Monday 21 October 2013

மத்திய கிழக்கு நிலவரம்- உலகத்திற்கு சவால் [பாகம் -1] [உலக நல ,திட்டம்,தீர்மானம் அத்யாவஸ்யம்].

Middle East Situation – World at the Crossroads (Part I) 

 மத்திய கிழக்கு நிலவரம் நிலை குலைந்து  கொதித்தெழுந்து ,அமெரிக்காவின் தலைமையில்   ஸிரியா மீது தாக்குதலால் வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு , ரஷ்ஷிய ஜனாதிபதி வ்ளாடிமீர் பூடினின் சாமர்த்தியத்தாலும் ,சூஷ்ம புத்தி விவேகத்தாலும் சாதுர்யமான அரசியல் தந்திரத்தினால்
முழுமையாக தவிர்க்கப்பட்டது.  பூடினின் வெளிப்படையான அறிக்கையில் அமெரிக்காவின் ஸிரியா தாக்குதல் திட்டத்தை எதிர்த்து கேட்டதும் எவ்வாரு அமெரிக்கா,  ஐ.நா வின் சம்மதம் இல்லாமல் தாக்கலாம் ? என்பது  ஸிரியா மீது மட்டும் தாக்குதல் இல்லாமல் , அது  ஐ.நா. சட்டசபை [எது உலக சமாதானம், நிலைக்கும் சாந்தி,  அமைதிக்காக அமைக்கப்பட்டதோ] அதன்  கொள்கை,  வாஸ்தவ்யம் ,அதன் வருங்காலத்திற்கே கேள்விக்குறியாகிவிடும் போல் இருந்தது. பூடினின் அறிக்கையினால்,   உலக சமூகமே ஒரு அதிசயமான ஆட்டம் கண்டது, விசேஷமாக அமெரிக்கவிற்கு . அவர் ஐ.நா சட்ட சபையின் விதி யை முதல் உலகமஹா யுத்தத்தை அடுத்த யுகத்தின் முன்னோடிக்கும் கேவலமாய் உள்ளதை ச் சுட்டிகாட்டினார்.

இந்த திட்டவட்டமான பூடினின் ஒரே அறிக்கையே அமெரிக்காவை ஜாக்கிறதையாக செயல்படவைத்து,  அதை ரஷ்ஷியாவுடன் ஸிரியாவின் சம்பந்தப்பட்ட நிலவரம் பற்றியும் முக்கியமாக , ரஸாயன ஆயுதங்கள் அங்கு உபயோகம் செய்யப்படுவதை ப்பற்றியும் கலந்து ஆலோசனை நடத்த   பேச்சுவார்த்தை மேடைக்கு அழைத்தது.  

தற்காலிகமாக ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டாலும் , அது வருங்காலத்தில் நடக்காது இருக்காது என்றே தோன்றுகிறது. ரஷ்ஷியாவின் செயற்குறிப்பு, கறுத்துரு நிபந்தனையினால், ஸிரியா தனது ரஸாயன ஆயுதங்கள், ரஸாயன ஆயுத வஸதிகளை கைவிட தயாராகியது. அமெரிக்கா  ஸிரியா அபாய ,நெருக்கடியான  சூழ் நிலை விஷயத்தில் ரஷியாவின் யோசனை, நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்தாலும், இருதரப்பினருக்கும்  பெரிய கருத்து வேறுபாடு , ஸிரியா தனது வாக்கை க்காப்பாற்றும் என்று  என்ன நிச்சயம்? என்பதை ப்பற்றி உள்ளது. சிறிது நாட்கள்முன் அமெரிக்கா ஸிரியா தனது வாக்கை தவரினால் அதன் , மீது ராணுவ தாக்குதல் நடத்த ஆயத்தமாக இருந்தது அனைவரும் அறிவோம். ஆனால் அமெரிக்கா ஜனாதிபதி "பராக் ஓபாமா" ஐ.நா சட்ட சபையில் கடந்த வாரம் நடைபெற்ற அவரது உரையில், ப்ரசங்கத்தில்  இதைப்பற்றி சாமர்த்தியமாகவும், ஜாக்கிரதையாகவும் சொல்வதை த்தவிர்த்தார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அமெரிக்கா,  இந்த ரஷ்ஷிய த்தரகல் [மத்யஸ்த],ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து,  அதே சமயம் ஸிரியாவின் உள் நாட்டில் அரசாங்கத்திற்கும் அதன் ராணுவத்திற்கும் எதிராக புரட்சி கிளப்பும்  , கலகஞ்செய் எதிர் கட்சி, கழகத்திற்கு ஆயுதங்கள் அளிப்பதை தீவிரமாக உயர்த்தி உள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்து  ஸௌதி அரேபியா,யூ.ஏ.ஈ[யுனைடெட் அரப் எமிரேட்ஸ்], டோஹா கத்தார், முதலிய தேசங்களும் ஸிரியாவின் எதிர்க்கட்சிக்கு முடிந்த அளவு உதவி அளித்து வருகின்றனர். ஸிரியாவின் எதிர்ப்ப்டையினருக்கு ,துர்க்கிஸ்தானும், ஜார்டனும் இரக்கப்பட்டு ஆதரவளிக்கின்றனர். இதற்கு, ஸிரியாவின் ஜனாதிபதி ஆஸாத் ,எந்த வெளி நாடுகள் எமது எதிர்ப்படைகளை ஊக்குவித்து, ஆதரவளிக்கின்றனவோ, முக்கியாமாக, துர்க்கிஸ்தான் அவர்கள் தப்பை உணர்வார்கள், ஏனெனில் வரும் சில நாட்களுக்குள் ஆதாரவளிக்கப்பட்டவர்களே அவர்களுக்கு[ ஆதரவளித்தாவர்களுக்கு] எதிரியாகிவிடுவர். இந்த சமீபத்திய நிகழ்வுகள் வரப்போகும்  சில நாட்களுக்குள் ஸிரியாவினுள்ளும், உலகத்து மத்திய கிழக்கிலும்  விவாதமும் வன்முறையும் வலுக்க வல்ல அபாயத்தை க்குறிக்கிறது.

Organization for the Prohibition of Chemical Weapons (OPCW)
 ஆர்கனைசேஷன் ஃபார் ப்ரொஹிபிஷன் ஆஃப் கெமிகல் வெபன்ஸ்[  (OPCW),   ரஸாயன ஆயுதம் கட்டுப்படுத்தும், தடுக்கும் வாரியம்]இதன் நடுவில் , அமெரிக்கா, ஸிரியாவின் புரட்சிப்படை ஒருபுரம், ஸிரியாவின் ஆஸாத் அரசாங்கம் ,ரஷ்ஷியா மற்றொருபுரம் , ஸிரியாவில் சாமான்ய குடிமக்கள் மீது சமீபத்தில் எவப்பட்ட ரஸாயன ஆயுத த்தாக்குதலை பற்றி ஒருவருக்கொருவர் வெறித்தனமாக ஏசிக்கொண்டிருக்கின்றனர். இந்த சர்சை சாம்ராஜ்யத்தில் ஒரு தற்காலிக மயான அமைதி இருப்பதாக த்தோன்றினாலும், ஆர்கனைசேஷன் ஃபார் ப்ரொஹிபிஷன் ஆஃப் கெமிகல் வெபன்ஸ்[  (OPCW),   ரஸாயன ஆயுதம் கட்டுப்படுத்தும், தடுக்கும் வாரியம்]  ,நெதர்லாண்ட் நாட்டு தலைமையில் உருவாகிய பல அகில அன்னிய அரசாங்க சங்கங்கள், எவை பரப்பவுதற்கும், அதிகரிக்கவும் அதேசமயம் ரஸாயன ஆயுதங்கள் விதி, விதானம் வழக்கம் ,உண்மை உறுதி செய்யும் பொருப்புடன் செயல்படும் ஆய்வு குழு, ஸிரியாவின் ஆதிக்க அதிபதி ஆஸாத் அரசாங்கத்திடமிருந்து , ஸிரியாவில் உள்ள ரஸாயன ஆயுதங்கள், திட்டங்கள், வைத்திருக்கும் இடம், பயன் படுத்தும் முறை, வசதிகள்,  கொண்ட உண்மை த்த்கவல்கள்  ப்பற்றிய "டோஸியர்"[வரலாற்றுப் பத்திரம்] ரஷ்ஷியாவின் தரகல்,  மத்யஸ்தம் படி கிடைத்துள்ளதாக அறிவித்தனர். ஆனாலும் சமீபத்தில் ரஷ்ஷிய  ஜனாதிபதி பூடினின் விளக்கவுரையின் படி ஸிரியாவின் ஆஸாத் ஆதிக்கம் தன்னிடமுள்ள அனைத்து ரஸாயன  ஆயுதங்களையும் அதன் வசதிகளையும்  முழுமையாக கைவிட்டுவிடும் என்பதை நம்புவது கஷ்டம் என்று கூறியது மேற்கத்திய வலிமை வாய்ந்த தேசங்கள்,   சந்தேகத்துடன் இந்த அனைத்து ஒப்புதலை பார்க்க காரணமாகியுள்ளது. ஆஸாத் அரசாங்கம் இந்த அனைத்து ரஸாயன ஆயுதங்களை அழிக்க ஒருவருட அவகாசம் தேவை யென்றும், அதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள்[ 65000கோடி ரூபாய்]   தேவைப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அரசாங்க காரியதரிசி ஹென்றி கெஸிஞ்ஜர் ஸிரியா-ரஷ்ஷியா ஒப்புதலை விமரிஸித்து தனது சந்தேகத்தை வெளிப்படித்தியுள்ளார். பூடின் போலவே கெஸின்ஞ்ஜரும் , ஸிரியா 90% ரஸாயன ஆயுதங்கள் அழிக்கக்கூடும் ,மீதியை த்தனக்கென்று வைத்துக்கொள்ளும். இந்த மிஞ்ஜிய ரஸாயன ஆயுதக்குவிப்பே அபாயமானது. ஸிரியாவை கண்டனம் செய்தாலும் ,கெஸிஞ்ஜர் அமெரிக்காவை பொருத்தவரை தற்போது ரஷ்ஷியாவை , சிரியாவின் அறிக்கை ப்படி நம்பி செயல்படுவதே நலன் என்று கூறியது ஆஸ்சரியாமாக உள்ளது.

Bashar al-Assad – President of Syria
பாஷார் அல் ஆஸாத்- ஸிரியாவின் ஜனாதிபதி
இதன் நடுவில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. சட்ட சபையின் , ஒரே கருத்துள்ள ஒப்புமையுடைய , கூட்டுத்தீர்மானம் " ஓ.பீ.சீ.டப்ள்யூ" ரஸாயன ஆயுதங்கள் கட்டுப்படுத்தும் வாரியத்திற்கு ஆஸாத்  ஆதிக்கத்தின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உறிமை யளித்தது. ஆனால் ரஷ்ஷியா -மேற்கத்திய வலுவான தேசங்கள் செய்த சமாதான ஒப்பந்தத்ததின்படி,ஐ.நாவின் கூட்டுத்தீர்மானம் ,  ஸிரியா உறுதியளித்ததை செயல்பட தவரினால் ஸிரியாவின் ஆதிக்கத்திர்கு தானாகவே தண்டனை அளிக்கும் எவ்வித விதிமுறையும் அறிவிக்கவில்லை .இதற்கிடையில் ,ஐ,நாவின் கூட்டுத்ததீர்மானம் செயல்ப்டுத்தும் வகையில், அவர்களது ஆய்வாளர்கள் ஸிரியாவில் மொத்தம் ஏழு ரஸாயன சேகரித்து  வைத்திருக்கும் இடத்திலிருந்து ஆகஸ்ட்21,2013 நிகழ்வுக்குப்பின் , மூன்றுமுறை அப்பாவி குடிமக்கள் மீது பயன்படுத்திய்தும் தெரிய வந்துள்ளது. பொதுவாக எல்லாதரப்பினரும்  தற்காலிகமாக ஒப்புதல் அளித்து , உலக மத்தியக்கிழக்கு ப்ரதேசத்தில் உலாவிகொண்டிருக்கும் போர் மேகத்தை  தவிர்த்தாலும் , முக்கியமான இருதரப்பினரிடையே  ,பலத்த  கருத்து வேறுபாடுகள் ,அவ்வாரே உணர்வுகளும், திட்டங்களும், வேறுபாட்டுடன் இருக்கின்றன. 

ஹரி ஓம் , அம்பக்ஞ
No comments:

Post a Comment