Wednesday 16 July 2014

டாக்டர் நிகோலா டெஸ்லா அறிமுகம்- "விஞானத்தின் கடவுள்"

மார்ச் 27,2014 அன்று  ஸத்குரு அநிருத்த பாப்பு எங்கள் அனைவருக்கும்  டாக்டர் நிகோலா டெஸ்லாவை அறிமுகப் ப்டுத்தினார்கள். டாக்டர்  டெஸ்லா இவ்வுலகத்தின் மாபெரும் விஞானியாக விளங்கினார். அவரை உலகம் மரந்திருந்தாலும் ,அவரது கண்டுபிடிப்பு சாதனைகள் மனித அன்றாட வாழ்க்கைக்கு இந்த க்ரகத்தில் இன்றியமையாதவை. ஆகையால் இன்றுமுதல் நான்  டாக்டர் நிகோலா டெஸ்லாவை ப்பற்றிய தொடரை ஆரம்பிக்கிறேன், அதுவே அவரது அருட்தொண்டரான தனித்தன்மையும் அவரது, காலத்தை முந்திய கண்டுபிடிப்பை பற்றியும் தெளிவு படுத்தும்.

டாக்டர் நிகோலா டெஸ்லா ஸெர்பியாவில்  பிறந்த அமெரிக்கர் ஆவர் ,"மிகச்சிறந்த பல்லாயிராண்டு ப்ரபல விஞானி" என்று அழைக்கப்பட்டார்,, உண்மையிலேயே உயர்ந்த கண்டுப்டிப்பு சாதனையாளர், முன்நோக்கி , இயர்பியல்துறை கர்ப்பனை வல்லுணர். அவரது பல " வழி வகுக்கும் ஆடலான மின்னோட்டம்"[ஆல்டர்னேட்டிங்க் கரண்ட்], சுதந்திர மின் சக்தி ,கம்பியில்லா மின் சக்தி அனுப்புதல்[ வயர்லெஸ் பவர்/ எனர்ஜி ட்ரான்ஸ்மிஷன்] இவை அவரது ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில் சில ஆகும். டாக்டர் நிகோலஸ் டெஸ்லா 10 ஜூலை 1856 மத்திய இரவில் பலத்த கோடை மின்னல் புயலிற்கிடையே ஒரு கேதோலிக் மதம் சார்ந்த ஆஸ்த்ரிய சாம்ராஜ்யத்தில் [தற்போது க்ரோஷியா என்றழைக்கப்படும்]உள்ள குடும்பத்தினருக்கு பிறந்தார்.குறிப்பாக எந்த மருத்துவச்சி டாக்டர் நிகோலாவின் அன்னைக்கு அவர் பிறக்கும்போது உதவி செய்தாளோ அவள்’ இக்குழந்தையே ஒரு புயலாக திகழ்வான் என்று சொன்னது பலித்ததுபோலும்.

மின், யந்திரப் பொறியாளரே உறுவான டாக்டர் நிகோலா டெஸ்லா,   க்ராஜ் என்ற இடத்தில் ஆஸ்த்ரிய பொறிஇயல் பள்ளியில் எல்லை ராணுவ தகுதிப்படிப்பு உதவித்தொகையின் உஅதவியில் [ஆதாரத்தில்] சேர்ந்தார். அங்கிருந்து ப்ரேக்கில் உள்ள சர்வகலாசாலையில் தத்துவ சாஸ்த்ரம் கல்வி தொடர சேர்ந்தார். டாக்டர் டெஸ்லாவிற்கு யேல் பல்கலைக்கழகமும் கொலம்பியா பல்கலைக்கழகமும் கௌரவத்திர்குறிய மேதை என்ற சான்றிதழை அளித்தன. டாக்டர் டெஸ்லாவிற்கு 18 மொழிகள் தெரிந்திருந்தது , 12 மொழிகளில் வெகு தேற்சி பெற்றவர் அதில் அவரது தாய் மொழி ஸெர்போ-க்ரோட் , லாடின் , இடாலியன் , ஃப்ரெஞ்ச் , ஜெர்மன் , ஆங்கிலம் முதலியன ஆகும்.

டாக்டர் நிகோலா டெஸ்லா 700 க்கும் மேல் ஆன தனியுரிமை பட்டயங்கள் [பேடெண்ட்] உரிமையாளர் சான்றிதழ்கள் பெற்றவர் ஆவார், அதுவே யாரும் செய்ய இயலா உளகளவு சாதனை ஆகும். டாக்டர் டெஸ்லாவின் கண்டுபிடிப்பில் ஆடலான மின்னோட்டத்துடன், அமைதி கிரணம்[பீஸ் ரே], மனித யந்திரம் ,தொலைகாட்சி , தூரத்து கட்டுப்பாடு [ரிமோட் கண்ட்ரோல்] , எக்ஸ் ரேஸ் , கம்பியில்லா சக்தி அனுப்புதல் , அண்டக்கதிர் சக்தி [காஸ்மிக் ரே எனர்ஜி],தூண்டிமின் மோடார் [இன்டக்ஷன் மோடார்] , ரேடியோ[வானொலி] ,சுழலும் காந்த சக்தி கொள்கை ,தொலை பேசி மீள் செயல் [டெலிஃபோன் ரிபீடர்] , டெஸ்லா காயில் ட்ரான்ஸ்ஃபார்மர்[டெஸ்லா மின் ஆற்றல் மாற்றி],கம்பியில்லா  தொடர்பு.டெலி போர்டேஷன் , ஆகாய சமய வளைவு [ஸ்பேஸ்டைம் பெண்டிங்க்] , பயண நேரம் அளவு , முதலியன ,பட்டியலில் அடங்கா சாதனைகள். 


டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது அதிசயிக்கும் கண்டுபிடிப்பினால் பல விருதுகளினாலும், பட்டங்களினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.அவ்விருதுகளில் சர்பியா நாட்டு அரசர் மிலான்-I னால்  "தி ஆர்டர் ஆஃப் ஸெயிண்ட் ஸாவா" என்று 1883 ல் அளிக்கப்ப்ட்ட தேசிய விருதும் ஒன்றாகும். இதைத்தவிர "தி இலியட் க்ரெஸெண்ட் மெடல்[பதக்கம்] தி  ஃப்ராங்க்லின் இன்ஸ்டிட்யூட்டினால் அளிக்கப்ப்டும் உயர்ந்த விருது ஆகும். "தி ஜான் ஸ்காட் அவார்ட்"  மனித இனத்திற்கு  தேவையான சுகம், நலம், சௌக்கியம் சார்ந்த கண்டுபிடிப்புகளிற்கு கௌரவிக்கும் வகையில் அமைந்தன.  மோண்ட்னெக்ரோ நிகோலா ராஜாவின் "தி ஆர்டர் ஆஃப் ப்ரின்ஸ் டேனிலோ",எடிசன் பதக்கம்- அமெரிக்காவில் மின் பொறியியலாளற்கென்று வழங்கப்படும் மகத்தான விருது 1917ல் வழங்கப்பட்டது. காந்தத்தின் ஃப்ளக்ஸ் அடர்த்தி
"டெஸ்லா" என்ற அளவு கோலில் அளக்கப்படுகிறது.  அது இந்த டாக்டர் நிகோலா டெஸ்லா வின் பேரில்தான். 1975ல் டாக்டர் நிகோலா டெஸ்லா கண்டுபிடிப்பு சாதனையாளர்கள் பட்டியலில் சேர்க்கப்ப்ட்டார். அமெரிக்காவின் தபால் சேவை 1983ல்  டாக்டர் நிகோலா டெஸ்லாவின் ஒட்டுவில்லையை வெளியிட்டு அவர் மறைந்தபின் கௌரவித்தது. இன்ஸ்டிட்யூட் ஆஃப் இலெக்ட்ரிகல் இன்ஜினியரிங்க் வருடந்தோரும் ,மிகவும் கௌரவமான "டாக்டர் நிகோலா டெஸ்லா அவார்ட்" என்ற விருதினை மிகச்சிறந்த மின் பொறியியல் மாணவருக்கு 1976 லிருந்து வழங்கி வருகிறது.

டாக்டர் டெஸ்லாவின் சாதனைகளை நினைவில் நிருத்த வருடா வருடம் ஜுலை 10 ஆம் தேதி அமெரிக்காவில் " டாக்டர் நிகோலா தினம்" கொண்டாடப்படுகிறது.  டாக்டர் நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்பு சாதனைகள் முன்னேற்றத்திற்கு உகந்ததாகவும் அது காலத்திற்கு முன்னதாகவே இருந்தவகையில் அது தொழில்களின் இரண்டாவது புரட்சியாக கருதப்பட்டு "மின் யுகமே" நிலைநாட்டியது. டாக்டர் டெஸ்லாவின் சாதனைகள் இருபதாவது ‘நூற்றாண்டிற்குமட்டுமல்லாமல் இருபத்தொன்றாவது  நூற்றாண்டிற்கும் நல்லதொரு அஸ்திவாரம் ஆகும். அவரது சாதனைகள் காலத்திற்கு முன்னதாகவே இருந்ததால் , பல தேசங்கள் உளவர்கள் மூலம் அல்லது கணிப்பொறிமூலம்  இந்த நுண்ணறிவுள்ள சாமர்த்தியமானவரை வேவுபார்க்கவும் அனுப்பின , அமைத்தன.  

டாக்டர் டெஸ்லா ஒரு விஞானி,புதுமையாளர்,உயர்ந்த உத்தம மனிதர்.
அவர் விஞானத்தின் ஒவ்வொரு அதிசயச்சம்பவங்களில் கடவுளைக்கண்டார். அவர் அவரது ஒவ்வொறு கண்டுபிடிப்பிலும் விஞானமும், ஆன்மீகமும் ஒரே நாணயத்தின் இருபுரங்கள் , அவை ஒன்றுக்கொன்று சாதகமானவை  அத்துடன்  ஒரு அதிசய திவ்ய சக்தியால் இயக்கப்படுகின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார் .

அவரை ப்போன்ற விஞானத்தையும் , ஆன்மீகத்தையும் கடைந்தெடுத்த ஆற்றல்மிக்க தீர்க்கதரிசி இனி கிடைப்பது அறிது. அவரது கண்டுபிடிப்புகள், புதுமைத்தனம் முதலிய சாதனைகளினால் அவர் "விஞானத்தின் கடவுள்" என்றே கருதப்பட்டார்.

ஹரிஓம் || ஸ்ரீ ராம் || அம்பக்ஞ || 

No comments:

Post a Comment