Thursday 27 November 2014

ஸ்கந்த சக்ரத்தை பற்றிய தெளிவுறை.

Clarification of Skanda Chinha
"ப்ரத்யக்ஷ" என்ற தினசரி பத்திரிகை வாயிலாக நம்  பரம பூஜ்ய பாப்புவின் பக்தர்கள் அதை சம்பந்தப்பட்ட வெப்சைட்டின் இன்டர்னட்[இணயத்ததிலிருந்து] தெரிந்து கொள்ள முயன்ற வேளை எழுந்த சந்தேகத்தில் கீழ்வரும் ஸ்கந்த சக்ரங்களில் எது சரியானது எது சரியானது அல்ல என்பது கீழ்வருமாரு விளக்கப்ப்ட்டு இருக்கிறது.

                     
இரண்டு வித்தியாசமான வர்ணத்தில் முக்கோணம் ஒன்றின்மீது ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது [இதுவே சரியானது]______________________________________________________________________________________________________இரண்டு வித்தியாசமான வர்ணங்களில் இரண்டு முக்கோணங்கல் ஒன்றினுள் ஒன்று நுழைக்கப்பட்டு இருக்கிறது [இது சரியான ச்கந்த சக்ரம் அல்ல

                                                         ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ|| 

மூள லேக -
     
Wednesday 26 November 2014

டாக்டர் டெஸ்லாவின் ஐரோப்பா பயணம்.

Dr. Nikola Tesla’s Journey to Europe!

கடந்த , கட்டுரையில் டா,டெஸ்லா எவ்வாறு டெஸ்லா காயில் தயார் செய்தார் என்பதை பார்த்தோம் , அத்துடன் ஆராய்சிகளினால்  மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்க அரும் பாடு பட்டார். திடீர்விசை த்தூண்டுதல் மின் சக்தியை காற்றில் ஏவவும் ,  பரப்பவும் காரணம் ஆகும் என்று நம்பினார்.  இந்த திடீர்விசைகளினால் மின் சக்தி அக்காயிலினிருந்து அலைகளாக வராமல் கிரணங்களாக வெளிவருகின்றன.   டா.டெஸ்லா அந்த கிரணங்கள்   ஆகாய இடைவெளியில் தீர்கரேகையாக வருவதைக்கண்டார். அவர் அவரது ஒரு பட்டயத்தில் "ஒளி போன்ற கிரணங்கள் என்று வர்ணித்திருக்கிறார். இந்த கண்டுபிடிப்பு அவரது வருங்கால புதுமை ஆராய்சிகளுக்கு வழி வகுத்தது.   
டா.டெஸ்லா நம் இயற்கை த்தாயும் இந்த திடீர்விசை தூண்டுதல்  [ஆங்கிலத்தில் இம்பல்ஸ்] அடிப்படையில் இயங்குகிரது என்பதை உணர்ந்தார். இயற்கை , பலவித திடீர்விசை களை  வெள்ளமாகக் கொண்டது. அது மின்னலாக இருக்கட்டும் , நமது மூளையின்  நரம்பு செயல்பாடுகளாக இருக்கட்டும் , திடீர் யோசனைகள் , எல்லா வித சக்தி அசைவுகள் , திடீர் விசையின் உதாரணங்கள். டா.டெஸ்லா இது அனைத்தோடும் ஆண்டவன் தொடர்பு  கொள்ளும் வழியாகவே நினைத்தார் [ அது ஜீவன் உள்ள , இல்லாத ஜடப்  பொருளும் அடக்கம்].  அவர் இந்த இம்பல்ஸ் ப்ரபஞ்சத்தின்  இயற்கையிலும்,  ஆன்மீகத்திலும் , பக்தியிலும் இருக்கிறது என்பதை ப்பார்த்தார். அவர் தன் வேலகளையும் , கண்டிபிடிப்பும் அனைவருடன் எந்தவித சந்தேகம் இல்லாது தெளிவாக பகிர்ந்து கொள்வார்..அவர் வழக்கமாக அவரது புதுமை ஆராய்சி கண்டுபிடிப்புகளை பத்திரிகைகள் வெளியீடுகள் மூலமாகவும் , பத்ரிகையாளர்கள்  கலந்தாய்வு மூலமாகவும் பகிர்ந்து கொண்டார்.  அவ்வாரே அவரது பரிசசோதனைப் பற்றிய தகவல்கள் அறிவியல் வர்தக நாளேடுகளில் [ டெக்னிகல் ட்ரேட் ஜர்னல்] வெளியிடப்பட்டன.  டா.டெஸ்லாவின் புகழ் , பெயர்  அங்கங்கே பரவியது.  மக்கள் வருங்கால திட்ட்ங்களைப்பற்றிய விஷயங்கள் அறிந்து பூரித்துப்போயினர்.  ஜூலை 31 , 1891 ஆம் ஆண்டு  டா,டெஸ்லாவிற்கு அமெரிக்க குடிமக்கள் உறிமை கிடைத்தது.  ஜூன் 6,1884 ல் அவர் ந்யூயார்க் வந்தடைந்தார் , அவர் கையில் நான்கு தம்புடி காசே இருந்தது. ஏழு ஆண்டு பிறகு அவர்  அமெரிக்காவின் அதிகாரம் சார்ந்த அமெரிக்காவின் இயற்கை குடிமகன் ஆனார்.அவரது பெயர் விஞான உலகத்தில் பரவலாக ஊனத்தொடங்கியது. டா.டெஸ்லா தனது விஞான கௌரவத்திற்கு மேல் அவரது அமெரிக்க குடியுறிமையை மேலாகக் கருதுவதாக அவர் நண்பர்களிடம் சொன்னதுண்டு. அதற்கிடையில் டா.டெஸ்லா , லார்ட் கெல்வின் [லார்ட் வில்லியம் தாம்ஸன்]  இடமிருந்து  லண்டனின் ராயல் சொசைடி யில் ப்ரசங்கம் செய்ய வேண்டி அழைப்பிதழ் பெற்றார்.   

  

டா.டெஸ்லா  ப்ரசங்கங்களுக்கு தன்னை தயார் செய்து கொண்டார். தன்னுடன் தமது லண்டன் ராயல் சொசைடி அங்கத்தினர்களுக்கு நேர்முக செயல்முறை விளக்கங்களுக்கு தேவையான அனைத்து யந்திரங்கள், பொருள்கள் கொண்டு சென்றார். அவர் தனது விளக்கத்தை முதலில் தனது மாறுதிசை மின் சக்தியுடன் ஆரம்பித்து உயர்ந்த வால்டேஜ் ,உயர்ந்த வதிர்வெண் [ஃப்ரீக்வென்ஸீ] பற்றி சொல்லிவிட்டு , கம்பியில்லா  கதிர்வீசல் மின்சக்தி அதன் தன்மைகளை  அங்கத்தினர்களுக்கு செய்துகாட்டி விளக்கினார். அவர் அதேசமயம் இருளில் ஒளியாக இருக்கும் விளக்குகள், ட்யூப் லைட்கள் கம்பியில்லாது அவர் கையிலேயே எரியவிட்டு க்காட்டினார். அவரது  அழுத்தமான உறுதியாக உறைத்த குரல் அங்கத்தினர்கள் அமைதியின் மத்தியில்  தெளிவாக ஒலித்தது. அங்கத்தினர்கள் அனைவரும் அதிசயித்தனர்.  

கம்பியில்லா விளக்குகள்  கதிர்வீஸு மின் சக்தியினால் முழு ப்ரகாசத்துடன் எரிவதை செய்து காட்டினார் . அவர் சில சிறிய மோட்டார்களும்  சிறிது தூரத்தில் கம்பியில்லாது இயக்கமுடியும் என்பதையும் ஓட்டி காட்டினார். எவரெவர் டா,டெஸ்லாவின் அனைத்து பரிசோதனைகளும் கண்டனரோ வியப்பல் திகைத்தனர்.

ப்ரிசோதனைகளை விவரிக்குமாறு சில பொறியியல் நிபுணர்கள் கேட்கவே டா.டெஸ்லா மிகத்தெளிவாக விளக்கியும்   ; அதை மறுபடி செய்து காட்ட டா.டெஸ்லா கேட்க அதை ஒரு சிலரால்மட்டுமே அதை செய்து காட்டமுடிந்தது.  டா.டெஸ்லா    சில மாதங்கள் ஐரோப்பவில் தங்கியிருந்து , இதேபோல் ப்ரசங்கங்களும் பரிசோதனைகளும் செய்து அவரது மாறுதிசை மின் சக்தி விதிமுரைகள் பற்றி  விளக்கி வந்தார்.  அவர் பல விஞானிகளையும் சந்தித்து அவர்களது  பல சாதனைகள் பற்றியும் அறிந்து கொண்டார். அவர் எப்போதும்   இதர விஞானிகளின் ஆற்றல் அறிந்து மதித்தார் , அவர்களது புதிய நுடபங்க ளை  கற்றுக்கொண்டு அதன் அதிசய சம்பவங்கள் பற்றி ஆராய்வார். இதிலிருந்து  டா டெஸ்லாவின்   பறந்த மனத்தை  காட்டுகிறது. 

ஐரோப்பிய பண்டிதர்களுக்கு டா.டெஸ்லாவின்  ப்ரசங்கங்களும் , பரிசோதனைகளும் வியப்பூட்டினாலும் , அது வருங்கால புரட்சியாக கருதினார்கள்.
ஆகையால் சிலரே  எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓர் இரவு அவர் பேரிசில் இருந்த சமயம் அவரது தாயாரின் உடல்நிலை சரியில்லாதது பற்றி தந்தி வந்தது . அவர் அவரது ஐரோப்பா பயண வேலைகளை அப்படியே விட்டுவிட்டு படுத்த படுக்கையாக இருந்த தாயாரின் அருகில் இருந்தார்.  அவள் அருகில் இருந்து கொண்டு ஒரு சில மணிநேரமே உறையாடி இருக்க வேண்டும். அவர் தாயார் மிகக்கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் டா.டெஸ்லாவைக் கண்டு மகிழ்ச்சியுற்றார் அவர் அவரை , நீ வந்து விட்டாயா என் கண்ணா நிட்ஜோ என் கௌரவமே" என்று வரவேற்றி  வாழ்த்தினார். அவர் , அவர் தாயார் அருகில் வெகு நேரம் இருந்தார். அன்று இரவு அவர் சரியாக தூங்கவில்லை , டா.டெஸ்லா அந்த அனுபவத்தை  அவரது வார்த்தைகளில் வர்ணித்தது பின் வருமாரு.   இரவு முழுதும் எனது மூளையில் உள்ள ஒவ்வொரு பாகமும் எதிர்பார்ப்பினால் துடித்து களைத்தன. ஆனால் அதிகாலைவரை ஏதும் ஆகவில்லை . சிறிது கண் அயர்ந்த போது ஒரு தேவதை போன்ற  அழகான மேக அமைப்பு செல்கையில் அதில் இருந்த  ஒன்று என்னை அன்பாக பார்த்தது ,  அதுவே என் தாயாரின் உருவமாக மாறியது.  இந்த கனவிலிருந்து திடீரென்று விழிக்கையில் அவர் அவரது தாயாரையே அந்த உயரச்செல்கின்ற மேகமாக இருப்பாள் என்று நம்பமுடியவில்லை. சிறிது நிமிடங்களில் தாயாரின் உயிர் பிறிந்த தகவல் கிடைத்தது ,ஜூன் 1 ,1892 தாயார் ட்யூகா டெஸ்லா  காலமானார்.

டா.டெஸ்லாவை  ,தாயாரின் மரணம் கடும் துக்கத்தில் ஆழ்த்தியது. அவரது தந்தை 1879ல் காலமானார். டா.டெஸ்லாவின் வயது இருபத்து மூன்று. பதிமூன்று வருடங்கள் பின் தாயாரையும் இழந்தார். டா.டெஸ்லா அவரது தாயாரை மிகவும் விரும்பினார் , ஏனெனில் அவர் தாயாரே அவரது அதிசய ஆற்றலைப்பற்றி முழுமையாக புரிந்து கொண்டிருந்தார்.    

அவர் தாயாரே  சிறு வயதில் டா. டெஸ்லாவின்  எண்ணத்தை தெரிவித்தபோது  அவருக்கு ஊக்கமளித்தார். அவரது நண்பர்களும் சொந்தக்காரர்களும் ஏளனம் செய்த பொழுது அவர்  தாயாரே அவருக்கு ஒரே  துணை, ஆதாரமாகவும் இருந்தார்  . ஒரு வாரம் தாயரின் இருதிச்சடங்குகளுக்கென்று  அவரது க்ராமத்தில் துக்கத்தில் துடித்து கழித்தார்.  அந்த அதிர்வில்  நோய்வாய்ப்பட்டார். அவர் முழுமையாக குணமடைய இரண்டு மூன்று  வாரங்கள் ஆயின.  தாயாரையிழந்த  டா.டெஸ்லா விற்கு தற்போது ஒரே ஒற்  துணை கடவுளே  ஆவர்.  கடவுளும் அவரது தாயாரான மேரிமாதாவும் தான். டா.டெஸ்லாவின் கடவுள் மேல் கொண்ட அசையா பக்தி அவரை பல கஷ்டமான   நிலையிலிருந்து காப்பாற்றி வந்தது.  கடவுளும் அவரை கைவிடாது , அவருக்கு உலகத்தில்  போறாட  தைரியமும் கொடுத்தார்.  இந்த பலத்த துணையுடன் டா.டெஸ்லா தாயாரின் இழப்பிலிருந்து மீண்டு ந்யூயார்கில் உள்ள அவரது ஆராய்சி நிலயத்திற்கு சென்றார், அங்கு அவரது ஆராய்சி நிலயமும் அவரது வேலைகளும் அவருக்கென்று காத்திருந்தன.
ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம் ||    அம்பஞ || 

- மீண்டும் பார்க்க: 


மூள லேக -

Thursday 28 August 2014

குருக்ஷேத்திரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

Independence Day celebrations at Aniruddha Gurukshetram 
ஆகஸ்ட்  15,2014. அன்று குருக்ஷேத்திரத்தில் சுதந்திர தின விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. அநிருத்தா அகாடமி  ஆஃப் டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் [அநிர்த்தா திடீர்   அபாய சேவை கழகத்தின்]   டி எம் வி என்று அழைக்கப்படும் அங்கத்தினர்கள் அறங்கேற்றிய அணிவகுப்பு பயிற்சிகள் மிக அற்புதமாக நடந்தேரியது.நான் இங்கே சில புகைப்படங்களை இணைக்கிறேன். மொத்தாமாக 163 , டி எம் வீ க்கள்  கொண்டாட்டத்தில் அணிவகுப்பு பயிற்சிகளில் பங்கேற்றனர்.

அதன் விவரம் பின் வருமாரு.

தேசியக்கொடி தாங்கியவர்  ------             சுஷாந்த் ஸின்ஹ் ராவுத்
குருக்ஷேத்ரம் கொடி பிடித்தவர் ----------       ப்ரேமவீரா கதம்
ஸ்கந்த த்வஜம் தாங்கியவர்      ------------      ப்ரீதிவீரா பாஸ்கர்
அணிவகிப்பின் சேனாதிபதி   ------------       தீபாலிவீரா ராவுத்
வீரர் குழு   ஓன்று  ---------------------------       அஞ்சலிவீரா சிங்க்
வீரர் குழு  இரண்டு -------------------------        ரூபேஷ் ஸின்ஹ் மட்கே
வீரர் குழு  மூன்று  ---------------------------        ரவீணாவீரா காவ்லே
வீரர் குழு நான்கு  ---------------------------         ப்ரவீண் ஸின்ஹ் நாயிக்
காப்பாற்று குழு ------------------------------         ஸாகர்ஸின்ஹ் பாடில்
கோஷ பதக்        ------------------------------       ஷலாகாவீரா  கோவல்கர்

இதன் விரிவான விமரிசனம்
ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ|| 


மூள லேக -

Wednesday 20 August 2014

கம்பியில்லா மின்சாரம் - Part 2

கடந்த கட்டுரையில் டா.டெஸ்லா எவ்வாரு திடீர்விசை மின்துடிப்பை ப்பற்றி அறிந்தார் என்பதை பார்த்தோம் ,அதனுடன் அதி பேரளவான [உயர்ந்த] வதிர்வெண் மாறு திசை மின் சக்தி பயன்படுத்தி , மின்சாரம் காற்றிலும் பயணம் செய்வதை கண்டுபிடித்தார். அதுவே கம்பியில்லா மின்சாரத்தின் முதல் அடி ஆகும் .இந்தக்கட்டுரைகள் மூலம்  கம்பியில்லா மின்சாரம் பயன் படுத்துதல் , இந்த கொள்கை எவ்வாறு டா,டெஸ்லாவின் பல புது க்கண்டுபிடிப்புகளுக்கு காரணமாய் இருந்தன என்பதை பார்க்கப் போகிறோம்.

[மேலேஇருக்கும்   1892 ஆம்  ஆண்டு டா.டெஸ்லாவின் புகைப்படத்தில்  டா.டெஸ்லா  அவர் ஆய்வுக்கூடத்தில் ஒரு பெரிய டெஸ்லா சுருள் [காயில்]  அருகே டா.டெஸ்லா அமர்ந்திருக்கையில்   , வெளுத்த கண்ணை க்கூசும்   நெருப்பு பொரிகள் போன்ற வெளியீட்டினை க்காணலாம், சில அவர் உடல் வழியே பாய்கின்றன , அவருக்கு எந்தவித இடையூரும் விளைவிக்காமல். டா.டெஸ்லா எப்போதும் போல் அமைதியாக  புத்தகம் படித்தவாரு அமர்ந்திருக்கிறார்].  

        நாம் தற்போது அவரது பரிசோதனைகளுக்கு செல்வோம். மின்சாரம் கம்பியில்லாது திடீர்விசை மின்துடிப்பினால் முடியும் என்ற முடிவுக்கு வந்த டா.டெஸ்லா அதில் சில மாற்றங்கள் செய்ய அதே மின் வளயத்தில்   அதை  6ooo சுழல் வேகத்தில் திரக்கவும் மூடவும்  தன்மையுள்ள ஒரு   ரோடரி ஸ்விட்ச்  பொருத்தி மின் பாய்ச்சலை 15000 volts[வால்ட்ஸ்]க்கு உயர்த்தினார்.  அவர் மின் வளயத்தை தூண்டிவிடுகையில் , அந்த ஊசி குத்தும் வலி ரோடரி ஸ்விட்சினால்  கடுமையாகவே உணர்ந்தார்.. சாதாரணமாக [ஸ்டெப் அப் ட்ரான்ஸ்ஃபார்மர்] மின் சக்தி மாற்றும் பொறி ,மின் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தன்,  ஆனால் தற்போது மின்சக்தி மாற்றும் பொறி இல்லாது மின்சக்தி  திடீர்விசை மின்துடிப்பினால் வெகு சீக்கிரத்தில்  அதிகரிப்பதை கண்டார்(Impulses were amplifying the current and voltage) . தாமர கம்பியைச்சுற்றி வெள்ளை நீல மின் பொரிகள் இருந்ததை க்கண்டார். இந்த பரிசோதனையின் போது  டா.டெஸ்லா ஊசி குத்துவலி அதிகரிப்பதை உணர்ந்தார்.  அப்படியும் அவர் மின்சக்தியையும் [வால்டேஜையும் கரண்டையும்], வதிர்வெண்ணும் உயர்த்தி க்கொண்டும்,  மின்சக்தி பாய்ச்சலை நிருத்தியும் பரிசோதனைகள் பல செய்தார். அதற்குக் காரணம் அவர் அவரது ஆற்றலின் மேல் இருந்த தன் நம்பிக்கையும் ,கடவுள் மீதுள்ள விஸ்வாசமுமே காரணம்.  ஒரு விதமாக இந்த பரிசோதனை  செயல் படுததுதலில் வெற்றி பெற்றால் இது ஒரு புது வித மின்சாரத்திற்கு வழ  வகுக்கும் அதுவே  மானிடர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்பினார்.
     


அவரது  பரிசோதனைகளை வித்தியாசமாக வளர்க்க துணிச்சலான முயற்சிகள் செய்து டா .டெஸ்லா [rapid mechanical rotary switch] வேகமாக இயங்கும் சுழல் மின் தொடர் மாற்றியை தாமமே உருவாக்கினார், அது வினாடியின் பத்தாயிரம் பங்கின் ஒன்றின் நேரத்திற்குள்  செயல்படும்.  அதாவது, ஒரு நிமிடத்திற்குள் 600,000 சுழல்கள் ஆனது.  அவர் வால்டேஜை [மின்சக்தியை] ஒரு  லக்ஷம் வால்ட்ஸிற்கு உயற்தி ஒரு அற்புதத்தை கண்டார்,  அதையே  " எலெக்ட்ரிகல் ஸாவ்னா" எஃபெக்ட்  
‘Electrical Sauna’ effect என்பார்கள்.
    
டா.டெஸ்லா இந்த பரிசோதனையயும் மாற்றி மின்தொடர் மாற்றிக்கு[ ஸ்விட்ச்சிர்க்கு]  பதிலாக அவர் காந்த வளைவு இடைவெளியை  [magnetic arc gap]  உபயோகித்தார். அவர் முதல் சுழலும் , இரண்டாம் சுழல்களும் [  primary and secondary coil   ]  தயாரித்து , அதாவது ப்ரைமரி காயிலிலிருந்து செகண்டரி காயிலிற்கு மின்சக்தி அதிகமாக பாயும். டா.டேஸ்லா அவரது புதிய திடீர்விசை மின்துடிப்பு மின்சக்தி மாற்றி  அதில் பாயும் மின்சக்தி அளவை பன் மடங்கு பெருக்குவதை ப்பார்த்தார். அவ்வாரே கதிரொளி போன்ற சக்தி[ கம்பியில்லா மின்சார சக்தியும் அதிகரித்தது.  டா.டெஸ்லா  பத்து லக்ஷ வால்ட்ஸ் மின்சக்தி இம்முறையினால் உற்பத்தி செய்து பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தார் . அதுவே அவருக்கு இந்த [கதிரொளி சக்தியை கம்பியில்லாம்லே  வெகு தூரம் வரை கொடுக்கவும் முடிந்தது,  அவர் பரிசோதனையில் வெளுத்த நீல கிரணங்கள்  முழு காயிலிலிருந்து  துள்ளி வெளிப்படுவதை பார்த்தார். அக்கிரண்ங்கள் எந்த பொருள் வழியாகவும் செல்ல வல்லதாக  இருந்தன.  அக்கிரணங்கள் குளுமையாகவும், ஊசிகுத்துதல் இல்லாது ,  அதுவே சிறிய வதிர்வெண்ணினால் உண்டாகும் எரிச்சலும் இல்லாது , உடலுக்கு இதமாகவே இருந்தன. அதற்கு மேல் சில  வதிர்வெண்ணில் [ஃப்ரிக்வென்ஸியில்] இந்த வெள்ளை நீலக்க்கிரணங்கள் மின் பல்புக்களையும் ,  ட்யூப் லைட்களையும்  கரண்ட் பாய்ச்சிய காயில்கள் அருகில் கொண்டுவரும் போது  இயங்க வைத்தன. டா.டெஸ்லா இவ்விளக்குகளை கம்பியில்லாது தம் வெரும்  கையில் பிடித்தவாரே இயக்கிக் காட்டினார்.


இதையொட்டிய மற்றொரு  பரிசோதனையில் ஒரு தாமர[செம்பு]  கடத்து கோளத்தை இரண்டாம் மின்சக்தி மாற்றி வாய்களுக்கு சேர்க்கப்பட்டது [ஒட்டுவிக்கப்ப்ட்டது].  எல்லா கிரண வெளியேற்றங்கள் இந்த  தாமர கோளத்தில் மய்யம் கொண்டன., இப்போது இந்த  தாமர கோளத்திலிருந்து வெடிப்பு சத்தத்துடன் வெளிப்படுத்தல் [கிரணங்கள்]  வெளியேறின. அது
 மின்பாய்ச்சும் சக்தி யை குறைந்த அளவில் வைத்து கம்பியில்லா மின் சக்தி பரப்புதலை அபாயமில்லாது  மனிதர்க்கள் யாவருக்கும்  உபயோகப்ப்டுத்துமாரு   பத்திரமானதாகவும் , மிகச்சரியானதாகவும் ஆக்கியது. கம்பியில்லா மின் வெகு தூரம் வரை விஸஸேஷமாக செயல் படுத்திய மின்வளயத்தினால் பெற்றுக்கொள்ள முடிந்தது.   டா.டெஸ்லா கம்பியில்லா மின்சார இயக்கத்தை இவ்வாரு பெற்றெடுத்தார் என்றே சொல்லலாம்.

இது கம்பியில்லா மின் சக்தியை பல இடங்களுக்கு பரப்பும் ஒரு பயிற்சிக்குறிய வழி. இதுவே டா.டெஸ்லாவின்  புகழ் பெற்ற டெஸ்லா காயில் ஆகும். இன்று பல அனிமேடட் திரைப்படங்களிலும், விளையாட்டுகளிலும் டெஸ்லா காயிலினால் அபாயத்தையும் , இக் காயில் எதன்மீது விழுகிறதோ அது எறிந்து  சாம்பலாகும் போல் காட்டப்ப்டுகின்றன, ஆனால் அது நேர் மாறானது , டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது வழிப்படி டெஸ்லா காயில் ஒரு முழுமையான கம்பியில்லா சக்தி பரப்பும், செலுத்தும்  அபாயமில்லாத  பத்திரமான ஒரு  கருவியாகும். இந்த டெஸ்லா காயில் பரிசோதனைகளை எந்தவித நிபுணர்கள் இல்லாமல், அதை பற்றி ச்ரியாக அறியாது   செய்து பார்கவே பார்காதீர்கள். ஆம் டெஸ்லா காயில் களை ப்பற்றி நன்கு  அறிந்து கொண்டு  அதை சரியாக  , கம்பியில்லா விளக்கு ஏற்றுதலுக்கும் மின்சக்தி செலுத்தவும் பரப்பவும் மனிதர்களுக்கு சாதகமாக உபயோகிக்கலாம்.பயனுள்ளதாகவெ உள்ளது

ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ||   

மூள லேக -

Tuesday 19 August 2014

கம்பியில்லா மின்ஆற்றல் [மின்சாரம்]- [Part-1]

1890 ஆம் ஆண்டு டாக்டர் நிகோலஸ் டெஸ்லா தாமாகவே  ஆடலான  மின் சக்தி எனும் மாறு திசை மின்சார தத்துவத்தை உறுவாக்கினார்.அதை அவர் மாற்றி திருத்தி அமைத்து பேரளவு உயர்ந்த வதிர்வெண்[ஹை ஃப்ரீக்வென்ஸி] மாறுதிசை மின்சார வளர்ச்சிக்கு காரணமாகி பிறகு கம்பியில்லா மின்சார செலுத்தல் என்னும் அதிசயைத்திற்கு வழிவகித்தது, அதை டாக்டர் டெஸ்லா இயற்கைத்தாயின்  இயல்பாகவே கருதினார். 

டாக்டர் டெஸ்லாவின் மாறு திசை த்தன்மை வாய்ந்த மின்சாரத்திட்டத்தை களங்கபடுத்துவதற்காகவே , தாமஸ் ஆல்வா எடிஸன் பகிரங்கமாக பொதுமக்கள் இடையே மிருகங்கள்மீது மின்சார சக்தி பாய்சினார் என்பதை அறிவோம்.அதனுடன்   மாறு திசை மின்சாரசக்தி பய்ச்சிய  நாற்காலி மீது உட்காரவைத்து சிறைக்கைதிகளின்  மரணதண்டனைக்கு உபயோகித்ததை அறிந்து தா. டெஸ்லா மிகவும் மனம் வருந்தினார்.   டா.டெஸ்லா கடவுள் பக்தி கொண்டவர், கருணைஉள்ளம் கொண்டவர்,  அவர் ஹ்ருதயம் இக்கைதிகள், மிருகங்களின் மீதான கொடுரமான  சித்திரவதையை நினைத்து உறுகியது.  டா,டெஸ்லா , தாமஸ் எடிஸனின் இந்த அவதூரு செய்திக்கு எதிர்த்து முறியடிக்க முடிவு செய்தார். அவர் ஜார்ஜ் வெஸ்டிங்க் ஹவுஸுடன் சேர்ந்து ஒரு பத்திரிகை மாநாடு ஏற்பாடு செய்து பல முக்கிய விஞானிகள், வாணிக த்தலைவர்கள் , பத்திரிகைகையாளர்களை மாறு திசை மின்சாரத்தின் செயல்முறை விளக்கத்திற்காக  தனது ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்திற்கு அழைத்தார்.  அங்கு அவர் ஒரு லக்ஷம் வால்ட் மின்சக்தி  விளைவிக்கும்  மாறு திசை பொறி ஒன்றை தயார்நிலயில் வைத்திருந்தார்.  ஏசி கரண்ட் என்னும் மாறு திசை மின் , அதை  க்கட்டுப்பாட்டுடன் இயக்கிப்பயன் படுத்தினால் அது மானிடர்களளுக்கு ஒரு தீங்கும் விளைவிக்காது என்பதை உறுதி ப்படுத்த தன் உயிரையே பணயம் வைத்து , டா.டெஸ்லா அந்த லக்ஷம் வால்ட மின் விளைவிக்கும் பொறி அறுகே அமர்ந்து செயல் படுத்தியும்  காட்டினார். அங்கு கூடியிருக்கும் அனைவரையும் ஆஸ்சரியத்துடன் திகைக்கவைத்தார்.  டா.டெஸ்லா ஒரு சிராய்ச்சல் இன்றி  வெளிவந்தார்.  இதை அவர் செய்தது மானிடத்தன்மை யை க்காப்பாற்றவும், மக்கள் நலனுக்காகவும், மாறு திசை மின்சாரம் பற்றிய தவரான கருத்தையும் , வதந்தியை நம்பாதிருக்க தம் உயிரை  பணயம் வைத்தார், எடிஸனோ ஏ.சி மின்சக்தியை மிருகங்களிலும், கைதிகளிலும் பாய்ச்சி கொடூரச்செயல்கள் புரிந்தார் என்பதை  கவனிக்கவும். 


கம்பியில்லா  மின்சார இயக்கத்தை பற்றிய விளக்கம் டா. டெஸ்லா மக்களுக்கு அளித்ததும் அதுவே முதன்முறையாகும்.  ஆம்,தாங்கள் யாவரும் கேட்டது சரியே. "வயர்லெஸ் இலெக்ட்ரிசிடி" கம்பியின்றி மின்சாரம்   என்பதை தெளிவு படுத்தும் வகையில்  மின்விளக்குகளை தன் கையிலேயே ஏற்றி க்காட்டினார். எவ்வாரு இச்சாதனையை செய்தார்? எப்படி ப்படைத்தார்? என்பதறிய நாம் அவர் அவரது  ந்யூயாரக்  ஆய்வுக்கூடத்தில் நடத்திய பரிசோதனைகள்  பார்ப்போம். அவரது ந்யூயார்க் ஆய்வுக்கூடம்  ஒரு பல தரப்பு ஆராய்ச்சிக்கூடமாகவும் , உற்பத்திநிலையமாகவும் செயல்பட்டு வந்தது. அதில் பல பகுதி, கிளைகள், பல மாடிகள் , மட்டங்கள் இருந்தன. அதை ஒரு சிறிய ஆராய்சி மற்றும்  வளர்ச்சி மய்யமாக கருதலாம்.  டா.டெஸ்லா பல மின் ஆற்றல் மாற்றும் கருவிகளும் , மின்விளைவிக்கும் பொறிகளும் அவரது கீழ் மட்டத்தில் தயார் செய்து வந்தார்.  அவரது தனி ஆராய்சிக்ககூடம் மேல் மட்டத்தில் இருந்தன. அவரிடம் இயந்திர நிபுணர்கள் சிலர் பணியாற்றி வந்தனர். அதில்  கோல்மன் ஜீடோ அவரது நம்பகமான நண்பர் அவருடன் இருதிவறை இருந்தார். டா.டெஸ்லா கடும் உழைப்பாளி என்பது அறிவோம். அவர் அவரது  அத்தகைய  ப்ரம்மாண்டமான ஆராய்ச்சி க்கூடம் வெஸ்டிங் ஹவுஸிடமிருந்து பெற்ற ஊதிய த்தொகையிலிருந்து தாமே பார்த்து பார்த்து க்கட்டியிருந்தார். அவரது ஆராய்ச்சியின் சமயம் வித்தியாசமாக  எதையும் உணர்ந்தாலோ , கண்டாலோ அதை மறு ஆராய்சி செய்து பல  விதத்தில் மாற்றி ப்பார்த்தும் ஆராய்ச்சிகள் நடத்துவார். இம்மாதிரியான  ஆய்வும் ஆராய்ச்சிகளும் அவருக்கு பல விஷயங்கள் அறிய வாய்ப்பு கிடைத்தது. ஆகையால் அவர் பல கண்டுபிடிப்புகள்   செய்தார், பல பட்டயங்களுக்கும் உறிமை யாளர் ஆனார். அவ்வாரே அவரது கண்டுபிடிப்புகளும் ,  படைப்பாற்றல்களையும் வளர்த்துக்கொண்டார்.

     டா.டெஸ்லா மிகவும் மேலோங்கியதான திறனான வெகுதூரம்வரை மின்சாரம் செலுத்தும்   பாலிஃபேஸ் ஏ.சி திட்டத்தை அளித்தார்.அங்கும் டெஸ்லா நிற்கவில்லை . அவரது , தளராத இடைவிடா முயற்சியால் ஏ.சி ஜெனரேட்டர்களின் வதிர்வெண் 30,000 ஹெட்ஜ் [வினாடிச்சுழல்கள்] வரை உயற்த்தினார், அதுவே ஹை ஃப்ரீக்வன்சி , அதாவது  உய்ர்ந்த வதிர்வெண்  கொண்ட  மாறு திசை மின் விளைவிக்கும் பொறிகள் பிறக்கக் காரணமாகும்.  இந்த உயர்ந்த வதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்சாரம் உலகத்திற்கு மின் சக்தி அளிக்கும் என்று நம்பினார். அவர் பல உயர்ந்த  வதிர்வெண்  கொண்ட மாறு திசை மின்விளைவிக்கும் பொறிகளை தாயரித்து பட்டயங்களும் பெற்றார்.  டா,டெஸ்லாவின் இந்த உயர்ந்த வதிர்வெண்  மின்சாரம்  மனிதனின் தொடர்பில் இருந்தாலும் ஒருவித  அபாயமும் இல்லை என்பதே.  எதிர்பாராது தவறி மனிதன் இம்மின்சாரத்தை தொட்டாலும் அதன் உயர்ந்த வ்த்ர்வெண்ணினால்  மனிதனின் வெளிமட்டத்திலிருந்து மனிதனை சிறிதளவும் பாதிக்காது வெளியேறிவிடும். விஞானத்தில் இதை ஸ்கின் எஃபெக்ட் , [தோல் பாதிப்பு] என்பார். டா டெஸ்லா மாறுதிசை மின்,  மனிதனுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தானது அல்ல என்பதை நிரூபித்தது.  அவர் அவரது அறிமுக விளக்கத்தின் சமயம் மாறுதிசை மின் பாயும் மின்வாய்களை தனது மூடப்படாத கைகளினால் தொட்டுக்கொண்டிருந்தும் அவருக்கு ஒன்றுமே ஆகாததை க்கண்டு மக்கள்  வியந்தனர். மக்கள் பாதுகாப்பே டா.டெஸ்லாவின் குறிக்கோளாக இருந்தது என்பதை கவனிக்கவேண்டும். 


இவ்வாரு உயர்ந்த வதிர்வெண்  மாறுதிசை மின் சக்தியை சார்ந்த  பரிசோதனைகளின் தருணம் ஒரு அதிசயமான நிகழ்ச்சியின் மூலம் டா. டெஸ்லாவின்  மின்சாரத்தைப்பற்றிய கருத்தே மாறியது. ஒரு பரிசோதனையில் ஒரு மெல்லிய கம்பியில் , பலத்த வால்டேஜ் ஏ,சி கரண்டினை பாய்ச்சி ஒரு வினாடியில் மின் சக்தி வளயத்தை முடியதை கண்டார். இத்தகைய மின் சக்தி ப்பாய்ச்சல் கம்பியை ஆவியாக்கியது. பாய்ச்சும் மின்சக்தியின் வால்டேஜ் அதிகரிக்கச்செய்கையில் அவர் அங்கம்முழுதும் ஊசிகுற்றுவது போன்று அனுபவித்தார். அவர் முதலில் அது வெடித்து சிதர்ய்தில்  அக் கம்பியின் சிறு துண்டுகளாக இருக்கும் என்று  நினைத்தார். அவர் தன்னை த்தானே தொட்டுப்பார்க்கயில் ஒரு துண்டும் இல்லை என்பதை அறிந்தார், ஒரு காயமும் இல்லை என்பதை உணர்ந்தார்.
 அதன்பிறகு அவர் அவருக்கும்  பரிசோதனை மேஜை கிடையே ஒரு பறுமனான  கண்ணாடியை வைத்தார், அதனுடன்  தாமர மின்வாய்களை செலுத்தி, பத்து அடி தொலைவில் நின்று  பார்த்தார்., அப்படியிருந்தும் , மின் வளயத்தை திரந்தவுடன்  அதே ஊஸிகுத்தும் உணர்வு இருந்தது.  பரிசோதனைகளை மாற்றி மாற்றி செய்து பார்க்கயிலும்,  ஊசிகுத்தும் உணர்வு  இருந்து கொண்டேஇருந்தது.  இதை அவர்,   அவர் உயர்ந்த மின்சக்தி சிறிதே நேரபபாய்ச்சலினால் அதாவது  ஆங்கிலத்தில் இம்பல்ஸ் என்பார்கள். இந்த ஆராய்சியே கம்பியில்லா மின்சக்தியின் பிறப்பாகும்.  இதிலிருந்து அவர் அறிந்தது,  பலத்த வால்டேஜ், உயர்ந்த வதிர்வெண்  மின்வளயத்தின் உடனடி மூடுதல் மின்சக்தியை காற்றுமூலம் பாய வைகின்றன,  அதுவே கம்பியில்லா மின் உடலை பாதிக்கின்றது என்பதை அறிந்தார்.  

இதன் பின் செய்த டா,டெஸ்லாவின்  பரிசோதனைகள் யாவும் திடீர்விசை மின்துடிப்பின்   , வதிர்வெண்  ,ரெஸோனென்ஸ்[ மின் ஒத்த அதிர்வு ]  கொள்கைகளைக் கொண்டு நடத்தப்பட்டன. இதை ப்பற்றி வரும் கட்டுரைகளில் கவனிப்போம், அடுத்த கட்டுறையில் டா டெஸ்லா எவ்வாரு காற்றில் பாயும் மின்சக்தியை கம்பியில்லா மின்சாரமாக மாற்றினார் என்ற  அதிசயத்தை ப்பார்ப்போம். 

                             ஹரிஓம் ||  ஸ்ரீ ராம் ||  அம்பக்ஞா||

மூள லேக -