித்தார். அவரது நண்பர்களும் சொந்தக்காரர்களும் ஏளனம் செய்த பொழுது அவர்  தாயாரே அவருக்கு ஒரே  துணை, ஆதாரமாகவும் இருந்தார்  . ஒரு வாரம் தாயரின் இருதிச்சடங்குகளுக்கென்று  அவரது க்ராமத்தில் துக்கத்தில் துடித்து கழித்தார்.  அந்த அதிர்வில்  நோய்வாய்ப்பட்டார். அவர் முழுமையாக குணமடைய இரண்டு மூன்று  வாரங்கள் ஆயின.  தாயாரையிழந்த  டா.டெஸ்லா விற்கு தற்போது ஒரே ஒற்  துணை கடவுளே  ஆவர்.  கடவுளும் அவரது தாயாரான மேரிமாதாவும் தான். டா.டெஸ்லாவின் கடவுள் மேல் கொண்ட அசையா பக்தி அவரை பல கஷ்டமான   நிலையிலிருந்து காப்பாற்றி வந்தது.  கடவுளும் அவரை கைவிடாது , அவருக்கு உலகத்தில்  போறாட  தைரியமும் கொடுத்தார்.  இந்த பலத்த துணையுடன் டா.டெஸ்லா தாயாரின் இழப்பிலிருந்து மீண்டு ந்யூயார்கில் உள்ள அவரது ஆராய்சி நிலயத்திற்கு சென்றார், அங்கு அவரது ஆராய்சி நிலயமும் அவரது வேலைகளும் அவருக்கென்று காத்திருந்தன.
ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம் ||    அம்பஞ || 

- மீண்டும் பார்க்க: 


மூள லேக -

No comments:

Post a Comment