Thursday 17 July 2014

டாக்டர். டெஸ்லாவின்- சிறுவயது காலம்

கடந்த கட்டுறையில் நமக்கு கோபுரம் போன்ற உலகளவில் புகழ் பெற்ற டாக்டர் டெஸ்லா என்ற  பெரியவர் அறிமுகமானார். டா.டெஸ்லாவின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் கோபுரம் போன்ற என்பது அவருக்கு மிகச்சிறிய கௌரவ வார்த்தையாகும். அவரை மின்சக்தி சாதனைகளின் இமயம் என்றே அழைக்கவேண்டும் ஏனெனில் டா.டெஸ்லா இமயத்தின் உயரத்திற்கு மேல் சாதனைகளால் கடந்ததால் அவர் "விஞானத்தின் கடவுள்" என்று ஆராதிக்கப்பட்டார்.நாம் இன்று இந்த மேதையுடன் கொஞ்சம் அதிகமாக பழகுவோம். எனது முந்திய ப்ளாக் ஸ்பாட்டில் டா.டெஸ்லாவின் பிரப்பு ,அவரது கல்வி, பட்டம், பட்டயங்கள், பதவி முதலியன சிறிதளவு வர்ணித்தோம். இன்றைய ப்ளாக் ஸ்பாட் அவரது குழந்தை பருவம் பற்றி பார்க்கும். பிறகு வாலிப வயது ,புதிதாக த்தோன்றும் கண்டுபிடிப்பாளர். இந்த பருவத்தில் தான் டா.டெஸ்லா பக்தியிலும் மூழ்கினார், அதுவே அவரை ஒரு ஆராய்சியாளராகவும்,, ஆய்வாளராகவும்,  ,கண்டுபிடிப்பாளராக ஆக்கியது 
டா.நிகோலா டெஸ்லா ஒரு கேதலிக் மதத்தைசார்ந்த குடும்பத்தில் பிறந்தது நாம் அறிவோம். அவரது தந்தை மிலுடின் டெஸ்லா ஒரு பாதிரி, அவர் அம்மாவழி பாட்டியும் அப்படியே. அவர் தாய் ல்யூகா டெஸ்லா ஒரு க்ராமத்துப் பெண் ஆவாள். அவர் தாய் படிக்காவிட்டாலும் வீட்டை நன்கு கவனித்து வந்தாள் . அவளுக்கு புது வழிகள் , முறைகள், வேலை சமயல், செயல்முறைகள் ஆர்வம் உண்டு. அவளது  புது வழி ஆர்வத்தின் பலன் அவளே ஒரு முட்டை அடிக்கும் பொறி தயார் செய்தாள்[ இக்காலத்து மிக்சி போன்ற ஒன்று]. அவ்வாரே சிறு டா.டெஸ்லாவின் வாழ்கையில் ஆன்மீகமும்[பக்தியும்] விஞானமும் கலந்தே  இருந்தது. பக்தியும் விஞானமுமே ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்று அவரது ஒவ்வொரு வாழ்கை க்ட்டிடத்தின் செங்கல்கள் போல் சரி சமமாக சேர்ந்தே சென்றன.நிகோலா அவர் தாய்க்கு நெருங்கியவர் ஆவர், அவர் அவரது புகைப்படம் போன்ற ஞாபக சக்திக்கும் , புதுமைக்கும் அவர் தாய்கு பாராட்டு சேரும் என்பார். ஆம் குழந்தைகளின் இனிய இளைய தனித்தன்மை பெற்றோர்களே உருவாக்குகின்றனர். ஆனாலும் டா. நிகொலா டெஸ்லாவை ப்போன்று வளர்க்க பெற்றோர்கள் புதுமை ஆர்வத்துடனும் ,  தகுந்த முறை, பயமில்லாமை , இவைகளுக்கு அப்பார்ப்பட்ட  கடவுள் பக்தி [ஆன்மீகம்] மிகவும் அவசியம், அவை பரிபூரணாமாக இருந்தன. 

அவர் பெற்றோர்கள் தவிர அவருக்கு மில்கா, எஞ்சலீனா, மாரிகா என்று மூன்று சகோதரிகள் ,மற்றும்  டேன் என்ற ஒரு மூத்த  சகோதரர் இருந்தனர். டேன்  ஒர் குதிரை சவாரி விபத்தில் அல்பாயுளில் பரிதாபமாக காலமானார்.  டா. டெஸ்லா எதிரிகள் அவரது சகோதரின் மரணத்திற்கு , டா. நிகோலாவையே காரணம் என்று பழி சுமத்தினர். அது ஒரு சுத்தப் பொய் . டா.டெஸ்லாவின் பெயரைக் கெடுக்க செய்த சதியே என்று நிரூபிக்கப்பட்டது.


அவர் அவரது  பிறந்த இடமான ஸ்மில்ஜானில் ஜெர்மன் பாஷை , கணிதம் ,  மதம் முதலியவன பற்றி அவரது முதல் நிலைப்பள்ளியில் கற்றார். நிகோலாவின் தந்தைக்கு காஸ்பிக் என்ற இடத்திற்கு வேலை மாற்ற்த்துடன் சமயகுருவாக [பாதிரியாக] பணியாற்றினார். அப்போது நிகோலா பள்ளி கல்வியை முடித்தார்.

நிகோலா பிறகு கார்வோலாக் என்ற இடத்தில் உயர்தர க்கல்வி கற்றார். இங்கு  நிகோலா "இன்டெக்ரல்  கல்குலஸ்" என்ற கணித முறைகளை காகிதத்தில் எழுதாமலேயே மனத்திலேயே கணக்கிடுவார்.ஆம் மனத்திலேயே, அதுவே  ஆஸ்சர்ய்ம் ஒரு பக்கம் இருக்கையில் , அவர் ஆசிரியர்கள் அதிசயித்து  அவர் ஏதோ ஏமாற்றுகிறார் என்று நினைத்தனர்.அது அப்படி இல்லாது நிகோலா உண்மையாகவே ஒரு மேதை என்பதை  நான்கு ஆண்டு தேர்வை மூன்றே ஆண்டுகளில் எழுதி  1873 ல் தேர்ச்சி பெற்றவர் ஆவார். அதே  வருடம் அவர் ஸ்மில்ஜான் வந்த சமயம் பலத்த காலரா நோயினால் பாதிக்கப்பட்டு, குணமாகி வெளிவந்தார். 

1874ல் டா.டெஸ்லா மலை ப்ரதேசங்களில் உலாவி இறைவனையும் , இயற்கையையும் பற்றி ஆறாய விரும்பினார்.இந்த மோதல் அவருக்கு  மனோபலத்தையும் , தன் நம்பிக்கை , தைரியம் தருவதுடன் இயற்கையுடன் ஒத்துப்போகவும் , அதுவே அவருக்கு அவரது கண்டுபிடிப்புகளின் சாதனைகளுக்கு ஆதாரமாக  இருந்தது. 

1875ல் அவர் க்ராஜ்ஜில்  ஆஸ்ட்ரியன் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். இங்கு அவரது தங்குதல் குறிப்பிடத்தக்கது.இங்கு அவர் தகுதி ப்படிப்புதவித் தொகையில் சேர்ந்தார். அவர் கற்பதற்கு ப்பசி, ஆர்வத்தி்னால் ஒரு அறிவுறை வகுப்பும் செல்லாது இருக்கமாட்டார்., மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைந்தார் , ஒன்பது தேர்வுகளில் தேர்ச்சிகள் பெற்றார். அதுவே அவசியத்திற்கு மேல் இருமடங்காக  இருந்தன. அவர் ஸெர்பிய சங்கம் ஆரம்பித்தார். முடிவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலதிகாரி  டா. டெஸ்லாவின்  தந்தைக்கு கடிதம் எழுதி நிகோலா "கல்லூரியின் நக்ஷத்திரமாக " தேர்ந்தெடுக்கப்பட்டதை தெரிவித்தார். அந்த பூரிப்பை அடுத்து நிகோலா கடுமையாக காலை மூன்று மணியிலிருந்து இரவு  பதினொன்றுவரை , இருபது  மணி நேரம் வேலை செய்வார்.அதுவும் வார ஓய்வு , வேரு எந்த விடுமுறை பெறாமல். 1878ல் அவர் க்ராஜ்ஜை விட்டு காஸ்பிக் வந்தார். இங்கு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியாராக வேலை பார்த்தார். 1880ல் ப்ரேக்கில் இருந்துவிட்டு நிகோலா டெஸ்லா புடாபெஸ்ட் வந்தார்.  அங்கு ஃப்ரென்க் புஸ்காஸ் என்ற அப்போது புதிதாக கட்டப்பட்டு வந்த தொலைபேசி  மாற்று நிருவனத்தில் பணியாற்றினார்.  ஆகையினால்  மத்திய தந்தி அலுவலகத்தில் அவர் உருவரை படங்கள் எழுதுபவராக வேலை ஏற்றுக்கொண்டார்.  

சில மாதங்களில் புடாபெஸ்ட் தொலைபேசி மாற்று நிருவனம் இயங்க ஆரம்பித்த்வுடன் டா.டெஸ்லாவை முக்கிய மின்பொறியாளராக நியமித்தனர்.அவர் இங்கு மத்தியநிலையத்தில்  இயந்திரங்களில்  பல முன்னேறங்கள் செய்வித்தார். இங்கு அவரது  முதலாவது கண்டுபிடிப்பு . டா. டெஸ்லா தொலைபேசியின் ரிபீடர்[ மறு இயக்கம் யந்திரம்] ,ஒலிபெருக்கி முதலியன மக்களின் நலனுக்காக செய்தார். அவர் இந்த சாதனைகளுக்கு ப்பட்டயங்கள் கேட்டுவாங்கவில்லை.

பிறகு டெஸ்லா ஃப்ரான்ஸில் பாரிஸில் உள்ள காண்டினென்டல்  எடிஸன் நிருவனத்தில் பொறியியலாளராக வடிவமைப்புக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றினார். இங்கும் அவர் மிகவும் ஆற்றல் மிக்க  பணியாற்றினார். அவரது வேலை திறனை கௌரவிக்கும் வகையில் அவரது மேலதிகாரி சார்ல்ஸ் பேச்சுலர் அவரை அமெரிக்காவில் உள்ள ந்யூயார்க்கிற்கு அனுப்பினார், தாமஸ் ஆல்வா எடிஸனனை சந்திக்க. அவரது எடிஸனுக்கு எழுதிய டெஸ்லாவைப்பற்றிய அறிமுகக் கடிதத்தில் எனக்கு தெறிந்தவரை இரண்டே உயர்ந்த மனிதர்கள் உள்ளனர் ,அதில் ஒன்று நீங்கள் மற்றொன்று இந்த இளம் மனிதர்’  .ஆம் 1884ல் டா. டெஸ்லா ஜேப்பில் நான்கு ரூபாயுடன் அமெரிக்காவின் மண்ணை மிதித்தார், அதுவே அறுபது ஆண்டில்  அவர் சாதனைகளுக்கு அனுகூலமான  நிலமாகியது,அங்கேயே அவர்700க்கும்  மேலான பட்டயங்களுக்கு  உறிமையாளராக அவர் பெயரில் பதிவும் ஆயின. நிகோலா டெஸ்லா தாமஸ் ஆல்வா எடிஸனை  சந்திக்க ஆவலுடன் இருந்தார் ,ஏனெனில் அவர்  தாமஸ் எடிஸனை ஒரு சான்றாக கருதிவந்தார், ஆனால் அது விறைவில்  மறைந்தது[தொடரும்]

அம்பக்ஞ|| ஸ்ரீ ராம்|| 

No comments:

Post a Comment