Friday 28 November 2014

"சீஸ்"[cheese] சைவ- பால் கட்டி, அசைவ - பால்கட்டி [ பரப்பு பண்டம்]

Vegetarian & Nonveg Cheese

சீனாவின் தின்பதார்த்தங்களுடன் இடாலி,லெபனீஜ், கோரியன் என்று பல வெளிநாட்டு பண்டங்கள் பாரதத்தில் ப்ரபலமாகி வருகின்றன. இத்தின்பண்டங்களில் முக்கால் விகிதம்  "பால்கட்டி"[cheese சீஸ்] உபயோகிக்கப்டுகின்றது. பால்கட்டி பாரதத்தில் பல வருடமாக கிடைத்து வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக பால்கட்டி கொண்ட பண்டங்கள்மீதான  விருப்பம் நம் நாட்டவர்கள் இடையே மிகவும் அதிகரித்துள்ளது. 
  
நமது ஸத்குரு பரம பூஜ்ய அநிருத்த பாப்பு செப்டம்பர்   25, 2014 அன்று  ஹிந்தியில்  செய்த ப்ரசங்கத்தில் சைவ பால் கட்டி, அசைவ பால்கட்டி பற்றி விளக்கம் அளித்தார். நமது காலை சிற்றுண்டியிலிருந்து,மதியம் கொரியல்களுடன்  இரவு உணவு வரை மய்யம் கொண்டுள்ள பால்கட்டியின் ரகம் , விதம் அது உற்பத்தி செய்யும் முறைகளை நாம் அறியோம்.  அது ஒரு சிலருக்குத்தான் தெரியும் என்பது ஒரு பரபரப்பான விஷயம் . இன்று இந்த பால் கட்டியானது மெல்ல மெல்ல ஸேண்ட்விச், பரோட்டா , கோஃப்டா, பாவ்-பாஜீ , தோசை, பக்கோடாம் ,  டோஸ்ட் , ஸாலாட்[பச்சை காய்கரி] , ரொட்டி ரோல்ஸ், பிஜ்ஜா, பர்கர் முதலியனவற்றில் மட்டும் அல்லாமல்   மும்பை வடாபாவையும் தாண்டி  நமது தினசரி சமயல், சாம்பார், ரசம் கரிகளில் கூட இடம் பிடித்துவிட்டது. மக்கள் வசீயம் ஆகிவிட்டனர். ஆகையால் இந்த "சீஸ்" என்னும் பால் கட்டியைப்பற்றி நாம் அதிகமாக அறிந்து கொள்வது அவசியாமாகிவிட்டது என்ற நிலையில் ,  இந்த "சீஸ்" [cheese] பால்கட்டி தயார் செய்யும் முறையை சுருக்கமாக பார்ப்போம்.   

"சீஸ்" பால்கட்டி , பாலிலிருந்துதான் தயாராகவேண்டும்.  பாலை கட்டியாக்க அதை இருக்க வேண்டும் , சுண்டவேண்டும். சிலசமயம் இம்முறையை விறைவாக்குவதற்கு , அதில் ஒரு விசேஷ பதார்த்தத்தை சேர்ப்பார்கள். அதன் பெயர் "ரெனெட்"[(Rennet)] ஆகும். (http://en.wikipedia.org/wiki/Rennet). இந்த "ரெனெட்" எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?

அது பசுமாட்டின் வயிற்றிலிருந்தோ  அல்லது அதன் கன்றுக்குட்டியின் அடி வயிற்றில் அகப்படும். இந்த "ரெனெட்" பசு, அதன் கன்று தின்றுவரும் புல் , பிண்ணாக்கு, போன்ற தாவர உணவு ஜெரிக்க்வைக்க கடவுள் கொடுத்த தன்மை பொருள் ஆகும். பசு அல்லது , கன்று உயிரோடு இருக்கையில் இதை எடுக்க இயலுமா? சிந்தித்துப்பாருங்கள். ரெனெட் உபயோகித்த சீஸ் உண்பவன் , பசு , கன்றை கொன்று தின்ன பாவம் தான் ஒட்டிக்கொள்ளும்.இந்த "ரெனெட்" உபயோகித்து தயார் செய்த சீஸ் தான் அசைவ சீஸ் ஆகும் , அது இல்லாதது சைவ சீஸ் ஆகும். 
பாரதத்தில் பால் பண்னைகளினால்  உற்பத்தி செய்யப்படும் பால்கட்டி  "சீஸ்" அங்காடிகளில் சைவ சீஸ் என்று கிடைக்கிறது, சில சர்வதேச நிருவனங்கள் பாரதத்தில் தயார் செய்தாலோ, அல்லது இரக்குமதி செய்யப்பட்ட சீஸ்களில் இந்த ’ரெனெட்’  இருக்க் வாய்புள்ளது. அதைத்தவிர  பல சர்வதேச நிருவனங்கள், இந்த ’ரெனெட்" உபயோகித்த  தகவலை பொருள் சிட்டையின் [label]மீது வேண்டுமென்றே மறைத்துவிடுகின்றனர். நமது பாரத சனாதன கலாசாரத்தில் ஒன்பது நியம நிஷ்டைகளில் , கோமாதா , கங்காமாதா, காயத்ரீ மாதா முக்கியத்துவம் வகிக்கின்றன. பசு பவித்ரம் , பரிசுத்தத்தின் அம்சம். இதை கருத்தில் கொண்டு எவெரவர் அசைவ சீஸ் சாப்பிட வேண்டாமோ அறியாது உண்ணவேண்டாம் , அது சைவமா அல்லது அசைவமா என்பதை பரிசீலித்து அறிந்து உபயோகிக்கவே இந்த தகவல். இதில் அவரவர் கொள்கை,  சாமர்தியம் , தற்காப்பு அடங்கியுள்ளது. அதற்கென்று "சீஸே..." சாப்பிடக்கூடாது என்பது அல்ல.--------- அநிருத்தா பாப்பு
ஹரி ஓம்  || ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ||  

மூள லேக -

No comments:

Post a Comment