Tuesday 4 June 2013

"நான் அநிருத்தன்"

|| ஹரி ஓம் ||

 "நான் அநிருத்தன்"
           

             நான் அனேகமாக என்னுடைய 50 வது பிறந்த நாளில் வெளிவரயிருக்கும் விசேஷ பத்திறிகையில் என்னைப்பற்றியே
எழுதிக்கொள்ளும் முதல் இதழாசிறியர் ஆவேன். என்னுடைய பாட்டி [அம்மாவழி] சின்னவயதிலிருந்து என்னை, இவனா? எப்போ என்ன செய்வான் என்று தெரியாது என்பாள்.என் தாய் என்னை "அதிசய ஆதித்தன்" என்று சொல்லுவாள். ஆகையால் எனது சிறுவயது அதிசயிக்கும் வித்தியாசமே வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
           பள்ளி கல்வியிலிருந்து வெளி வந்தவுடன், நாம் வாய்பாடு என்று சொல்லும் சாதாரண பெருக்கல் கணக்கை  அதாவது 1x1=1, 
1x2=2 என்பதை மறந்து விட்டு , இந்த வாய்பாடான,  நான்xஒன்று =நான், நான்x பத்து= நான்,  என்பது சுலபமாகவே வரும்,காரணம் நான் என்பது பத்து திசைகளிலும் குதிரை மேல் உட்கார்ந்து எப்போது, எப்படி எகிறும் என்று தெரியாது. நான் இப்படி,நான் அப்படி, நான் இப்படி இல்லை, நான் அப்படி இல்லை, எனக்கு இது வேண்டும், எனக்கு அது வேண்டாம், நான் இது செய்தேன், அது செய்யவில்லை, இப்படி பல வடிவில். பலரூபத்தில் இந்த ஒவ்வொருவரின் "நான்" கூத்தடித்துக் கொண்டிருக்கும். இந்த அநிருத்தனோ சிறுவர்கள், குழந்தைகளின் "கூத்துக்கும்" ஊக்குவிக்கும் களிப்பரங்கத்தின் தோள் கொடுக்கும் தலைவன். அவ்வாரு இருக்க இந்த அநிருத்தனின் "நான்" ஒன்றும் செய்யாது இருக்கமுடியுமா?. "இதுதான் நான்  அதுவே நான் தான்"

நான் இப்படி  இருக்கிறேன், நான் அப்படி இருக்கிறேன்:
நான் எப்படி இருக்கிறேன் அது எனக்கு மட்டும் தான் தெரியும்.  நான் எப்படி இல்லை என்பது எனக்கு தெரியாது. அந்தந்த நிலையில் இருக்கும் மனிதர்களை பொருத்து இல்லை,அந்தந்த நிலவரத்தை பொருத்தும் இல்லை. பக்கத்தில் இருப்பவனோ, நிலவரமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் அப்படியேதான் இருப்பேன். காரணம் நான் எப்போதும் நிகழ்காலத்திலேயே உலாவுகின்றேன். நடந்து  கொண்டிருக்கும் வாஸ்தவத்தை எப்போதும் நழுவ விடுவதில்லை. கடந்த காலத்தின் விபரம்[தகவல், ஞானம்], ஞாபகம் எனக்கு என் நிகழ்கால்த்திற்கு ஒரு பாடம், அனுபவம் போன்றது, வருங்காலமோ அதன் கணிப்போ இதே நிகழ்காலத்தில் எனக்கு விழிப்புணர்வு, ஜாக்கிரதையுடன் செயல்பட எச்சரிக்கை. அதுதான் என் சுபாவம்.

நான் கெட்டவனா நான் நல்லவனா?
நான் திறந்த மனத்துடன் இதை உலகத்துக்கு அற்பணித்து விட்டேன்.அதுவே எப்படி வேண்டுமானாலும், தீர்மானிக்கட்டும், ஏனெனில்,மற்றவர் என்னநினைக்கிறார்கள் என்பது எனக்குக் கவலை இல்லை. என்னுடைய தத்தகுருவும், காயத்ரி மாதாவும் நான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படியே இருப்பது எனது ஆயுளின் ஒரே கோரிக்கை. அவர்களது அன்பினால் மட்டும் அல்லாது, நான் அவ்வாரு வளர்க்கப்பட்டேன்.

நான் இதுவும் அல்ல நான் அதுவும் அல்ல:
நான் எதுவாக இல்லை, எங்கே இல்லை, எப்படி இல்லை,உண்மையாக நான் அறியேன். ஆனால் எந்த நிபந்தனை,நிலமையில் நான் இல்லை என்பதை நன்கு  அறிவேன். அதுவே என் பயணத்துக்கு வெளிச்சமாகும்.

எனக்கு இதுவே வேண்டும், எனக்கு அது தேவை இல்லை:.
நான் பக்தனின் காரணமும், விளைவும்  ஆமோதிக்கிறேன்,அரசியலை வெருக்கிறேன். நான் சேவை செய்வதை விரும்புகிறேன், பதவியை அல்ல. நான் பக்தர்களின் அன்பின் சிம்ஹாசனத்தில் அமர்கிறேன், ஆனால் ஆதிக்கம் வேண்டாம். நான் அஹிம்ஸயை ஆதரிக்கிறேன்,கோழைத்தனத்தை கொப்பளிக்கிறேன். எனக்கு திறமை ஆற்றல் முழுமையாக வேண்டும், சூதோ, சுரண்டலோ பிடிக்காது. அரசாங்க ஆதிக்கம் ஆதரவு உண்டு, வன்முறை கண்டனத்துக்கு உறியது. நான் ஒவ்வொரு பரமனின் பக்தனுக்கு சேவகனாக இருக்க விரும்புகிறேன்,  ஆனால் ,போலி , கபட நாடகம் ,மூடநம்பிக்கை வெருக்கிறேன்.

நான் யாரையும்  தேடி, நாடிப் போவதில்லை என்பது பலர் கோபத்துக்கு காரணம். நான் யாரிடமும் எதுவும் பெறவேண்டாம் ,கொடுக்கவும் வேண்டாம். அப்படியிருக்கையில் நான் யாரை பார்க்க வேண்டும்? நான் நண்பர்களை சந்திக்கிறேன். காரணம் "சுத்த சொந்தமே, நட்பே. அதாவது கேட்க கொடுக்க எல்லாவற்றிர்கு  அப்பார்ப்பட்ட காந்தம்,அதுவே பந்தம். இதே காரணத்தினால்  சந்திக்கிறேன் .இந்த சந்திப்பு சுத்த அன்பு, பாசத்தினால் ஆனது. அதற்கு அன்பைத்தவிர எதுவும் வேண்டாம். எனக்கு அந்த கொடுக்கல் வாங்கல் சர்ச்சை வேண்டாம். ஞானம் என்ற பேரில் காலியான ,பகட்ட ஆரவாரம் வேண்டாம். ஞானம்  சுயமுயற்சியால் பெற்று .வெற்றி கண்டு சுயநலமில்லா செயல்களுக்கும் ,சமூகத்தின் வளர்ச்சிக்கும் உபயோகமாக இருத்தல் வேண்டும்.

நான் இதை செய்தேன், அதைசெய்தேன்: 
என்னுள் இருக்கும் நான் செய்யவில்லை. அது எவ்வாறு? நான் செய்யவில்லை ஆனால் "இல்லையே-நான்" செய்து தருகிறான், செய்விக்கிறான், இதுவே என் முழுமையான நம்பிக்கை. அப்படியானால் என்னுள் இருக்கும் "நான்" செயலிழந்து இருக்கிறதா? அப்படி இல்லை. அநிருத்தனுள் இருக்கும் அந்த " நான்" ஸ்ரத்தாவான்களின்[பக்தர்களின்]  வாழ்க்கை பாதையை "இல்லையே -நானிடம் கொடுத்ததை கவனித்து, கண்காணித்து, ப்ரவாஹத்தை தடுத்து நிருத்தாது இருக்கவும், நதி காயாது இருக்கவும், தேக்கப்பட்டதை விடுவித்து அந்த "இல்லையே -நான்" என்பதை, பக்தர்களின் வாழ்க்கை ப்ரவாஹம் ஓடிக்கொண்டே இருக்க இது "இல்லையே -நான் "[பரமாத்மாவின்] என்ற அன்பு  வாழ்க்கை ப்ரவாஹத்தை நிருத்தாது , பாய்ந்து கொண்டு இருக்கவே என் முயற்சி. இப்போது ,சொல்லுங்கள் இதில் ஏதாவது எனதாகுமா?

நான்  சத்தியம், அன்பு , ஆனந்தத்தை மதிக்கிறேன், ஆதரிக்கிறேன். ஆகவே , பொய், துக்கம் தானாகவே கண்டனத்துகுறியது. இது இயல்பாகவே நடக்கிறது.ஏனெனில் பிறந்ததை ஒட்டிய இயற்கையான, சுயமான எந்தவித ஊக்குவிப்பும் இல்லாத பாகம் ஆகும் என்பதை குறிக்கிறது. ப்ரபு ராம ச்ந்திரரின்  மரியாதை பாதை, எதிர்பார்பில்லா சேவை[நிஷ்காம்ய கர்மா],பக்தி மார்கம்,சுயமரியாதை அடிவாரமாக கொண்டு இருப்பது ,  எனது கருத்து. நான் சொரணை அற்றவன் அல்ல, அன்பால் ஆடிவிடுகிறேன், அன்பினால் இணைகிறேன். என் செயல் அன்பினால் அலங்கரித்தவை. நான், பவித்ரமான, பரிசுத்தமான,  சத்தியம், உண்மையையே நம்புபவன்,வெளிப்படை வாஸ்தவத்தில் மட்டும் அல்ல.

 நான் என்ன செய்ய விரும்புகிறேன்? நான் என்ன செய்யப் போகிறேன்?  நான் ஏன் இந்த இதழ் ஆசிரியர் கட்டுரையை  எழுதவேண்டும்? ஏன் உலக மஹா யுத்தம் பற்றி அவ்வளவு எழுத வேண்டும்?, நான் ஏன் ப்ரசங்கம் செய்ய வேண்டும்?. இது அனைத்துக்கும் பதில் எளிதானதே. இதயம் எப்படி துடிக்கிறது?. எப்படி நான் ஸ்வாசிக்கிறேன்? என்ற கேள்விக்கு பதில் போல்.
[உண்மையாக அதற்கு பதில் ஏதும் இல்லை]. ஆம் அதுவே பதில் ஆகும்.

நண்பர்களே தூய்மையும், அன்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கம் போல் ஆகும். அதைக் கொண்டே என்னை வாங்கிவிடலாம். வேறு எதுவும் செல்லாது. சொல்லப்போனால் என்னுள் இருக்கும் "நான்" அநிருத்தன் உங்களுடையவன்.உங்களுடையவன் மட்டும் தான். எப்போதும் என்னுடையதாக இருந்ததே இல்லை, இனி இருக்கவும் மாட்டேன், இது உறுதி. 
                                                                      நண்ப்ர்களின் நண்பனான  
                                                                        "அநிருத்தன்"  


|| ஹரி ஓம் ||                             

Friday 29 March 2013

"தி தர்ட் வர்ல்ட் வார்" மூன்றாவது உலக மஹா யுத்தம் -முன்னுறை [ஒரு கண்ணோட்டம்]

|| ஹரி ஓம் ||
ஏனென்றால்....
   
முப்பதாம் நூற்றாண்டின் [அல்லது மூன்றாவது ஆயிரத்தாண்டு]ஆரம்பம், அதாஅவது செப்டம்பர் 11,2001 லிருந்து 
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அவரவர்கள் தற்காப்புக்காகவும் , வருங்கால ராஜதந்திரம் ,தோரணை கொண்டு மறு
பரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். உலகில் உள்ள சில முக்கிய நாடுகளுக்கு,தீவிரவாதக் கொள்கை, பாதை பற்றி
தெரிந்திருந்தும் ,அமெரிக்கா, ரஷ்யா தீவிரவாதத்தை ஊக்குவித்து ஒருவருக்கொருவர் மேல் ஏவிவிட்டனர்,உபயோகித்தனர்.
ஆனாலும் ,செப்டம்பர் 11,2001 சம்பவம் ,சுலபமாகவும், சுருக்கமாகவும் இருந்ததோடு,குறைந்த செலவில் கச்சிதமாக
நடந்தேரியது.அதன் விளைவு தன்னை தானே உலகின் மிக வலிமையான, யாராலும் வெல்லமுடியாத தேசமாக மாறை 
த்தட்டி த்திரிந்த அமெரிக்கா தானே ஊக்குவித்த தீவிரவாதத்திற்கு விழித்துக் கொண்டது. தீவிரவாதத்தினால் பாரதம் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது, அந்த வேதனையே ஒரு பலத்த அக்னி பிழம்பு போல் அமெரிக்காவின் நெற்றியை 
சுட்டுவிட்டது போலும். அதுவரை பாரதம் அமெரிக்காவுக்கு தீவிரவாதத்தை சுட்டிக்காட்டிய ஆவணங்கள்,ஆதாரங்கள் 
அவ்வப்போது அளித்தும் அதை ஒதுக்கிவைத்து உதாஸீனப்படுத்திய அமெரிக்காவுக்கே தானே உருவாக்கி ஊக்குவித்த
தீவிரவாதத்தை போறாட ஆயத்தமானது.

      தீவிரவாதமோ, தீவிரவாதத்தை எதிராக போரோ, இந்த தொடர் கட்டுறையின் விஷயமட்டுமல்லாமல் ,இதுவரை நடந்த
சம்பவத்தின் ஆய்வின்பேரில்,கூடிய சீக்கிரமே வருங்காலத்தில் நடக்கவிருக்கும் ப்ரதிபலித்தல் ஆகும்.வரும் 20-25 ஆண்டு தகறாரு,சண்டை, பூசல் தினசரி க்ரமமாகவும்,பூமியின் ஒவ்வொரு பாகத்திலும்,மூலையிலும் நடந்துவரும். தத்துவம், ந்யாயம்
நியமம், கோள்கைக்கு மதிப்பிறாது. இந்த கலவரத்துக்கு,நீதி நெறி தெரியாது."வலிமையே வெல்லும்"என்பதே ஒரே கட்டளை ஆகும்

    அவ்வகையில் அரசியல் விளையாட்டு,ரகசியத்திட்டம்,செயல்பட இருக்கையில்; அளவுக்குமீறிய வலிமையுடன்,வலுச்சண்டை,
தயை தாட்சண்யம் பார்க்காத, வன்முறை முதலியன மேலோங்கி பல ஆண்டு காலம் நீடித்து இருக்கும். மூன்றாவது உலகமஹா யுத்தம் ஆரம்பத்தில், அந்தந்த நேச நாடுகள் இருதரப்பிலும் சேர்ந்து கொள்ள ,சில வெளிப்படையாக நீதிநெறி புரக்கணிப்பதோடு,
சில நாடுகள் சற்று பயந்து ,பொறுத்து நீதிநெறிக்குட்பட்டும் சமமாக நடந்து வரும். அதுவே ஒரு காலகட்டத்தில் இருதரப்பிலும் விட்டுக்கொடுக்காது ,தான் செய்ததை ஒப்புக்கொள்ள மறுப்பார்கள், மறைமுகமாகவும் கூட. இதேதான் தற்போது நடந்து வருகிறது.
அதுவே வெகு சீக்கிறத்தில் ப்ரதானமாக் நடந்துவரும். சாதாரண மனிதனோ, அரசியல் அதிகாரியோ ,யுத்த ஆய்வோ ,யுத்தத்தை பற்றிய சர்ச்சையோ வெளிப்படையாக செய்யமுடியாது. ஏனெனில் யுத்தம் ஒரு அதிசய, ரகசிய திட்டத்தின் விளைவு ஆகும். 
90% உலக அளவில் உள்ளமக்கள் அவரவர் ஆழ்ந்த சிந்தனையோ,யுத்தத்தின் அரசியல் காரணமோ, அல்லது அதன் உண்மையையோ ,சிறிது அங்கங்கே கிடைத்த செய்தியின் யூகமாகும் , மூல காரணம் அறியாதவர் ஆவர். எப்படியாகிலும்
இவர்களே யுத்தத்தின் விளைவான, துக்கத்துக்கும் அவதிக்கும் உள்ளாகி, யுத்தத்தின் பாதிப்பாலும் தாக்கப்படுகின்றனர்.
   
சுத்த சுதந்திரக் குடியரசின் வலிமையே யுத்தத்தின் தீயை அணைக்கவல்லது. இன்று எவ்வளவு நாடுகள் சுதந்திர க்குடியரசு?
சட்டமன்ற குடியரசின் தந்தை என்று கருதப்பட்ட யூ.கே க்ரேட் ப்ரிடன் போன்ற நாடு வலுவிழந்து ,மோசடிக்கும், உள்வாக்குவாதம், கலவரங்களுக்கு  இறையாகியிருக்கிறது. இந்திய நிலைக் கண்டத்தில் குடியரசு வேறுன்றபோதிலும்,சிறிய, பெறிய பல அரசியக்கட்சிகள், அதை நிலை நாட்டாது,மோசடியில் மூழ்கி த்தவிக்கின்றன. ரஷ்யா, சைனா, குடியரசு பேருக்குக் கூட இல்லை.
அமெரிக்கா அதில் ஆதாரமாக இருந்தாலும், போதை லாகிரிக்கு பலியாகும் இளைய சமுதாயம், படித்த பிறந்த மண் அமெரிக்கர்கள் குறைபாடு, குடிமக்களின் அளவான, குறைந்த  பங்கேற்பு அமெரிக்க, குடியரசைக் குலுக்கி குலைத்துவிட்டது.
 
 அதைத்தவிர,அமெரிக்காவின் பலத்தப்ரசாரம், தொலைக்காட்சி,இன்டர்னெட் (internet),  வலைவேலைப்பாடு(network),
(branches),அஙகங்கே அமைத்து, பதித்து பலதேசத்தின் மக்கள் திரண் ஊடகங்கள்(Mass Media) ,அமெரிக்காவின் ரகசிய கழகம்(குழு)
(Americca's secret organaizations) வெற்றியுடன் கைப்பற்றி பாரதத்தின் ஜன்மவிரோதியான பாகிஸ்தானே தீவிரவாதத்தின் அடிப்படை என்று உறுதி கூறியது. தற்போது மறைமுகமாக செய்து வருவதை சிறிதே காலத்தில் பாகிஸ்தான் வெளிப்படையாக தீவிரவாதிகளுடன் சேர்ந்து போர் உருவாக்கும்.

     வரும் காலத்தில் இன்றைய சமன்பாடு நாளை இறாது. இன்று 7.00 மணிக்கு நடப்பது ,நடந்து  முடிந்தவுடன் 7.05க்கு
தூக்கி எறியப்படும். இது வருங்கால ஜோசியம் அல்ல. இது ஒரு ஆய்வு, அனுமானம். இதிஹாஸம், நடந்து வரும் சம்பவங்களிலிருந்து கணிப்பேயாகும் . வரப்போகும் 25  ஆண்டுகளில் ஆயிரம் சம்பவங்கள், நூறு இடத்தில் நடக்கும்.இதைப்பற்றி படித்தவர்கள் நன்கு அறிவர். நூறு சம்பவங்கள் இப்பவும் நடந்து கொண்டிருக்கும், ஆனால் முக்கியமாக பத்தே வர்ணிக்கப்படும். 

90% இங்கு, இதில் சேர்க்கப்படவில்லை(அவசியமில்லை).ஏனெனில் அதன் ஆய்வு ஆனபோதிலும், அவை பதிவும் ஆகவில்லை.
நமது காலம் காட்டும் காலெண்டர்(பஞ்சாங்கம்) ஒரு கணித கணிப்பின் பேரில் வெளியாகிறது. இந்த மூன்றாவது மஹாயுத்தத்தின் 
காலெண்டரோ,  இக்கணக்கிற்கு உள்படாது, அடங்காது. அது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும் 
    
நான் என்னைப்போல் உள்ள சாதாரண நண்பர்களுக்கு ,என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இந்த மூன்றாவது உலக மஹாயுத்தத்தை ப்பற்றி சிறிதளவு ,இரண்டு சதவிகிதமாவது தெறிந்து கொள்ளுதல் அவசியம் என்கிறேன்.
   ஆகையால் ,இதுவே இந்த எழுத்தின் முயற்சி ..........
    என் நண்பர்களுக்கு...............
     அநிருத்தா  


|| ஹரி ஓம் ||