Wednesday 3 December 2014

உலக கொலம்பிய கண்காட்சி (எக்ஸ்போ) - 2

World Columbian Expo – 2

மே 1st 1893 ஒரு மகத்தான பாணியில் மற்றும் முழு மூச்சில் உலக கொலம்பிய பொருட்காட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாளன்றே இந்த பெரிய கண்காட்சியைக் கிட்டத்தட்ட நூறு ஆயிரம் (ஒரு லட்சம்) பேர்  பார்த்திருக்கின்னர். பார்வையாளர்கள் நாள் முழுவதும் பொருட்காட்சியில் பல்வேறு இடங்களிலும் கட்டிடங்கள் மற்றும் சிறப்பு காட்சி சென்று பார்த்து அனுபவித்தார்கள் மற்றும் இராத்திரி பொழுது வரும் போது அந்த இடமே மாய வசியத்தால் கட்டுண்டது போல் இருப்பதை பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். யாரெல்லாம் அப்பொழுது அங்கு இருந்தார்களோ அவர்கள் முழு ஆச்சரியம் மற்றும் திகைப்புடனும் பார்க்குமாறு, டாக்டர் நிகோலா டெஸ்லாவால் AC மின்சாரத்தால் இயங்கும் நிறைய விளக்குகளால் பெரும் செலவில் மிகச் சிறப்பாக கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த உலகமே எப்போதுமே பார்த்திராத அளவுக்கு, இந்த கண்காட்சியில் விளக்குகள் அலங்காரங்கள் இருந்தது. உலக அற்புதத்தில் சற்றும் குறையாத அளவுக்கு இந்த மின்சாரத்தால் அலங்கரித்த கட்டிடமாக செய்யப்பட்டிருந்தது.

Tesla neon lights
முந்தைய கட்டுரைகளில், நாம் டாக்டர் நிகோலா டெஸ்லா, எரிவாயு நிரப்பப்பட்ட குழாய்களில் உயர் மின்னழுத்த மின்சாரத்தை மற்றும் உயர் அதிர்வெண் நீரோட்டங்களைச் செலுத்துவதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்  என்ற  கருத்தை பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் டாக்டர் டெஸ்லா இதற்காக வேண்டி எரிவாயு நிரப்பப்பட்ட குழாய்களை மற்றும் அவற்றை பல்வேறு வடிவங்களில் வளைத்து சிறப்பாக உருவாக்கியிருந்தார். மேலும், அவற்றில் பல்வேறு வாயுக்களை நிரப்பி அதில் அதிக அதிர்வெண் மின்னோட்டத்தைப் பயன்படுத்தி அவற்றை ஒளியூட்டச்செய்கிறார்.இந்த விளக்குகளிலிருந்து சிதறுகின்ற ஓளியானது இந்த கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களுக்கான ஒரு  அருமையான  கண்கவர் வண்ணத்தில் விளைவுகளை ஏற்படுத்தி  இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இந்த விளக்குகள் தான் இன்று நாம் எல்லா இடங்களிலும் காண்கின்ற விளம்பர பதாகைகள் மற்றும் காட்சிகள் வடிவத்தில் இருக்கும்  உண்மையான நியான் குழாய்களுக்கு முன்னோடியாக இருந்தது.

எனினும், 1980 களின் பிற்பகுதிக்கு பின்னர்தான் அதிக திறனுள்ள உயர் அதிர்வெண் மின்தூண்டிகள் (சோக்குகளை) மற்றும் எரிவாயு பல்புகள் உருவாக்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டெஸ்லாவால் உருவாக்கப்பட்ட பல்புகள் மற்றும் விளக்குகளுடன் இந்த விளக்குகளில் மிகுந்த ஒற்றுமைகள் இருந்தது. இதனால் நிரூபிக்கபடுவது என்னவென்றால், டாக்டர் நிகோலா டெஸ்லா ஒளிரும் விளக்குகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பதாகும்.
டாக்டர் நிகோலா டெஸ்லாவின் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகின்ற  ஒளிர்வொளி  (florescent ) பல்புகள் அவரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, உண்மையில் 'கண்டுபிடிக்கப்பட்டது' என்று என்றழைக்கப்படுகின்ற தொழில், பொது நடைமுறையில் அவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில், இன்னொரு குறிப்பிடத்தக்க பரிசோதனை டாக்டர் டெஸ்லாவால்  நிகழ்த்தப்பட்டது. 'டெஸ்லா மற்றும் இது  “கொலம்பஸ்ஸின் முட்டை”, ( Tesla and the Egg of Columbus’) என்று பரவலாக அறியப்படுகிறது.

'டெஸ்லா மற்றும் கொலம்பஸ்ஸின் முட்டை- 

Tesla egg of Columbus

டெஸ்லாவின் கொலம்பஸ் முட்டை
இந்த மாதிரி சொல்லப்படுகின்ற ஒரு பிரபலமான கதை உண்டு, அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடித்த பிறகு, கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒருமுறை சில ஸ்பானிஷ் பண்பாளர்களுடன் விருந்தில் கலந்துக்கொண்டபோது, அவர்கள் அவரை  கண்டு நகைத்தார்கள்.எரிச்சலடைந்த அவர், அவர்களுக்கு ஒரு சவாலைவிடுத்தார். அவர், ஒரு முட்டையை அதன்  ஒரு முனையை ஒரு தட்டில் முற்றிலும் எந்தவொரு ஆதரவு இல்லாமல் தானாகவே சமநிலைப்படுத்தி நிற்க வைக்க வேண்டும் என்று கோரினார்.  அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அங்கு கூடியிருந்த எவராலும் இந்த தந்திரத்தை செய்து காண்பிக்கமுடியவில்லை மற்றும் அவர்கள் தங்களுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். இந்த அபோகிரிபால் கதை எங்கோ 16 ஆம் நூற்றாண்டில் மீண்டும் துவங்குகிறது. டாக்டர் நிகோலா டெஸ்லா,  400 ஆண்டுகளுக்கு பின்னர்,  கிறிஸ்டோபர் கொலம்பஸ்ஸால்  கொடுக்கப்பட்ட இந்த சவாலை, கொலம்பஸ்ஸின்  வெற்றி கொண்டாட்ட  நிகழ்வின் போது ஏற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது நேர்த்தியான நுண்ணறிவுடன், எந்த ஆதரவும் இல்லாமல், முட்டை யைஅதன் முனையில் நிற்க வைக்கப்பட்டது. டாக்டர் டெஸ்லா உண்மையில் தாமிரம் செய்யப்பட்ட ஒரு முட்டையை பயன்படுத்தினார். பின்னர் மின்சாரம் மற்றும் காந்தவிசையையும் முதன்மையாகக் கொண்டு, அவர் அதன் ஒரு முனையில் நிற்க செய்தார். இந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை இன்னும் சிறிது விரிவாக பார்ப்போம்.

டாக்டர் நிகோலா டெஸ்லா வட்ட எல்லைகளை கொண்ட ஒரு மர தட்டை ஏற்பாடு செய்து மற்றும் அது மேல் தனது செப்பு முட்டை வைத்தார் இந்த மரத்தட்டின் கீழே ஒரு சுழலும் காந்த மோட்டார் ஏற்பாடு செய்தார்.(.மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்கும் மோட்டார்). இது ஒரு சுழலும் காந்த புலத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. தாமிரம், ஒரு நல்ல அயக்காந்தத்துக்குரிய (பெரோக்காந்தத்துக்குரிய) பொருளாக இருப்பதால் தொடர்ந்து மர தட்டின் கீழே  சுழலும் காந்த புலம் தயாரிக்கப்பட்டு, தொடர்ந்து (சுழலும்) செப்பு முட்டையை சுழலச்செய்கிறது. காந்த புலத்தில் அதிர்வெண் அதிகரிக்க, செப்பு முட்டையின் சுழற்சியின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது. ஒரு புள்ளியில் அந்த செப்பு முட்டை தன்னை தானே சுற்றி மிக வேகமாக சுழல்வது  ஒரு சுழலுகின்ற பம்பரம் போல் ஆனாலும் அது ஒரு முனையில்  நிற்பது போல் தெரியும். இவ்வாறு, டாக்டர் டெஸ்லா மின்சார சக்தி, காந்த புலம், மற்றும் மாறுதிசை மின்னோட்டத்தை இந்த சோதனையின் மூலம் பறைசாற்றினார். இப்படி தான் டாக்டர் டெஸ்லா என்ற மேதையின் மூளை அதிசயங்களைச் செய்துக் காண்பித்தது. இது அனைத்து சாத்தியமானது எப்படியெனில் , டாக்டர் டெஸ்லா முற்றிலும் அன்புகூர்ந்து மற்றும் அவரது வேலையை அனுபவித்தும் செய்தார்.

Tesla with fluorescent lamp

Tesla with fluorescent lamp
ஒளிரும் விளக்குடன் டெஸ்லா
உலக கொலம்பிய கண்காட்சி ஒரு பெரிய வெற்றிகரமாக நிறைவேறியது. அது அந்த ஆறு மாத காலத்தில், 28 (2.8 கோடி) மில்லியன் மக்கள் கண்காட்சியை கண்டு மகிழ்ந்துள்ளனர். பெரிய அரங்கில் இருக்கும் மின்சாரத்தில்  டாக்டர் டெஸ்லாவின் பல மின்முனை AC மின்சார அமைப்பு, உலகம் முழுவதும் பார்க்க வேண்டிய  காட்சியாக இருந்தது மற்றும் இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஹாலில் பார்வையாளர்கள் பெரும் அளவில் பார்வையிட வருகின்ற இடத்தில் உள்ள மாறுதிசை மின்னோட்டம் ஜெனரேட்டர்களால் தான் இத்தகைய கண்காட்சியில் உண்மையில் மின்னோட்டத்தை  இயக்க பயன்பட்டதை பார்க்க முடியும். உலகமே, இந்த மாறுதிசை மின்சாரத்தின் அமைப்பின் விளைவுகள் மற்றும் பயன்பாட்டினை கண்டு பிரமிப்பால் அதிர்ந்து பார்த்தது. டாக்டர் டெஸ்லாவால் உருவாக்கப்பட்ட பெருமளவிலான அழகிய லைட்டிங் விளைவுகளை பார்த்தது. அவர்களுக்கு இது  ஒரு வரலாற்று காலத்தில் வாழ்வது போல் இருந்துது. மக்கள் இதனை ஒரு புரட்சியின் ஒரு ஆரம்பம் என்று புரிந்து கொண்டனர். 1893 கொலம்பிய பொருட்காட்சியில் சிறந்த விளைவாக இருந்த விஷயமானது, அது பல மின்முனை மாறுதிசை அமைப்பின் பயன்பாட்டின் கடைசி வரையான தீவிர சந்தேகங்களை  தொழில்நுட்பவல்லுனர்கள் மற்றும் தொழிலதிபர்களின் மனதிலிருந்து  நீக்கியதோடு மட்டுமல்லாமல், பொது மக்களும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்த  உதவும்   என்பதையும் காட்டினார்.

உலக கொலம்பிய பொருட்காட்சியில் நடைபெற்ற இடத்தில் கூட்டமாக சூழப்பட்டு இருந்தவர் லார்டு கெல்வின். ஆவார். அவர் கண்காட்சிக்கு வருகை தந்த போது மற்றும் அவர்   மின்னோட்டம் மற்றும் மாறுதிசை மின்னோட்டம் மக்களை சென்றடைந்ததை அவர் உண்மையில் தன் கண்களால் பார்த்து முற்றிலும் பெரும் வியப்பினால் ஆழ்த்தப்பட்டு மற்றும் ஈர்க்கப்பட்டார். லார்டு கெல்வின் அந்த நேரத்தில் சர்வதேச நயாகரா ஆணையத்தின் தலைவராக இருந்தார். பின்னர், நயாகரா ஆணையம், நயாகரா நீர்வீழ்ச்சியின் சக்தியின் மூலம் மின்சாரத்தை உருவாக்கும் வழிகளை சிந்தித்தது. ஆரம்பத்தில் லார்டு கெல்வின் AC மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு எதிராக இருந்தார் ஆனால் மாறுதிசை மின்னோட்டம் மகத்தாக   சென்றடைந்ததையும்  மற்றும் திறனை பார்த்த பிறகு, அந்த இடத்திலேயே தனது மனதை மாற்றிக்கொண்டார் மற்றும் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தை அணுகினார் என்று  நம்பப்படுகிறது. மேற்கொண்டு நேரத்தை வீணாக்காமல், லார்டு கெல்வின் நயாகரா சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி ஒப்பந்தத்தை இறுதி முடிவு செய்தார் மற்றும் உடனடியாக வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் டாக்டர் நிகோலா டெஸ்லாவுக்கும் வழங்கப்பட்டது.

டாக்டர் டெஸ்லாவின் அதுவரைக்கும்  இதுவே தனது வாழ்நாளில் பெற்ற இரண்டாவது பெரிய ஒப்பந்தம் ஆகும். இதற்கு முன்னர், டாக்டர் டெஸ்லா  தனது அனைத்து காட்சிகள் மற்றும் கண்காட்சிகளில் எல்லாம் அவரது மாறுதிசை மின்னோட்டங்கள் நிரூபிக்க பயன்படுத்தப்படுவது பற்றியே இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் நிஜ வாழ்க்கையில் மாறுதிசை மின்னோட்டத்தின் அமைப்பு உண்மையாக செயல்படுத்துவது சாத்தியமாகும் என்பதை உணர்த்தியது. இந்த ஒப்பந்தத்தால் “மின்னோட்டத்தின் யுத்தம்”, முடிவுக்கு வந்ததை குறிப்பிடப்படும் இது ஒன்று என அறியப்படுகிறது மற்றும் மின்சார உற்பத்தி மற்றும் மின்னாற்றல் செலுத்துதல்  போன்ற இவைகளுக்கு எல்லாம் மாறுதிசை மின்னோட்டமே  ஒரு தரநிலையாக நிறுவப்பட்டது. ஆனால் இந்த  விஷயங்களை மட்டுமல்லாது புவியியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நயாகரா டாக்டர் டெஸ்லாவை கவர்ந்ததோடு இல்லாமல், இந்த நிகழ்வு பல ஆண்டுகளாக அவர் கண்ட  ஒரு கனவு உண்மையில் நினைவாகி விட்டது. 

அனைத்தும் டாக்டர் நிகோலா டெஸ்லாவிற்கு பிரமாதமாக  மற்றும் சரியாக நடந்தேறிக்கொண்டிருந்தது. ஆனால் மாறுதிசை  மின்னோட்டத்தின்  அதிகரிக்கும்   மக்கள் சென்வாக்கு மற்றும் டாக்டர் நிகோலா டெஸ்லாவின் நன்மதிப்பினாலும் இங்கு நம்மில் சில பேர் அமைதியற்ற நிலையைப் பெறுகிறார்கள். இப்போது பந்து உருளத்தொடங்கி விட்டது மற்றும் விஷயங்கள் மாற்றமடைய தொடங்கி விட்டது.

ll ஹரி ஓம் ll ll ஸ்ரீராம் ll ll அம்பக்ஞ ll

மேலும் விவரங்களுக்கு பார்க்கவும்:

மூள லேக -



Tuesday 2 December 2014

உலக மஹா கொலம்பிய கண் காட்சி

World Columbian Exposition
நாம் யாவரும் தற்போது உலக கால்பந்து க் கோப்பை போட்டிகளை ஸ்வாரஸ்யமாக கவனித்து வருகிறோம். அது ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அடுத்த படியான ஒரு விளையாட்டுப் போட்டி என்று கருதப்பட்டது. உலகத்தின்  முப்பத்தி இரண்டு நாடுகளிலிருந்து 550வீரர்கள் விளையாடும் போட்டி. கோடிக்கணக்கான மக்கள் காணும் , கண்டு களித்துவரும் போட்டி.
அதேபோல்  1893ல் அமெரிக்காவில் ஒரு வியக்கத்தக்க நிகழ்சி நடந்தேறியது. 46 நாடுகளிலிருந்து 2.8 கோடி மக்கள் பங்கேற்றனர். அது ஒரு விளையாட்டு நிகழ்சி அல்லாமல் அது அக்காலத்து  ஒரு மிகப்பெரிய கலாசார ,விஞான கண்காட்சியாக புகழ் பெற்றது. அது அமெரிக்க நகரான சிகாகொவில் 1893 ல் நடைபெற்ற கொலம்பியன் எக்சிபிஷன் என்று அழைக்கப்பட்டது.  அது 1492 ல் க்ரிஸ்டாஃபர் கொலம்பஸ் அமெரிக்க பூமியில் கால்வைத்த  400 ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு நடத்தப் பட்டது. 630 ஏகர் நிலப்பரப்பில்  இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. ஒரு பெரிய குளம் கொலம்பஸ்ஸின் மிகப்பெரிய உலகப்ப்ரயாணத்தின் சின்னமாக நடுவில் அமைந்திருந்தது. கண்காட்சி   பல வித்தியாசமான சிர்பசாஸ்த்ரம் ப்ரதிபலிக்கும் கொள்கை கொண்ட சுமார்  200 கட்டிடங்கள் இருந்தன.  அது உழவுத்தொழில், சுதந்திரக் கலை, சுறங்கத்தொழில் ,  பொறிஇயல், யந்திரம் , மின்சக்தி , அனுப்புத்தொழில் , கட்டிடத்தொழில் ஆகியவற்றைப்பற்றி ,இக்கண்காட்சியில் பல தேசங்களின் கலாசாரம் வெளிப்படுத்தப்பட்டது.


இக்கண்காட்சி  1893ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி ஆரம்பித்து அக்டோபர் 30 , 1893 வரை நீடித்தது. கிட்டத்தட்ட  ஆறு மாத காலம். , அது மிசிகன் ஏரியை ஒட்டி அமைந்துள்ள ஜாக்ஸன் பூங்காவில் , கடல் , ரயில், சாலை வழியாக பல நாட்டிலிருந்து வருவோற்களின் வசதியை க்கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது. அது ஒரு பல தேசங்களிலிருந்து  மூலை  , முடுக்குகளிலிருந்து திரளாக வந்து    . திட்டங்கள் அல்லது எண்ணங்கள், மக்கள், தொழில்நுட்ப அறிவியல்கள் ஒன்று கூடி  அவரவர்களது  யந்திரத்தொழில்கல், கலாசாரங்கள், வாணிகம் , கல்வித்துரையின்  திறனை வெளிப்படுத்தும் சங்கமக் கூட்டமாக அமைந்தது. இக்கண்காட்சியில்  ஐரோப்பாவிலிருந்து  35 கப்பல்கள் , 10000 அதிகாரிகள் , கடல் மனிதர்கள், கடல் சம்பந்தப்பட்டவர்கள் , அவர்களது நாட்டின் திறமையைக்க் காட்டினர். இன்நிகழ்சி ஒரு முக்கியமான, மதிப்புக்குறிய, சமூக சம்பந்தமான, பண்பாட்டு சம்பந்தாமான நிகழ்சியாகவும் இருந்தது. அது, கலை, சிற்பசாஸ்திரம் ,  அமெரிக்காவின் யந்திர தொழில், எதிர்பார்ப்பு முதலியனவின் மேல் ஆழ்ந்த ,  நற்பயன் விளைவுகள் கொண்டன. அக்காலத்தில் அமெரிக்காவில் நடந்த கண்காட்சி உலகத்திலேயே  நடந்த ஒரு மிகப்பெரிய நிகழ்சியாகும். சுமார் முப்பத்திஐந்து லக்ஷம் சதுர அடி இக்கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது, கண்காண்காட்சியில் , மின் ஆற்றல் கண்காட்சி ஒரு பலத்த பங்கை கொண்டிருந்தது.

வெஸ்டிங்க் ஹவுஸும் டாடெஸ்லாவும் இம் மாபெரும் கண்காட்சிக்காக தயார் செய்யும் முயற்சியில் இரங்கினர். இது டா டெஸ்லாவிற்கு , உலகத்திற்கே மாறு திசை மின் ஆற்றலை ப்பற்றி விளக்க ஒரு மகத்தான வாய்ப்பு எனலாம். டாடெஸ்லா சுமார் 1200 கிமி  சிகாகோ ப்ரயாணம் செய்து இந்த உலகமகா நிகழ்சிக்கு தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். வெஸ்டிங்க் ஹவுஸிற்கு பாலிஃபேஸ் மாறு திசை மின் ஆற்றல் விதிமுறைகள் பொறுப்பு தறப்பட்டிருந்தத்து. இதுவே தக்க தருணமாக , கிடைத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. டா டெஸ்லாவும் இந்த கண்காட்சியில் மாறு திசை மின் ஆற்றலைக் கொண்டு இக்கண்காட்சிக்கே மின் லிளக்கு அலங்காரம் செய்ய திட்டமிட்டார். இந்த வேலை சுலபமானது அல்ல . டாடெஸ்லா இரவு பகலாக உழைத்து தாமாகவே கம்பி இணைப்புகள் சரிவர செய்து மின் ஆற்றல் கொண்ட விளக்குகளை இயக்கினார். அப்போது அங்கு கனத்த குளிர்காலம்,குளிர் தாங்கமுடியயாமல் கண்காட்சியின் வேலைப்பாடுகளை இரண்டு மூன்று வாரம் நிருத்தவேண்டிய தாயிற்று. அதை பொருட்படுத்தாமல் டாடெஸ்லா கடுமையாக உழைத்து மாறுதிசை மின் ஆற்றல் பாலிஃபேஸ் கருவியை உருவாக்கி உலகிற்கு சமர்ப்பித்தார். இந்த குளிர் மட்டும் டாடெஸ்லாவிற்கு இடையூராக இல்லை, ஜெனரல் இலெக்ட்ரிக் நிருவனம் , டா.டெஸ்லாவுடன் சேர்ந்திருந்த வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்தை ஒரு பட்டயப் போரில் இழுத்தது,ஆதலால் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்திற்கு  சந்தையில் கிடைக்கும்  விளக்கு பல்ப் களை உபயோகிக்க முடியாது போயிற்று. அது கண்காட்சிக்கு இரண்டு மூன்று மாதம் முன் நிகழ்ந்தது. இந்த காரணத்தினால் . வெஸ்டிங்க் ஹவுஸ் டா.டெஸ்லா கலந்த திட்டத்துக்கு தடை. டா.டெஸ்லா இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கண்காட்சி க்கு வேண்டிய சுமார் இரண்டு லக்ஷம் விளக்கு பல்புக்களை உற்பத்திசெய்து வாங்கி  உபயோகித்தார்.  இது ஒரு பெரிய சாதனை ,ஏனெனில்  இரண்டு லக்ஷம் பல்புக்கள் அமெரிக்காவின் இருபத்தைந்து சதவிகித பல்புக்களுக்கு சமமாகியது.  


அனைத்து கண்காட்சி அரங்கம் முழுவதும் இரண்டு லக்ஷம் மின் விளக்குகளினால் அலங்கரிப்பது எப்பேர்பட்ட் சாதனை. கண்காட்சிக்கு சில வாரங்கள் முன், தானாக இயங்கும் மிக வேகத்தில் செயல்படும் யந்திரங்கள் இல்லாத, நாளில்  1893 ஆம் ஆண்டு     200000 மின் பல்புக்களை தயாரிப்பது கற்பனைக்கு எட்டா விஷயம் இருந்தும் டாடெஸ்லாவும் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமும் செர்ந்து அயராது பாடுபட்டு கண்காட்சி முழுவதும் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கவைத்து வெற்றி கண்டனர். அதுவும் மிகக் கடுமையான  சூழ்நிலயில் அதுவும் மாறுதிசை மின் ஆற்றலை கொண்டே .வெஸ்டிங்கஹவுஸ் நிருவனமும் டாடெஸ்லாவும் பல பாலிஃபேஸ்  மாறு திசை கருவிகள் கண்காட்சியில்  காண வைத்திருந்தனர்.  அதில் பாலிஃபேஸ் மாறு திசை மின் ஆற்றல் உற்பத்தி யந்திரங்கள், மின் சக்தி அதிகரிக்கும்  கருவி, மின் சக்தி குறைக்கும் கருவி, ,மின் அனுப்பும் கம்பிகள், தூண்டுமின் மோட்டார்கள், நேர் மின் லிருந்து மாறு திசை மின் மற்றும் சாதனம், ரயில் மின்னோடி, இன்னும் பல கண்டு பிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்ப்ட்டிருந்தன.

டா.டெஸ்லாவே இந்தக் கண்காட்சிக்காக பல பரிசோதனைகள் வரிசைப்படுத்தி இருந்தார். இக்கண்காட்சிக்காக டா.டெஸ்லா பல வாயு நிரப்பப்பட்ட மின்னும் [பல்புக்களை] விளக்குகளை வடிவமைத்திருந்தார். அவ்விளக்குகள் எந்தவித வாயுவோ, அதன் வதிர்வெண்ணிற்கேற்ப பல வண்ணங்களில் பளிச்சிட்டன, மின்னின.இது சாதாரண பல்புக்களை விட நன்கு வேலை செய்தன. இம்மாதிரியான வாயு நிரப்பிய பல்புக்கள் முன்னதாகவே இருந்தாலும் ,டா.டெஸ்லா அதில் உயர் வதிர்வெண் , உயர் வால்டேஜ் உபயோகித்து பலமடங்கு நன்றாக திறனுடன் வேலை செய்ய வைத்தார்.அதே முறை தான் இக்காலத்து வாயு நிறைந்த பல்பு விளக்குகள்   கையாண்டிருக்கின்றன  அதுவே நம் ட்யூப்லைட்டுக்கள்,  சிஎஹ்ப்எல்கள், நியான் விளக்குகள் , ஸோடியம் வேபர் விளக்குகள் முதலியனவாகும். யார் இந்த காண்டுபிடிப்புக்கு காரணம் என்று புரிந்திருக்கும். 

நாம் டா.டெஸ்லா எவ்வாரு விதவிதமான மின்னும் விளக்குகள் வடிவமைத்தார் அதை எவ்வாரு கண்காட்சியில் யாவரும் வியக்கச்செய்தார் என்பதை மட்டும் பார்க்காமல்  அவர் சில  கற்பனைகெட்டா பரிசோதனைகளும் செய்வித்து கண்காட்சியில் யாவரது மனதையும்  கவர்ந்தார் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

ஹரி ஓம்  || ஸ்ரீ ராம்  ||  அம்பக்ஞ


என்ற வெப்ஸைட்டில் பார்க்கலாம்

மூள லேக -










      

Monday 1 December 2014

டா.டெஸ்லாவிற்குக் கிடைத்த இன்னும் பல விருதுகள்

Some more honours for Dr. Nikola Tesla

டா.டெஸ்லா தமது ஐரோப்பா சுற்றுலா செய்து தனது தாயை இழந்த துக்கத்துடனும் அந்த நினைவுகளுடன், ந்யூயார்க் திரும்பினார், அவர் தமது பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பித்தார். சிறிது நாட்களில் துக்கத்தை மறந்தார். அதே வருடம் 1892ல் டா.டெஸ்லா அவர் சாதனைகளுக்கு இரண்டு மகத்தான விருதுகள் பெற்றார்.அவர் ந்யூயார்க் திரும்புவதற்கு முன்னர் அவரை சர்பியாயவின் தலை நகரமான பெல்க்ரேட் நகராட்சிக்குறிய அதிகாரிகளினால் அன்நகர மக்களுக்கு டா.டெஸ்லாவில் பரிசோதனைகள், ஆராய்சிகள் ,  சாதனைகள் பற்றி விளக்க விண்ணப்பித்தனர். ஜூன் 1, 1892 சுமார் 11 மணி அளவில் டா.டெஸ்லா பெல்க்ரேட் ரயில் நிலையத்தை அடைந்தார்.ஆயிரக்கணக்கான மக்கள் பெல்க்ரேட் ரயில் நிலையத்திலேயே வரவேற்றனர், முக்கியமாக அவரை ப்பார்க்க விரும்பினர். அனைவருக்கும் பெருமையான ஒர் விஷயம் , அதுவும் தமது சர்பிய தாய்நாட்டு மண்ணின் புதல்வனின் சாதனைகளுடன் இணைத்துக் கொண்டனர். அவருக்கு பூக்கொத்து அளித்து - மாலையும் அணிவித்து , அன்பளிப்புகளும்  கொடுத்து  கௌரவித்து வரவேற்கயில் டா.டெஸ்லா மெதுவாக அவர்களிடையே நடக்கலானார். டா.டெஸ்லாவை  சர்பியாவின் சாதனை சூரியனாக கருதினார்கள். அவருக்கு என ஒரு குதிரைவண்டி அலங்கரித்து காத்துகொண்டிருக்கையில் அவர் , இந்த வரவேற்பினாலும் ,உபசாரனையினாலும்   உணற்சிக்கு வசமானார், கண் கரைந்தார். அவர் தாழ்மையுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து , நான் எனது கனவுகளில் சிலவற்றை இதுவறை   நிஜமாகியதை  கடவுள் க்ருபையாக கருதுகிறேன். ஆனால் எனது குறியான மனித சமுதாயத்திற்கு எனது ஆராய்சிகளினால் உதவி செய்யும் பலன் கிடைக்க  வெகு  தூரம் செல்லவேண்டும், அப்போதுதான் நான் சர்பிய நாட்டின் பெருமை புதல்வனாக கருதுவேன். ஜூன்  2, 1893ல் டெஸ்லா சர்பிய நாட்டு அரசரான அலெக்ஸாண்டர் ஆப்ரேனோவிச் சை சந்தித்தார்.பெல்க்ரேட் நகரத்தில் மின்சக்தியை இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அரசர்  அவரை க்கேட்டும், அவரது ஆராய்சிகள் பரிசோதனைகள் கண்டு வியப்புற்று, அதே வருடம் 1893 லேயே பெல்க்ரேட் நகரத்தை மின்மயம் ஆக்கினார். அது ஒரு  பெரிய திருவிழா போன்று கொண்டாடப் பட்டது. சர்பிய அரசர் டா.டெஸ்லாவிற்கு  விஞான வளர்ச்சிக்காக   புனித சவா என்ற அன்நாட்டு பதக்கம் அளித்து பாராட்டினார்.


அதே வருடம் 1892ல் டா.டெஸ்லாவை அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் அவரை கௌரவித்தது . அவருக்கு உபதலைமை அதிகாரியின் பதவியும் தந்தனர். அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் 1884ல் அமைக்கப்பட்டது. அவர்கள் கம்பியை கொண்டு மின் ஆற்றல் வினியோகம் சம்பந்தப்பட்ட தந்தி , தொலைபேசி, மின்விளக்கு , சக்தி ஆலைகள் வேலையில் செயல்பட்டு வந்த நிருவனம். மதிக்கப்பட்ட நிருவனமாக இருந்தது அக்காலத்தில்.  அந்த நிருவன சங்கம் இன்றும் இயங்கி வருகிறது,  ஆனால் வேரு ஏதோ பெயரில் .  இந்த சங்கத்துடன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரேடியோ இன்ஜினியர்ஸ் 1962ல் இணைந்து ஒரு புது விஞானிகள் சங்கமாக மாறியது. அதுவரை மின்-அணு சாரம் [எலெக்ட்ரானிக்ஸ்] ஒரு தனி கிளையாக தலைதூக்கி கிளம்பியது. ஆகையால் அந்த புதிதாக உறுவான விஞானிகள் சங்கத்தின் அங்கத்தினருடன் , மினணு விஞானிகளும் இணைந்தனர். ஆகையால் அந்த சங்கம் இன்ஸ்டித்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் அண்ட் இலெக்ட்ரானிக் இன்ஜினியர்ஸ் [ ஐ, ஈ. ஈ.ஈ(IEEE)]என்று அழைக்கப்பட்டது. அது இன்றும் ஒரு உலகபுகழ்பெற்ற , மதிக்கப்பட்ட நிருவனமாக செயல்பட்டு வருகிரது.   டா.டெஸ்லா இன்நிருவனத்தில் 1892-1894 வரை உபதலைமை அதிகாரியாக பணியாற்றினார்.



நாம் கடந்த கட்டுறைகளில் டா.டெஸ்லா செய்த கம்பியில்லா மின்ஆற்றல் பரிசோதனைகள் அவரது ஆராய்சிகளே என்பதை பர்த்தோம்.  அதை வெளியிட்டு டெஸ்லா அதை சந்தைக்கு கொண்டுவரவில்லை ,அதற்கு அவருக்கு வெகு தூரம் செல்லவேண்டுமென்ற கட்டம் , முக்கியமாக கம்பியில்லா மின் ஆற்றலை சாதாரண மனிதனுக்கு பயன் படும் வகையில் செய்ய,  1892ல் கொலம்பியன் கண் காட்சிக்கு அவருக்கு மின் விளக்கு அலங்காரம் செய்ய குத்தகை கிடைக்கும் வாய்ப்பளிக்கும் வகையில்  பல நிருவனங்களுக்கு திறக்கப்பட்டன. உலக கலாசார, விஞான முக்கியத்துவத்தை இந்த கண்காட்சியில்  கருத்தில் கொண்டு  தாமஸ் எடிஸன் எலெக்ட்ரிகஸ் கம்பெனி, இக்கண்காட்சியில் தமது நேர் மின் ஆற்றல் திட்டத்தை வெளிப்படுத்த கண்காட்சி முழுவதும் அலங்கரிக்க குத்தகை  $18,000,00 [12 கோடி ரூபாய்] தேவையை தெரியப்படுத்தியது. இக்குத்தகை முன்வரும் அனைத்து நிருவனங்களுக்கும் வாய்ப்பளிக்க திறக்கப்ப்ட்டு இருக்கையில் , டா.டெஸ்லாவின் ஜார்ஜ் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமும் மனு விண்ணப்பம் செய்தது. ஆனால் அது 2கோடியே  40லக்ஷத்திற்கே  ஆகும். இதைக்கண்டு டா.டெஸ்லாவின் மாறு திசை மின் ஆற்றல் திட்டத்தை முறி அடிக்க , எடிஸன் நிருவனம் தனது தரத்தை 3 கோடியே ,33லக்ஷமாக குறைத்தது [அதுவும் டா.டெஸ்லாவுடன் போட்டியிடவே 70% குறைத்தது]. அப்படியிருந்தும் டா.டெஸ்லாவின் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமே இக்குத்தகையை பெற்றது. இதற்கு இடையூராக எடிஸனின் நிருவனம் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்தை மின் விளக்கு பட்டயப்போறில் தள்ளி கண்காட்சிக்கு தேவையான மின் விளக்கு  கிடைக்காது செய்த போதிலும் டா.டெஸ்லாவும் வெஸ்டிங்க்  ஹவுஸ் நிருவன தொழிலாளிகள் இரவு பகலாக கடுமையாக உழைத்து மூன்றே வாரத்தில் 2,000,00 பல்புக்கள் [விளக்குகள்] விசேஷமாக  தயார் செய்து கண்காட்சியை அலங்கரித்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்தினர். 


இந்த உலக மஹா கொலம்பியா கண்கட்சி என்பது என்ன?  ஏன் வெஸ்டிங்க் ஹவுஸ் , எடிஸன் நிருவனங்கள் இதற்காக கடுமையாக போட்டி இட்டன. அதன் முக்கியத்துவம் தான் என்ன. அதை அடுத்துவரும் கட்டுறையில் பார்ப்போம்.[தொடரும்]. 

ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| நான் அம்பக்ஞன் ||

மூள லேக -







Friday 28 November 2014

"சீஸ்"[cheese] சைவ- பால் கட்டி, அசைவ - பால்கட்டி [ பரப்பு பண்டம்]

Vegetarian & Nonveg Cheese

சீனாவின் தின்பதார்த்தங்களுடன் இடாலி,லெபனீஜ், கோரியன் என்று பல வெளிநாட்டு பண்டங்கள் பாரதத்தில் ப்ரபலமாகி வருகின்றன. இத்தின்பண்டங்களில் முக்கால் விகிதம்  "பால்கட்டி"[cheese சீஸ்] உபயோகிக்கப்டுகின்றது. பால்கட்டி பாரதத்தில் பல வருடமாக கிடைத்து வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக பால்கட்டி கொண்ட பண்டங்கள்மீதான  விருப்பம் நம் நாட்டவர்கள் இடையே மிகவும் அதிகரித்துள்ளது. 
  
நமது ஸத்குரு பரம பூஜ்ய அநிருத்த பாப்பு செப்டம்பர்   25, 2014 அன்று  ஹிந்தியில்  செய்த ப்ரசங்கத்தில் சைவ பால் கட்டி, அசைவ பால்கட்டி பற்றி விளக்கம் அளித்தார். நமது காலை சிற்றுண்டியிலிருந்து,மதியம் கொரியல்களுடன்  இரவு உணவு வரை மய்யம் கொண்டுள்ள பால்கட்டியின் ரகம் , விதம் அது உற்பத்தி செய்யும் முறைகளை நாம் அறியோம்.  அது ஒரு சிலருக்குத்தான் தெரியும் என்பது ஒரு பரபரப்பான விஷயம் . இன்று இந்த பால் கட்டியானது மெல்ல மெல்ல ஸேண்ட்விச், பரோட்டா , கோஃப்டா, பாவ்-பாஜீ , தோசை, பக்கோடாம் ,  டோஸ்ட் , ஸாலாட்[பச்சை காய்கரி] , ரொட்டி ரோல்ஸ், பிஜ்ஜா, பர்கர் முதலியனவற்றில் மட்டும் அல்லாமல்   மும்பை வடாபாவையும் தாண்டி  நமது தினசரி சமயல், சாம்பார், ரசம் கரிகளில் கூட இடம் பிடித்துவிட்டது. மக்கள் வசீயம் ஆகிவிட்டனர். ஆகையால் இந்த "சீஸ்" என்னும் பால் கட்டியைப்பற்றி நாம் அதிகமாக அறிந்து கொள்வது அவசியாமாகிவிட்டது என்ற நிலையில் ,  இந்த "சீஸ்" [cheese] பால்கட்டி தயார் செய்யும் முறையை சுருக்கமாக பார்ப்போம்.   

"சீஸ்" பால்கட்டி , பாலிலிருந்துதான் தயாராகவேண்டும்.  பாலை கட்டியாக்க அதை இருக்க வேண்டும் , சுண்டவேண்டும். சிலசமயம் இம்முறையை விறைவாக்குவதற்கு , அதில் ஒரு விசேஷ பதார்த்தத்தை சேர்ப்பார்கள். அதன் பெயர் "ரெனெட்"[(Rennet)] ஆகும். (http://en.wikipedia.org/wiki/Rennet). இந்த "ரெனெட்" எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?

அது பசுமாட்டின் வயிற்றிலிருந்தோ  அல்லது அதன் கன்றுக்குட்டியின் அடி வயிற்றில் அகப்படும். இந்த "ரெனெட்" பசு, அதன் கன்று தின்றுவரும் புல் , பிண்ணாக்கு, போன்ற தாவர உணவு ஜெரிக்க்வைக்க கடவுள் கொடுத்த தன்மை பொருள் ஆகும். பசு அல்லது , கன்று உயிரோடு இருக்கையில் இதை எடுக்க இயலுமா? சிந்தித்துப்பாருங்கள். ரெனெட் உபயோகித்த சீஸ் உண்பவன் , பசு , கன்றை கொன்று தின்ன பாவம் தான் ஒட்டிக்கொள்ளும்.இந்த "ரெனெட்" உபயோகித்து தயார் செய்த சீஸ் தான் அசைவ சீஸ் ஆகும் , அது இல்லாதது சைவ சீஸ் ஆகும். 
பாரதத்தில் பால் பண்னைகளினால்  உற்பத்தி செய்யப்படும் பால்கட்டி  "சீஸ்" அங்காடிகளில் சைவ சீஸ் என்று கிடைக்கிறது, சில சர்வதேச நிருவனங்கள் பாரதத்தில் தயார் செய்தாலோ, அல்லது இரக்குமதி செய்யப்பட்ட சீஸ்களில் இந்த ’ரெனெட்’  இருக்க் வாய்புள்ளது. அதைத்தவிர  பல சர்வதேச நிருவனங்கள், இந்த ’ரெனெட்" உபயோகித்த  தகவலை பொருள் சிட்டையின் [label]மீது வேண்டுமென்றே மறைத்துவிடுகின்றனர். நமது பாரத சனாதன கலாசாரத்தில் ஒன்பது நியம நிஷ்டைகளில் , கோமாதா , கங்காமாதா, காயத்ரீ மாதா முக்கியத்துவம் வகிக்கின்றன. பசு பவித்ரம் , பரிசுத்தத்தின் அம்சம். இதை கருத்தில் கொண்டு எவெரவர் அசைவ சீஸ் சாப்பிட வேண்டாமோ அறியாது உண்ணவேண்டாம் , அது சைவமா அல்லது அசைவமா என்பதை பரிசீலித்து அறிந்து உபயோகிக்கவே இந்த தகவல். இதில் அவரவர் கொள்கை,  சாமர்தியம் , தற்காப்பு அடங்கியுள்ளது. அதற்கென்று "சீஸே..." சாப்பிடக்கூடாது என்பது அல்ல.--------- அநிருத்தா பாப்பு
ஹரி ஓம்  || ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ||  

மூள லேக -

Thursday 27 November 2014

ஸ்கந்த சக்ரத்தை பற்றிய தெளிவுறை.

Clarification of Skanda Chinha
"ப்ரத்யக்ஷ" என்ற தினசரி பத்திரிகை வாயிலாக நம்  பரம பூஜ்ய பாப்புவின் பக்தர்கள் அதை சம்பந்தப்பட்ட வெப்சைட்டின் இன்டர்னட்[இணயத்ததிலிருந்து] தெரிந்து கொள்ள முயன்ற வேளை எழுந்த சந்தேகத்தில் கீழ்வரும் ஸ்கந்த சக்ரங்களில் எது சரியானது எது சரியானது அல்ல என்பது கீழ்வருமாரு விளக்கப்ப்ட்டு இருக்கிறது.

                     
இரண்டு வித்தியாசமான வர்ணத்தில் முக்கோணம் ஒன்றின்மீது ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது [இதுவே சரியானது]



______________________________________________________________________________________________________



இரண்டு வித்தியாசமான வர்ணங்களில் இரண்டு முக்கோணங்கல் ஒன்றினுள் ஒன்று நுழைக்கப்பட்டு இருக்கிறது [இது சரியான ச்கந்த சக்ரம் அல்ல

                                                         ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ|| 

மூள லேக -