Friday, 18 July 2014

ஆடலான[மாறிமாறி விட்டு விட்டு வரும்] மின் சக்தியும் டாக்டர் டெஸ்லாவும்

ஒரு  ப்ரபலமான  பழமொழி உண்டு. அகந்தை, ஆணவம் ஒருவனின்  வீரமோ, வலிமையோ இல்லை அது அவனுக்கு பயம் என்னும் முகமூடி, இதையே இந்த கட்டுறையின் முடிவில் தெரியவரும்.

அனைவரும் ஆடல் மின் சக்தியைப்பற்றி அறிந்திருப்பீர்கள்[ஏ.சீ].இந்த ஆல்டர்னேடிங்க் கரண்ட் மின் சக்தியின் ப்ரவாஹம் முன்னும் பின்னும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.அதை ஒப்பிடும் போது டைரெக்ட் கரண்ட் [அதாவது நேர் மின் சக்தி] மின் ப்ரவாஹம் ஒரே திசையில் இருக்கும்.நமது தினசரி வாழ்கையில் நம் இல்லத்தில் உபயோகப்ப்டுத்துவது[ ஆல்டர்னேடிங்க் கரண்ட்] ஆடல் மின் சக்தியே ஆகும். சமீபத்தில் நமது இந்திய ரயில்  சில பகுதிகளில்  ரயில்களை ஓட்டுவதற்கு  டயரெக்ட் கரண்ட்லிருந்து ஆல்டர்னேடிங்க் கரண்ட்டிற்கு மாருவதை பற்றி அறிந்தோம். இந்த மாற்றம் முக்கியமாக மும்பையில் தினசரி எழுபத்தைந்து லக்ஷம் பயணிகளை புளிமூட்டை போல் அடைத்து செல்லும் பிணையத்திற்கு[நெட்வொர்க்] பொருந்தியது.  
டாக்டர் நிகோலா டெஸ்லா ,எவர் 1882 ஆல்டர்னேடிங்க் கரண்ட் எவ்வாரு செலுத்தவேண்டும் என்று கண்டுபிடித்தாரோ,  வாணிக ஒப்பேரல் செயல்படுத்தவும் விவரித்தார். கவனிக்கவேண்டியது என்னவென்றால் டாக்டர் டெஸ்லாவிற்கு ஆல்டெர்னேடிங்க் கரண்டின் நிலைத்த எண்ணம் எப்படி வந்தது? டாக்டர் டெஸ்லாவிற்கு அடிக்கடி அவருக்கு அவரது கண்டுபிடிப்புகள் பற்றி[கனாபோன்று]  முன் கூட்டிய உணர்வு வரும்.   ஏ.சி கரண்ட் மோட்டார் பற்றிய எண்ணம் அவருக்கு அவ்வாறே ஒரு கனவில் உருவாயிற்று.1882ல் அவர் புடாபெஸ்டில் இருந்தார். ஒரு மதியம் டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது நண்பருடன் பூங்காவில் உலாவிக்கொண்டு ஒரு பாடல் பாடிவந்தார்.அவரது அந்த சிறு வயதில் அவருக்கு புத்தகமே மனப்பாடம். அதில் கோதேஸ் ஃபாஸ்ட் ஒன்றாகும். சூரியன் மறையும் தருணம் அவருக்கு கோதேஸ் ஃபாஸ்ட்லிருந்து ஒரு அற்புதமான பத்தி[பேரா] நினைவிற்கு வந்தது.அதன் அர்த்தம் கீழ்வருமாரு.

" ஒளிர்வு பின்வாங்குகிறது,தினத்தின் உழைப்பு முடிந்தது அது அங்கு அவசரம், வாழ்க்கையின் புதிய பாதை தேடுகிறது ஆஹா என்னை எந்தப்பரவையும்  இம்மண்ணிலிருந்து தூக்காத ஆகாயத்தில் வழி நடத்தது". இதை சொன்ன மாத்திறத்தில் டாக்டர் டெஸ்லாவிற்கு மின்னல் போல் எண்ணம்  பளிச்சிட்டு தோன்றியது.ஒரு வினாடிக்குள் உண்மை விளங்கியது. அதை அவர் கடவுளின் செயல் என்றே எண்ணினார்.நிகோலா டெஸ்லா ஒரு குச்சியினால் ஆல்டர்னேடிங்க் கரண்ட் திட்டத்தின் மின்சுற்று வரைவடிவத்தை   அங்கேயே மணலில் வரைந்தார் .அந்த வரைவடிவம் ஒரு சுழலும் காந்த சக்திப்பரப்பானது. டாக்டர் டெஸ்லா அந்த வரைவடிவம் எவ்வாரு செயல்படும் என்பதை ஆறு வருடத்தின்  பின் அமெரிக்க இன்ஸ்டிட்யூட் மின் பொறியியலாளர்களுக்கு  தெளிவாக விளக்கினார். புகைப்படங்கள் தெளிவாகவும் கூர்மையாகவும் இருந்தன . அவருக்கு சுலபமாக இருந்தது."பாருங்கள் எனது இந்த மோட்டாரை, எப்படி திசை மாறுகிறது என்று கவனிப்போம்.

அவரது அனுமானத்தால் நிகோலா டெஸ்லா பாலிஃபேஸ் அதாவது இன்றைய மூன்று ஃபேஸ் [முன்று வழிகள் , பாசிடிவ், நெகடிவ், ந்யூட்ரல்] ஆல்டெர்னேடிங்க் கரண்ட் சிஸ்டம் ஆஃப் ஜெனரேடர்ஸ்[ஆடலான மின் ஆற்றல் உற்பத்தி பொறி],மின்னோடிகள், [மோட்டார்கள்],மின் சக்தி மாற்றும் சாதனம்,மின் ஓட்டம் உண்டாக்கும் சாதனம்.மின் சக்தி அதிகரிக்கும், மின்சக்தி குரைக்கும் மாற்றல் சாதனம், ஆல்டர்னேடிங்க் கரண்ட் மோட்டார் மறுபுரம். டாக்டர் நிகோலா டெஸ்லா 40 தனியுரிமை அமெரிக்கப்  பட்டயங்களுக்கு சொந்தக்காரர். அவர் அவரது மோட்டார்கள், மின் முறைகள் சாதனைகள் பற்றி அவரது " நூதன ஆடலான மின்சக்தி முறைகள் மின்னோடிகளும்,  மின்சக்தி மாற்றும் பொறிகளும் " என்ற தலைப்பில் பத்திரிகை வெளியிட்டார்.அதை அவர் 1888ல் அமெரிக்க இன்ஸ்டிட்யூட்டின் பொறியியலாளர்களுக்கு விவரித்தார் அது அனைவரது கவனத்தை ஈர்த்தது.டாக்டர் நிகோலா டெஸ்லா மூன்று வழி ஆடல் மின் சக்தியைப்பற்றி ஆராயும்  சமயம்  கடவுளின்  புனிதமான த்ரிமூர்த்தி ஸ்வரூபத்தை தரிசித்தார் அனுபவித்தார்.   1888 லிருந்து டாக்டர் டெஸ்லாவின் ஆடல் மின் சக்தி முறை நம் இல்லத்தில் மின்சக்தியாக ஒளிர்கிறது , வாணிக வளர்ச்சிக்கும், கொண்டு செல்லுதற்கும் அதே அளவுகோலில் இன்றும் சிரிதும் மாறாது செயல்பட்டு வருகிறது.இந்த டாக்டர் டெஸ்லாவின் கண்டுபிடிப்பே இரண்டாவது ஆலை புரட்சிக்கு அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலைகள் மின் ஆற்றல் இயக்கமாகவும், திரளான உற்பத்தி, உற்பத்தி வரிசைகள் முதலியன இயங்கின.  

டாக்டர் நிகோலா டெஸ்லாவிற்கு  சுமார் 700 பட்டயங்களுக்கு மேல் அவர் பேரில் பதிவாகி உள்ளன. அவை நூற்றுக்கும் மேலான உற்பத்திகளுக்கும் ஆயிரத்திற்கும் மேலான  உபயோகங்களும்  உள்ளன. அவரது ஏ.சி மின் சக்தியிலிருந்து ஆரம்பித்து டாக்டர் டெஸ்லாவின் கணக்கில் அடங்கா கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு வீட்டில் ஏதாவது ஒர் வகையில் புகுந்திருக்கிறது என்பதை நமது பரம் பூஜ்ய பாப்பு நமக்கு  அவரது ப்ரசங்கத்தில் எடுத்து ச் சொல்லும்வரை நாம் டா.டெச்லாவின்  பெயரைக்கூட அறிந்ததில்லை.
அதன்  தொடற்சியை கவனிப்போம்  டா.டெஸ்லா எவ்வாரு தாமஸ் ஆல்வா எடிஸன்னை சந்தித்தார், அவரைப் போல் ப்ரதிபலித்தார்.அவர்கள் முதல் சந்திப்பில் எடிஸன் டா.டெஸ்லாவை பேட்டி க் செய்தார். அப்போது தாமஸ் ஆல்வா எடிஸன் உலகத்தில் மின்சக்தியின் ராஜாவாக மதிக்கப்பட்டவர். அவரது மின்சக்தி டயரெக்ட் கரண்ட் என்னும் நேர்மின் சக்தியே எந்த மின்  யந்திரங்களையும், பொறிகளையும் இயக்கியும் ஓட்டியும் வந்தன,பொறிகளும் யந்திரங்களும் டி.சி க்கு உகந்தவாரே அமைக்கப் பட்டு வந்தன.


எடிஸனுடன்  ஆன பேட்டியில் டா.டெஸ்லா எவ்வாரு சுழலும் காந்தத்தின் சக்திப் பரப்பு நியமத்தைக்கொண்டு ஆடலான மின்சக்தி மின்னோடிகள் மின் சக்தி உற்பத்தி செய்கின்றன என்பதை தெளிவாக விவரித்தார்.  தாமஸ் எடிஸனுக்கு இதைப்பற்றிய விஷயம் தெரியாததும், புரியாததையும்  கண்டு டா.டெஸ்லாவிற்கு ஆஸ்சரியமாக இருந்தது. அதையே விரிவாக விளக்கும் போது எவ்வாறு எடிஸனின் நேர்மின்சக்தி,  கொண்டு செல்லவும் , வினியோகம் செய்ய ந்யூயார்க் நகரத்தில் மட்டுமே நூற்றுக்கும் மேலான நேர்மின் சக்தி உற்பத்தி நிலையங்கள் தேவைப்படும்,  அது வெகுதூரம் வரை செல்லாது, அதோடு ஒப்பிடுகையில் எவ்வாரு தமது ஆடல் மின்சக்தி ந்யூயார்க் நகரம் மற்றுமின்றி ந்யூயாரக் நகரத்தின் வெளியிலும் ஒரே மின் உற்பத்தி நிலையித்திலிருந்து  கொண்டுசெல்லவும் , வினியோகிக்கவும் முடியும் என்பதை தெளிவும் படுத்தினார். டா.டெஸ்லா நேர்மின்சக்தி வெகுதூரம் கோண்டு செல்லுகையில் கழிவு ஏர்ப்படுகின்றன என்பதையும் எடுத்து உறைத்தார் அதுவே ஆடல் மின் சக்தியில் அவ்வாரு கழிவு , கசிவு  இல்லை என்றார். அது மட்டுமின்றி டா,டெஸ்லாவின் மின்சக்தி வால்டேஜ் ஆயிரக்கணக்கான பங்கு   அதிகரிக்கவும் , குறைக்கவும் மாற்று சாதனம் உதவியால் முடியும்,  அது சிக்கனமானதும் பத்திரமானதாகவும் உள்ளது. மின்சக்தி கழிவு என்பது நமக்கு இயற்கை கொடுத்ததை நிராகரிப்பது போல் ஆகும் ,அதே சமயம் நேர்மின் சக்தி சரியானது அல்ல அது இயற்கைக்கு மாறானது என்றும் அழுத்தமாக ச்சொன்னார்.அது இயற்கை வழியும்  அல்ல என்றார். அவ்வகையில் எவ்வாரு நேர்மின் சக்தியிலிருந்து ஆடலான மின் சக்திக்கு மாற்றம் உலகத்தின் மனித இனத்திற்கு முழுமையாக பயனுள்ளதாக அமையும் என்பதை உறுதியாகக் கூறினார்.


இந்த புரட்சி திட்டத்தை கண்டு திகைத்த தாமஸ் திடுக்கிட்டார். அவர் அவரது மின்சக்தி வ்யாபாரத்திற்கு வரும் ஆபத்தை உணர்ந்தார். அதுவே அவருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. அந்த பயத்தில் அவர் டா.டெஸ்லாவின் முயற்ச்சிகளை ஒரேமூச்சில் நிராகரித்து பொறாமை கொண்டு, "இது தப்பான வழி, செயல் படாது என்று டா.டெஸ்லாவை ஏளனம் செய்தார்.
மேல்கண்ட பேட்டியிலிருந்தே டா. டெஸ்லா எவ்வளவு தெளிவானவர்,நேர்மையானவர், உண்மைக்கு உறுதியானவர்   என்பது தெறிகிறது.  டா.டெஸ்லா எடிஸனை

நேரடியாக "உமது நேர்மின் சக்தியில் குறைஉள்ளது,  உலகத்துக்கு உபயோகமற்றது என்றும்" , அதே சமயம் நான் எனது ப்ரேரணையை அறிவிக்கும் ஆடலான மின் சக்தி பன் மடங்கு முன்னேற்றமானது ,அதுவே எல்லாவிதத்திலும் சாதகமானது , உபயோகமுள்ளது என்று அழுத்தமாகக்கூறி வேளியேறினார். இந்த தைரியம் டா. டேஸ்லாவிரற்கு கடவுள் மீதுள்ள நம்பிக்கையினால்தான் வந்தது. அதே சமயம் அவரது விஞான ஞானத்தின் தன் நம்பிக்கையி்னால் அவர் புகழ்பெற்ற விஞானியுடன் மோத முடிந்தது. இதுவே இங்கு " அகந்தை, ஆணவம் ஒருவனின்  வீரமோ, வலிமையோ இல்லை, அது பயம் "என்பதை தெளிவு படுத்துகிறது.

அடுத்த கட்டுறையில்,  மின்சக்தி ஜாம்பவான்களின் மோதல் பற்றி பார்ப்போம். [தொடரும்].
ஹரிஓம் || அம்பக்ஞ||  

No comments:

Post a Comment