Friday 23 August 2013

நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்]



ஹரிஓம்

நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்]

  Publication of English language learning guides authored by Nandai

ஆத்மபலம் வகுப்பெடுக்கும் சமயம் நந்தா மாதா அவர்கள்
மே மாதம் 6,2010 நாம் ஸ்ரத்தாவான்கள் அனைவரும் நமது அன்பார்ந்த பரம பூஜ்ய அநிருத்த பாப்பு அவர்கள் "ராமராஜ்யம் 2025" என்ற தனது மன உரு எண்ணத்தின் [தத்துவத்தின்] அடிப்படையில் பேசியதைக்க்கேட்டோம். இந்த ப்ரசங்கத்தில் பாப்பு பல முக்கியமான  விஷயங்களை ப்பற்றி பல  அரிக்கைகள் தந்தார். அதில் ஒரு முக்கியமான விஷயம் " தடையில்லாது { கஷ்டப்படாது} ஆங்கில மொழி பேச கற்றுக்கொள்ளுதல். பாப்பு சொன்னது இவ்வாரு ," இன்றைக்கு எல்லாவித வணிகம் ,வர்த்தகம் அனைத்தும் ஆங்கில மொழியிலேயெ நடைபெருகின்றன என்பதறிவோம். தாய்மொழியோ சொல்லாமலேயெ அனைவருக்கும் பெருமைக்குறிய விழயம்தான். ஆனால் ஒருவனின்  முன்னேற்றத்திற்கு ஒருவன் அவனது ஆங்கில மொழியை வளர்த்துக்கொள்வது இன்றைய அவசியம் ஆகிவிட்டது. நாம் இந்த  போட்டா போட்டியுள்ள உலகில் பிழைத்திருக்க , நாம் ஆங்கில மொழியை நன்கு கற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். ஆகையினால் " அநிருத்தாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் லாங்குவேஜ் அண்ட் லிங்க்விஸ்டிக்" என்ற நிலயம் [அதாவது "அநிருத்தரின் மொழி, மொழிநடை, மொழி ஆராய்சி நிலயம்] துவக்க்ப்படுகின்றது.
அவர் மீண்டும் சொன்னார். " பலர் தமது தாய்மொழியில் முதலில் சிந்தித்துவிட்டு பிறகு ஆங்கிலத்தில் பேச முயல்கிறார்கள்.  அது சரியல்ல. அது நமது எண்ணத்திற்கும் , சொல்வதர்கும் இடையே இடைவெளி அமைக்கும். இந்த இடைவெளி பேசும் ப்ரவாஹத்தையும், மொழியின்  அழகையும் அமைப்பையும் பாதிக்கும். மொழி பாய்ச்சல் எந்தவித இடையூரு இல்லாது இருக்கவேண்டும்.

த்துடன் பாப்பு ஸௌ ஸ்வப்னகந்தவீரா அநிருத்த ஜோஷி [ அநிருத்த பாப்புவின் தர்ம பத்னியான ] நம் நந்தா மாதா அவர்கள் இந்த நிலயத்தின் முக்கிய அதிகாரியாக பொறுப்பேர்ப்பார் என்று அறிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக நந்தா மாதா மகளிர்க்காக ஆத்ம்பல வகுப்பு எடுத்து வருகிறார் என்றும் அதில் " ஆங்கில மொழி கற்பது" அதில் ஒரு முக்கிய  அங்கமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில  ஆத்மபல  வகுப்பை புதிதாக ச்சேரும் மகளிர்களுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் அறியாதவர்கள். இவர்கள் ஆறுமாத காலத்திற்க்குள் ஒரு அளவுக்கு தினசரி வாழ்க்கைக்கு தேவையான  ஆங்கில மொழி பேசவும் எழுதவும் முடிகிறது. இவர்கள் சுயநம்பிக்கையுடன் ஆங்கில மொழி சிறு நாடகங்களில் பங்கேர்கின்றனர். இந்த ஆங்கில மொழி  சிறு நாடகங்களும்     ,ஆங்கில மொழி கற்கும் , முடிவில் ஒரு பாகமாகும்.
இதையே அடிப்படையில் கொண்டு ,ஆங்கில மொழி கற்க உதவும் நந்தாமாதா அவர்களாலேயே எழுதப்பட்ட வெகுவிறவில் சில வழிகாட்டு புத்தகங்கள்  தொகுப்புகளாக ப்ரசுரமாகவிருக்கின்றன. இந்த புத்தகங்கள் ஆங்கிலம் கற்கவிரும்பும் அனைத்து ஸ்ரத்தாவான்களுக்கும் ,  ஆங்கிலம் கற்க  எளிதான  உபயோகமான வழி காட்டும் . இப்புத்தகங்கள் படிப்பதற்கும், உபயோகிப்பதற்கும்  அதை பாற்ப்பதைப்போல்  ஒரு தனிப்பட்ட  ஆனந்த அனுபவங்களைத்  தரும். இது நமது ராமராஜயம் 2025 ,த்தின் பயணத்தில் ஒரு பாகமாகும் , ஆம் அதே  ராமராஜ்யம் எது நமது" அநிருத்த பாப்புவின் மன உருகோரிக்கையோ அதுவே"



 ஹரி ஓம்   "  அடியேன்  அம்பக்ஞ  ஆதிமாதே"


மூள லேக -

மராடீ - நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்] मराठी Blog

ஹிம்தீ  நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல் हिंदी Blog

இம்க்லிஶ  - நந்தாமாதா எழுதிய ஆங்கிலமொழி கற்க "வழிகாட்டு புத்தக" ப்ரசுரம்[வெளியிடுதல்] English Blog

Tuesday 20 August 2013

ஸிரியா கடற்படை முக்கிய மூலஸ்தானமான லடாகியா மீது இஸ்ராயலின் தாக்குதல் :- ஒரு ஆழ்ந்த ஆய்வு

|| ஹரி ஓம் || 
 
ஸிரியா கடற்படை முக்கிய மூலஸ்தானமான லடாகியா மீது இஸ்ராயலின் தாக்குதல் :- ஒரு ஆழ்ந்த ஆய்வு

Israeli attack on Syrian Naval Base of Latakia


இஸ்ராயலின் , ஜூலை 5,2013 அன்று ஸிரியாவின் கடற்படை அடித்தளமான லடாகியாமீதான  தாக்குதல், துர்கிஸ்தானிலிருந்து நடத்தப்பட்டதாக  நம்பப்படுகிறது, அதில் ஸிரியாவின் "யாகோண்ட் பீ800 " ஏவுகணை கிடங்கை [ அதாவது ஏவுகணைகள் வைத்திருக்கும் இடம்] முக்கியமாக குறி வைத்தது, அன்றிலிருந்து ஒரு பரபரப்பான சர்ச்சைக்குறிய வாதத்திற்குறிய விஷயமாயிற்று. "யாகோண்ட்" என்ற கப்பல் எதிற்கும் கப்பல் ஏவுகணைகள் உயர்தரமானது, அது ரஷ்ஷியாவினால் , ஸிரியாவிற்கு விற்கப்பட்டனவை ஆகும். இஸ்ராயல் தாக்குதலின் தெரியவந்த அறிக்கையின் படி இந்த ஸிரியாவின்  முக்கிய  கடற்ப்படை தளத்தில் பல அடுத்தடுத்த வெடி அதிர்வு சத்தம் கேட்டன. ரஷ்ஷியாவின் தொலைக்காட்சி ப்பிணையங்கள் இந்த தாக்குதலை இஸ்ராயல், துர்கிஸ்தானும் இணைந்து செய்த திட்டம் என்று கருதியது. ஆனால் கிடைத்த ஆதாரத் தகவல் படி இந்த தாக்குதல் அமெரிக்காவின் நெருங்கிய தொடர்புடன் இஸ்ராயல் செய்த தாக்குதல் என்று தெரிய வந்தது.

உலக செய்தி ஊடகங்கள் வெறிகொண்டு இந்த தாக்குதலை  விமரிசித்தனர்.அதுவும் துர்கிஸ்தானிலிருந்து இஸ்ராயல் தாக்கியதால்
தாக்குதலை ப்பற்றிய முரண்பாடான தகவல்களினால் ஊடகங்கள் பாதித்தன. சிலர் இந்த தாக்குதல்கள் வான்வழித்தாக்கல் என்று கருதினர் , சிலர் இத்தாக்குதல்கள் இஸ்ராயலின் நீர் மூழ்கு கப்பல்களிலிருந்து ஏவு வாணம் [ராக்கெட்]  ஏவு முறை தாக்குதல் என நம்பினர்.ஆனால் நம்பகமான மூலங்கள் ,இஸ்ராயல் தனது பெயர்போன ,நன்கு தேற்ச்சி பெற்ற, ஜெர்மெனியிலிருந்து இறக்குமதி செய்த  டால்ஃபின் க்லாஸ் ஸப்மரீன்களை ஸிரி யாவின் கடற்படைதளத்தை  தாக்க உபயோகித்தனர் என்றது, இத்தாக்குதல் பெரும்பாலும் ரஷ்ஷியா ஸிரியாவுக்கு அளித்த ஏவு கணைகள், இஸ்ராயலின் கடற்படை தளத்திற்கும் அதன் வழங்கல் வினியோகத்திற்கும்  அபாயமான அச்சுறுத்த்தலாக  கருதி  அதையே  குறிவைத்து தாக்கியது போலும். இந்த ஸிரியாவின் ஏவுகணைகள் ஸிரியாவின்  அருகாமையில் உள்ள லெபானானின்  தீவிர வாதி ஹெஜ்பொல்லா, ஸிரியாவின் ஜனாதிபதி பாஷர் ஆசத்தின் அரசாங்கத்திற்கு அப்பட்டமாக ஆதரவு  அளிக்கும்  சங்கங்களுக்கு பரிசல் ஆகும் ஆபாயமும் இருந்தது  .

ஸிரியாவின் ஏவுகணைகள் இஸ்ராயலிர்கு மட்டும் அபாயமாக இல்லாமல் அது  ஸிரியாவின் கலகஞ்செய்யும், எதிர்போர்களுக்கு வழங்கல் வினியோகத்திர்குதவும்     வடநாடுகள்  கப்பல்களை தாக்கும் திறமை அதிகறிக்கப்பட்டதாகவும் , ஸிரியாவின் கடற்ப்படைக்குறிய முற்றுகை இடவும் , அல்லது அதன்மேல் விமானம் செல்ல அனுமதிஇல்லா பகுதிக்கு ஆதரவளிக்கவும் இருக்கலாம்.
இதன்மத்தியில் இஸ்ராயல், ஸிரியா, அமரிக்கா, துர்கிஸ்தான் இதன் சம்பந்தமாக ஒரு அரசாங்க அதிகாரம் சார்ந்த அறிக்கை  கூட வெளியிடவேயில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் ஸிரியா அரசாங்கம் இஸ்ராயல் தாக்குதலைப்ப்ற்றி முழுமையாக மறுத்துவிட்டது. துர்கிஸ்தானின்  வெளிஉறவு அமைச்சர் அஹ்மெட் தாவுடோக்லுவோ,  இஸ்ராயல் துர்கிஸ்தான் மண்ணிலிருந்து தாக்குதல் பற்றி வதந்தி பறப்புவோர்கள் தண்டிக்கப்படுவர்   ஆவர் என்றரிவித்தார். இந்த மறுப்புக்கு காரணமும் உள்ளன , அதாவது துர்கிஸ்தான் இஸ்ராயலுக்கு உதவிய செய்தி, இரண்டு வருடம் முன்பு இஸ்ராயல் துர்கிஸ்தானில் உள்ள ராணுவமற்ற சாதாரண மக்களின்  மிதக்கும் விடுதியின் மீது நடத்திய தாக்குதல் ,துர்கியின் ரெசெப் எர்டோகான் அரசாங்கத்திற்கு எதிராக திருப்தியின்மை அல்லது நம்பிக்கை குறைவை ஏர்ப்படுத்தும் என்பதே மறுப்புக்கு க்காரணம்.

சமீபத்தில் நடந்த பல கலந்துறையாடல்கள், சந்திப்புகள்,, அதோடு அமெரிக்காவின் தற்காப்பு உபகாரியதரிசி  ஆஷ்டன் கார்டரின்  இஸ்ராயல் சுற்றுலா பயணம் சமயம்,  இஸ்ராயல் அதிகாரிகள் இந்த செய்தி க்கசிவுனால் இஸ்ராயலிற்கு வரநேரும் ஆபாயமும், ஸிரியாவின் பதில் தாக்குதல்கள்,  இஸ்ராயலின் ஜனசமுதாயத்தை  பாதிக்கும் என்று வருத்தமும் கோபமும் தெரிவித்தனர். அமெரிக்காவின் மனமில்லா, பிணைப்பில்லா செயல்கள் இஸ்ராயல் அதிகாரிகளை ஆஸ்சரியத்தில் ஆழ்த்தின.
இதற்கிடையில், இத்தாக்குதல் இஸ்ராயலின் இராணின் தாக்குதலுக்கு ஒரு காய்ந்த  பயிற்ச்சி  போன்றது என்று  பல கைதேற்ந்த வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இராணிடம் கப்பல் ஏவுகணைகளை த்தடுக்க எந்தவித தற்காப்புமில்லை ஆகையால் இதை த்தடுக்க  இராணின்  ஆயுதங்கள் பொருத்தப்பட்டால், இராணின் வான்தள தற்காப்பு பலஹீனமாகிவிடும் . இந்த டால்ஃபின்  நீர் மூழ்கிக் கப்பல் [ஸப்மரீன்] ஸிரியாமீதான   இஸ்ராயலின்  வெற்றித்தாக்குதல் ,இஸ்ராயலுக்கு கப்பல் ஏவு கணை தாக்குதல் நடத்த நல்லதொரு மேடை அயிற்று. இதுவே மத்தியகிழக்கு நாடுகளுக்கிடையே ஒரு பெரும் மாறுதலான விளையாட்டைக்  காணலாம், அதுவே அடுத்து வர இருக்கும் இராணின் அணு ஆயுத நிகழ்நிரலுக்கு ,இச்ராயலின்   தாக்குதலுக்கு  அறிகுறியாக இருக்கிறது.




இந்த தாக்குதல்கள் எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் , இருக்கும் மோசமான நிலை அதிகமாக வாய்ப்பு உள்ளது. இங்கு இப் ப்ரதேசத்தில் கோப வெப்பம் கொழுந்துவிட்டெரிகிறது, அடிக்கடி திருப்தியின்மை ,கலவரம், ராணுவத்தினால்  அதிகார பறிப்பு, அரசாங்க மாற்றம், மக்கள் புரட்சி,மக்களிடையே போர் போன்ற இத்தகைய சங்கிலி போன்ற ஒன்றன்பின் ஒன்றான நிகழ்வுகள் இந்த ப்ரதேசத்தை நிலையில்லாது ஆக்குவதோடு  அது வருங்கால நிகழ்வுகளுக்கு  பாதிப்புள்ளதாக இருக்கும்.

ஹரி ஓம். "அம்பக்ஞ"

|| ஹரி ஓம் ||





Tuesday 30 July 2013

கோதுமையின் சாரம்[சத்து, சத்வம்]


 || ஹரி ஓம் ||

Recipe of Wheat Concentrate (Gavhache sattva)
கோதுமை சாரின் சத்து செய்முறை



ஜுன் 13,2013,அவர் ப்ரசங்கத்தில், பாப்பு  [கவாசே= கொதுமையின் ,சத்வ= சத்துவம் ]கோதுமையின் சத்துவத்தை ப்பற்றி கூறியது இவ்வாரு:
நான் இதன் செய்முறையை உங்களூடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இரு ஆழாக்கு கோதுமையை ஊறப்போடவும். மருநாள் தண்ணீரை இருத்துவிடவும், அதே கோதுமையை மருபடி புதிய நீர் இட்டு ஊறவிடவும்.  இவ்வாறே மூன்றாம் நாளும் செய்க. நான்காம் நாள் நீரை இருத்துவிட்டு, சிறிது புதிய நீருடன் கோதுமையை ஆட்டுக்கல்லிலோ, அம்மியிலோ அல்லது, இன்றைய காலத்து மிக்சியிலோ அறைக்கவும். அறைத்த மாவை ஒரு பாத்திரத்தில்  மூடி வைக்கவும்


ஆறு அல்லது ஏழுமணி நேரம் பின் மூடியைத்திறந்து பார்த்தால் கெட்டி மாவு அடியில் தங்கிவிடும். தெளிவான நீர் மேலே இருப்தைக்காணலாம். நீரை எடுத்துவிடுங்கள். இந்த கெட்டி மாவை ஒரு ஜாடியிலோ, சம்படத்திலோ வைத்துக்கொள்ளவும்.
செயல்முறை ஒன்று:
யாருக்கு தனது எடையை கவனிக்கவேண்டுமோ ,குறைக்கவேண்டுமோ: இந்த கெட்டி கோதுமை மாவு ஒரு கோப்பை, நான்கு கோப்பை நீர், பெருங்காயம்  ஒரு ஸ்பூன், உப்பு ருசிக்குத்தகுந்தவாரு , ஜீராப்பொடி அரைஅல்லது ஒரு டீ ஸ்பூன். இதை எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கொண்டே , கட்டிதட்டாமல்  சிறியதான அக்னியில்  கிண்டவும் வேகவைக்கவும் 

குறைந்த எடையுள்ளவர்,ஒல்லியானவர்களுக்கு:

அதே கோதுமை கெட்டி மாவு ஒரு கோப்பை, நெய் இரு டீ ஸ்பூன் , பால் ஒரு கோப்பை , சக்கரை இரு டீஸ்பூன் ,  ஏலக்காய் பொடி
நெய்யை ஒரு பாத்திர்த்தில்விட்டு கலந்துகொண்டே கோதுமைமாவைவிட்டுக்கிளரவும் , அவ்வாரே பால் , சக்கரை விட்டுகிளரிக்கொண்டே ,சிறிய அக்னியில் வேகும் வரை
கிண்டவும், [வெண்தும் என்றால் ஏல்க்கய் பொடி வாஸனைக்கு சேர்த்துக்கொள்ளவும். ,கிள்றிக்கொண்டே இருக்கையில் பளபளப்பு தெரிய வரும்.இது வெந்ததின் அரிகுரி.
அடுப்பிலிருந்து எடுக்கவும்.

மேர்க்க்ண்டவாரு விவரித்த கோதுமை கெட்டி மாவான சாரு  முக்கியமான  உடலுக்கு தேவையான நல்ல பொருள்கள்கொண்டது. உயர்ந்த ஊட்டசத்துமிக்க உள்ளது.
அன்றாடம், தினசரி ஒரு அளவான கோப்பை சாப்பிடுதல் நலம் தரும்.

இதன் வீடியோ விரைவில் வெளிவரும்

"ஹரி ஓம், அம்பக்ஞ"   


Monday 1 July 2013

தாரீ தேவியின் சீற்றம்

                                                                  || ஹரி ஓம் ||


[தமிழில் தாரை என்றாலே ப்ரவாஹம் என்பது பொருள் அதுவே சம்ஸ்க்ருதத்தில்  தாரா.இங்கு தேவியின் பெயர் தாரி தேவி என்பதை கவனிக்கவும்] 

சார்தாம் யாத்ரா என்று சொல்லப்படும் நான்கு தாமங்கள்[புண்ணிய ஸ்தலங்கள்]  யாத்திரையின் சமயம் பக்தர்களை  ஸம்ரக்ஷணை செய்து  காப்பவள் "ஸ்ரீ தாரீ தேவி" என்று நம்பபடுகிறது.ஆதலால் உத்தரகாண்டத்தில் ஸ்ரீநகரில் அலக்நந்தா நதி தீரத்தில் அமர்ந்திருக்கும் " தாரீ தேவியின்" ஆல்யத்தை[ கோவிலை] அரசாங்கம் வீழ்த்த வேண்டாம் என்று கடந்த இரண்டு வருட காலமாகஅங்குள்ள குடிமக்கள் விண்ணப்பித்து வந்தனர். அலக்நந்தா நதியின் ப்ரவாஹத்தை அடக்கி ஆள்பவள் "தாரீ தேவியே"  அவளது அருளால் அலக்நந்தா கட்டுப்பாட்டில் இருப்பதனால், அலக்நந்தா ஸௌம்யமாக சாந்தமாக இருக்கிறாள் என்று அங்குள்ள ஜனங்களின் நம்பிக்கை இருந்தது.ஆகையால் அப் ப்ரதேசத்து தார்மீக சங்கங்களிலிருந்து சாதாரண குடி மக்கள் வரை, அரசாங்கத்திடம் அவ்வாரு முடிவெடுக்க வேண்டாம் என்று வேண்டி வினவினர், கெஞ்ஜினார்கள். ஆனால் முன்னேற்றத்துக்கு மின் வசதி தேவை என்று, இந்த வேண்டுகோளை அரசாங்கத்தினர் நிராகரித்தனர். ஜூன் 16, மாலை 6 மணிக்கு [விளக்கேற்றும் சமயம்] "தாரீ தேவியின்" ஆலயம் வீழ்த்தப்பட்டது. கோயில் உள் குடி கொண்டிருக்கும்  தேவியின் சிலையும் இடம் மாற்றப் பட்டது. 


அதே சமயம் கேதாரநாத்தில்  பெரும் " மேகவெடிப்பு" [cloud burst} ஏர்ப்பட்டு அதைத்த்தொடர்ந்து  இரண்டு மணி அடித்த பலத்த மழையில் சாமான்ய வாழ்க்கை சின்னாபின்னம் ஆயிற்று. நான்கு தாமங்கள் யாத்திரையில்  வந்த பக்தர்கள் இங்கு கேதாரநாத்தில்  சிக்கிக்கொண்டனர். அடாத மழை விடாது பெய்ததாலும், அங்கங்கே நிலச்சரிவுகளினாலும் இங்கு சிக்கியிருக்கும் பக்தர்களை கஷ்டமில்லாது  சௌக்கியமாக்  வேளியேற்றும் பணி சவாலாக,  முடியாத ஒன்றாக இருந்தது.  அத்துடன் நிலவரம் மோசமாக மாறி வந்தது. இம்மாதிரியான அபாய நிலைக்கு க்காரணம் யார் என்று தேடி," மக்கள் செய்தி வாயில்கள் ,ஊடகங்கள் பல  பொருப்பேற்று செயல்படுகின்றன. உத்தராகாண்டம் பேரிடர்  அபாய சம்பவத்திலும் அவ்வாரே ஆயிற்று, இதில் பலியானவர்கள், சிக்கியிருப்பவர்கள் எண்ணிக்கை செய்தி தரும் தருணம்   , கடைசியில் சுற்றுச்சூழல் நிலவரம் கவனிக்காது அவசரமாக ,முட்டாள்தனமாக  அரசாங்கம் இயக்கிய உத்தேஸ, உபாயம் திட்டத்தினால்தான்   ஆயிற்று என்று ஒரு முடிவுக்கு வர,  அம்மாநில அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் { புட்டு புட்டு வைத்தனர்} பல தொலைக்காட்சி செய்தி வாயில்கள் பகிரங்கமாக,கணடனம் செய்து  வெளிப்படுத்தினர். இது அனைத்தும் ஒர் அளவுக்கு ஒப்புகொண்டாலும் அங்குள்ள மக்கள் வீழ்த்தப்ப்ட்ட "தாரீ தேவியின்" ஆலயத்தை  க்காட்டி தமது துக்கத்தை தெரிவித்தனர்.

கடந்த 800 ஆண்டுகளாக தாரீதேவியின்  ஆலயம்  இந்த இடத்திலேயே இருந்தது. இது பழங்கால ப்ராசீன சித்தர்பீடமாக கருதப்படுகிறது ".தாரீதேவி காளிகாம்பாளின்" ஒரு அம்சம் என்றும் நம்புகின்றனர். இந்த சித்தபீடத்தின் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது என்று  ஆவணங்கள் தெரிவிக்கின்றன. உத்தராகாண்டத்தில் [வடக்குப்ரதேசம்] இருக்கும் ஸ்ரீநகரில் [ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அல்ல, அது வேறு]  காலியாஸுர் என்ற க்ராமத்தில்  அமைந்த  "தாரீதேவியின்"  ஆலயம்  அங்குள்ள அன்பர்களின் நம்பிக்க்கைக்குறிய  இடமாகும் [ஸ்ரத்தா ஸ்தானமாகும்]. தாரீதேவியின் விக்ரஹம் உக்ரமாக[ கோபமாக]  இருந்தாலும், தேவி மேற்கொண்ட உக்ரகோலம் நம் யாவரையும் தீய சக்தி, விபத்துகளிலிருந்து காப்பாற்றவே என்று அங்குள்ளவர்கள் பரம்பரை பரம்பரையாக புரிந்து கோண்டதேயாகும். அதை ப்பற்றி சரித்திரவரலாற்றில் கதை கூட உள்ளதாம். 1882ம் ஆண்டில் ஒரு புத்திகெட்ட ராஜா இந்த ஆல்யத்தை அவ்வாரே தொந்தரவு செய்தபோது , அப்போதும் பயங்கர  இயற்க்கை சங்கடம் ஆயிற்று. ஆகையினால் காப்பற்றும் காளி  தேவியான "தாரீ தேவியின் மேல் கொண்டுள்ள அசையா பக்தி என்பதில் ஆஸ்சர்ய்ம் இல்லை.

இந்த  ஆலயத்தை அரசாங்கம் வீழ்த்தினாலும் அதன் பயங்கர பின் விளைவு நாமே  அனுபவிக்க நேரிடும் என்று அங்குள்ளவர்கள் நன்கு அரிவார்கள்.  ஆனதும் அவ்வாரே. "தாரீ தேவியின் ஆலயத்தை தரைமட்டம்  ஆக்கிய  சில மணி நேரத்துக்குள் பலத்த ப்ரளயம் போன்ற மழை, கங்கையின் உப நதியான அலக்நந்தா ருத்ராவேஸத்துடன் சீறி ப்பாய்கிறாள், அது ஒரு சாதாரண நிகழும் சம்பவம் அல்ல என்று பகதர்கள் நம்புகின்றனர். அந்த ப்ரதேசத்தின்  ஊடகம் மூலம் ஜனங்களது கோரிக்கை வெளிஆயின. தார்மீக சங்கங்கள் தாரீதேவியின் ஆலயம்  தகர்த்த அரசாங்கத்தை கடுமையாக  கண்டனம் தெரிவித்தனர்.  உத்தர காண்டத்தில் சுற்றுச்சூழல் பற்றி சற்றும் யோசிக்காது ,கவனிக்காது, பொருட் படுத்தாது , அலட்சியம் செய்து  பல நூற்றுக்கணக்கான,  திட்டங்கள் மத்திய அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. தாரீ  தெவியின் ஆலயத்தை தகர்த்தி அங்குள்ள அலக்நந்தா நதிமீது அணைகட்டும் திட்டமும் அதில் ஒன்றாகும். வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு சாதாரணமாக அங்குள்ளவர்கள்  எதிர்ப்பு வரும். தாரீ தேவி ஆலயம் தகர்ப்பதற்கு எதிர்ப்பும் அவ்வாரே என்று அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதே காரணத்தினால் பக்தர்களின்  ஆலயத்தை  சம்பந்தப்பட்ட  ஸ்ரத்தை, மனோபாவத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை, அதை அவசியம் என்று கருதவில்ல. அதோடு எந்த ஸ்ரத்தை மனோ பாவத்துடன் இந்த நான்கு தாமம் யாத்திரை செய்து வரப்படுகிறது என்ற அந்த பக்தி ஸ்ரத்தைக்கே  இத்திட்டங்கள் இடையூராக இருக்கும் என்பதை திட்டமிட்டவர்களே,   மரந்தேபோயினர். அதற்க்கு பயங்கரமாக ஈடு கட்ட நேரிடும் என்று  அங்குள்ளவர்கள் உணர்ந்தனர். ஆன்மீகம், தர்மத்தில் நம்பிக்கையில்லா சுற்று சூழல் குழு, கழகங்கள்,சங்கங்கள்  கூட இந்த அணைக்கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் அரசாங்கம் சுற்றுசூழலையும் அலட்சியம் செய்து, ஆன்மீக மக்களின் ஸ்ரத்தா பாவத்தையும் பொருட்படுத்தாது அலக்நந்தாமீது அணைக்கட்ட தீர்மானித்தது.

 தாரீதேவியின் ஆலயத்தை தரைமட்ட மாக்கியதால் மட்டும் இது நடக்கவில்லை, சுற்றுசூழல் காரணங்களே என்று நம்புவோர்க்கு   கூட, 800 ஆண்டு புராதன ஆலயத்தை தகர்த்த .அரசாங்கத்தின்   பிடிவாதம் பிடிக்கவில்லை. இந்த அபாயச்சம்பவம் நேர்ந்திராது, அப்படியும் அரசாங்கம் ஜனசமுதாயத்தின் மனோபாவத்தை புரிந்து கொள்ளாமல், சொரணையற்ற, உணர்வே இல்லாது செயல் பட்டது , அயோக்கியத்தனத்தையே குறிக்கிறது. மின்சாரத் திட்டங்களின் அடிப்படையில்  "தெய்வ பூமி" என்று கருதப்படும் ஹிமாலயத்தில் , அம்மலை ப்ரதேசத்தில் மத்திய அரசாங்கமும், மாநிலை அரசாங்கமும்  செய்து வரும் அராஜகம் , ஆன்மீக ஸ்ரத்தை பாவத்துடன் , சுற்றுச்சூழலையும் அலட்சியப்ப்டுத்துவது தெளிவாகிறது.


கங்கையின் ப்ரவாஹத்தின் மீது கட்டப்படும்  அணைகள் , மின் உர்பத்திக்கு வசதியாக இருக்கும்  ,என்று  அரசாஙகத்தின் கருத்து, ஆனால்  அது கங்கையின் ,பண்புக்கும் தர்மத்திற்கும் இடையூரு என்றரியவில்லை. இதனால் கங்கை சூழல் சீர்க்கேடாகிறது , என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. இது வெரும் ஆன்மீகம் ஸ்ரத்தை சம்பத்தப்பட்ட விஷயமில்லை. அப்படி இருக்கையில்  பாரத வாசிகளின் ஜீவனம் இந்த நதிகளை நம்பியிருக்கிறது என்பது அரசாங்கம் அரியாதா? சொல்லித்தரவேண்டுமா? சுற்றுச்சூழல் சீர்கெடும் அபாயம்  பற்றி விவரிக்கும் போது  பாரதீய  தர்ம  கலாசாரத்திலிருந்து , நிதிவசதி வரை பாரதவாசிகளின் வாழ்க்கயின் ஒவ்வொரு அடியிலும் ,வாழ்க்கயின் அனைத்து ப்பகுதியிலும்   அங்கமான நதிகளின் விஷயத்தில் அரசாங்கம் என்ற யந்திரம் இவ்வளவு பொருப்பில்லாது கேவலமாக நடந்து கொண்டது ஏன்? என்ற கேள்வி உத்தரகாண்டத்தின் இந்த அபாயத்தினால் எழுகிறது. அரசாங்கத்தின் கருத்தின்மை, அசட்டைத்தனம், பொருப்பின்மை {எந்த பெயர் உரிச்சொல்லால் [adjective]}  வர்ணிப்பது. பூரணமாக சுதந்திரமுடையது என்று கருதப்படும் கணிஇயல்களில் இயங்கும் இன்டெர்னெட் ஊடகவாயிலாக  அரசாங்கத்தின் பொருப்பில்லாமையை  கண்டனம் செய்து தாக்கியுள்ளனர். 

சமூக சம்பந்தமான வலைவேலை[பிணயம்]  {உதா..ஃபேஸ்புக்} போன்ற வற்றிலும் அரசாங்கத்தின் உணர்வற்ற [சொரணையற்ற] செயலை கணடனம் செய்து தம்தம் கருத்துகளை வெளிப்படுத்தி விமரிசனம் செய்து வருகின்றனர். இந்த ப்ரளயம் தாரீதேவியின் ஆலயத்தை வீழ்த்தியதால் ஆகியிருக்குமோ என்ற சந்தேகக் கேள்வி கிள்ம்பியிருப்ப்தோடு , இதன் இணைப்பில் கட்டுறைகளும் வெளியாகின்றன. அதேசமயம் கங்கா நதியை தேசிய நதியாக்க நமது ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பம் சென்றிருக்கிறது. பாரத தேசத்தின் கலாசாரத்தின் அசாதாரண நிலை கொண்ட இந்த இமயத்தின் நதிகளின், தகுந்த முரையில் சுற்றுச்சூழலை பாது காக்கவேண்டும் என்று வேண்டி,  வெரும் ஆன்மீக , தர்ம காரியதரிசி மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழல்காரர்கள் அவ்வளவே விஸ்வாசத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் இதை கண்டுக்காது இருக்கமுடியாது.

மக்களின்  மனோபாவத்தையும் வேண்டுகோளையும் பொருட்படுத்தாது , அலட்சியம் செய்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பிறகு அதன் பின் விளைவுகளை சந்திக்க தைரியம் இல்லாது ,தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று விலகி இருக்கலாம் என்ற கர்பனையில் , மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இருந்துவிடக்கூடாது.  தாரீ தேவி ஆலயத்தை தரைமட்டம் ஆக்கிய்தும் நிகழ்ந்த ப்ரளயம், அதில் உயிரிழந்தோர்களின்  உற்றார் உறவினர்களுக்கு நிதி உதவி  அறிவிப்பதாலோ, அல்லது புதிய திட்டங்கள் அறிவிப்பதாலோ , இழந்தவைகளுக்கு ஈடு ஒருபோதும் ஆகாது. ஜனங்களின் ஸ்ரத்தையை ,நம்பிக்கையை  முரிஅடிப்பது முன் , அதன் பின் விளைவுகள்  எவ்விதமாவது ப்ரதிபலிக்கும் என்று  அரசாங்கம் நினைவில் வைத்திரல் வேண்டும். கட்டுகடங்கா நதிகளும், சீற்றம் கோண்ட சமுத்திரம், கோபமுற்ற  இயற்கையின்முன் விஞானம் எதுவும் செய்ய இயலாது, விஞானிகளுக்கு எந்தவித வழியும் கிடைக்கவில்லை,தெரியவும் இல்லை. ஆகையால் வினாசத்தை வரவேர்கும் "அதர்ம வளர்ச்சிகளை"  அரசாங்கம் உடனே  நிருத்தவேண்டும். கோபமோ, சீற்றமோ ,இயற்கையோ, தெய்வீகமோ என்பதை  விவாதிக்காமல் தமது தப்பை உணர்ந்து,  அதை சரிப்படுத்த, துரிதப்படுத்த அரசாங்கம் செயல்பட வேண்டும். அவ்வாரே செய்தால்தான் அரசாஙகத்திற்கு உணர்ச்சி கொஞ்சனஞ்சம்  இப்பவும் உள்ளது என்றும், இழந்த நம்பிக்கை மீட்க உதவலாம். இல்லையெனில் இம்மாதிரியான பெருத்த அபாய ச்சங்கடங்கள் சமயம், அரசாங்கத்திற்கு,  தெய்வகுற்ற கோபம், இயற்கையின் கோபம் மற்றும் ஜனசமுதாயத்தின் கோபம் மூன்றிர்கும் பலியாக வேண்டியிருக்கும்.
ஸித்தார்த்த நாயிக் எழுதியது

- ஸித்தார்த்த நாயிக் எழுதியது


                                                                || ஹரி ஓம் ||




Saturday 22 June 2013

ஐரோப்பா பொருளாதாரம்

                                                              || ஹரி ஓம் || 


ஐரோப்பா  பொருளாதாரம்
[தர்போதுள்ள நிலவரம் பற்றிய ஒரு ஆய்வு]

போனவாரம், ரெட்க்ராஸ் காரியதரிசி முகவர்[செக்ரெடரி ஜெனரல்] "பெகலெ கெலெடா" சில  ஐரோப்பிய நாடுகளின் நிரந்தரமாக  "அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை," வறுமை, கலக்கம்,கலவரம், வன்முறையை ஊக்குவிக்கும் எரிபொருள், சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள்.என்று எச்செரிக்கை விட்டிருந்தார். ஜெர்மனியின் நிதி மந்திரி வுல்ஃப்காங்க் ஷாபுல் வேலைவாய்ப்பின்மையை அடக்காவிட்டால் ஐரோப்பிய  நாடுகள் பிரிந்து அழிந்து போகும் என்றார்.  


இந்த எசாரிக்கைகளுக்கு சற்றேமுன்பு ஐரோப்பாவில் பொருளாதாரத்தில்
பளுவான நாடாக கருதப்படும் ஸ்வீடன் ,அதன் தலை ந்கரமான ஸ்டாகோமில் ஒரு பெருத்த வன்முறை,கலவரம் வெடிப்பு கண்டது /சந்தித்த்தது. இதில்  கவனிக்கவேண்டியது "ஸ்வீடனின் தலை நகரம் ஸடாகோம் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த நகரமாக , ஐரோப்பாவில் கருதப்ப்டுகின்றது. இதன் முன்  இத்தகைய அளவில் ஸ்வீடன் , குழப்பததையும் ,கலவரமும் கண்டதே இல்லை.  இந்த சம்பவம் எவ்வாரு ஐரோப்பாவின் ப்ரபலமான பொருளாதாரம் செறிந்த நிலை, நீர்க்குமிழி போல் சில வருடங்களாக ஊடைந்து சிதறியது.



பல ஐரோப்பிய நாடுகள் {ஜி.டி.பி}  "ஒட்டு மொத்த உள்நாட்டு பொருளாதார பலன்" குறைவை சந்திக்கின்றனர், காரணம் பல நாடுகள் மலை போன்று கடன்பட்டிருக்கின்றனர். இதன் நடுவில். ஸ்வீடன் ஒரு வளமான பொருளாதார வளர்ச்சியை தொடர்கின்றது, அதன் விளைவு, தற்போது ஸ்வீடன் , ஜெர்மனி, ஃப்ரான்ஸை விட பொருளாதாரத்தில் அதிக உறுதியாகவும் வளமாகவும்  உள்ளது. அப்படியிருந்தும் அங்கு அதிக வன்முறையும் ,கலக்கமும், கலவரமும்  ஆனது காரணம் அரியாது பலர்  குழம்பியிருக்கின்றனர். அதன் காரணம் ஸ்வீடனில், ஐரோப்பிய  பொருளாதார நிலை சறிவின் [பின் வாங்குதல்]  விளைவின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக  பல மாற்றங்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாகோமும் அதை சுற்றி இருக்கும் பல பகுதிகளும்,  இடம் பெயர்ந்தோரின் அளவுக்கடங்காத உட்புகுதலுக்கு பலியானது. ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வேலை வாய்ப்பை தேடியும், சுகமான  எதிர்காலத்தின் கனாவுடன் வந்திருந்தனர். ஆனால் இப்போதும் அது அடையாத, நிகழாத வாஸ்தவமாகும். வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்து, இளைஞர்கள், படித்தவர்கள் கூட வேலையில்லாது  கஷ்டப்ப்டுகின்றனர்.  இதே நிலவரம்  ஐரோப்பாவிலும் உள்ளது. ஐரோப்பநாட்டின் ஒன்றான க்ரேக்க தேசத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் வானளாவ 64.2% ஆக உயர்ந்துள்ளது ,சிறிது நாளில் அது 75% தொட்டுவிடும் . ஸ்பெயின் நாட்டிலும்  இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை 56.4%. "போற்துகல்"கூட அதிகமாக இதில் பின் தங்காது இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை  42.5% ஆக உள்ளது. அதே சமயம் மற்ற இதர ஐரோப்பிய, சக நாடுகளான "சைப்ரஸ், லாடிவியா,அயர்லாந்து,லிதுவேனியா,இஸ்டோனியா போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை வேகமாக் அதிகரரிப்பதை காண்கின்றனர்.  அதோடு   ஜனத்தொகையின் பயங்கரமான அளவான உத்தேஸமாக மூன்றின் ஒரு பங்கு 15லிருந்து  
24   வயது உள்ளவர்கள் வறுமையை நோக்கி தள்ளப்படும் அபாயம் உள்ளது.



இதோடு இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தந்த இடத்துக்குறிய ஆட்சிக்குழுக்கள்  பல  சமூக நல திட்டச் செலவுகளை கடுமையாக குறத்துவிட்டனர். அதில் கல்வி பொருப்பாட்சி மய்யங்களுக்கு அளித்து வந்த சலுகைகளும் அடக்கம். இதனால் மனச்சோர்வு, உள்ளச்சோர்வு அடைந்து வெறுப்பேரிய இளைஞர்களின் எதிரொலியே ஸ்டாகோமின் கலவரம் ஆகும். இதே போல் யுனைடெட் கிங்க்டம் என்று அழைக்கப்படும்  ப்ரிட்டனில் வீதிகளில் 2011ல் நடந்த கலவரம் உண்டு. தலைநகரம் லண்டன் ஐந்து நாள் எறிந்தது. இந்த வன்முறை, கலவரம் அதன் பக்கத்திலும், சுற்றியிருக்கும் நகரங்களுக்கும்,ஊர்களுக்கும் பரவியது. கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டன,பாதுகப்பு போலீஸ் ஒன்றும் செய்ய முடியாது தவித்தது. இதையும் கவனித்தவுடன் தெரிய வந்த விஷயம், இந்த  வன்முறை, கலவரத்துக்கு காரணமும், பொருளாதார ப்ரச்சனை,வேலையில்லா நிலவரம், வேலை வாய்ப்பின்மை  அதிகரிப்பு , வறுமை, கட்டுப்படுத்த முடியாத இடம் பெயர்ந்தோர் உட்புகுதல், செல்வந்தர் - ஏழை  பலத்த வித்தியாசம் அதிகரிப்பு என்பவையில் வேருன்றியிருந்ததே ஆகும். ஸ்டாகோம் கலவரம் ஐரோப்பாவின் நிலவரம் 2011லிருந்து முன்னேராது இருப்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமலலாமல் ,ஐரோப்பா மண்டலத்தின் தகர்வையே அநேகமாக குறிக்கிறது,  அதுவே ஐரோப்பாவின் சின்னா பின்னத்தில் முடியலாம். பொருளாதார நிலை பின்வாங்குதல் நின்று , முனேற்றம்  காண்கிறது என்பது, வாஸ்தவத்தில் அறிவித்ததைவிட குறைந்த விகிதமேயாகும்.

அரசாங்க பொக்கிஷம் மேல் அழுத்தம் வராது இருக்க பல நாடுகள் பல எளிமையாக செயல்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர். வேலையின்மை வேலைநஷ்டம் காரணத்தால்  அதிகரிக்கும் உதவியின்மை குடும்ப செலவு முதுகொடிந்து அதை தாங்கும் நிலையோ, கட்டுக் கடங்காது போயிற்று, இதோடு இணைந்து  அரசாங்க விசேஷ சலுகை திட்ட மானியங்கள் கணிசமாக குறைதல் ஐரோப்பா கண்டம் முழுவதும் ,சாமான்ய ப்ரஜைகளில் திருப்தியில்லாது, மனக்குறைவையும்  அதிகரித்து விட்டது. க்ரீஸ்,போர்துகல்,இடாலி,அயர்லாந்து,ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இந்த சமூக ச் செலவின் குறைப்பால் சாமன்ய் ப்ரஜைகள் திருப்தி இல்லாமை , சமீபத்தில் ச்ந்தித்த விஷயமே. இதில் கவனிக்க வேண்டியது ,ஜெர்மனி போன்ற பளுவான பொருளாதார நாட்டிலும் இந்த குறைவு,  திருப்தியின்மை உள்ளது. 

2011ம் ஆண்டு,அரேபிய நாடுகளில் வன்முறை, கலவரம் கொழுந்துவிட்டு எரிந்தபோது அமெரிக்காவிலும் ,பல ஐரோப்பா நாடுகளின் வீதிகளில் ["ஆக்குபை"] குடியிரு, அனுபவி கலகத்தினால் ஆட்டம் கண்டது. மக்கள் வீதிகளில் சென்று குறிவைத்தது வடநாட்டு அரசாங்கத்தையும் அது கவனித்தும் , காத்தும் வந்த பலத்த முதலீடு செய்த வர்த்தகர்களையும் மட்டுமே. பூகோளத்தின் பல பெரிய நகரங்களிலும் இத்தகைய கலவரம் கண்டது. கடந்த ஓர் ஆண்டு காலமாக இதேபோன்ற புரட்சி {ப்லாக்குபை} என்ற பெயரில் உருவாகி வருகின்றது. இந்த நிலை நேர் மாற்றமாக இருப்பதோடு, ஐரோப்பா நாடுகள் எவை பலத்த முதலீட்டோர் கொள்கையினால் பயனுற்றதோ அக்கொள்கைகளையே எதிர்த்து புரட்சியை சந்திக்கின்றன.முக்கியாமாக கவனிக்கவேண்டியது ஐரோப்பா ,அத்துடன் பொருளாதார நிலை ஸ்திரமாக் இருந்து வந்த ஜெர்மனியிலும் இத்தகைய கலவரம் உருவாகின.  பல ஐரோப்பிய அரசாங்கங்களாலும், ஐரோப்பிய கூட்டுறவு சங்கங்களாலும்,ஐரொப்பிய மத்திய வங்கிகளினாலும் [இன்டர் நேஷனல் மானிடரி ஃபண்ட்] "சர்வதேச நாட்டின் பண்முறை சார்ந்த நிதி"  கழகத்தினாலும் விதிக்கப்பட்ட அரசாங்க விசேஷ சலுகை திட்ட மானியங்களின் அசாத்திய குறைவே காரணம், ஏனெனில் இக்கழகங்கள் யாவும் ஐரோப்பாநாடுகளை பொருளாதார ஆபத்திலிருந்து காப்பாற்ற  உதவியன [ஆகையால் பொதுநலத்திற்காக கட்டுப்பாடு விதித்தன]. 

இந்த சங்கடம் அதிகரிக்க காரணம் ,இந்த சூழ்நிலையில் பொருளாதார முன்னேற்றம் காணும் ஐரோப்பாவின் , பல ப்ரதேசஙகளின்  முக்கிய  கோரிக்கையான ,சுதந்திரம் சுய உரிமைக்காக  போராட்டமும் ஆகும். இந்த தேசங்களின் பட்டியல் பெரியது, அதில் இடாலியின் வெனெடோ,லொம்பார்டி ப்ரதேசங்களும் ; யுனைடெட் கிங்க்டொமின் ஸ்காட்லாண்டும், ஸ்பெயினில் இருக்கும் காடாலோனியாவும், பெல்ஜியமில் உள்ள ஃப்லாண்டர்ஸ், ஃப்ரான்ஸில் இருக்கும் கோர்ஸிகா ஆகும். வளமாகவும் செழிப்பாகவும் இருந்து இந்த நாடுகள் அவர்களது நாட்டின்   {ஜி.டி.பி}  "ஒட்டு மொத்த உள்நாட்டு பொருளாதார பலனுக்கும், வரி வசூலித்து அளிப்பதும், அதிகபட்சமாக இருந்தும் இன்நாடுகளுக்கு வளர்ச்சிக்கோ முன்னேற்றத்திர்கோ கிடைக்கும் திட்டங்கள் படுகுறைவேயாகும். இந்த சமானமின்மை, பலத்த வித்தியாசம் இந்த ப்ரதேசத்து  நாடுகளின் திருப்தியின்மைக்கு காரணம், அதுவே இன்நாடுகளின் சுதந்திர போராட்டத்திற்கும் காரணம் ஆகும். இவ்வாறு, சுருக்கமாக சொல்லப்போனால், பொருளாதார வீழ்ச்சி ஐரோப்பா மண்டலத்தின்  விரிசல், உடைதல் மட்டும் அல்லாமல் , ஐரோப்பா நாடுகளில் இருக்கும் பல ப்ர்தேசங்கள், மாகாணங்கள் பிரிந்துவிடும் என்று நம்பப்ப்டுகிறது. 

அமெரிக்க  டாலரின் மதிப்பு நிலையற்ற நிலையில் ஐரோப்பா யூரோவும் நிச்சயமில்லை. மிகப்பெரிய வேலை வாய்ப்பின்மை,வறுமை, இதோடு இணைந்து ஐரோப்பா பொருளாதார வள்ர்ச்சிக் குறைவு ஒரு  பலத்த பொருளாதார பின்வாங்கும் நிலையையே குறிக்கிறது, அது ஐரோப்பா ப்ரதேசத்தை மூழ்கடிப்பதோடு ஐரோப்பா கண்டத்தையே மூழ்கடித்துவிடும். இதன் பின் விளைவினால் இந்திய ரூபாயின் மதிப்பு பலத்த அடிபட்டு பெரும் வீழ்ச்சியை ககண்டுள்ளது . அமெரிக்கா டாலருக்கு எதிரில் இன்று ௫ 58.5க்கு மேல் ஆகியுள்ளது.

மூள லேக -



                                                            || ஹரி ஓம் ||