Friday, 6 December 2013

டான் பிரவுனின் துரோகம் பாயிண்ட்(Deception Point டிசெப்ஷன் பாயிண்ட்)

Deception Point by Dan Brown


டான் பிரவுனின் துரோகம் பாயிண்ட்(Deception Point டிசெப்ஷன் பாயிண்ட்)

டான் பிரவுன் எழுதிய டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் படித்த பிறகு என்னால் டிசெப்ஷன் பாயிண்ட் புத்தகத்தை படிக்க எடுக்காமல் இருக்கமுடியவில்லை, இதுவும் டான் பிரவுனின் மற்றொரு உன்னத படைப்பு ஆகும். வழக்கம் போல் அவரது புத்தகத்தின் விவரிப்பு வழக்கமான மாதிரி ஈடிணையற்ற -  நன்கு விளங்குகின்ற மற்றும்  தெளிவாக பாணியில் இருந்தது . 
 

டிசெப்ஷன் பாயிண்ட்

அசோக் பாத்யேயால் பிரமாதமாக மராத்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இப்புத்தகத்தை வாசித்தேன். இந்த தரமான நாவல்களை  மேத்தா பப்ளிஷிங் ஹவுஸ் மராத்தி வாசகர்களுக்கு கிடைக்குமாறு செய்தது  பார்ப்பதற்கு  நன்றாக இருக்கிறது.

டிசெப்ஷன் பாயிண்ட் ஒரு தீவிர இரகசிய தொழில்நுட்ப நுண்ணறிவு உளவு நிறுவனத்திலிருந்து  தொடங்குகிறது மற்றும் உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் மிக உயர்ந்த அரசியல் துறையின் எதிரொளிப்பாக இருக்கிறது. இங்கிருந்து அது [வாசகர்களை] படிப்பவர்களை மிகக் கடுமையான [செல்ல இயலாத] தடையிடப்பட்ட பனிக்கட்டு அடுக்குகள் கொண்ட ஆர்க்டிக் கண்ட- வட்டத்திற்கு கொண்டு சென்று, திரும்பி மறுபடி  அரசியலும் , [மக்கள் வாயில்] ஊடகத்தின் முகப்புக்கூடவழி  கொண்ட தேசத்தின் பலத்த தலைநகரத்திற்கு அழைத்து வந்து விடும். திரு டான் பிரவுனால் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள்  மற்றும் ஆயுதங்கள் பற்றி பெரும்பாலானவைகள் முற்றிலும் கேட்கப்படாத மற்றும் வெளித்தோற்றத்தில் வருங்காலத்திற்குரியவைகளாக இருக்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால், திரு பிரவுன் அவ்வாயுதங்களின் இருப்பும் மற்றும் அவைகளை ஆயுத படைகளால் வழக்கமான  பயன்பாட்டுக்குள்ளாக இருந்தது என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார்,ஆனால் அவைகள் உயர் மட்ட அளவில் (அந்தரங்கமாக) வகைப்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடானது பல்வேறு வகையான நிகழ்வுகளிலும் மற்றும் பல எடுத்துக்காட்டுகள் மூலம்  தீவிர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், உலகம் முழுவதிலும் உள்ள  கொடூரமான எதிரிகள் மற்றும் நிலப்பகுதிக்கு எதிராக ஏற்படும் புதிய கற்கால போர்களிலும், அதி குரோதமாக இருப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டியுமமிந்த நவீன  ஆயுதங்களை பெற்றிருக்க வேண்டுவது பெரும்பாலாக இராணுவத்தினருக்கு அவசியம் வேண்டுமென்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. புவியியல், அரசியல்,மற்றும்  படைதுறையியல்  ரீதியாக ஒரு கொந்தளிப்பான மற்றும் ஆபத்தான  நிலையில் இந்தியா இருப்பதால், உபகரணங்களை சீரமைக்க வேண்டியும், இந்த முன்னேறிய போர் அமைப்புகளை அண்மையில் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது நியாயமானது என்று சொல்லப்படுகிறது.

பெயர் குறிப்பிடுவதுபோல், டிசெப்ஷன் பாயிண்ட் இந்த காலத்திற்கேற்ப  மிக சிறந்த ஆயுதமான மோசடி பற்றிய கதையாக உள்ளது. இந்த நாவலில், துரோகம் மற்றும் பொய்கள் இரண்டும் ஒன்றாக நெய்யப்பட்டு, மற்றும் ஒரு மர்மமான அதிகார தரகரால், உண்மையை தவிர  எதையும் மறைத்து நிறுத்த முடியாத   ஒரு புலனாய்வு சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏமாற்றுத்தனத்தினால்  உண்மை மற்றும் உண்மையை உணர்வதற்கான சந்தர்ப்பம்  ஏற்படுகிறது. ஏமாற்றுத்தனம் எல்லோரையும் முட்டாளாக்குவதில்லை ஆனால்  வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போக்கை மாற்றக்கூடிய சாத்தியம் உள்ளது, அதன் விளைவால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும்  கொள்கையில் ஒரு இடைவெளி ஏற்படுமளவுக்கு  தாக்கத்தைக்கொடுக்கும். ஆனால் இறுதியில் உண்மையே நிலைத்து நிற்கும்.

இந்த நாவலின் மூலம் நிச்சயமாக காண்பிப்பது தூய சத்தியமும், பிரேமை மற்றும் ஆனந்தம் ஆகிய இந்த மூன்றும் மனித குலத்தின் மிக அடிப்படையான மற்றும் மிகவும் முக்கியமான கொள்கைகள் தான் என்றும் நிரூபிக்கிறது; மற்றும் அதை தாண்டி மற்றவைகள் எல்லாம் நிலையற்ற மாறும் தன்மையுடையது.

நான் உண்மையாக நினைப்பதுவும் மற்றும் பரிந்துரைப்பதுவும் என்னவெனில்  ஒவ்வொரு சமூக விழிப்புணர்வு மற்றும் பொறுப்புமுடைய   வாசகர் இந்த புத்தகத்தை கட்டாயமாக படிக்க வேண்டும். 

No comments:

Post a Comment