Wednesday 13 November 2013

ஸப்த மாத்ருகா பூஜா

Saptamatruka Poojan

போனவாரம் வ்யாழக்கிழமை அக்டோபர்24,2013 அன்று நமது பரம பூஜ்ய பாப்பு அவரது ப்ரசங்கத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொன்னார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் நெஞ்சார்ந்த ஆசை நம் குழந்தைகளுக்கு நலமான நல்ல ஆரோக்யமான ,தீர்க ஆயுளுடன் கூடிய வாழ்க்கை அமையவேண்டும் என்பது.வழக்கமாக சம்ப்ரதாயப்படி சஷ்டி  பூஜை இந்த  வேண்டுதலுக்காகவே செய்து வரப் பட்டது. படிப்ப்டியாக இந்த பூஜை அதன் முக்கியத்துவம் இழந்து அது  ஒரு சடங்காக மாறிவிட்டது. பரம பூஜ்ய பாப்பு,  அவர் ப்ரசங்கத்தின் வாயிலாக இப்பூஜையின் மஹத்துவமும்,முக்கியத்துவமும் எடுத்துறைத்து ,பூஜையின் வழிமுறைகளையும் விவரித்தார்.

இந்த பூஜையை முதன்முதலாக ரிஷி அகஸ்தியர் அவர் மனைவி லோபாமுத்ரா,ரிஷி வஷிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் அவர்கள் தாய்மை அடைந்து இருவரும் ஒரே சமயத்தில் ப்ரசவித்தபோது , சேர்ந்து செய்ததாக பாப்பு சொன்னார்கள். இந்த பூஜை "ஸப்தசஷ்டி  பூஜை" என்று அழைக்கப்பட்டது.நாம் பரம பூஜ்ய பாப்பு எழுதி அருளிய மாத்ருவாத்ஸல்ய விந்தானம் க்ரந்தத்தில் எவ்வாறு அனைத்து தேவர்களும் அவரவர்களது ஆற்றல் திறமைகளை திறட்டி சக்திகளை அனைத்தும்  அசுரர்கள் சும்ப -நிசும்பனுடன் போரிட ஸ்ரீ மஹா ஸரஸ்வதிக்கு வழங்கி அருளினாரகள் என்பதை பார்க்கிறோம். இந்த ஏழு சக்திகளையே "ஸப்தமாத்ருகா" என்று அழைக்கின்றோம். இந்த ஏழு அற்புத சக்தி ஸ்வரூபமான தேவியர்களுக்கு ஆதிமாதா காலிகாம்பிகையே  சேனாதிபதி[அதிபதி] ஆவாள்.
ஏழு மாத்ருகா அவர்கள் பெயர் பின்வருமாரு உள்ளன:

1,மாஹேஷ்வரி: சிவனின் சக்தி, அவளுக்கு ஐந்து முகங்கள்,ரிஷபம் அவளது வாகனம், அவள் கையில் திரிசூலம் இருக்கும்

2,வைஷ்ணவி:விஷ்ணு பகவானின் அற்புத சக்தி,கருட வாகனம்,அவள் கையில் சுதர்ஷன சக்ரம், கதை, தாமரைப்பூவும் இருக்கும்.

3,ப்ரஹ்மாணி: ப்ரம்மனின் சக்தி, நான்கு முகம் கொண்டவள் ,ஹம்ஸ[அன்ன பக்ஷி] வாகனம்,கையில் கமண்டலமும், அக்ஷமாலா[மணிமாலை] கொண்டவள்.

4,ஐந்த்ரீ: இந்த்ரனின் சக்திஸ்வரூபிணி,வஜ்ராயுதம் கொண்டவள், ஐராவத யானை வாகனம்.

5,கௌமாரீ: ஆறுமுகன் கார்த்திகேயனின் அற்புத சக்தி, ஆறுமுகத்துடன் , மயிலை வாகனமாகக் கொண்டவள்.

6,நாரஸிம்ஹீ: சிங்கமுகத்தை  தரித்து, வாளையும், கதையும் ஆயுதமாக கொண்டவள்.

7,வாராஹீ:   காட்டுப்பன்றி முகத்துடன் ,சுதர்ஷன சக்ரம், வாள்,கேடையம் கொண்டு வெள்ளை எருமை வாகனம்.

இந்த  ஸப்த மாத்ருகா பூஜையே "ஸப்த சஷ்டி பூஜையும்" ஆகும்.பாப்பு பிறந்தவுடன் இந்த பூஜை பாப்புவின் இல்லத்தில் செய்யப்பட்டது."ஸப்தமத்ருகா பூஜை செய்யவேண்டிய படம்  பாப்பு அக்டோபர்24, 2013 ப்ரசங்கத்தில் பாப்பு காட்டியிருந்தார். பூஜையின் மஹிமையை ப்பற்றி ப்ரசங்கத்தில்  பாப்பு எடுத்துறைக்கையில் சும்ப-நிசும்பனை ஆதிமாதா மஹிஷாசுர மர்த்தினி,  மஹாஸரஸ்வதியின் ரூபத்தில் அழித்தாள். சும்பனின்  மகனான துர்கமன் எப்படியோ பிழைத்துவிட்டான். அவன் பிழைத்ததற்கு காரணம் அவன் காக்கையாக மாறினதால் இல்லை, அது இந்த ஏழு மாதாக்களின் மாத்ரு வாதஸல்யம்[தாய்பாஸம், அவன் எதிரியின் மகனாக இருந்த போதும் கூட], மாஹாஸரஸ்வதி இந்த ஏழு மாதாக்களின் செய்கையை புகழ்ந்து சொன்னாள்  " எவனொருவன் ,அவன் இல்லத்தில் குழந்தை பிறந்தவுடன் இந்த ஸப்த மாத்ருகா பூஜை செய்கின்றானோ அக்குழந்தை உங்கள் அனைவராலும் காப்பாற்றப்படுவர்". ஆகையால் குழந்தை பிறந்தவுடன் "ஸப்தமாத்ருகா பூஜை செய்வது வழக்கமான ஒரு மரபு ஆகும்.  
   
அதன் பின்னர் பாப்பு இந்த பூஜா விதி முறைகளை பின்வருமாரு விவரித்தார்.



பூஜை விதி முறையும், தயாரிப்பும்:

1. ஒரு பூஜா பலகை எடுத்துக்கொள்ளவும். அதன் மேல் கோல மாவினால் "ஸ்வஸ்திக்" அல்லது "ஸ்ரீ" யோ கோலமாக இடவும்[ஏனெனில் இவை மங்களகரமான வறைபட  குறிகள் ஆகும்] . இது பூஜை பலகைமீதே செய்தாகவேண்டும் , வேறு டேபிள், டீபாய் அல்லது ,சிறுமேஜைமீது செல்லாது,காரணம் நாம் அனைவரும் அந்த ஆதிமாதாவின் குழந்தைகளே. ஆகையால் நமது முதல் அடி சிறிதாகவே இருக்கும் . அதையே பூஜா பலகை குறைந்த ,சிறிய உயரத்தின் மூலம் காட்டுகிறது. ஆகையால் பலகையே பூஜா அலங்காரத்திற்கு உகந்தது.

2.  பிறகு பலகைமீது மடியான வஸ்த்ரம்  அது பட்டு அல்லது ஷால், அல்லது மடியாக உலர்த்திய துணிவிரிக்கவும்.இப்போது பலகையை சுற்றியும் கோலத்தால் அலங்கரிக்கலாம்.

3. ஒரு பூஜை தாம்பாளத்தில் கோதுமையை பரப்பி, அதை சீறாக வைத்துக்கொள்ளவும்.

4. முழு கொட்டை பாக்கு  ஒன்று பரப்பிய கோதுமை மத்தியிலும் அவ்வாரே அதை சுற்றி ஆறு முழு க்கொட்டை பாக்கு வைத்துக்கொள்ளவும்.

5. இறண்டு நல்ல தேங்காயை எடுத்துக் கொண்டு அதன்மேல் மஞ்சள் குங்குமம் இடவும் ,ஓம் அல்லது ச்வஸ்திக்கும் வறையலாம். அவை பூஜா தாம்பாளத்திற்கு இரு பக்கத்திலும் வைக்கவேண்டும்.

6. இவ்விரு தேங்காய்களின் உள்புறத்தில் பூஜா தாம்பாளத்தின்இருபக்கத்தி-லும் அக்ஷதையின் [குங்குமம் கலந்த சிகப்பு நிற அக்ஷதை] குவித்தாற்போல் வைக்கவும்.
-[இந்த அக்ஷதை குவிப்பு அஷ்வினீகுமார்[ தேவர்களின் வைத்தியர்கள்]  மனைவிகளை குறிக்கின்றன. அவர்கள் உண்மையிலேயே இரட்டையர்கள் ஆவர்.அவர்கள் பெயர் "ஜரா"வும் "ஜீவாந்திகா" ஆகும்.அவர்கள் அஷ்வினீ குமாரர்கள் போல் என்றும் எப்போதும் பிரியாதவர்கள்.அவர்களே குழந்தை சிறியதாக இருக்கும் போது விளையாடுவார்கள். குழந்தை மூன்று மாதம் ஆகும் வறை இவர்கள் விளையாட்டு காட்டி பார்த்துக்கொள்கின்றனர், குழந்தையும் ப்ரதிபலிப்பாக சிறிக்கிறதாம்.

7. (அ)  ஜரா தீர்க ஆயுளின் அதிபதி ஆவாள்.’குழந்தை முதியவர் ஆகும் வறை நீண்ட ஆயுளோடு இருக்க ஆசீற்வதிக்கிறாள்."ஜீவாந்திகா" குழந்தையை திடகாத்திற ஆரோக்யத்துடன் இருக்க ஆசீர்வதிக்கிறாள்.


8. நான்கு வெற்றிலை பாக்கு[இரண்டு வெற்றிலை ஒரு முழு பாக்கு அல்லது இரு களி பாக்கு] பலகையின் மேல் நான்கு மூலைகளிலும் வைக்கவும்.வெற்றிலைமீது பாக்கை வைப்பது கடவுளை மந்திரம் இல்லாதே , ஆவாஹனம் செய்வதாகும்[ கூப்பிடுவதாகும்].ஆதிமாதாவின் அம்ஸமான காத்யாயினி சொல்படி வெற்றிலை வைப்பது கடவுளுக்கு அழைப்பிதழ் போன்றதாகும். பூஜா தாம்பாளத்தின் பின் புறம் ஸப்தமாத்ருகாவின் படம் வைத்துக்கொள்ளவும்.



பூஜை முறை

-இந்த பூஜை சூரிய உதயத்திலிருந்து சூரிய மறைவுக்குள் செய்யவேண்டும்.எந்த நாளிலும் செய்யலாம் [அமாவாசை உள்பட].

-இந்த பூஜை குழந்தை பிறந்தபின்னர் குழந்தையின் தந்தையே செய்யவேண்டும்.பூஜை செய்யும் சமயம் தந்தை குழந்தையை சிறிது நேரம் தமது மடியில் வைத்துக் கொள்ளவேண்டும். பூஜை குழந்தை பிறந்து மூன்று நாள்பின் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நமது முறைப்படி குத்து விளக்கு , ஜோடி ஜோதி விளக்கு அல்லது காமக்ஷி விளக்கு ஏற்றி வைத்தபிறகு பூஜை ஆரம்பம்.

-பூஜையின் ஆரம்பம் வக்ரதுண்ட மஹாகாயா ஸ்லோகத்துடன் ஆரம்பிக்கவேண்டும்.

- இதை அடுத்து குருக்ஷேத்ர மந்திரம் சொல்லவேண்டும்.பிறகு ஸத்குரு நாம ஜபம் செய்தாக வேண்டும்.

- வெற்றிலைமீது வைத்திருக்கும் பாக்குகளுக்கு மஞ்ஜள் குங்குமம் இடவும் , சிறிது ஈரமாக இருந்தால் பரவாயில்லை, ஒட்டும்.பிறகு  பூஜா தாம்பாளத்தில் இருக்கும் பாக்குகளுக்கு ஒவ்வொன்றாக  சந்தனம், மஞ்ஜள் குங்குமம், அக்ஷதை அர்ப்பணிக்கவும்.

- பிறகு இந்த பூஜை மாத்ருவாத்ஸல்ய விந்தானத்தில் இருக்கும் நவ மந்த்ரமாலா ஸ்தோத்ரம் பாராயணம் ஒரு முறையாவது செய்யவேண்டும். அவரவர் வசதிப்படி எவ்வளவு முறை வேண்டுமானாலும் நவ மந்த்ரமாலா பாராயணம் செய்யலாம்.

- இந்த ஸ்தோத்ரம் முதல் முறை சொல்லும் போதே வாஸனை பூக்கள், இல்லலாவிடில் சாதாரண பூக்கள் சந்தனத்தில் ஒத்தி, அக்ஷதையுடன் கலந்து ஏழு பாக்கு, ஸப்தமாத்ருகா படம், "ஜரா" "ஜீவாந்திகாவை" குறிக்கும் அக்ஷதை குவிப்பு மீது அர்ப்பணிக்கவும்.
-தூபம் ஏற்றவும்.

- ஏழு தட்டில் தனித்தனியே நெய்வேத்தியம் தயார் செய்து கொள்ளவும் .[தேங்காய் பூரணம், தேங்காய் துறுவல் , வெல்லம், கலத்தின் பருப்பு, அன்னம் இதை த்தவிர அவரவர்கள் சௌகர்யம் எப்படியோ அப்படி] இது இல்லாதவர்கள் , அரை த்தேங்காயும் வெல்லமும் நெய்வேத்தியம் செய்யலாம்.

- இவை அனைத்தும் செய்தபின், கடைசியாக தாமரைப் பூ அர்ப்பணிக்கவும் ஏனெனில் அது  அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான பூ வாகும். 
   


பாப்பு பிறகு சொன்னார்: இந்த பூஜை குழந்தை பிறந்த பின்னர் முதல் பூஜை  தகப்பனாரால் செய்யவேண்டியது.பூஜை நடைபெரும் சமயம் குழந்தையின் தாயார் சிறிது நேரமாவது கணவர் பக்கத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தந்தையால் ஏதோ காரணத்தினால் பூஜையில் அமரமுடியவில்லை என்றால் குழந்தையின் தாத்தா[ அப்பாவழி அல்லது அம்மாவழி] பூஜை செய்யலாம். அவர்களும் செய்ய இயலவில்லை என்றால் குழந்தையின் நெருங்கிய  ஆண் உறவினர் செய்யலாம். குழந்தை பெறிதாகிவிட்டால் குழந்தையின் தாய் எப்போது வேண்டுமானாலும் வயது த்தடை ஏதுமின்றி பூஜை செய்யலாம்.எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம்.அது குழந்தையின் பிறந்த நாளோ அல்லது , நோயிலிருந்து குணமானவுடன்,அல்லது வேறு எந்த கொண்டாட்டம் சமயம் செய்யலாம்.பெற்றோர்கள் சேர்ந்தோ ,தனியாகவோ செய்யலாம். ஒரு முறை செய்தபின், மறுமுறை செய்ய எவ்வித வர்புருத்தலும் இல்லை. ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருப்பினும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே பூஜை செய்வது நல்லதே , ஆயினும் அப்படி முடியாதவர்கள், அனைத்து குழந்தைகளுக்கும் சேர்த்தே பூஜை செய்யலாம். ஸத்குருவும் அவர்  தாயுமான ஆதிமாதாவும்  பார்த்துக் கொள்வார்கள்.



॥ हरि ॐ ॥
अथ नवमन्त्रमालास्तोत्रम्।
(पदच्छेद)
या माया मधुकैटभ-प्रमथनी या महिषोन्मूलिनी
या धूम्रेक्षण-चण्डमुण्ड-मथनी या रक्तबीजाशनी।
शक्ति: शुम्भनिशुम्भ-दैत्य-दलिनी या सिद्धिलक्ष्मी: परा
सा चण्डि नव-कोटि-मूर्ति-सहिता मां पातु विश्वेश्वरी॥
स्तुता सुरै: पूर्वम्-अभीष्ट-संश्रयात् तथा सुरेन्द्रेण दिनेषु सेविता।
करोतु सा न: शुभहेतुरीश्वरी शुभानि भद्राण्यभिहन्तु चापद:॥
या सांप्रतं चोद्धत-दैत्य-तापितै: अस्माभिरीशा च सुरैर्-नमस्यते।
करोतु सा न: शुभहेतुरीश्वरी शुभानि भद्राण्यभिहन्तु चापद:॥
या च स्मृता तत्क्षणमेव हन्ति न: सर्वापदो भक्ति-विनम्र-मूर्तिभि:।
करोतु सा न: शुभहेतुरीश्वरी शुभानि भद्राण्यभिहन्तु चापद:॥
सर्वबाधाप्रशमनं त्रैलोक्यस्य अखिलेश्वरि।
एवमेव त्वया कार्यं अस्मद्-वैरि-विनाशनम् ॥
सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके।
शरण्ये त्र्यंबके गौरि नारायणि नमोऽस्तु ते॥
सृष्टि-स्थिति-विनाशानां शक्तिभूते सनातनि।
गुणाश्रये गुणमये नारायणि नमोऽस्तु ते॥
शरणागत-दीनार्त-परित्राण-परायणे।
सर्वस्यार्तिहरे देवि नारायणि नमोऽस्तु ते॥
सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति-समन्विते।
भयेभ्यस्-त्राहि नो देवि दुर्गे देवि नमोऽस्तु ते॥
______________________________________________________________________
 ॥ हरि ॐ ॥
॥ अथ नवमन्त्रमालास्तोत्रम् ॥
(मराठी)
जी माता मधु-कैटभ-घातिनी        मर्दी जी महिषासुरां
जी धूम्रेक्षण-चण्ड-मुण्ड-नाशिनी   वधे रक्तबीजासुरां।
निर्दाळी शुम्भ-निशुम्भ-दैत्यां        जी सिद्धिलक्ष्मी परा
ती चण्डिका नव-कोटी-मूर्ति-सहिता   प्रतिपाळो आम्हां लेकरां ॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
अभीष्ट-पूर्तिसाठी देवादिकांनी    स्तविली भजिली जिला ती आदिमाता।
शुभहेतुरीश्‍वरी ती माय आमुची   करो शुभभद्र, हरो सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
उन्मत्त दैत्यांमुळे गांजलेल्या    आमुचे क्षेम करो पराम्बा सुरवन्दिता।
शुभहेतुरीश्‍वरी ती माय आमुची   करो शुभभद्र, हरो सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
जी स्मरण करताचि हरे दु:खक्लेश । भक्तिशील आम्ही तिला शरण असता।
शुभहेतुरीश्‍वरी ती माय आमुची   करो शुभभद्र, हरो सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
सर्वबाधांचे प्रशमन           करी त्रैलोक्याची अखिलस्वमिनी।
आमुच्या वैर्‍यांचे निर्दालन   करावे हेचि त्वा भक्त-उद्धारिणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
सर्वमंगलांच्या मांगल्ये   शिवे सर्वार्थसाधिके।
शरण्ये त्र्यम्बके गौरी   नारायणी नमो अम्बिके॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
सृष्टीची उत्पत्ति स्थिति लय   करी जी आद्यशक्ति सनातनी।
वन्दितो गुणाश्रये गुणमये     वात्सल्यनिलये नारायणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
शरणागत पामर लेकरां       तत्पर जी प्रतिपालनी।
प्रणाम तुज सर्वपीडाहारिणी   क्षमास्वरूपे नारायणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
सर्वस्वरूपे सर्वेश्‍वरी   सर्वशक्ति-समन्विते।
भयापासून रक्षी आम्हां   देवी दुर्गे आदिमाते॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
  ______________________________________________________________________
॥ हरि ॐ ॥
॥ अथ नवमन्त्रमालास्तोत्रम्॥
(हिन्दी)
जो माता मधुकैटभ-घातिनी        महिषासुरमर्दिनी
जो धूम्रेक्षण-चण्डमुण्ड-नाशिनी      रक्तबीज-निर्मूलिनी।
जो है शुम्भनिशुम्भ-दैत्यछेदिनी     जो सिद्धिलक्ष्मी परा
वह चण्डिका नवकोटीमूर्तिसहिता   चरणों में हमें दें आसरा ॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
अभीष्ट-पूर्तिहेतु सुरगणों ने   की जिसकी स्तुति भक्ति वह आदिमाता।
शुभहेतुरीश्‍वरी वह माँ हमारी    करें शुभभद्र, हरें सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
उन्मत्त दैत्यों से ग्रस्त हैं हम     करो क्षेम हमारा पराम्बा सुरवन्दिता।
शुभहेतुरीश्‍वरी वह माँ हमारी    करें शुभभद्र, हरें सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
स्मरण करते ही दुखक्लेश है हरती।    भक्तिशील हम जब शरण में हों उसके।
शुभहेतुरीश्‍वरी वह माँ हमारी    करें शुभभद्र, हरें सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
सर्वबाधाओं का प्रशमन   करे त्रैलोक्य की अखिलस्वमिनी।
हमारे बैरियों का निर्दालन   करो यही माँ तुम भक्तोद्धारिणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
सर्वमंगलों का मांगल्य   शिवे सर्वार्थसाधिके।
शरण्ये त्र्यम्बके गौरी   नारायणी नमो अम्बिके॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
सृष्टि की उत्पत्ति स्थिति लय   करे जो आद्यशक्ति सनातनी।
वन्दन तुम्हें गुणाश्रये गुणमये   वात्सल्यनिलये नारायणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
शरणागत दीनदुखी संतानों के   परिपालन में तत्पर जननी।
प्रणाम तुम्हें सर्वपीडाहारिणी   क्षमास्वरूपे नारायणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
सर्वस्वरूपे सर्वेश्‍वरी   सर्वशक्तिसमन्विते।
भय से हमारी सुरक्षा करना    देवी दुर्गे आदिमाते॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
 ______________________________________________________________________

"நவமந்த்ரமாலா ஸ்தோத்ரம்"   

" नव मंत्रमाला स्तॊत्रम्।"  
[Navamanthramala sthothram]

யா மாயா மதுகைடப ப்ரமதனீ யா மஹிஷோன்மூலினீ
யா தூம்ரேக்ஷண சண்டமுண்டமதனீ யா ரக்தபீஜாஷனீ ||
ஷக்தி: ஷும்பநிஷும்ப தைத்யதலினீ யா ஸித்திலக்ஷ்மீபரா
ஸா சண்டி நவகோடிமூர்திஸஹிதா மாம் பாது விஷ்வேஷ்வரீ || 1 ||

ஸ்துதாஸுரை: பூர்வமபீஷ்டஸம்ஷ்ரயாத் தத்தா ஸுரேந்த்ரேண தினேஷு ஸேவிதா
கரோது ஸா ந: சுபஹேதுரீஷ்வரீ சுபானி பத்ராண்யபிஹன்து சாபத: || 2 ||

யா ஸாம்ப்ரதம் சோத்தத் தைத்யதாபிதை: அஸ்மாபிரீஷா ச ஸுரைர் நமஸ்யதே
கரோதுஸா ந: சுபஹேதுரீஷ்வரீ சுபானி பத்ராண்யபிஹன்து சாபத:|| 3 ||

யா ச ஸ்ம்ருதா தத்ஷணமேவ ஹ்ன்தி ந: ஸர்வாபதோ பக்திவினம்ரமூர்த்திபி:
கரோது ஸா ந: சுபஹேதுரீஷ்வரீ சுபானி பத்ராண்யபிஹன்து சா பத: || 4 ||

ஸர்வாபாதா ப்ரஷமனம் த்ரைலோகஸ்ய அகிலேஷ்வரீ
ஏவமேவ த்வயாகார்யம் அஸ்மத்வைரீ  வினாஷனம்|| 5 ||

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
ஷரண்யே த்ரயம்பகே கௌரீ நாராயணீ நமோஸ்துதே|| 6 ||

ஸ்ருஷ்டிஸ்திதி வினாஷானாம் ஷக்திபூதே ஸநாதனீ
குணாஸ்ரயே குணமயே நாராயணீ நமோஸ்துதே || 7 ||

ஷரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்திஹரே தேவீ நாராயணீ நமோஸ்துதே || 8 ||

ஸர்வஸ்வரூபே ஸர்வேஷீ ஸர்வேஷக்தி ஸமன்விதே
பயேப்யஸ்த்ராஹினோ தேவீ  நாராயணீ நமோஸ்துதே|| 9 || 

_________________________________________________________________________________
"அம்பக்ஞ"

மூள லேக -
மராடீ - ஸப்த மாத்ருகா பூஜா  मराठी Blog
ஹிம்தீ -  ஸப்த மாத்ருகா பூஜா   हिंदी Blog 
இம்க்லிஶ  - ஸப்த மாத்ருகா பூஜா  English Blog


No comments:

Post a Comment